பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

முத்தமிழ் அறிஞர் எனும் அடையாளம் அவர் இருவருக்கே பொருந்தும்

வள்ளுவன்,இளங்கோ,கம்பன்,பாரதிக்கு பின் தமிழகம் தந்த மாபெரும் கவிஞன் கண்ணதாசன். முத்தமிழ் அறிஞர் எனும் அடையாளம் அவர் இருவருக்கே பொருந்தும். குளிர்ந்த தென்றல் பூக்களையும் சேர்த்து வீசுவது போன்ற‌ தமிழ் அவருடையது, வாழ்வின் அனைத்து பக்கங்களுக்கும் பாடியவர், எல்லா மதங்களுக்கும் செய்யுள் அமைத்தவர். இன்றும் மலேசிய சிங்கப்பூர் நாடுகளை காணுங்கள், உங்கள் காதில் “அக்கறை சீமை அழகினிலே மனம் ஆடகண்டேனே..” பாடல் தானாக ஒலிக்கும். அரசியலநிலைய பாருங்கள் “ஊதுபத்திக்கும் பீடிகளுக்கும் பேதம் புரியல” எனும் வரிகள் காதில் மோதும்.ஒட்டுமொத்த […]

ஜெயலலிதா பாணி இது

மக்கள் இல்லாத உள் அரங்கத்தில் இப்படி ராஜாக்கள் பாணியில்தான் அமர்ந்திருப்பார் போல… ஜெயலலிதா பாணி இது. அந்த அம்மையார் ஒரு பெண் அவர் தனித்து அமர்ந்ததில் அர்த்தமிருந்தது, இவர் ஏன் ?? மனிதர் தந்தையிடம் பாடம் படிக்காமல் அவரின் அரசியல் எதிரியிடம் பாடம் பயின்றிருக்கின்றார் அதற்காக காப்பியடிப்பது கூட இப்படியா? பின்னர் எடப்பாடி ஏன் 5 வருடம் நிம்மதியாக ஆளமாட்டார்?

அதிமுகவின் 48ம் ஆண்டுவிழா

அதிமுகவின் 48ம் ஆண்டுவிழா கொண்டாடபடுகின்றது இந்த 48 ஆண்டுகளில் 30 வருடம் அக்கட்சிதான் ஆண்டிருக்கின்றது, 18 வருடம் மட்டும் திமுகவுக்கு வாய்ப்பு அதுவும் கட்சி தொடங்கி 5 ஆண்டுகளில் ஆட்சியினை பிடித்த வகையில் வெறும் 13 வருடம் மட்டுமே திமுக ஆட்சி இவ்வளவுக்கும் கொள்கையோ கோட்பாடோ இல்லா அதிமுக எப்படி இச்சாதனையினை செய்தது? விஷயம் ஒன்றுமில்லை ஒருமாதிரியான பிரிவினைவாதம், ஆபாச அர்ச்சனை, தீபாவளிக்கு வாழ்த்து சொல்லமாட்டோம் ஆனால் ரம்ஜானுக்கு எலும்பு கடிப்பபோம் எனும் மதவெறுப்பு இவை எல்லாம் […]

நிச்சயம் இந்த படத்தை கடந்து செல்ல முடியவில்லை

நிச்சயம் இந்த படத்தை கடந்து செல்ல முடியவில்லைபாரம்பரியமான குடும்பம், பெரும் வெளிநாட்டு கல்வி, சென்ற இடமெல்லாம் சிறப்பு, வார்த்தைகளின் அர்த்தமும் பொருளும் ஒரு பெரும் பண்பாளரின் குடும்ப சிறப்பை சொல்லும் அழகு, தமிழ்நாட்டின் பெருமித‌ அடையாளமாக வலம் வந்த உருவம் இதுகாலம் இப்படி எல்லாமா ஆடும்?தளர்ந்துவிட்ட உடலோடும், ஒரு விரக்தி நிறைந்த பார்வையோடும் , களை இழந்த முகமாக கவலை படர்ந்த ரேகையோடும் அந்த மனிதனை பார்க்கமுடியவில்லைஅதுவும் அந்த கண்கள்…வாழ்ந்து கெட்ட மகாராஜாவினை காணும் ஒரு சாபம் […]

அவர் மேல் வாடிகன் நடவடிக்கை எடுக்கவே இல்லை ஏன்?

கேரளாவில் பாதிரிமேலான கற்பழிப்பு புகாரில் போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரி சபையில் இருந்து நீக்கபட்டிருகின்றார் திருச்சபைக்கு பணியாதது, குழப்பம் விளைவிப்போருடன் கூட்டணி வைப்பது என பல விவகாரங்களுக்காக அவர் மேல் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது, அவரின் மேல்முறையீட்டையும் வாடிகன் தள்ளிவிட்டது நல்லது.. தமிழகத்திலும் ஒரு சாமி இருக்கின்றார் அவர் பெயர் ஜெகத் கஸ்பர், அவர் ஒழுங்காக திருப்பலி வைத்து நற்கருணை வழங்காமல் இந்திய தேச விரோத செயல், படுபயங்கர புலி ஆதரவு, இந்திய எதிர்ப்பு என கடும் ஆராளித்தனம் செய்கின்றார் […]

மிசா பற்றி தெரியாத கோஷ்டி ஒன்று கிளம்பியிருக்கின்றது

மிசா பற்றி தெரியாத கோஷ்டி ஒன்று கிளம்பியிருக்கின்றது, அவரச கால நிலைக்கு உத்தரவிட்ட நீதிபதி பெயர் மிசா அவர் மனைவி பெயர் உஷா எனும் அளவில்தான் அவைகளுக்கு அறிவு இருக்கின்றன‌ அந்த கோஷ்டி மிசாவில் கைதானவர் பட்டியலில் ஸ்டாலின் பெயர் இல்லை என சொல்லிகொண்டிருக்கின்றது உண்மையில் அன்று மிசா சட்டத்தில் கைதானவர் பற்றி தகவலே கிடையாது, யாரெல்லாம் காணாமல் போனார்களோ அவர்கள் பெயரை குடும்பத்தாரும் கட்சிக்காரரும் மிசாவில் கைதானவர்கள் என சேர்த்துகொள்ளும் நடக்கும் காட்சிகளும் அப்படித்தான் இருந்தன, […]

மிக அழகான அனுபவம் அது

ஒரு வழியாக யோகியின் சுயசரிதை எனும் நூலினை வாசித்து முடித்தாகிவிட்டது, மிக அழகான அனுபவம் அது. ஆன்மீக கடலில் படலில் பயணமும் நீர்மூழ்கி பயணமும் செய்தது போல் அப்படி ஒரு ஆச்சரியமான நிறைவு மொழிபெயர்ப்பு தத்துவ நூல் என்பதால் மிகுந்த நேரம் எடுத்து படிக்க வேண்டியதாயிற்று, ஒவ்வொரு வரியினை படிக்கவும் மறுபடி அதை புரிந்துகொள்ளவும் கொஞ்சம் நேரம் எடுக்கத்தான் செய்கின்றது, மற்ற நூல்களை போல் இதை வேகமாக கடக்க முடியாது மற்றவர்கள் எப்படி இந்நூலை புரிந்துகொள்வார்கள் என்பது […]

கதை திருட்டு என்பது இங்கு புதிதா?

அட்லீ என்பவரை ஆளாளுக்கு கலாய்க்கின்றார்கள், அவர் கதை திருடி படம் எடுக்கின்றாராம் கதை திருட்டு என்பது இங்கு புதிதா? புராண கதைகளை அப்படியே மேடை நாடகமாக்கினார்கள், பின்பு கதைகளை படமாக்கினார்கள் அதில் உள்ளூர் கதை முதல் அரேபிய கதைவரை உண்டு 1980க்கு பின் அரைத்தமாவையே அரைத்தார்கள், பாசமலர் பல வழிகளில் எடுக்கபட்டு தங்கைகோர் கீதம், கிழக்கு சீமையிலே என பல வழிகளில் வந்தது பாகபிரிவினை இந்த வானத்தை போல, ஆனந்தம் என வந்தது சபாஷ் மீனா, பலே […]

அவர்களின் கேடுகெட்ட ஆசை இதுதான்

‘‘பிராமணஸ்ய முகமாஸீத், பாஹூ ராஜன்ய க்ருத,, ஊரு ததஸ்ய யத்வைஸ்ய, பத்ப்யாகும் சூத்ரோ அஜாயத” – (ரிக் வேதம் 10-90-12) வேதங்களில் முதன்மையானது ரிக் வேதம் , அது சொல்லும் ஸ்லோகம் இது இதன் பொருள் என்னவென சமஸ்கிருத விற்பனர்கள், வேத பண்டிதர்களிடம் கேட்டால் இப்படித்தான் சொல்கின்றார்கள் பிராமணன் எனும் அந்தணின் முகம் பிரகாசமாயிருத்தல் வேண்டும் அதாவது தெளிந்த அறிவிலும் ஆழ்ந்த ஞானத்திலுமே பிரகாசம் வரும் சத்திரியனின் தோள்கள் வலுவானதாக இருக்கவேண்டும் அவன் அப்பொழுதுதான் புஜபலத்தில் நாட்டை […]

ஓரளவு உண்மையும் இருக்கலாம்

நிர்மலா சீத்தாராமன் இந்திய பொருளாதாரத்தில் குறிப்பாக வங்கிகளின் நிலைதன்மையினை ஆட்டம் காண வைத்தவரென மன்மோகன்சிங்கையும் ரகுராம் ராஜனையும் கைகாட்டுகின்றார் அதில் ஓரளவு உண்மையும் இருக்கலாம் 1990க்கு முன்பு வரை வங்கி மோசடிகள் இன்னும் பல வகையான பண மோசடிகள் எல்லாம் இல்லை, பொருளாதார குற்றங்கள் இன்று உள்ள அளவு அன்று இல்லை பணவீக்க விகிதமும் விலைவாசியும் கட்டுக்குள் இருந்தன‌ மன்மோகன் சிங் நிதி அமைச்சரான பின் தாராளமய கொள்கைக்கு மாறினார், இன்னும் காட் ஒப்பந்தம் முதல் பல […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications