குருநாணக்கின் 550ம் ஆண்டு பிறந்தநாள்
இன்று அந்த மகான் குருநாணக்கின் 550ம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாடபடுகின்றது, சீக்கிய சமூகத்துக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்இந்திய வரலாற்றில் குறிப்பிடதக்க அவதாரம் குருநாணக்நிச்சயம் அந்த மனிதன் அறிவாளியும் தீர்க்க தரிசியுமாய் இருந்திருக்கின்றான், ஒரு நாகரீக சமூகத்தை பெருந்தன்மையான சமூகத்தை உருவாக்க துடித்திருக்கின்றான்அவனுக்கு தெரிந்த வரையில் சீக்கியம் எனும் அருமையான மதத்தை சமைத்துவிட்டு சென்றிருக்கின்றான்.அவனின் காலங்கள் கடுமையானவை, அடிக்கடி மோதல்களும் இன்னபிற அட்டகாசங்களும் நடந்தவை, வளமான பஞ்சாப் ஆப்கானியரின் வேட்டைகாடாயிற்றுகோரியில் தொடங்கி, தைமூர் நாதிர்ஷா என யார் யாரெல்லாமோ வந்தார்கள் […]