வள்ளுவனை முதலில் அடையாளபடுத்தியது வெள்ளையன் எல்லீஸ்
உண்மையில் வள்ளுவனின் வரலாறு முழுதாக கிடைக்கவே இல்லை, அவனுக்கு வாசுகி என்றொரு மனைவி இருந்தாள் அவள் கீழே விழுந்த சோற்றுபருக்கையினை ஊசியால் குத்தி கழுவினாள் என்பதெல்லாம் கட்டுகதை ஆதாரமில்லை முழுவரலாறும் கிடைக்கவில்லை என்பததால்தான் வள்ளுவனின் புனிதபிம்பம் அப்படியே இருக்கின்றது, இல்லாவிட்டால் எல்லா கவிஞனுக்கும் உள்ள பலவீனம் போலவே வள்ளுவனின் இன்னொரு பக்கமும் வந்திருக்கும் வள்ளுவனை ஆய்வு செய்தவர்கள் பல்வாறு கருத்து கூறினார்கள் வள்ளுவநாட்டை சேர்ந்தவர் என்றும் சிலர் சொன்னார்கள், வள்ளுவ நாடு என்பது நாஞ்சில் நாட்டிற்கு அடுத்து […]