பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சப்த கன்னியர் – 03

மகேஸ்வரி – இரண்டாம் கன்னிதெய்வம் சப்த கன்னியரில் இரண்டாம் தெய்வமான மகேஸ்வரியினை காணுமுன்னால் இந்த சப்த கன்னி வழிபாடு இடையில் புகுத்தபட்டதா? யாரோ இடைசெருகல் செய்தார்கள்களா என்பதான குழப்பங்களை காணலாம் சப்த கன்னியர் வழிபாடு இங்கு கால காலமாக உண்டு, சிறிய கோவில்களின் தெய்வமாக கிராமங்களிலும் பெரிய ஆலயங்களில் சப்த கன்னியராகவும் இந்த வழிபாடு உண்டு கலிங்கத்து பரணி இந்த வழிபாட்டை சொல்கின்றது “மேதி புள் அலகை தோகை ஏறு உவணம்வேழம் என்ற கொடி ஏழுடைச்சோதி மென் […]

சப்த கன்னியர் – 04

கௌமாரி தேவி – மூன்றாம் கன்னிதெய்வம் கௌமாரம் என்றால் முருகப்பெருமானின் வழிபாட்டை குறிக்கும் சொல், அவ்வகையில் இந்த கௌமாரி தேவி என்பவள் முருகப்பெருமானின் சக்தியினை குறிப்பவள். “கடல்வயிறு எரியவொள் வேலினைப் பார்த்தவள்” என குமரகுருபரர் முருகன் சூரனை அழிக்கும் போது அவள் முருகபெருமானின் சக்தியாய் இருந்தாள் என்பதை சொல்கின்றார். சப்த கன்னியரில் முன்றாம் தேவியான இந்த அன்னை முருகபெருமானின் சக்தி, அந்த ஸ்கந்தனின் இயக்கும் குமரன் எனும் கௌமாரனின் சக்தி அந்த கௌமாரி. அவள் முருகனின் அம்சம் […]

சப்த கன்னியர் – 02

பிராம்மி – முதல் கன்னிதெய்வம் இந்த பிரபஞசத்தை இயக்கும் மகா சக்திகளை ஏழுவிதமாக சக்திகளாக பிரித்து சொன்ன இந்துமதம் அவர்களை சப்த கன்னியர், சப்த மாதர்கள் என்ற அடையாளமிட்டு சொன்னது இந்த சக்திகள் இயக்கும் சக்திகள், இயங்கும் பலத்தையும் அருளையும் தரும் சக்திகள். அந்த சக்திகளின் பலத்தாலே இந்த பிரபஞ்சமமும் அண்டமும் அண்டத்தின் வடிவமான மானிட பிண்டம் எனும் மானிட உடலும் இயங்குகின்றது இந்த சக்திகளின் தோற்றம் பற்றி புராணத்தில் பல கருத்துக்கள் உண்டு, சிவன் அந்தகார […]

சப்த கன்னியர் – 01 முன்னுரை

இந்து மரபில் நான்கு நவராத்திரிகள் உண்டு. ஆடி மாதம், புரட்டாசி, தை, பங்குனி என நான்கு மாதங்களில் அவை கொண்டாடப்படும். ஆடி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் வராஹி நவராத்திரி, தமிழக அம்மன் கொடை விழாக்கள் இந்த சாயலே. புரட்டாசி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் சாரதா நவராத்திரி. வழமையாக கொண்டாடப்படும் நவராத்திரி இதுதான், துர்கா பூஜை சரஸ்வதி பூஜை என கொண்டாடுவது […]

காளிதாசனின் சாகுந்தலம் : 01

அன்னை காளியின் புகழ்போல் மிகவும் பெரிதாகப் படர்ந்து உயர்ந்திருந்த ஹிமாலய மலை அது. அதன் உச்சியில் வெள்ளியினை உருக்கி ஊற்றி வைத்தது போல் பனிச் சிகரங்கள் மின்னிக் கொண்டிருந்தன‌. சூரியக்கதிர்கள் பட்டு அந்த மலைச்சிகரம் தங்கமாகவும் நவமணிகளாகவும் மாயமால ஜாலம் காட்டிக் கொண்டிருந்தது. பச்சை வர்ண புடவையினை சாற்றியது போல் மலை எங்கும் பசுமை சூழ்ந்திருந்தது. அமுதத்தை ஊற்றியது போல அருவிகள் வீழ்ந்து கொண்டிருந்தன. அந்த மலையின் எல்லா வளங்களையும் தான் சுமந்து மக்களுக்கு கொடுப்பதற்காக வார்த்தையால் […]

காளிதாசனின் சாகுந்தலம் – முன்னுரை

முன்னுரை காளிதாசனின் மேகதூதம் கடந்த பதிவிலே முடிவு பெற்றுவிட்டது என்பதை தெரிவிக்கின்றோம். காளிதாசன் மேகத்திடம் தன் காதலி இருக்குமிடத்தையும் அதை அடையும் வழியினையும் சொல்லி அவளுக்கு சொல்லவேண்டிய செய்தியும் சொல்லி காவியத்தினை முடிக்கின்றார் காளிதாசர். அது மேகத்தின் வழி அழகான வர்ணனையுடன் பாரத தேசத்தின் வடபகுதியின் அழகைச் சொன்ன காவியம். வட பாரத மலைகள், நதிகள், நாடுகள் அப்படியே ஆலயங்கள், பண்டிகைகள், ஊர்கள் எனச் சொல்லி கயிலாயம் பற்றிச் சொல்லி மிக அற்புதமாக பாரதத்தை படம் பிடித்துக் […]

காளிதாசனின் மேகதூதம் : 13

பன்னிரெண்டாம் பத்து ஸ்லோகங்கள் “அன்பே, ஹிமாலயத்தில் இருந்து தெற்கே வரும் குளிர்ந்த காற்று நான் இருக்குமிடமும் வருகின்றது, அக்காற்று ஹிமாலயத்தின் தேவதாரு மரங்களின் தளிர்களை தொட்டு வரும், அப்போது அந்த மரங்களில் வடியும் பாலின் இனிமையான மணம் அதில் கலந்திருக்கும் அந்த இனிமையான மணத்தினை கொண்டு அக்காற்று ஹிமாலயத்தில் இருந்து வருவதை உறுதி செய்து கொள்கின்றேன், என் அன்பிற்கு எக்காலமும் உகந்த காதலியான‌ உன்னயும் அக்காற்று தழுவி வந்திருக்கும் என்பதால் அக்காற்றை ஆசையாய் தழுவுகின்றேன் என் அன்பே, […]

காளிதாசனின் மேகதூதம் : 12

பதினோறாம் பத்து ஸ்லோகங்கள் “மேகமே, நீ என் காதலி தூங்கிகொண்டிருக்கும் போது சென்றால் அவளை எழுப்பிவிடாதே, அவள் விழிக்கும் வரை அருகில் காத்திரு. காரணம் கனவில்தான் அவள் என்னை கண்டு என் கழுத்தினை அவள் தன்கொடி போன்ற‌ கரங்களால் வளைத்து தழுவி மகிழ்ந்து கொண்டிருப்பாள், அவள் மகிழ்வாக இருக்கும் மிகச்சிறிய நேரம் அதுதான், அதனை நீ கெடுத்துவிட கூடாது அதனால் பொறுமையாக காத்திருப்பாய். மேகமே அவள் கண்விழிக்கும் நேரம், நீ உன் நீர்திவலைகளுடன் கூடிய குளிர்ந்த காற்றை […]

காளிதாசனின் மேகதூதம் : 11

பத்தாம் பத்து ஸ்லோகங்கள் “மேகமே, என் காதலி அந்த வீட்டில் எப்படி இருப்பாள் என்பதை உனக்கு சொல்கின்றேன், அதனால் நீ அவளை அடையாளம் காணுவது இன்னும் எளிதாகும். அவள் என்னை எதிர்பார்த்து, நான் திரும்பிவர இன்னும் எத்தனை மாதங்கள் உண்டு என எண்ணிக் கொண்டிருப்பாள். அதை பூஜையில் வைக்க இருக்கும் பூக்களை அடுக்கி வைத்து எண்ணி எண்ணிப் பார்த்துக் கொண்டும் கண்களை துடைத்துக் கொண்டும் இருப்பாள் சில நேரம் நான அவளோடு இருந்து இன்புற்ற நினைவுகளை மீள […]

காளிதாசனின் மேகதூதம் : 10

ஒன்பதாம் பத்து ஸ்லோகங்கள் “மேகமே, என் வீட்டில் அந்த குளத்தின் கரையில் இந்திர நீல கற்கலால் அமைந்த ஒரு குன்றை காண்பாய், அது நானும் என் காதலியும் அமர்ந்து விளையாட உருவாக்கபட்டது, அந்த நீல நிறத்தில் இருக்கும் அந்த குன்றினை சுற்றி தங்க வாழைமரங்கள் அமைக்கபட்டிருக்கும் நடுவில் நீலநிறமும் சுற்றிலும் தங்க நிறமும் கொண்டிருக்கும் அக்குன்று, கருநீல நிறமான உன்னை சுற்றி மின்னல் வெட்டும் அந்த அழகான காட்சியினை கொண்டிருக்கும், உன் அழகினை அந்த குன்றில் காண்பாய் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications