பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அந்த துறை இங்கு தேவையே இல்லாத பூட்டு

கோவில் நிலங்கள் தொடர்ப்பான சட்ட சர்ச்சை வர ஆரம்பித்திருக்கின்றது அறநிலைய துறையினை ஒழித்து இந்து ஆலயங்களை ஊர் மக்களிடமே ஒப்படைக்கும் கட்சிக்கே வோட்டு என இந்துக்கள் கிளம்பினால் தவிர இந்த சிக்கலுக்கு தீர்வு இல்லை இங்கு ஆலயங்களை அறநிலைய துறை கட்டவில்லை, அவை வாழ்வாங்கு வாழ்ந்த காலத்தில் அப்படி ஒரு துறையே இல்லை பன்னெடுங்காலமாக ஆலயங்கள் உற்சாகமாக இயங்கி வந்த நிலையில் அவற்றுக்கு போடபட்ட ஒருவகை விலங்கே இந்த அறநிலையதுறை, இதனால் ஆலயங்கள் இழந்ததே அதிகம் தவிர […]

கூடுதல் டாக்டர் நியமிப்பே மகா சரியானது..

234 தொகுதியிலும் எம்.எல்.ஏக்கள் சம்பளத்தை இருமடங்காக ஆக்கினார் பழனிச்சாமி அவர் டாக்டர்களுக்கு செய்ய வேண்டியது கூடுதல் சம்பளம் அல்ல மாறாக கூடுதல் டாக்டர்களை அமர்த்தி அவர்களின் பணிச்சுமையினை குறைத்தாலே தீர்ந்தது விஷயம் மாறாக அவர்களை நீக்கிவிட்டு புதிய டாக்டர்களை நியமிப்பேன் என அடம்பிடித்தால் பணிச்சுமை கூடி புதியவர்கள் பழையவர்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்துவார்கள் நிலமை இப்பொழுது இருப்பதைவிட மகா மோசமாகும் அதனால் அவசர டாக்டர்கள் நியமிப்பை விட கூடுதல் டாக்டர் நியமிப்பே மகா சரியானது..

தொண்டர்களுக்கு மகா கெட்ட நேரம்

உலகில் எவ்வளவோ இயக்கத்தவரை கண்டாலும் புலிகள் இயக்கம் மேல் ஒரு இரக்கமும் அபிமானமும் எல்லோருக்கும் உண்டு அதன் தலமைதான் சரியில்லையே தவிர அந்த இயக்கத்தவரின் அர்ப்பணிப்பும் தியாக உணர்வும் எந்நாளும் மறக்கமுடியாதவை. அவ்வளவுக்கு கட்டுகோப்பாக இருந்தார்கள், இயக்கத்துக்காய் எதையும் தாங்கினார்கள் அமைதிபடை அதிகாரிகள் முதல் இந்திய மேலிடம் வரை அந்த போராளிகள் மேல் ஒரு பரிதாபம் எந்நாளும் இருந்தது. இவ்வளவு நல்ல போராளிகள் ஒரு மோசமான முட்டாள் தலைவனிடம் சிக்கிவிட்டார்களே என்ற பரிதாபம் எல்லோருக்கும் இருந்தது உண்மையில் […]

சிகிச்சைக்கு மருத்துவரின்றி இக்கொடுமை நடந்திருக்கின்றது

டாக்டர்கள் போராட்டத்தால் ஒரு பெண் சென்னை கீழ்பாக்கத்தில் இறந்துவிட்டார் எனும் தகவல் வருகின்றது, சிகிச்சைக்கு மருத்துவரின்றி இக்கொடுமை நடந்திருக்கின்றது அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நிச்சயம் இதற்கான காரணம் அரசு அன்றி வேறு யாருமல்ல, அவர்கள் நிலமையினை இப்படி விட்டிருக்க கூடாது இனி இது பெரும் செய்தியாகலாம், சர்ச்சையுமாகலாம் திமுக பொருளாளர் இப்பொழுதே 20 லட்சம் கையில் வைத்திருப்பார், திருமா 2 கோடி கொடுக்க வேண்டும் அரசு வேலை கொடுக்க வேண்டும் என கிளம்புவார் நடுக்காடு போன்ற […]

இருதரப்புமே நன்றாக ஆடிகொண்டிருக்கின்றது

அட டாக்டர்களின் உண்மையான சிக்கல் சம்பளமும் கூடுதல் பணிசுமையும் தவிர வேறல்ல‌ இந்த இடமாற்றம் முதலான விஷயங்கள், இன்னபிற விஷயங்களை எப்படி செய்யவேண்டும் என்பது அவர்களுக்கு தெரியாதா? தமிழ்நாட்டில் பணம் ஆழ்குழாய் வரை பாயும் இரு கோரிக்கை வைத்தால் அரசு கண்டுகொள்ளாது மாறாக 10 கோரிக்கை வைத்தால் இந்த 2 கோரிக்கையாவது கண்டுகொள்ளபடும் என கோரிக்கைகளை அடுக்குகின்றார்கள் இது பழனிச்சாமிக்கு தெரியாதா? அவரின்றி அணுவும் அசையுமா? ஆக இருதரப்புமே நன்றாக ஆடிகொண்டிருக்கின்றது, பார்க்கலாம்

வாட்சப்பில் பலரை உளவு பார்த்ததாக தகவல்கள்

இஸ்ரேலிய நிறுவணம் இந்தியாவில் வாட்சப்பில் பலரை உளவு பார்த்ததாக தகவல்கள் கசிகின்றன‌பிகாசுஸ் எனப்படும் நிறுவணம் மென்பொருளுக்கு பிரசித்தி பெற்றது அதன் தயாரிப்புகளே அறை கண்காணிப்பு இன்னும் பல கண்காணிப்பு விஷயங்களுக்கு பெயர்பெற்றவைஅந்த நிறுவணத்தின் உளவுபார்க்கும் மென்பொருள் வாட்சப் மூலமாக இந்தியாவில் இருக்கும் சமூக ஆர்வலருக்கு வந்து பதிந்தது அதன் மூலம் உளவு பார்க்கபட்டது எனும் சர்ச்சை வெடிக்கின்றதுஇப்பொழுது வாட்சப்பும் பேஸ்புக் வசம் இருப்பதால் பேஸ்புக் நிறுவணம் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்திருக்கின்றதுஉங்களுக்கு உளவு விஷயங்களில் பரிட்சயம் இருந்தால் […]

ஐரோப்பிய யூனியனின் குழு ஒன்று காஷ்மீர் வந்துள்ளது

ஐரோப்பிய யூனியனின் குழு ஒன்று காஷ்மீர் வந்துள்ளது, வந்து தால் ஏரி உட்பட பல இடங்களை சுற்றிபார்த்து கொண்டிருக்கின்றது காஷ்மீரில் தீவிரவாதம் ஒழிக்கபட்டு அமைதியாக்கபட்டுவிட்டது இனி எல்லா நாட்டு மக்களும் வரலாம் என காட்சிகளை உருவாக்குகின்றது இந்தியா ஐரோப்பிய யூனியன் தலைகளும் பரவாயில்லை என சொல்லிவிட்டு கிளம்புகின்றன‌ இப்பொழுது யாரை கேட்டு இவர்கள் வந்தார்கள் மத்திய அரசு அழைத்ததா இல்லை காஷ்மீர் டூரிசமா இல்லை தனியார் அமைப்புக்களா என சர்ச்சை வலுக்கின்றது மத்திய அரசு வாய்திறக்கவில்லை திறக்கவும் […]

எர்டோகன் இப்பொழுது இந்தியாவோடும் உரசுகின்றார்

ஒரு காலத்தில் உலகை மிரட்டிய வல்லரசு துருக்கி பின்பு ஆளாளுக்கு அடித்து நொறுக்கிபோட்டார்கள், மங்கோலியா சிரியா போல் ஆகியிருக்கவேண்டிய தேசம் அது எனினும் கமால் பாட்சா எனும் மாமனிதன் அந்த துருக்கியினை சீர்படுத்தினான் ஐரோப்பாவின் நோயாளி என ஒதுக்கபட்ட தேசம் அவனால் ஓரளவு எழும்பியது பின் இந்த பனிபோர் காலத்தில் அதன் அமைவிடம் காரணமாக அது நேட்டோ வரை சென்றது இப்பொழுது அதன் அதிபராகியிருக்கும் எர்டோகன் பழைய துருக்கி மன்னர் வாரிசு போல் ஆட்டம் போட தொடங்கியிருக்கின்றார் […]

மானமுள்ளவராக இருந்தால்

மானமுள்ளவராக இருந்தால் வீரமணி இனி இவர் பக்கமே வரகூடாது, மாறாக‌ வந்தால் அழகிரி பையன் சொல்வது போல சொன்னால் அதேதான் உண்மையாக இருக்கும் காலமெல்லாம் இந்துமதத்தின் அறிவிக்கபடாத சன்னிதானமாக வாழ்ந்தவர் தேவர், அதுவும் மிகபெரும் முருக பக்தர், அவரின் அவதாரமாகவே அறியபட்டார் ஆக முருகனின் அடியாரை வணங்கி தானும் ஒரு முருக பக்தன் என துர்கா ஸ்டாலினுக்கு காட்டிவிட்டார் முக ஸ்டாலின் திமுக பகுத்தறிவு உபிக்கள் எல்லாம் வாயில் பஞ்சாமிர்தம் வைத்திருக்கும் நேரமிது தேவர் ஜெயந்தி என […]

மாரடோனா

கால்பந்து ரசிகர்களுக்கு அவர் என்றும் அபிமானத்திற்குரிவர். கிரிக்கெட்டில் பிராட்மேன், சச்சின் என்றொரு வரிசை உண்டென்றால் கால்பந்தில் பீலே, மாரடோனா என்றொரு வரிசை நிச்சயம் உண்டு 1980களின் கால்பந்து உலகம் அவருக்கானது, அவருக்காகவே ஆட்டங்கள் நடத்தபட்டன, கிட்டதட்ட 12 ஆண்டுகாலம் கால்பந்து உலகம் அவரை சுற்றியே சுழன்றது. அர்ஜெண்டினா அணிக்கு கோப்பையினை அவர்தான் பெற்றுகொடுத்தார். 1986ல் அவர் ஆடிய ஆட்டம் அபாரமானது, நொடிபொழுதில் தட்டிய கோல் இன்றுவரை கடவுளின் கை என்றே சொல்லபடுகின்றது. கால்பந்து விதிமுறைபடி அது சர்ச்சை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications