பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வேந்தனும் ஓங்குக .. வேந்தனும் ஓங்குக

1947ம் ஆண்டு ஆகஸ்டு 15ல் இந்திய சுதந்திரம் என முடிவு செய்யபட்டது, முன்னதாக 1947 ஆகஸ்ட் 14ல் பாகிஸ்தான் எனும் இஸ்லாமிய தேசம் புதிதாக பிறந்தது, அதுவரை அப்படி ஒரு நாடு உலகில் இல்லை ஆகஸ்டு 15ம் நாள் இந்தியாவின் அதிகாரமாற்றம் பிரிட்டிசார் கையில் இருந்து இந்தியாவுக்கு வரவேண்டும், அப்பொழுது பிரிட்டனின் மவுண்ட்பேட்டன் சில ஆலோசனைகளை சொன்னான் இந்த அதிகாரமாற்றம் இந்தியாவின் பாரம்பரியபடி நடக்கட்டும், அதுதான் நல்லது. எந்நிலையில் இந்தியாவினை பிரிட்டன் பெற்றுகொண்டதோ அந்த கலாச்சாரபடியே விட்டுவிட்டு […]

மானவாது “விக்”காவது

இலங்கைக்கு வந்த சீன கப்பலின் நிலை திரிசங்கு சொர்க்கமாக நிற்கின்றது, அது துறைமுகத்தில் இன்னும் அனுமதிக்கபடவில்லை மாறாக 400 பணியாட்களுடன் சர்வதேச கடல்பரப்பில் நிற்கின்றது திட்டமிட்டபடி அக்கப்பல் ஆகஸ்டு 11ம் தேதியில் இருந்து ஆகஸ்டு 17 வரை இலங்கை ஹம்பாந்தோட்டாவில் நிற்க வேண்டும் ஆனால் அப்படி நடக்கவில்லை இலங்கைக்கு சீனா கப்பலை அனுப்ப காரணமே இந்தியாவின் சுதந்திர தின விழாவில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும், இந்திய ராணுவ சாகசம் இதர தொடர்புகளை ஒரு அச்சத்தோடு நடத்த எச்சரிக்கை […]

நீதிநெறி விளக்கம் : 59

“பொய்குறளை வன்சொல் பயனிலவென் றிந்நான்கும்எய்தாமை சொல்லின் வழுக்காத்து – மெய்யிற்புலமைந்துங் காத்து மனமா சகற்றும்நலமன்றே நல்லா றெனல்” பொய், கோள் சொல்லுதல் எனும் புறம் பேசுதல், கடும்சொல், பயனற்ற பேச்சு பேசுதல் என நான்கும் இல்லாமல் பேச வேண்டும், பேச்சில் இந்த நான்கும் இருக்க கூடாது, இவ்வழியில் செல்லாமல் புலன்களையும் கட்டுபடுத்தி வைத்தல் வேண்டும் , அதுவே மனதின் மாசை அகற்றி நலம் காக்கும் என்பது பாடலின் பொருள்

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 130 – கலை ஞானம் / குறள் : 01

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 130 – கலை ஞானம் / குறள் : 01 கலை என்றால் வெறும் ஆடல் பாடல் அல்ல, ஒரு விஷயத்தில் மனம் ஒன்றி அந்த விஷயம் மூலம் உண்மையினை உணர்ந்தால் அந்த உணர்வை லயிக்க வைக்கும் சக்தி இருந்தால் அந்த விஷயமே கலை என்றாகும் கலை என்பதற்கு ஒன்றாக கலந்துவிடுதல் எனும் பொருளும் உண்டு, அவ்வகையில் முக்தியினை நோக்கி ஈர்க்கும் விஷயங்களை இங்கு கலைஞானம் என அதிகாரமாக கொடுக்கின்றார் […]

அன்றொரு நாள் அதே மதுரையில் இந்திரா….

இன்று இந்திய தமிழக மாகாண அமைச்சர் தியாகராஜன் கார்மேல் செருப்பு வீசபட்டு சில சர்ச்சைகள் வெடித்திருக்கலாம், திமுகவில் இருந்து பாஜகவுக்கு வந்த சரவணன் போன்றோர் இதனால் கட்சிவிட்டு விலகியும் இருக்கலாம் ஆனால் இம்மாதிரி கல் எறி, செருப்பு சம்பவங்கள் ஏன் கொலைமுறயர்சிகளை கூட தமிழக அரசியலில் மட்டுமல்ல அகில இந்திய அளவிலே தொடங்கி ஏகபட்டமுறை செய்த கட்சி திமுக‌ அக்கட்சியின் வரலாறெல்லாம் இம்மாதிரி வன்முறைகளாலே நிரம்பி கிடக்கின்றது இன்று மதுரையில் திமுக அமைச்சருக்காக பொங்குகின்றார்கள், அதுவும் எல்லையில் […]

அபிராமி அந்தாதி 46

“வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரை மிக்கோர்பொறுக்கும் தகைமை புதியது அன்றே புது நஞ்சை உண்டுகறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னேமறுக்கும் தகைமைகள் செய்யினும் யானுன்னை வாழ்த்துவனே” இந்த பாடலை “வெறுக்கும் தகைமைகள் செய்தினும்” என தொடங்குகின்றார் பட்டர் வெறுக்கும் தகமைகள் என்பது சான்றோரும் அறிஞரும் நல்லோரும் பிறரும் வெறுக்கும் குணங்கள் அல்லது செயல்களை குறிப்பது அப்படிபட்ட செயல்களை பொறுப்பவர்களை, அப்படி செய்பவர்கள் மேல் வெறுப்பு கொள்ளாமல் பெருந்தன்மையாக கடந்து அணைப்போர் மேலோர் என்பது இந்துக்கள் கருத்து […]

சேவல் விருத்தம் : 01

பறவை இனங்களில் தனித்து நிற்பது சேவல் அது விழிப்பானது, அதிகாலையிலே எழுந்து எல்லோரையும் எழுப்பும் குணம் கொண்டது, போர்குணம் அதிகமானது, எளிதில் பின்வாங்காதது, தலமையேற்று செல்லும் சக்தி கொண்டது, மறைந்திருக்கும் விஷயங்களை கிளறி வெளி கொண்டுவரும் இயல்பு அதனுடையது அந்த சேவலின் குணத்தை கவனமாக படித்த ரிஷிகள் முருகனின் கொடியின் அடையாளமாக அதை வைத்தார்கள் ஆன்மாவுக்கு இருக்க வேண்டியவை வைராக்கியம், விழிப்பு, மறைந்திருப்பதை தேடுதல், தைரியம் என சில குணங்கள் அந்த குணங்களை கொண்ட ஆத்மா ஞானத்தை […]

ஆச்சார கோவை : 38

“பொய் குறளை வெளவல் அழுக்காறு இவை நான்கும்ஐயம் தீர் காட்சியார் சிந்தியார் சிந்திப்பின்ஐயம் புகுவித்து அரு நிரயத்து உய்த்திடும்தெய்வமும் செற்றுவிடும்” கற்றறிந்த தெளிவான அறிவுடைய பெரியோர்கள் ஒருநாளும் பொய், ஏமாற்றி கோள் சொல்லுதல், பிறர் பொருளை அபகரிக்க திட்டம் இடல், பொறாமை ஆகியவற்றை மனத்தால் சிந்திக்க மாட்டார்கள். அம்மாதிரி சிந்தனையே ஒருவனனை வறுமை சூழ்ந்து, இம்மை மறுமைக்கும் பிச்சை எடுக்க வேண்டிய நிலைக்கு ஆழ்த்திவிடும், நரகத்திற்கும் வழிவகுக்கும், தெய்வமும் அவனை விட்டு அகன்று போகும் என்பது பொருல் […]

யானை

உலக விலங்குகளில் மனிதனோடு ஒட்டும் விலங்குகள் குறைவு, எல்லா விலங்குகளையும் மனிதன் அடக்கி நடத்திவிட முடியாது. மிக சில விலங்குகளே மனிதனுடன் நெருங்கி பழகும் அளவு அறிவு கொண்டவவை அதில் ஒன்றுதான் யானை மிக பெரும் உடலும் கடும் பலமும் கொண்டதாயினும் அதை பழக்கும் வித்தை ஆசியருக்கு குறிப்பாக இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாட்டு இனங்களுக்கு அத்துபடி, ஆதிகாலத்தில் இருந்தே தொடர்ந்து வரும் பந்தம் அது. மனிதன் யானையோடு பழக தொடங்கியது மிக பழங்காலம் எனினும் […]

இந்திய சுதந்திர போராட்ட வரலாறு: 10

1857ல் எல்லா இந்திய மன்னர்களையும் அடக்கி அல்லது ஒப்பந்தமிட்டு கையினை கட்டிபோட்டு ஆளதொடங்கினான் வெள்ளையன், அந்த சூழல் இந்தியருக்கு புதியது அதுவரை மன்னர்களே ஆண்டு மன்னர்களே சண்டையிட்டு மன்னர்களே வழிநடத்திய இந்திய கண்டத்தில் ஆட்சி அன்னியன் அதுவும் இந்தியாவுக்கு சம்பந்தமே இல்லா ஐரோப்பியன் வசம் சென்றிருப்பதும் இந்திய மன்னர்களெல்லாம் அடக்கபட்டிருப்பதும் பெரும் குழப்பத்தை கொடுத்தன‌ பல யுகங்களாக மன்னர்களால் வழிநடத்தபட்ட இந்தியர்களால் இனி என்ன செய்துவிடமுடியும், இனி நம்மை அசைக்கமுடியாது என மமதையில் இருந்தான் பிரிட்டிஷ்காரன் இனி […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications