பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சில திமுக ஜால்ராக்கள் புலம்பிகொண்டிருகின்றன‌

முக ஸ்டாலின் ஜல்லிகட்டை மீட்க அன்றே ஆலோசனை சொன்னார், அவர் சொன்னதுதான் நடந்தது என சில திமுக ஜால்ராக்கள் புலம்பிகொண்டிருகின்றன‌ உண்மை அது அல்ல, ஒரு காலமும் உண்மையே பேசகூடாது என சத்தியம் செய்திருப்பது திமுக கோஷ்டி காங்கிரஸ் அரசு ஒரு விவகாரமான சட்டம் இயற்றி இருந்தது, அந்த சட்டத்தை வைத்துதான் ஜல்லிகட்டுக்கு தடை வாங்கியது அந்த பீட்டா அமைப்பு அதாவது ஜல்லிகட்டு விளையாட்டினை மிருகவதை சட்டத்தில் சேர்த்திருந்தார்கள், காங்கிரஸ் அதை செய்யும் பொழுது கூட்டணியில் இருந்தது […]

இந்தியா என்ன கிழித்தது என சொல்லும் கூட்டம் எக்காலமும் உண்டு

இந்தியா என்ன கிழித்தது என சொல்லும் கூட்டம் எக்காலமும் உண்டு, எதிலெல்லாம் இந்தியா வெல்லுமோ அப்பொழுது கம்மென்று இருப்பதும் எங்காவது சறுக்கினால் இந்த நாடே இப்படித்தான் என்பதும் அவர்கள் சித்தாந்தம் வெள்ளையன் இந்நாட்டை வளர்த்தான் என்பதல்ல உண்மை, அவன் பொருளுக்கு இதை ஒரு சந்தையாக்கினான், ஆடை கூட அவன் துணியினைத்தான் வாங்க வேண்டும் என்ற அளவு ஏன் உப்புக்கே அவன் வைத்ததுதான் விலை என்ற அளவு இருந்தது அவன் கொடுமை பெரும் தொழிற்சாலையின் மூலம் எதுவும் இங்கு […]

அது பகுத்தறிவு குடும்பம்

அம்மா திருப்பதி பழனின்னு போறாங்க‌ அப்பா தேவர்சமாதியில போய் குங்குமம் எல்லாம் வச்சிக்கிறாங்க‌ பையன் சினிமாவுல விபூதியும் குங்குமுமா வர்றார், அவர் கம்பெனி படத்துக்கு பூஜை எல்லாம் நடக்குது ஆனால் அது பகுத்தறிவு குடும்பம், அக்குடும்பம் கட்சியும் நடத்தும் . அக்கட்சி வீரமணி தலமையில் இந்துத்த்வாவினை வேறறுத்து , இந்துமதத்தை அடக்கி ஒடுக்கி விரட்டுமாம்

அழுகையும் சிரிப்புமாக தேடுகின்றது மனம்..

மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது, அப்பா இருந்திருந்தால் இப்படித்தான் கேட்பார் “செலவு நிறைய இருக்கு 1 லட்சம் அனுப்பி வை அவ்வளவு எல்லாம் இல்ல இத சொல்றதுக்கு ஏன் அங்க போய் இருக்கணும், வீட்டுக்குள்ளே இருந்து சொல்லலாம்ல.. இப்போ இல்லப்பா லேய் உன்ன பெத்ததுக்கு….., இப்போ உனக்கு 2 வயசா இருந்தாலும் போர்ல தூக்கிபோட்டா 50 லட்சம் கிடைச்சிருக்கும்…. உன்ன வளர்த்துமட்டும் என்ன ஆயிட்டு..” மழை பெய்யும் பொழுதெல்லாம் அவரை அழுகையும் சிரிப்புமாக தேடுகின்றது மனம்..

விமாலாதித்த மாமல்லன் என்பவர் யார்?

விமாலாதித்த மாமல்லன் என்பவர் யார்? என்ன சாதித்தார்? அவர் அகில உலகிலே ம்ம்.. ஆசியாவிலே ம்ம்.. இந்தியாவிலே ம்ம்.. தமிழ்நாட்டிலே ம்ம்.. சென்னையிலே ம்ம்.. சென்னையின் முட்டுசந்திலே 4 பேருக்கு எழுதிய ஒரு எழுத்தாளர்

நல்ல இலக்கியவாதி என்பவன்வரலாற்றில் நிற்பான்

நல்ல இலக்கியவாதி என்பவன்வரலாற்றில் நிற்பான், முதலாவது அவன் மனம் உண்மையிலே மானிட சமூகத்தை சிந்தித்ததாக இருத்தல் வேண்டும் அவர்கள் உண்மையினை தேடும்படி இழுப்பதாக இருத்தல் வேண்டும். அந்த ஆன்மாவின் அடி ஆழத்தின் உண்மையில் இருந்து அவன் எழுதவேண்டும், ஆன்மாவின் குரலாக பிரபஞ்ச சக்தியின் குரலாக அவன் எழுத்து அமைய வேண்டும் அவ்வகை இலக்கியவாதிகளே வரலாற்றில் நிற்பர் சும்மா மல்லாக்க படுத்துகொண்டு கவிதானுபவம், சுகானுபவம் , பிரக்ஞை , மடமை மண்ணாங்கடி என கனவுலகில் சஞ்சரித்து எழுதுபவனால் இப்பூமியில் […]

மருத்துவபணியில் தனியார் பணி சொர்க்கம், அரசு பணி நரகம்

முன்பொருமுறை அரசு ஆசிரியர்கள் போராடும் பொழுது வேலையில்லா ஆசிரியர்களை நியமித்து அதிரடி காட்டியது அரசு இப்பொழுது தனியார் மருத்துவர்களை அமர வைத்து அதிரடி காட்டுமா என்றால் காட்டாது, அது அவர்களால் முடியாது இதனால் கைகளை பிசைந்து கொண்டிருக்கின்றது அரசு மருத்துவர்களும் மனிதர்களே, அவர்களும் படாதபாடு படுகின்றார்கள். தூக்கமில்லை உணவில்லை இன்னும் ஏராளமான நெருக்கடிகள் அவர்களுக்கும் உண்டு மருத்துவ உலகம் பணக்கார உலகமாகிவிட்டது, செலவு அதிகரித்துவிட்டது என பொங்குவோர் யார் மேல் பொங்க வேண்டும்? தவறான மருத்துவ கொள்கைகளை […]

மகா ஆபத்தான இயக்கம் அது

தமிழக கேரள வனபகுதியில் நக்சலைட்டுகள் 4 பேர் சுடபட்டுள்ளனர், கேரள‌ காவல்துறை இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. ஆக நக்சலைட் நடமாட்டம் தமிழகத்தில் இருக்கின்றது என்பதும் அதை முளையிலே களைய அரசு முயற்சிக்கின்றது என்பதும் தெரிகின்றது எங்கோ காட்டுக்குள் இருக்கும் நக்சலைட்டுகளால் தமிழ்நாட்டுக்கு என்ன ஆபத்து அவர்களை ஏன் சுடவேண்டும் என கேட்டால் உங்களை போல அப்பாவிகள் இல்லை ஆம், அவர்களால் தமிழகத்தில் கலவரங்களை நிகழ்த்தமுடியும் ஆயுதம் முதல் பணம் வரை கொடுக்கமுடியும் இங்கே தேசத்துக்கும் அரசுக்கும் எதிரான […]

முரசொலியின் செய்தியினை கண்டீர்களா?

சுஜித் என கருதி பகிரபடுவது இன்னொரு குழந்தையின் படம் என பிரபல மீடியாக்களே சொல்லிவிட்ட நிலையில் முரசொலியின் செய்தியினை கண்டீர்களா? இவர்கள் சொல்லும் பகுத்தறிவும் , சமூக சிந்தனையும், போர் அழைப்பும் எப்படி இருக்கும் என நீங்களே முடிவு செய்யுங்கள் ஏன் இப்படி ஆகிவிட்டாய் செல்லமே?

சுஜித்துக்கு நிதி குவிகின்றது

அந்த சுஜித்துக்கு நிதி குவிகின்றது , அரசு முதல் எதிர்கட்சி வரை அள்ளி கொடுக்கின்றார்கள் நாம் முன்பே சொன்னபடி அது சாதாரண பிறப்பு அல்ல, ஏதோ ஒரு மகானின் ஆத்மா. தன் முன் ஜென்ம எச்சத்தை மிக சரியாக முடித்துவிட்டு விடை பெற்றுவிட்டது. இதே நாளில் இன்னும் ஏராளமான குழந்தைகள் இறந்திருக்கின்றன, இதை விட கொடுமையாக இறந்திருக்கின்றன‌ ஆனால் இந்த ஆத்மா மட்டும் கவனம் பெற வேண்டும் என்பதில்தான் விதியின் கணக்கு சரியாக வேலை செய்திருக்கின்றது

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications