பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

திருச்சிக்கு இப்பொழுதெல்லாம் நல்ல நேரம்

திருச்சியில் காவேரிகரையில் முதலை பிடிபட்டிருக்கின்றது, அது மோடி சிறுவயதில் பிடித்து விளையாடியது போன்ற சிறிய முதலை அல்ல, 250 கிலோ எடைகொண்ட ராட்சத முதலை விலங்கு நல பிரிவினர் அதை மிக சரியாக பிடித்து அமுக்கி கொண்டு சென்றுவிட்டனர், காவேரி கரை மக்கள் கொஞ்சம் விழிப்பாய் இருப்பது நல்லது திருச்சிக்கு இப்பொழுதெல்லாம் நல்ல நேரம் நகைகடை கொள்ளையனோ இல்லை காவேரி முதலையோ உடனுக்குடன் பிடிக்கபடுகின்றன‌ அந்த ராமஜெயம் கொலையும் இப்பொழுது நடந்திருந்தால் குற்றவாளிகளை பிடித்திருப்பார்கள் போல…

திராவிடர் நில கொள்கை

ஆளாளுக்கு பஞ்சமி நிலம் மீட்பு, நிலம் பிகிர்ந்தளிப்பு, நிலவரம்பு உச்ச சட்டம் என என்னவெல்லாமோ பேசுகின்றார்கள் நிலமில்லா ஏழைகளுக்கு ஆளுக்கு 2 ஏக்கர் வழங்கபடும் என்ற கருணாநிதியின் தேர்தல் அறிக்கையினையும் ஆட்சிக்கு வந்தபின் அவர் அதை செய்தாரா என்பதை பற்றியும் ஒரு பயலும் பேசவே காணோம் ஆக நிலமோசடி நடந்திருக்குமோ என்னமோ, இவருக்கு அடுத்து வந்த ஜெயா நிலஆக்கிரமிப்பு தனி சட்டம் கொண்டுவந்ததும் குறிப்பிடதக்கது ஆக திமுகவின் திராவிடர் நில கொள்கை இப்படித்தான் இருந்திருக்கின்றது

மேடைகளில் வாள் எந்துவது எதற்காக?

எலுமிச்சை வைத்தது தவறென்றால் மூட நம்பிக்கை என்றால் மேடைகளில் வாள் எந்துவது எதற்காக? ஊரெல்லாம் தலைவெட்ட போகின்றோம் என்ற அர்த்தத்திலா? வாக்களிக்காதவனுக்கு எதற்கு விரல் என்ற மிரட்டலுக்கா? எதிர் கூட்டணியினை வெட்டுவோம், தேர்தல் கமிஷனை துண்டு துண்டாக்குவோம் என்ற மிரட்டலா? இல்லை அல்லவா? அங்கே என்ன அலெக்ஸாண்டரும், நெப்போலியனுமா படை எடுத்து வருகின்றார்கள் இவர்கள் வாளேந்தி நிற்பதற்கு? பின் ஏன் வாள் ஏந்தி நிற்கின்றார்கள்? மூட நம்பிக்கையா? இல்லை, மாறாக ஒரு சம்பிரதாயம் அல்லவா? வாள் ஏந்துவது […]

உலகம் அழிவதில்தான் அந்த கிறிஸ்தவருக்கு எவ்வளவு ஆசை?

இந்த அல்லேலூயா கோஷ்டிகளுக்கு உலகம் அழிய வேண்டும் அப்பொழுதுதான் மெசியா எனும் கிறிஸ்து இரண்டாம் முறை வருவார், தங்களை கட்டி அணைத்து முத்திவிட்டு மற்ற மதத்தாரை எல்லாம் மிதித்து தள்ளுவார் அப்பொழுது நாமெல்லாம் “கோட்டான கோடி இயேசப்பா” என கத்த வேண்டும் என்பது நெடுநாளைய மற்றும் ஒரே ஆசை இதனால் உலகில் எங்காவது போர் தொடங்கிவிட்டால் இதோ உலக அழிவு என உடனே தொடங்குவார்கள் இயற்கையோ , மானிட போரோ உலகை அழிக்கவேண்டும் என்பது அவர்களின் அதிதீவிர […]

ஓவர் பில்டப் செய்வதில் நம் ஆட்களை மிஞ்சவே முடியாது

ஓரு விஷயத்தை ஓவர் பில்டப் செய்வதில் நம் ஆட்களை மிஞ்சவே முடியாது ரபேலே உலகின் தலைசிறந்த விமானம், அது ரேடாருக்கு சிக்காது ஏன் ஆண்டவனுக்கே சிக்காது , இமயமலையினை கட்டி வைத்தாலும் தூக்கிகொண்டு பறக்கும் என ஏக விளம்பரங்கள் உண்மையில் ரபேல் அப்படி எல்லாம் அல்ல, நடுத்தரமானது இந்திய விமானபடையின் மிக் ரக விமானம் மற்றும் பழைய மிராஜ் விமானங்களை மாற்றவே 100க்கும் அதிகமான நவீன விமானம் வேண்டுமென்று இந்திய விமானபடை கோரியது, மத்திய அரசு தன் […]

இந்திய அமைதிபடை புலிகள் மோதல் தொடங்கிய நாள்

இதே அக்டோபர் 10ம் தேதிதான் 29 வருடங்களுக்கு முன்பு இந்திய அமைதிபடை புலிகள் மோதல் தொடங்கியது. ஈழவரலாற்றில் முக்கியமான காலம் அது, புலிகள் ஈழதமிழரின் எதிர்காலத்தை,நிம்மதியினை ஒழிக்க தொடங்கிய நிகழ்வு அது ஏதோ அமைதிபடை என்பது புதிதாக சென்றது அல்ல, 1987க்கு முன்பே சென்றது, இது தெரியாமல் பலர் புலம்புவர் அமைதிபடைக்கு முன்பே ஜேவிபி கிளர்ச்சியும் அதனை அடக்க இந்திய ராணுவம் கொழும்பிற்கு சென்றதும் இவர்களுக்கு தெரியுமோ தெரியாதோ? தெரியாவிட்டால் விட்டுவிடலாம். அதாவது அன்றிலிருதே இன்னொரு மூன்றால் […]

உறவுகளும் ,பாதுகாவலும் , நலன்விரும்பிகளும் இல்லாதோர் நிலை

அமெரிக்காவில் மன்மதன் சிம்பு போல ஒருவன் இருந்திருக்கின்றான், ஆட்டோ சங்கரின் சாயலும் இருந்திருக்கின்றது 3 பெண்கள் கொலை வழக்கில் சிக்கிய அவனிடம் விசாரித்தால் 93 பெண்களை கொன்றிருக்கின்றேன் என இதுவரை சொல்லியிருக்கின்றான், பட்டியல் இன்னும் நீளும் போலிருக்கின்றது சரி 90க்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போனதுமா தெரியவில்லை, பெற்றோரும் உறவினரும் உடன்பிறந்தோருமா தேடவில்லை என்றால் அங்கேதான் இருக்கின்றது அமெரிக்க கலாச்சாரம் அங்கு குடும்பம் மற்றும் உறவினரை பிரிந்து ஏன் கணவன் மற்றும் பிள்ளைகளை பிரிந்து பெண்கள் வாழ்வது […]

திராவிட சாதனை!

சீனிவாச ராமானுஜத்துக்கு நம்பர் தியரி சொல்லிகொடுத்தது பெரியார், சர்.சிவி ராமனுக்கு நிறப்பிரிகை பற்றி கற்றுகொடுத்தது அண்ணா.. அந்த திராவிடம் கொடுத்த கல்வியாலே சீனிவாச ராமானுஜம் மாபெரும் கணித மேதையானான், சர்.சிவி ராமன் நோபல் பரிசெல்லாம் பெற்றார் அந்த விஸ்வேஸ்ரய்யா என்பவருக்கு கூட திராவிடமே அணை கற்ற கட்டுகொடுத்து அவர் கிருஷ்ணராஜ சாகர், மேட்டூர் அணை எல்லாம் கட்டியிருக்கின்றார் இந்த திராவிட சாதனைபற்றியெல்லாம் இவ்வளவுகாலம் தெரியாமல் இருந்ததற்கு வெட்கமும் வேதனையும் துக்கமும் துயரமும் பட்டுகொள்கின்றேன்

உலகிலே மிக அறிவான அரசு

உலகிலே மிக அறிவான அரசு தமிழ்நாட்டு அரசுதான் தீபாவளி ஞாயிற்றுகிழமை வருவதால் பள்ளிகளுக்கு சனிகிழமை விடுமுறையாம், அப்படி விடுமுறை விட விரும்புகின்றவர்கள் எல்லா தரப்பு மக்களுக்காக திங்கள் கிழமை விடுமுறை விடலாம் மொத்த தமிழ்நாடும் வாழ்த்தும் , நெடுந்தூரம் சென்றுவிட்டு வருபவர்களும் மகிழ்வார்கள் தீபாவளிக்கான விடுமுறையினை ஞாயிற்றுகிழமையில் அதாவது வழக்கமான விடுமுறையில் கொடுக்காமல் மறுநாள் கொடுப்பதுதான் சரி தமிழக அரசு சீன அதிபரை வழியனுப்பிட்டு யோசிக்கட்டும்

வடிவாய், செழிப்பாய் வாழ்க நீர் எம்மான்

எழுத்தாளர்களில் பல பிரிவுகள் உண்டு, அவர்களில் சிலரின் எழுத்துக்களே அற்புதமாக ரசனையாக அமையும் பழம் எழுத்தாளர்களில் கி.வா.ஜா மற்றும் கண்ணதாசனின் எழுத்துக்கள் ரசனையானவை பிற்கால சுஜாதா எழுத்தில் ஒரு இமயம், எல்லா துறைகளியும் புகுந்து எழுதிய எழுத்து ஞானி. கலைஞரின் எழுத்துக்கள் நைல் நதி போல பழமையும் நீங்கா அழகும் கொண்டது ஈஸி சேரில் படுத்திருந்து கதை சொல்வது போன்றது கி.ராஜநாராயணனின் எழுத்துக்கள், ஒருவித கிறக்க நிலைக்கு கொண்டு செல்வது பாலகுமாரனின் எழுத்து ஜெய்காந்தனின் எழுத்து அடித்து […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications