காளிதாசனின் மேகதூதம் : 11
பத்தாம் பத்து ஸ்லோகங்கள் “மேகமே, என் காதலி அந்த வீட்டில் எப்படி இருப்பாள் என்பதை உனக்கு சொல்கின்றேன், அதனால் நீ அவளை அடையாளம் காணுவது இன்னும் எளிதாகும். அவள் என்னை எதிர்பார்த்து, நான் திரும்பிவர இன்னும் எத்தனை மாதங்கள் உண்டு என எண்ணிக் கொண்டிருப்பாள். அதை பூஜையில் வைக்க இருக்கும் பூக்களை அடுக்கி வைத்து எண்ணி எண்ணிப் பார்த்துக் கொண்டும் கண்களை துடைத்துக் கொண்டும் இருப்பாள் சில நேரம் நான அவளோடு இருந்து இன்புற்ற நினைவுகளை மீள […]