பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காளிதாசனின் மேகதூதம் : 09

எட்டாம் பத்து ஸ்லோகங்கள் “மேகமே,  அலகாபுரியில் இருக்கும் யட்சன பெண்கள் மிக மிக அழகானவர்கள், எவ்வளவுக்கு அழகானவர்கள் என்றால் ரம்பபை , ஊர்வசி, திலோத்தமை, மேனகை என தேவலோக பெண்களை கொண்டிருக்கும் தேவர்கள் கூட அவர்களை விட அலகாபுரி பெண்களே அழகு என இங்கு தேடிவருவார்கள் அத்தகைய அலகாபுரி பெண்கள் கங்கையின் குளிர்ந்தகாற்றினால் இன்பமான சுகம் துய்ப்பார்கள், அந்த கரையோரம் செழித்து வளர்ந்திருக்கும் மந்த்ரா மரத்தின் இதமான நிழலில் சூரிய வெளிச்சம் உடலினை தொடாதவாறு விளையாடுவார்கள் கங்கை […]

காளிதாசனின் மேகதூதம் : 08

ஏழாம் பத்து ஸ்லோகங்கள் “மேகமே, உன்னால் அந்த மலைக்கே ஒரு அழகு ஏற்படும். வெட்டபட்ட யானை தந்தங்கள் குவிந்து கிடப்பது போன்ற அந்த வெண்ணிற மலை அது , அதன் சிகரங்கள் தந்தம் போல கூரியவை, ஆனால் நீயோ நன்கு குழைக்கபட்ட மை போல கருநீல நிறம் கொண்டவன் நீ அந்த மலையின் சிகரங்களிலும் சமவெளிகளிலும் இறங்கும் போது வெண்ணிற நிறமுடைய பலராமர் நீலநிற பட்டாடையினை தோள்களில் இட்டு அழகுற காட்சி தருவது போல் அம்மலை விளங்கும், […]

காளிதாசனின் மேகதூதம் : 07

ஆறாம் பத்து ஸ்லோகங்கள் “மேகமே, தசபுர பெண்களின் அழகினை கண்டு களித்தபின் உன் பயணத்தை வடக்கு நோக்கி தொடர்வாயாக, பிரஹ்மாவர்த்தம் எனும் புண்ணிய பூமியினை உன் நிழலால் கடப்பாயாக, ஏனென்றால் அது புண்ணிய பூமி அல்லவா?, பல அவதாரங்கள் இன்னும் அரூபியாய் வாழும் இடமல்லவா? அதனால் அங்கே கால் வைக்க கூடாது, அமைதியாக கடந்து சென்றுவிடு அப்படி பணிவாய் அந்த பூமியினை கடந்தபின், பிரசித்தியானதும் தர்மம் மீட்கபட்டதும் கீதை உரைக்கபட்ட இடமுமான‌ குருஷேத்திரத்தை அடைவாய், அங்கேதான் நீ […]

காளிதாசனின் மேகதூதம் : 06

ஐந்தாம் பத்து ஸ்லோகங்கள் “மேகமே, அடர்ந்த இரவில் வழி தெரியாமல் தடுமாறிய விலைமாந்தருக்கு நீ உன் மின்னலால் வெளிச்சம் கொடுத்து வழிகாட்டியதில் மிகவும் களைத்திருப்பாய், அதனால் உஜ்ஜைனி நகரின் மாடங்களில் கொஞ்சம் ஓய்வெடுத்துக்கோள் அந்நகரின் மாட மாளிகையில் புறாக்கள் கூடுகட்டி வசிக்கும், அவை உறங்கும் நேரம் நீயும் அங்கே கொஞ்சம் இளைப்பாறி களைப்பு நீங்கி எழுவாய், என் நண்பனான் நீ எனக்கு உதவி செய்யவேண்டி இருப்பதால் அதிகம் அங்கே தங்காமல் விரைந்து செல்ல முயலுவாயாக‌ மேகமே, அந்நகரின் […]

காளிதாசனின் மேகதூதம் : 05

நான்காம் பத்து ஸ்லோகங்கள் “மேகமே உஜ்ஜைனியினை நீ நெருங்கும்போது சிப்ரா என்ற நதியினை காண்பாய், அதிகாலை வேளையில் அந்த நதியின் குளிர்காற்று நகரை நோக்கிவீசும், கரையோரம் உள்ள மரங்களில் இருந்தும், நதிமேல் ஆடி திரியும் நீர்பறவைகளின் சத்தங்களையும் அந்த ஈரம் நிறைந்த கனமான காற்று நீண்ட தூரம் எடுத்து செல்லும் நதியோரம் மலர்ந்த தாமரை உள்ளிட்ட மலர்களின் மணம் கலந்த அந்த காற்று நகரத்தையே மணம் கமழசெய்யும் உஜ்ஜைனி நகரில் மறுபடியும் மறுபடியும் தன் காதலியோடு கூட […]

காளிதாசனின் மேகதூதம் : 04

மூன்றாம் பத்து ஸ்லோகங்கள் “மேகமே, நீ வான்வழியே செல்லும் போது ஸித்திகள் எனும் தேவலோகத்தவர் தங்கள் துணையுடன் உன் எதிரில் சஞ்சரிப்பர், உன்னை கண்டதும் சாதகபறவைகளெல்லாம் நீ சிந்தும் துளிகளை பருகவேண்டி உனக்கு கீழே தாழபறக்கும் இரக்கமும் கருணையும் கொண்ட நீ அவைகள் தாகம் தீர்க்க சில துளிகளை வீசுவாய், அப்போது அவை வானில் பறந்தபடியே அந்த துளிகளை அருந்தும், அவை பறந்தபடி தங்கள் அலகுகளால் அழகாக நீர்துளிகளை அருந்துவதை காணும் ஸித்தர்கள் தங்கள் துணையோடு ஆச்சரியபடுவார்கள், […]

காளிதாசனின் மேகதூதம் : 03

இரண்டாம் பத்து ஸ்லோகங்கள் மேகமே, நீ உன் பயணத்தை தொடங்கும் முன்னால் ராமபிரானின் காலடியால் புனிதமடைந்தததும், உன் நண்பனுமான‌ இந்த சித்திரக்கூட மலையினைத் தழுவி விடை கொள்வாய். ராமனின் கால்பட்ட இந்த மலையினைத் தழுவ நீ தவம் செய்தவனுமாவாய். ராமபிரான் மகா புனிதமானவன். அவன் கால்பட்ட தூசுகூட புனிதமானது எனும்போது இந்த மலை எவ்வளவு புண்ணியமானது. நீ வருடம் ஒருமுறைதான் இவனை சந்திக்கின்றாய். பத்துமாதம் அம்மலை உன்னை பிரிந்திருக்கின்றது. அதனால் அந்த மலையினை அணைத்து கண்ணீர்விட்டு உன் […]

காளிதாசனின் மேகதூதம் : 02

முதல் பத்து ஸ்லோகங்கள் கொழித்த செல்வத்தில் மிதப்பதும், சுவரையும் பொன்னால் கொண்ட‌ அலகாபுரி பட்டணத்தின் வேந்தன் குபேரன் இட்ட சாபத்தால் மனைவியினை சில காலம் பிரிந்து தொலை தூரம் சென்ற யட்சன் ஒருவன், பரிகாரம் தேடித் தனித்து தவித்து நின்றான். அன்னை சீதையின் ஸ்நானத்தால் புனிதமான நதியோடும் சித்திரகூட மலையில் நின்றான். தன் தெய்வ சக்தியும், பெரும் செல்வமும், மின்னல்போல் அழகானவளும் அன்பு நிறைந்தவளுமான தன் காதலியினையும் ஒரே நேரம் இழந்து புலம்பி நின்றான். தன் ஆத்மாவில் […]

காளிதாசனின் மேகதூதம் : 01

முன்னுரை காளிதாசனின் விக்ரமோர்வ‌சியம் என்பதன் தமிழாக்கத்தை நாம் எழுதவில்லை. அது அரவிந்தரால் ஆங்கிலத்துக்கு மாற்றப்பட்டதன் தமிழ் வடிவம். அதுவும் இன்னொரு தளத்தில் வந்தது.  படிக்க நன்றாக இருந்ததால் நாம் சில பாகங்களை இங்கே சொன்னோம். அது பலருக்கு புரியவில்லை என்றார்கள்.  சிலர் காளிதாசனின் காவியங்களை சொல்லமுடியுமா என்றார்கள். அவன் பெரும் கடல், எழுதிக் குவித்தவை ஏராளம்.  அதையெல்லாம் எழுத தனிவாழ்வு வேண்டும். அவனின் உவமை அழகு, அந்த உவமையில் சொல்லும் ஆழ்ந்த வாழ்க்கை தத்துவம் அழகு, வர்ணனை […]

திருமுருகாற்றுப்படை : 15

( 227 முதல் 247 வரையான வரிகள்) “மாண்டலைக் கொடியொடு மண்ணி அமைவரநெய்யொடு ஐயவி அப்பி ஐதுரைத்துக்குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறிமுரண்கொள் உருவின் இரண்டுடன் உடீஇச் செந்நூல் யாத்து வெண்பொரி சிதறிமதவலி நிலைஇய மாத்தாட் கொழுவிடைக்குருதியொடு விரைஇய தூவெள் ளரிசிசில்பலிச் செய்து பல்பிரப்பு இரீஇச்சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப் பெருந்தண் கணவீர நறுந்தண் மாலைதுணையற அறுத்துத் தூங்க நாற்றிநளிமலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்திநறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடிஇமிழிசை அருவியொடு இன்னியம் கறங்கஉருவப் பல்பூதத் தூஉய் வெருவரக்குருதிச் செந்தினை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications