காளிதாசனின் சாகுந்தலம் : 04
சாகுந்தலையின் பூர்வீகம் குறித்து துஷ்யந்தன் கேட்க அதற்கு பதில் சொல்ல தொடங்கினாள் அனுசுயை “அய்யா, கௌசிக குலத்தில் வந்தவரும் பெரும் மன்னனும், கீர்த்திநிரம்பிய ராஜமுனிவராகவும் ஒருவர் இருக்கின்றார் அல்லவா? “ “ஆமாம், கேள்விபட்டது உண்டு” என்றான் துஷ்யந்தன் அனுசுயை சொன்னாள், “அவர்தான் எங்கள் அன்புக்குரியவளும் அழகு நிரம்பியவளுமான இந்த சகுந்தலையின் தகப்பனார், பெற்றெடுத்த தகப்பனார் . தவறவிட்ட அழகான மணிமாலை போல் தனித்துவிடபட்ட இவளை கன்வமுனிவர் எடுத்து வளர்க்கின்றார் , கேட்பாரற்று கிடந்த் ஒரு பெண்குழந்தையினை எடுத்துவளர்த்த […]