பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஆனா செய்யலியே, ஏன் செய்யல?

அத்திவரதருங்கிற சிலைய தண்ணிக்குள்ள போடபோறானுக, அதை நிரந்தரமா வச்சிட்டா நாமளும் அந்த கோயில் பக்கம் ஹோட்டல் கட்டி சம்பாதிக்க சொல்லி வீரமணி கனவுல போய் சொல்லலாம் நாம பேசுறது பகுத்தறிவு ஆனா வேளாங்கண்ணில இருந்து எல்லா கோவில் முன்னாடியும் ஹோட்டல் கட்டி சம்பாதிக்கிறோம் இந்த அத்திவரதர் 40 நாள்தான் இருந்தார் ,அதுக்காக ஹோட்டல் கட்ட முடியாது ஆனா இந்த வீரமணி பய என்ன செஞ்சிருக்கணும்? தயிர்சாதமோ வெண்பொங்கலோ அந்த கூட்டத்துல வித்து காசு சம்பாதிச்சி இயக்கத்துக்கு கொடுத்திருக்கணும் […]

தளபதி

ஆக முப்படைக்கும் தலமை தளபதி நியமிக்கபோறேன்னு மோடி சொன்னது என்னைத்தானே திருமா? நான் மட்டும்தான் “தளபதி”ன்னு தலைவர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டுக்கே சொல்லிருக்காரு, அது எல்லாருக்கும் தெரியும். அய்யோ திருமா, அந்த தளபதி வேற, ராணுவ தலமை தளபதி வேறன்னு இந்த ஆளுக்கு எடுத்து சொல்லுங்க

புனிதம் கெட்டுவிட்டதாம்

ரஜினிகாந்துக்கும் திருமணத்துக்கு முன்பு காதல் இருந்தது, அவர் சிக்கிய சர்ச்சைகள் ஏராளம் ஆனால் அவர் அத்திவரதரை தரிசிக்க சென்றால் சிக்கல் இல்லை நயன் சென்றுவிட்டால் அதன் புனிதம் கெட்டுவிட்டதாம் நயன்மேல் எவ்வளவு சர்ச்சை இருந்தாலும் அது அவரின் தனிபட்ட வாழ்வு, நிச்சயம் எந்த பெண்ணும் உண்மையான அன்பினை தாண்டி செல்வதில்லை, அது கிடைக்கா பட்சத்திலே வெளியேறுகின்றாள் நயனின் நடிப்பினை விமர்சிக்கலாம், ஆனால் அவர் ஆலயத்திற்கு சென்றதை விமர்சிக்க யாருக்கும் உரிமை இருப்பதாக தெரியவில்லை சினிமாவில் அவளுக்கு கைதட்டுவோம் […]

மடுமாதா கோவில்

தமிழகத்தில் பூண்டி வேளாங்கண்ணி போல இலங்கையில் பிரசித்திபெற்றது மடுமாதா கோவில் அங்கு சில தினங்களுக்கு முன்பு திருவிழா நடந்தது, ஆயர் தரப்பு 5 லட்சம் மக்கள் வந்தார்கள் என பெருமையாக சொன்னது. ஆம் அந்த ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு பின் சர்ச்க‌ளில் பாதுகாப்பினை பலபடுத்திவிட்டது இலங்கை காவலுக்கு நின்ற ராணுவமோ 1.30 லட்சம் மக்கள்தான் வந்தார்கள் மீதி 3.70 மக்கள் எங்களை மீறி எப்படி வந்தார்கள் என அஞ்சி பதறியபடி கேட்டது அது தமிழர்பகுதி என்பதால் சீமான் படைதிரட்டி […]

சொல்றேன் கேளு, நல்லா கேட்டுக்க‌

“உங்களுக்கெல்லாம் வாஜ்பாய் அணுகுண்டு வெடிச்சது தெரியும்? ஏன் வெடிச்சாருண்ணு தெரியுமா? சொல்றேன் கேளு, நல்லா கேட்டுக்க‌ 1998ல அண்ணன் அடிச்சி நொறுக்குறாரு, யாழ்பாணம் பிடிச்சி அடுத்தால தமிழ்நாடு அப்படியே ஆந்திரா, மபி உபின்னு அடிச்சி பிடிச்சி புலிகொடி பறக்குற திட்டம் ரெடியா இருக்கு எனக்கு உடனே தகவல் வந்துட்டு தம்பி ரெடியா இரு, பெரும் படையினை உன்னை நம்பி கொடுக்கின்றேன் எப்படியாவது டெல்லிய பிடிச்சிரு போதும் நாமதான் பயிற்சி எல்லாம் எடுத்து ரெடியா இருக்கோமே, 25 மணிநேரமும் […]

வாஜ்பாய்

இந்தியாவின் பெருமித அடையாளங்களில் ஒருவரான வாஜ்பாய்க்கு இன்று முதலாமாண்டு அஞ்சலி அவருக்கும் கலைஞர் போலவே பெரும் சரித்திரம் உண்டு, காந்தியின் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் எல்லாம் கலந்துகொண்டு தண்டனை பெற்றவர் ஆனால் தேசபிரிவினை அவர் மனதை பெரிதும் பாதித்த நிகழ்வு, உன்மையான தேசாபிமானிகளுக்கு அது வலி அந்த வலி வாஜ்பாய்க்கும் இருந்தது நேருவின் காலங்களில் வாஜ்பாய் தன் கடமையினை ஜனசங்கத்தில் இருந்து செய்துகொண்டே இருந்தார், நாட்டுக்கான குரல் அவரிடம் இருந்து வந்துகொண்டே இருந்தது நேரு மதித்த ஜனசங்க […]

அடுத்த 40 ஆண்டுகள் கழித்துத்தான் வருவார்

அத்திவரதர் தரிசனம் இன்றோடு முடிகின்றது, இனி நீர்வாசம் செய்ய புறப்படும் அத்திவரதர் அடுத்த 40 ஆண்டுகள் கழித்துத்தான் வருவார் முன்னதாக 1979ல் வந்தார் அப்பொழுது ராமசந்திரன் ஆட்சி இருந்தது, 2019லும் அதிமுகவே ஆள்கின்றது அதிமுக கோஷ்டிகளுக்கு இந்த கணக்கு தெரியுமா? தெரியாதா? என்பது தெரியவில்லை ஆனால் இனி ஜெயக்குமார் இப்படி சொல்ல வாய்ப்பு உண்டு “கடந்த முறை அத்திவரதர் வரும்பொழுது தமிழகத்தில் அதிமுக ஆட்சிதான் இருந்தது இனி 2059லும் அதிமுக ஆட்சிதான் இருக்கும், அப்பொழுதும் திமுக எதிர்கட்சியாகவே […]

இஸ்லாமிய சகோதரிகளை தேசமே வணங்குகின்றது

இந்த இஸ்லாமிய சகோதரிகளை தேசமே வணங்குகின்றது இந்நாட்டில் தேசபற்றுமிக்க இஸ்மாமியர் காயிதே மில்லத், கலாம் வரிசையில் உண்டு என நிரூபித்திருக்கின்றார்கள் அதுவும் புனிதமான ஹஜ் கடமையில், மகா புனிதமான மெக்காவில் இந்திய சுதந்திர நாளில் தங்களின் இந்திய அடையாளத்தை இப்படி உலகிற்கு சொல்லியிருக்கின்றார்கள் சவுதி அரசும் அதை தடுக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது, இஸ்லாமிய மாண்பு அது இந்த சகோதரிகளை கண்டு பெருமையடைகின்றோம், அவர்களை வாழ்த்திகொண்டே இருக்கலாம்

அவசரபட்டு கொன்றுவிடாதீர்கள்

அடேய் இறந்து போனது வி.பி சந்திரசேகர் இவர் பேட்ஸ்மேன் எனப்படும் மட்டையாளர், தமிழர் . அந்த அற்புதமான கிரிக்கெட் வீரரான பி.எஸ் சந்திரசேகர் எனும் ஜாம்பவான் கன்னடத்துக்காரர் அவரின் சாதனையும் திறமையும் பெரிது அவர் இன்னமும் வாழ்கின்றார் அவர் பல்லாண்டு வாழட்டும் பி.எஸ் சந்திரசேகர் போலியோவால் வலக்கை தோளில் பாதிக்கபட்டவர், ஆயினும் அட்டகாசமான சுழற்பந்து வீச்சாளர் உலகில் முதன் முதலில் சுழற்பந்து வித்தையினை அவர்தான் கொண்டுவந்தார், இன்றளவும் இந்தியா சுழற்பந்தில் கும்ப்ளே, ஹர்பஜன் என சாதிக்க அவர்தான் […]

அவனுகளும் அவனுக கொள்கையும்..

மாணவனுக்கு ஜாதி சான்றிதழ் இருக்குமாம், அவனது சான்றிதழில் தந்தை தாய் பெயரோடு இனம் மதம் மொழி எல்லாம் கவனமாக குறிப்பார்களாம் ஆனால் அவன் கையில் கட்டியிருக்கும் கயிற்றில் அதாவது ஆலயங்களில் கொடுக்கபடும் கயிற்றினை கட்டி இருந்தால் அது சாதிய அடையாளமாம் ஏதாவது புரிகின்றதா? புரியாது இதுதான் திராவிட கொள்கை தமிழ்நாடு கயிற்றில் சாதி தெரியுமாம், அது கல்விசாலையில் கூடவே கூடாதாம் ஆனால் கல்வியில் வேலைவாய்ப்பில் கண்டிப்பாக சாதி அடிப்படையில் ஒதுக்கீடு இருந்தாக வேண்டுமாம் அவனுகளும் அவனுக கொள்கையும்..

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications