இந்தியாவின் கரும்புலி
இது ரவீந்திர கவுசிக்கின் நினைவு நாளில் எழுதியது, இன்று என்னாயிற்றோ தெரியவில்லை ஆளாளுக்கு அவனை பிடித்து இழுக்கின்றார்கள் நாமும் இழுப்போம் உலகில் ஏகபட்ட உளவாளிகள் உண்டெனினும் அவர்களுக்கெல்லாம் பகவான் கண்ணனே வழிகாட்டி பாரதபோரின் உளவுதகவல்களை அவனே வைத்திருந்தான், அந்த தகவலில் ஒவ்வொருவரின் பலவீனம்பார்த்து அடிக்க சொன்னான், இன்றளவும் கண்ணன் என்பவன் உளவு அமைப்புகளுக்கு ஆச்சரியகுறி, அடிச்சுவடி உளவு தகவலின்றி ஒரு யுத்தம் வெல்வதுமில்லை, தடுக்கபடுவதுமில்லை இந்த நூற்றாண்டில் பல அசாத்திய உளவாளிகளை இஸ்ரேல் கொடுத்தது, எலி கோகன், […]