பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அபிராமி ஆலயம் 02 : இலந்துறை அபிராமி ஆலயம்.

அபிராமி ஆலயம் 02 : இலந்துறை அபிராமி ஆலயம். அபிராமி அன்னை ஆலயங்களில் அடுத்த ஆலயம் இலந்துறை அபிராமி ஆலயம், கும்பகோணம் திருநீலக்குடி அருகே அமைந்துள்ள இந்த ஆலயம் காலத்தால் மகா தொன்மையானது. இலந்தை மரங்கள் நிறைந்த வனத்தில் உருவான ஆலயம் இது, அதனால் இலந்துறை என்றானது. எவ்வளவுக்குத் தொன்மையானது என்றால் வியாச மகரிஷி வந்து வழிபட்ட இடம் இது, வியாச மகரிஷி காலம் யுகங்களைக் கடந்தது. அக்காலத்தில் மானுடரின் வாழ்வு பல்லாயிரம் வருடங்கள் இருந்தது, அந்நேரம் […]

அபிராமி ஆலயங்கள் 01 : திருமலைராயன் பட்டணம் அபிராமி ஆலயம்.

அபிராமி ஆலயங்கள் 01 : திருமலைராயன் பட்டணம் அபிராமி ஆலயம். அபிராமி அன்னை ஆலயங்களில் முதல் தலம் இது. சோழநாட்டின் மிக முக்கிய ஆலயமான இவ்வாலயம் நாகப்பட்டினம் காரைக்கால் இடையே அமைந்துள்ளது, யுகங்களைக் கடந்த இந்த ஆலயம் வேத காலம் எனும் ரிஷிகள் மாபெரும் சக்தியுடன் வலம் வந்த காலத்தில் இருந்து துவங்குகின்றது. சோழவளநாட்டின் அன்றைய வனப்பகுதியில் இந்த ஆலயம் லிங்க வழிபாடாக துவங்கிற்று, அகத்தியர் போன்ற மாமுனிகளால் ஸ்தாபிக்கப்பட்டு வணங்கப்பட்ட ஆலயம் இது. அகத்தியர் இங்கு […]

அபிராமி ஆலயங்கள் – முன்னுரை.

அபிராமி ஆலயங்கள் – முன்னுரை. இந்த சியாமளா நவராத்திரியில் அன்னை ராஜ சியாமளா, மீனாட்சி அம்மனை வழிபடுதல் நன்று. அப்படியே அபிராமி அன்னையினை வழிபடுதலும் கூடுதல் சிறப்பு. திருக்கடையூரில் அன்னை அபிராமி தலம் எல்லோரும் அறிந்த ஒன்று, அங்குதான் மார்கண்டேயன் எமனிடம் இருந்து சிவபெருமானால் காப்பாற்றப்பட்டான். இன்னும் மன்மதனை சிவன் எரித்துப்போட்ட மயானமும் அங்கேதான் உண்டு. அதே திருக்கடையூரில்தான் அபிராமி பட்டர் வாழ்ந்து அன்னையே கதி எனக் கிடந்து, அதனால் சரபோஜி மன்னனால் பெரும் ஆபத்துக்குள் தள்ளப்பட்டு […]

பண்டரிபுரம் பாண்டுரங்கன் ஆலய ஆஷாட ஏகாதசி.

பண்டரிபுரம் பாண்டுரங்கன் ஆலய ஆஷாட ஏகாதசி : 01 பாரதம் என்பது கோவில்களின் நாடு, இந்த நாட்டின் ஒரே அடையாளம் அந்த ஆன்மீக ஆலயங்கள், அவை வெறும் கற்பனை அல்ல, காரணமில்லாமல் உருவானவை அல்ல, அவை ஒவ்வொன்றும் இந்த பிரபஞ்ச சக்தியே அந்த மகா பரம்பொருளே தேர்ந்து கொண்ட ஆலயங்கள் மக்களுக்கும் நாட்டுக்கும் காலம் காலமாய் அருள் வழங்க அவை தாங்களே இவற்றை தேர்நதெடுத்து கொண்டன, அவைகள் இந்த மக்களுக்கும் நாட்டுக்கும் காலம் காலமாய் அருள்பாலித்து சூட்சுமமாய் […]

விநாயகர் அனுபூதி : 46 to 50

விநாயகர் அனுபூதி : 46 “திண்தோள் சதுரும் திகழ்ஐங் கரமும்,வண்டார் குழலார் மகிழ்ந்தே மருங்கில்பண்டே வளர்கோ லமதைப் பணிவாய்க்கண்டேன்: களித்தேன்: கவலை இலனே!” பாடல் இப்படிப் பிரிந்து வரும். “திண் தோள் சதுரும் திகழ் ஐங்கரமும்வண்டார் குழலார் மகிழ்ந்தே மருங்கில்பண்டே வளர் கோலம் அதைப் பணிவாய்கண்டேன் களித்தேன் கவலை இலனே” உறுதியான நான்கு தோள்களுடனும் ஐந்து கரத்துடனும் வண்டாடும் குழலைக் கொண்ட தேவியருடன் இருபுறமுமிருக்க மிகப் பழமையான ஆதிகால தோற்றத்துடன் விநாயகப் பெருமான் இருக்கும் கோலத்தைக் கண்டு […]

விநாயகர் அனுபூதி : 41 to 45

விநாயகர் அனுபூதி : 41 “ம‌ங்கை வலபை மணவா ளன்அருள்பொங்கும் புனல்போல் பொழிந்தே புவனம்எங்கும் நிறைந்தே இருக்கின் றதுகண்!துங்கக் குணத்தீர்! புசிமின் தொழுதே” பாடல் இப்படிப் பிரிந்து வரும். “மங்கை வலபை மணவாளன் அருள்பொங்கும் புனல் போல் பொழிந்தே புவனம்எங்கும் நிறைந்தே இருக்கின்றது கண்துங்க குணத்தீர் புசிமின் தொழுதே” “விநாயகப் பெருமான் வல்லபை தேவியின் கணவர், அவரின் அருளிலே இந்த உலகம் செழித்து நிற்கின்றது. எங்கும் அவரின் கருணை வெள்ளமே நிரம்பியிருக்கின்றது. மாந்தர்களே! அவரின் அருளை அனுபவித்து […]

விநாயகர் அனுபூதி : 36 to 40

விநாயகர் அனுபூதி : 36 “கத்தும் தரங்கக் கடல்சூழ் புவியில்தித்தித் திடும்செந் தமிழ்மா லைசெயும்வித்தர் களின்தீ வினையை விலக்கும்அத்தித் தலையன் அருட்பார் வையதே” பாடல் இப்படிப் பிரிந்து வரும். “கத்தும் தரங்கக் கடல் சூழ் புவியில்தித்தித்திடும் செந்தமிழ் மாலை செயும்வித்தர்களின் தீ வினையை விலக்கும்அத்தித் தலையன் அருட்பார் வையதே” “கத்தும் கடல் சூழ்ந்த இந்தப் பூமியில் இனித்திடும் தித்திப்பான கவிதைகளை மாலையாய்ச் விநாயகப் பெருமானுக்குச் சூடும் கவிஞர்களின் தீ வினை எல்லாம் விலகும், அத்தி மலர்களைச் சூடிய […]

விநாயகர் அனுபூதி : 31 to 35

விநாயகர் அனுபூதி : 31 “அயில்கை உளநம் அறுமா முகற்கேமயிலூர் திதனை மகிழ்ந்தே அளித்தான்செயிர்தீர் அடியார் சிறப்பாம் வகையில்ஒயிலாய் நலம்தந்(து) உயர்த்தும் அவனே” பாடல் இப்படிப் பிரிந்து வரும் “அயில் கை உள நம் அறுமா முகற்கேமயில் ஊர்தி தனை மகிழ்ந்தே அளித்தான்செயிர் தீர் அடியார் சிறப்பாம் வகையில்ஒயிலாய் நலம் தந்து உயர்த்தும் அவனே” அயில் என்றால் வேல் எனப் பொருள். வேல் ஏந்திய முருகனுக்கு தன் மயில் வாகனத்தைக் கொடுத்து மகிழ்ந்தவர் விநாயகப் பெருமான். அப்படியான […]

விநாயகர் அனுபூதி : 26 to 30

விநாயகர் அனுபூதி : 26 “துட்டர் குதர்க்கர் தொலைந்தே பொடியாய்ப்பட்டே இரியப் படையை விடுவாய்!சிட்டர் புகழும் திறமே! வளரும்மட்டில் மதமார் மழலைக் களிறே” பாடல் இப்படிப் பிரியும். “து(ஷ்)ட்டர் குதர்க்கர் தொலைந்தே பொடியாய்ப்பட்டே இரியப் படையை விடுவாய்!சி(ஷ்)ட்டர் புகழும் திறமே வளரும்மட்டில் மதமார் மழலைக் களிறே” “துஷ்ட குணத்தோடுப் பொல்லாதவர்கள் வன்முறையால் தாக்க வரும்போதும், குதர்க்க வாதத்தோடு வஞ்சகர்கள் ஏமாற்றவரும் போதும், உன் கையில் இருக்கும் கோடாரியினைக் கொண்டு உன்னை நம்பும் பக்தர்களைக் காப்பவனே, மதம் வழியும் […]

விநாயகர் அனுபூதி : 21 to 25

விநாயகர் அனுபூதி : 21 “மகப்பே(று) அருள்வான் மகிழ்வாய் நிதியைஅகத்தே தருவான்: அணியன்: கரிமாமுகத்தான் அடியை முறையாய் நிறையாய்ச்செகத்தீர் தொழுமின்! தொழுமின் தினமே” “விநாயகன் குழந்தைப் பேற்றினை அருள்வான; இல்லங்களில் எல்லாம் மகிழ்ச்சியுடன் செல்வத்தைத் தருவான்; அவன் அருகிலேயே இருப்பான்; விநாயகனின் திருவடியை முறையாக நாள் தோறும் தொழுவீர்களாக” இப்பாடல் விநாயகப் பெருமானைப் பணிந்தால் சந்ததி பெருகி பெருவாழ்வு வாழும் என்பதைப் போதிக்கின்றது. விநாயகப் பெருமான் நல்ல பிள்ளைகள் அமையும் யோகத்தை அருள்பவர், பிள்ளைச் செல்வம் அருள்வதாலே […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications