பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தாலிபன் தன் வேலையினை காட்டிவிட்டது

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை முறிந்த மறு நொடியே தாலிபன் தன் வேலையினை காட்டிவிட்டது காபூலின் அமெரிக்க தூதரகம் தாக்கபட்டிருகின்றது, அதாவது அமெரிக்க தாலிபன் போர் மறுபடியும் தொடங்கிவிட்டது தனக்கு ஒன்றுமே தெரியாது என்பது போல அமர்ந்திருக்கின்றது பாகிஸ்தான்

விஷயம் இன்னும் திமுக தலைவருக்கு தெரியாது போல

ஆந்திராவில் உள்மாநில அரசியல் சிக்கலில் சந்திரபாபு நாயுடு சிறைவைக்கபட்டிருக்கின்றார் விஷயம் இன்னும் திமுக தலைவருக்கு தெரியாது போல ஆந்திரா காஷ்மீரை விட தொலைவில் இருப்பதுதான் அதற்கு காரணம் அன்றி வேறல்ல.. இந்தியாவில் எங்கு ஜனநாயகம் மறுக்கபட்டாலும் திமுக பொறுக்காது என்பது ஜகன்மோகன் ரெட்டிக்கும் தெரியவில்லை திமுக தலைவருக்கு விஷயம் தெரியட்டும் , அதன் பிறகு என்ன ஆகும் தெரியுமா? ஜெகன் மோகன் ரெட்டியினை ரொட்டியாக்கிவிடுவார் காஷ்மீர் தலைவர்கள் வீட்டுகாவலில் இருந்தால் பொறுக்கா திமுக, சந்திரபாபு நாயுடுவினை மட்டும் […]

அவர்களின் பாதுகாப்பு அப்படி வலுவாக அமைக்கபட்டிருகின்றது

2001 செப்டம்பர் 11 வழக்கம்போலத்தான் அமெரிக்காவில் விடிந்தது, அந்த 19 பேரும் காலை எழுந்து குளித்து பிரார்த்தித்து, டை எல்லாம் கட்டி ஏதோ பன்னாட்டு நிர்வாக கூட்டத்திற்கு செல்வது போலத்தான் சென்றார்கள், தமிழக பஸ்டாண்ட் மினிபஸ் போல அடிக்கடி பறக்கும் அமெரிக்க விமானங்களில் ஏறிகொண்டார்கள், காலை 8.30 மணிக்கு 4 விமானங்களில் குளறுபடி ஆரம்பித்தது, விமான நிலைய கட்டுபாட்டு அறையுடன் தகவல் அறுந்தது, திடீரென் 9 மணிவாக்கில் உலக வர்த்தக மைய கட்டத்தின் உச்சியில் தீ எழும்பியது […]

ஓணம் பண்டிகை

அன்றொரு காலத்தில் முந்தைய தமிழர் நாடான‌ சேரநன்னாட்டினை ஆண்டுகொண்டிருந்தான் பெரிய முப்பாட்டன் மகாபலி. ஆட்சி என்றால் அப்படி ஒரு அற்புதமான ஆட்சியினை கொடுத்தான் என்கிறது புராண வரலாறு. நாட்டில் எங்கும் அமைதி, வளம், செழிப்பு அதற்கும் மேல் நோய் நொடி என்பது ஒரு நொடி கூட இல்லை வெள்ளம் எல்லாம் வரவே இல்லையாம், வந்தாலும் உதவி தாருங்கள் என்ற நிலை எல்லாம் இல்லவே இல்லையாம் எல்லோருக்கும் எல்லாம் இருந்துவிட்டால் நாட்டில் குழப்பம் ஏது? மன்னன் மாவீரனும் கூட […]

அடுத்தமுறை அமைச்சர் சுதாரிப்பார் என நம்புவோம்

சென்னையில் பத்திரிகையாளரை சந்தித்தார் நிர்மலா சீத்தாராமன் எவ்வளவோ விஷயங்களை விளக்கினார், கார் விலை சரிய ஒலா, உபர் போன்றவையும் ஒரு காரணமாக இருக்கலாம் அதாவது பொது போக்குவரத்து இன்னபிற போக்குவரத்து வசதிகள் இருப்பதால் கார் வாங்குவதில் மக்களுக்கு ஆர்வமில்லை என சொன்னார் இதில் நிர்மலா சறுக்கிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும், காருக்கான எதிர்காலம் என்னவென தெரியாமல் உலகம் தள்ளாடுகின்றது எதிர்காலத்தில் பேட்டரி கார், ஆளில்லா கார் என என்னவெல்லாமோ வரபோகும் காலத்தில் இந்த கார்களை என்ன செய்வது என்பதுதான் […]

அமெரிக்காவுக்கு மண்டையில் அடி

வடகொரியா அடங்கவில்லை, தாலிபான்கள் போய்யா யோவ் என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள் ஈரான் தன் கப்பலை மீட்டு எண்ணெயினையும் விற்று அமெரிக்கா முகத்தில் கரிபூசிவிட்டது ஈராக்கில் ஈரானின் செல்வாக்கு கூடுகின்றது, இன்னும் இந்தியா காஷ்மீரை அட்டகாசமாக தட்டி சென்றுவிட்டது சிரியாவிலும் வெனிசுலாவிலும் அமெரிக்காவுக்கு மண்டையில் அடி இப்படி சர்வதேச விவகாரங்களில் அமெரிக்கா சொதப்ப தன் ராஜாங்க அதிகாரி ஜான் பவுட்ல்ட்டனே காரணம் என முடிவு செய்த டிரம்ப் அவரை நீக்கிவிட்டார் சில மாதங்களுக்கு முன்புதான் ஒருவரை நீக்கி இவரை […]

இன்றைய விஞ்ஞானமும் அதை ஒப்புகொள்கின்றது

வெறுங்காலில் நடப்பதால், உடல் நரம்புமண்டலத்தின் செயலாற்றல் அதிகரிக்கிறது, கால் தரையில் நேரடியாக படும்பொழுது பலவிதமான நன்மைகள் கிடைகின்றன என்கின்றது மருத்துவ ஆய்வு இதனால் வெறுங்காலோடு வாக்கிங் செல்பவர்கள் எண்ணிக்கை மேல்நாடுகளில் அதிகரித்திருக்கின்றது பொதுவாக கீழை நாடுகளில் காலுக்கு கொடுக்கபடும் மசாஜ் என்பது பிரசித்திபெற்றது கால் பாதத்தில் கொடுக்கபடும் அழுத்தத்திலே பல வகையான நோய்களை தீர்க்கமுடியும் என்கின்றது சீன மருத்துவம், அவ்வாறான மருத்துவம் இன்றும் உண்டு இன்றைய விஞ்ஞானமும் அதை ஒப்புகொள்கின்றது ஆலயத்தினுள் வெறும் காலோடு வரவேண்டும் எனும் […]

அறை நண்பனின் அருமை மகனுக்கு இன்று பிறந்த நாள்

அறை நண்பனின் அருமை மகனுக்கு இன்று பிறந்த நாள் அவனை வாழ்த்துகின்றோம், அறை நண்பன் நிச்சயம் மஹா நல்லவன் பெரும் பக்திமான் ஆனால் அப்பாவி அப்பாவிகள் மட்டுமே திமுகவில் இருக்கமுடியும் என்பதால் அவனும் அதில் தொடர்ந்து இருகின்றான், இப்பொழுதும் முக ஸ்டாலினின் சொதப்பல்களுக்கு முட்டு கொடுக்க முடியவில்லையே என்ற ஆதங்கமே அவனிடம் உண்டே தவிர தலமை சரியில்லையே என்ற கவலை துளியுமில்லை இம்மாதிரி அப்பாவிகளே திமுகவின் பலம் அது இருக்கட்டும், பிறந்த நாள் கொண்டாடும் தளிருக்கு அறை […]

சாமி, ஏன் இந்த ஓரங்க நாடகம்?

ஜக்கி சாமி காவேரியினை காப்போம் என கிளம்பியிருக்கின்றது ஜக்கி முதலில் பவானி மற்றும் நொய்யலை மீட்கட்டும் , காவேரியினை பின்னர் பார்க்கலாம் சாமி, ஏன் இந்த ஓரங்க நாடகம்?

காலம் பொல்லாதது அல்லவா?

காமராஜருக்கு அடுக்குமொழி தெரியுமா? எங்கள் அண்ணா முன் நின்று பேசமுடியுமா என்றேல்லாம் ஒரு காலத்தில் சவால் விட்ட கட்சி அது எம்.ஜி ராமசந்திரன் தன்னால் முடியாத நிலையிலும் ஏதோ பேசினார், அவரை இஷ்டத்துக்கு கலாய்த்தார்கள் திமுகவினர் பழநெடுமாறன் திக்கி திக்கி பேசுவதை திமுகவினர் கலாய்த்ததெல்லாம் தனிவகை இன்னும் ஏராளம் உண்டு அட விஜயகாந்த் உளறும் இடங்களில் குடித்துவிட்டு வந்தான் குடிகாரன் என கலாய்த்து தள்ளியதெல்லாம் இவர்களே அவர்கள் அளவுக்கு எதிர்கட்சியில் பேச யாருமில்லை என்பதால் எப்படி எல்லாம் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications