பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஓளவை ஞான‌குறள் : 48

ஓளவை ஞான‌குறள் : 48 “மோட்டினீர் நாற்ற முளைமுட்டை போலுமேவீட்டுளே நிற்கு மியல்பு” இக்குறள் “மோட்டின் நீர் நாற்றம் முளை முட்டை போலுமே வீட்டுள்ளே நிற்கும் இயல்பு” என பிரிந்து பொருள் தரும் அதாவது மேட்டுபக்கம் இருந்து நீர் பள்ளத்துக்கு பாய்வது போலவும், மலரின் மணம் தானாக பரவுதல் போலவும், விதையில் இருந்து முளை வெளிவருவது போலவும், முட்டையில் இருந்து குஞ்சு தானாக உருவாகி வெளிவருதல் போலவும் மனதில் சிவம் இயல்பாகவே இருக்கின்றது இன்னும் ஆழமாக நோக்கினால் […]

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 75

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 75 நன்மக்கள் செந்நாத் தழும்பிருக்க நாள்வாயும்செந்நெறிச் செல்வாரிற் கீழல்லர் – முன்னைத்தம்ஊழ்வலி யுன்னிப் பழிநாணி யுள்ளுடைவார்தீய செயினுஞ் சில. நாவில் நல்ல விஷயங்களை தழும்பாக இட்டு கொண்டவர்கள், அதாவது உயர்நெறிகளை மட்டும் போதிக்கும் பெரும் உத்தமர்கள் தங்கள் ஊழ்வினை காரணமாக சில கீழான விஷயங்களை செய்தாலும் மனம் வருந்துவர், அப்படி மனம் வருந்தி தங்கள் ஊழின் வலிமை குறித்து கலங்கி நிற்பர், இத்தகைய நல்லவர்கள் கீழான செயல்களை செய்தாலும் கீழ்மக்கள் என்றாக […]

ஓளவை குறள் : 47

“அச்ச மாங்கார மகத்தடக்கி னாற்பின்னைநிச்சயமா மீச னிலை” அச்சத்தையும் ஆங்காரத்தையும் மனதுள்ளே அடக்கி தவம் செய்தால் பின்னர் நிச்சயமாக ஈசன் நிலையினை அடையலாம் என்பது குறளின் பொருள் இங்கு அச்சம் என்பது ஆசையின் உச்சத்தை குறிப்பது, அச்சம் என்றால் பயம் என்றொரு பொருள் உண்டென்றாலும் அச்ச, அச்சன் என்பது தலைமை பதவியினை குறிப்பதும் அச்சு என்றால் எல்லாவற்றுக்கும் மையமான பொருளாக இருப்பதையும் குறிக்கும் அச்சம், அச்சு,அச்சன் என்பதெல்லாம் கிட்டதட்ட ஒரே பொருளே. அச்சம் என்றால் பயம் என […]

ஆம் ஆத்மியின் நிஷா சிங்…..

இந்தியாவில் ஒரு பரபரப்பான செய்தி வெளிவந்திருக்கின்றது, மிகபெரும் கவனமும் எச்சரிக்கையும் கொடுத்திருக்கும் அந்த செய்தியினை தமிழக ஊடகங்கள் வழக்கம் போல் மவுனமாக்கி ஸ்டாலினாரின் இளமையிலும் நயந்தாராவின் ஹனிமூன் படங்களிலும் மூழ்கி அவ்வப்போது சமூகநீதியிலும் கலந்து வழிந்து கொண்டிருக்கின்றன‌ அந்த செய்தி உண்மையில் கடுமையானது சில நாட்களகாவே இந்தியாவில் சர்ச்சையான விஷயம் இரண்டு, முதலாவது கல்கத்தாவில் வங்க அமைச்சர் தன் காதலி மற்றும் அந்த காதலுக்கு அவசியமான பெரும் பணத்தோடு சிக்கியது, இரண்டாவது டெல்லியின் ஆம் ஆத்மி அமைச்சர் […]

குமரகுருபரர் நீதிநெறிவிளக்கம் : 74

குமரகுருபரர் நீதிநெறிவிளக்கம் : 74 “தீய செயற்செய்வா ராக்கம் பெருகினும்தீயன தீயனவே வேறல்ல – தீயனநல்லன வாகாவா நாவின் புறநக்கிக்கொல்லுங் கவயமாப் போல” தீய செயல்களை செய்வாரின் செல்வம் பெரிதாக பெருகினும் தீமை தீமையே, அதனால் பெற்ற செல்வமும் தீயதே ஆகும், தீயது ஒரு காலமும் நல்லது ஆகாது கவயம் எனும் காட்டுபசு பார்ப்பதற்கு பசுபோல இருந்தாலும் அது நாவால் நக்கினாலே உயிர்கள் இறந்துவிடும், அப்படிபட்ட விஷம் போன்றது தீயவழியில் சேர்க்கபடும் பொருள் என்பது பாடலின் பொருள் […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 140 – உருவொன்றி நிற்றல் / குறள் : 06

“வித்து முளைபோல் விரிந்தெங்கு நிற்குமேஒத்துளே நிற்கு முணர்வு” மிக சிறிய விதையில் பெரும் செடியும் மரமும் உள்ளே அடங்கி இருக்கின்றது ஆனால் அது சரியான மண்ணும் நீரும் காற்றும் கிடைககும் வரை முளைத்து வளராது அப்படியே மனதில் சிவம் இருக்கின்றது, அது உரிய பயிற்சியும் யோகமும் தவமும் செய்தால் சிவம் விஸ்வரூபமாக வளர்ந்து வியாபிக்கும் மிக சிறிய ஆல விதையில் பெரும் மரம் இருப்பது போல, சிவம் மனதில் அடங்கியிருக்கின்றது, நீரும் மண்ணும் விதையினை முளைக செய்வது […]

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 72

“பகையின்று பல்லார் பழியெடுத் தோதிநகையொன்றே நன்பயனாக் கொள்வான் பயமின்றுமெய்விதிர்ப்புக் காண்பான் கொடிறுடைத்துக் கொல்வான்போற்கைவிதிர்த் தஞ்சப் படும்” எந்த காரணமும் பகையும் இல்லாமல் அடுத்தவரின் பழிகளை குற்றங்களை தவறுகளை மட்டும் சொல்லி நகைத்து திரிபவனால் எந்த பயனுமில்லை, அவன் அடுத்தவரின் வலியினை கண்டு மகிழ அவர்களை அடிக்கும் தன்மையினை கொண்டவன், அப்படிபட்டவனை இரும்புகரம் கொண்டு ஒடுக்கி வைத்தல் வேண்டும் இல்லையேல் அவனால் கலகம் ஏற்படும் என்பது பாடலின் பொருள் அடுத்தவரையே நகைத்து திரிபவனால் கலகம் உண்டாகும், அவனை ஆதரித்தால் […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 140 – உருவொன்றி நிற்றல் / குறள் : 04

“பழத்தி னிரதம்போற் பரந்தெங்கு நிற்குமழுத்தினா லீச னிலை” இக்குறள் “பழுத்து இனிரதம் போல் பரந்தெங்கும் நிற்கும் அழுதினால் ஈசநிலை” பழுத்த பழத்தை பிழிந்தால் இனிய சாறு கிடைப்பது போல கனிந்த மனதை பக்தி யோகத்தால் பிழிந்தால் ஞானசாறு ஊறும் அங்கு ஈசன் நிலையினை உணரலாம் என்பது குறளின் பொருள் கனிந்த மனம் என்பது பக்தி நிரம்பிய மனம், இறைபக்தியில் கனிந்த பக்குவபட்ட நிலையில் இருக்கும் மனதில் ஈசன் நிலைகொள்வார் என்பது ஒளவையார் கொடுக்கும் போதனை

விநாயகருக்கும் தமிழகத்துக்குமான

தமிழக இந்துக்களை குழப்பி அவன் இந்து அல்ல இந்தியன் அல்ல, அவன் மதமோ வழிபாடோ அற்ற ஒரு மடையன் என சொல்லவிரும்புவது சிலரின் வாழ்வியல் நோக்கம், 18ம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் சாதி மோதல் இல்லை, பிராமண துவேஷம் இல்லை தமிழருக்கு தீபாவளி கிடையாது, தமிழருக்கு கோகுலாஷ்ட்டமி கிடையாது, ராமநவமி கிடையாது என சொல்லும் கும்பலெல்லாம் இல்லை இவையெல்லாம் பிரிட்டிஷ் கிறிஸ்துவ மிஷனரிகாலத்தில் உருவானவை வெல்லமுடியா யானையினை பட்டினிபோட்டு பிடிக்கவேண்டும் என இந்துமத அழிவுக்காக இட்டுபட்ட கதைகள் இவை […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 140 – உருவொன்றி நிற்றல் / குறள் : 03

“கரும்பினிற் கட்டியுங் காய்பாலி னெய்யும்இரும்புண்ட நீரு மியல்பு” இக்குறள் “கரும்பினில் கட்டியும் காய்பாலில் நெய்யும் இருண்ட நீரும் இயல்பு” என பிரிந்து பொருள் தரும் கரும்புக்குள்தான் கட்டி வெல்லம் ஒளிந்திருக்கின்றது, ஆனால் அது கரும்போடு விளையாது. கரும்பை பிழிந்து சாறு எடுத்து அதனை காய்ச்சினால் கட்டி வெல்லம் கிடைக்கும் பாலுக்குள் நெய் உண்டு, ஆனால் பாலோடு கறக்கமுடியாது. பாலை பக்குவபடுத்தி கடைந்து எடுத்தால் நெய் கிடைக்கும் அப்படியே இரும்பு கடினமானது ஆனால் அதை வெப்பத்தில் உருக்கும் பொழுது […]