பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பகவத் கீதை‍ 18- மோட்ச சந்நியாச யோகம் : 01

கீதையின் கடைசி அத்தியாயமான‌ இந்த மோட்ச சந்நியாச யோகம் 18ம் அத்தியாயம், ஆனால் மிகபெரிய அத்தியாயம் என்பதால் மூன்றாக பிரிக்கலாம், சந்ந்தியாசத்திற்கும், தியாகத்துக்கும் இடையிலான வித்தியாசத்தை சொல்கின்றது இந்த அத்தியாயம் அர்ஜுனன் கூறினான் “கண்ணா, நான் சந்நியாசத்துவத்தையும் தியாக தத்துவத்தையும் தனித்தனியே தெரிந்துகொள்ள விரும்புகிறேன் கண்ணன் சொல்கின்றார் “அர்ஜூனா, ஜட ஆசைகளை அடிப்படையாகக் கொண்ட செயல்களைத் துறத்தல், சந்நியாசம் என்று சான்றோர்களால் அழைக்கப்படுகின்றது. மேலும், எல்லாச் செயல்களின் பலன்களைத் துறப்பதை தியாகம் என்ற அறிஞர்கள் அழைக்கின்றனர். எல்லாவிதமான […]

பகவத் கீதை‍ 17

சிரத்தாத்ர விபாக யோகம் என்றால் ஒருவனின் சிரத்தை பற்றி, ஆர்வத்தை பற்றி தெய்வத்தை அடைய அவன் செய்யும் முயற்சிகள் அது தவம் தானம் யாகம் போன்றவற்றை பற்றியும் அதன் பலன்களையும் பற்றி சொல்வது கீதையின் 17ம் அத்தியாயமான இந்த அத்தியாயம், கடவுளை அடையும் சிரத்தை எனும் முயற்சிகளை பற்றி சொல்கின்றது அர்ஜுனன் சொல்கின்றார் “கிருஷ்ணா, யார் சாஸ்திர விதியைமீறி ஆனால் சிரத்தையோடு கூடியவர்களாய் ஆராதிக்கிறார்களோ, அவர்களுடைய நிலை எத்தகையது? சத்துவமா? ராஜஸமா? அல்லது தாமஸமா? ஸ்ரீபகவான் சொன்னது, […]

பகவத் கீதை‍ 16

கீதையின் 16ம் அத்தியாயம் “தெய்வாசுர சம்பத் விபாக யோகம்” , இது தெய்வ குணம் அசுர குணத்த்தின் தொடர்புகளை விளக்கி கூறும் அத்தியாயம் தெய்வகுணம் எனும் சாத்வீக கொண்டவன் எப்படி இருப்பான், அசுர குணம் எனும் பேராசை தீ கொண்டவன் எப்படி இருப்பான் என்பதை விளக்கும் அத்தியாயம் இது கண்ணன் சொல்கின்றான் ” அஞ்சாமை, உள்ளத்தூய்மை, ஞானத்திலும் யோகத்திலும் நிலைத்திருத்தல்,தானம், சாஸ்திரங்களை படிப்பது,தவம்,நேர்மை கொல்லாமை, வாய்மை, சினவாமை, துறவு, ஆறுதல், வண்மை, ஜீவதயை, அவாவின்மை, மென்மை, நாணுடைமை, […]

கீதையின் 15ம் அத்தியாயம் புருஷோத்தம யோகம்.

கீதையின் 15ம் அத்தியாயம் புருஷோத்தம யோகம், புருஷன் என்றால் தலையாயவன் , மூலமானவன் என பொருள் வரும், புருஷ + உத்தமன் புருஷோத்தமன் என்றானது. மகா உயர்ந்தவன் என பொருளில் வரும் அதுதான் பரம்பொருள் என்பது. பதினைந்தாம் அத்தியாயமான இந்த அத்தியாயம் இப்படி சொல்கின்றது “அர்ஜூனா, இயற்கை, ஆத்மா இவ்விரண்டையும் தன் வசப்படுத்திக் கொண்டு நிற்கும் கடவுள் எவ்விதத்திலும் இந்த இரண்டையும் விட மகா மேலானவர் ஒரு ஆத்மா எப்படி பிறப்பின் கர்மங்களை அறுத்து பரம்பொருளான புருஷோத்தமனை […]

பகவத் கீதை‍ 14

கீதையின் 14ம் அத்தியாயம் குணத்ரிய யோகம்.. குணம் + திரிய என்றால் மூன்றுவகை குணங்கள் என பொருள். மூவகை குணங்களையும் எப்படி ஒருமனிதன் கையாண்டு கர்மத்தை கடந்து கடவுளை அடைய வேண்டும் என்பதை இது விளக்குகின்றது. வாருங்கள் பார்க்கலாம் கண்ணன் சொல்கின்றான் “எல்லா ஞானங்களிலும் உயர்ந்ததான இந்த பரம ஞானத்தை நான் உனக்கு மீண்டும் கூறுகின்றேன். இதனை அறிந்த முனிவர்கள் அனைவரும் தெய்வீகமான பக்குவ நிலையை அடைந்துள்ளனர். இந்த ஞானத்தில் நிலைபெறுவதால், ஒருவன் என்னைப் போன்ற தெய்வீக […]

பகவத் கீதை‍ 13

கீதையின் 13ம் அத்தியாயம் க்ஷேத்ர-க்ஷேத்ரக்ஞ விபாக யோகம் அதாவது உடலுக்கும் ஆன்மாவுக்கும் உள்ள தொடர்பினை பற்றி சொல்வது, பிரபஞ்சம் பரம்பொருள் பூமி மனித உடல் அதில் இருக்கும் ஆத்மா பற்றிய தொடர்புகளை சொல்வது இந்த அத்தியாயம் அர்ஜுனன் கேட்கின்றாய் , “எனதன்புகுரிய கிருஷ்ணரே, இயற்கை (பிரக்ருதி), அனுபவிப்பவன் (புருஷ), களம் (க்ஷேத்ர), களத்தை அறிபவன் (க்ஷேத்ரக்ஞ), அறிவு (ஞானம்), அறியப்படும் பொருள் (ஞேயம்) ஆகியவற்றைப் பற்றி நான் தெரிந்து கொள்ள விரும்புகின்றேன், எனக்கு போதிப்பாயாக” கண்ணன் கூறுகின்றார் […]

பகவத் கீதை‍ 12

கீதையின் 12ம் அத்தியாயம் பக்தி யோகம், பகவானின் விஸ்வரூபம் கண்ட கண்ணன் அதன் பின் கண்ணனை முழு மனதோடு பக்தி செய்ய நினைந்து சில கேள்விகளை கேட்கின்றான். அவனுக்கு ஞான யோகம் எனும் சந்நியாச வழி சிறந்ததா? இல்லை பக்தி வழி எனும் சாமன்ய நிலை சிறந்ததா? எனும் சந்தேகம் ஏற்படுகின்றது அதை அர்ஜூனன் கேட்பதும், பகவான் அதை அவனுக்கே உரித்தான ஞானத்தில் விளக்குவதுமே கர்ம யோகம் அர்ஜூனன் கேட்கின்றான் “கண்ணா, இப்படி ஞான துறவியாகி உன்னை வழிபடும் […]

பகவத் கீதை‍ 11

கீதையின் மகா முக்கியமான இந்த அத்தியாயம் விஸ்வரூப தரிசனம் என்பதாகும், கண்ணன் தன் கடவுள் தன்மையினை முதன் முறையாக அர்ஜூனனுக்கு காட்டுகின்றான், அது தொலைவில் ஞான திருஷ்டியில் காட்சிகளை கானும் சஞ்சயனுக்கும் தெரிகின்றது அர்ஜூன பயமும் அச்சமும் சந்தோஷமும் கலந்த நிலையின் உச்சத்தில் கண்ணனை கடவுள் என உணர்ந்து முழு அடைக்கலமாகும் இடமே இந்த விஸ்வரூப தரிசனம், அதை கீதைபடியே காணலாம்.. அர்ஜூனன் சொல்கின்றான், “கண்ணா, நீன் எனக்கு இரக்கம்காட்டி, கருணைகாட்டி ஆத்ம ஞானமென்ற பரம ரகசியத்தைஎனக்கு […]

பகவத் கீதை‍ 10

கீதையின் 10 அத்தியாயம் “விபூதி அத்தியாயம்” விபூதி என்றால் கடவுளின் தன்மை என்பது பொருள், அந்த பரம்பொருளின் தன்மையினை ஆழ விளக்குகின்றான் கண்ணன் அர்ஜூனா நீ எனக்கு உகந்தவன் என்பதால் நீ தெளிவுற வேண்டி இன்னும் சொல்கின்றேன் வான தேவர்கள் கூட‌ என் மகிமையை உணராதவர்கள், முனிவர்களுக்கு கூட தேவலோகத்தை தாண்டி என்னை பற்றி தெரியது ஆனால் வானவர்களுகும் ரிஷிகளுக்கும் மூலம் நானே நான் பிறப்பில்லாதவன் தொடக்கமும் முடிவும் இல்லாதவன் என உணர்பவன் மனிதரில் தெளிவுபெற்றவன் பாவம் […]

நாம் அழுதோம், மனம் விட்டு அழுதோம்.

கொரோனா வந்ததில் உலகின் பல இடங்களில் அமைதி நிலவுவது போல பாலஸ்தீனத்திலும் நிலவுகின்றது உலகில் பெரும் கொடுமை இழைக்கபட்ட இடம் பாலஸ்தீனம், அந்த மக்கள் செய்த பெரும் பாவம் பாலஸ்தீனத்தில் பிறந்தது அதுவும் இஸ்லாமியராக பிறந்தது ஒரு வாதத்துக்கு வைப்போம், திடீரென மதுரையில் 4 குண்டர்கள் புகுந்து இது ஹேமநாதபாகவதருக்கு பாண்டிய மன்னன் கொடுத்த பூமி , எங்கள் பூமி எல்லோரும் கிளம்புங்கள் என்றால் என்னாகும்? அந்த பைத்தியகாரதனமான 4 குண்டர்களுக்கு ஆதரவாக மேற்குலகில் இருந்து சிலர் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications