பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இந்திய தூதரை பாகிஸ்தானில் இருந்து வெளியேற்றிவிட்டது அந்நாட்டு அரசு

காஷ்மீர் விவகாரத்தை அடுத்து இந்திய தூதரை பாகிஸ்தானில் இருந்து வெளியேற்றிவிட்டது அந்நாட்டு அரசு, அதாவது இந்தியாவோடு உறவினை குறைக்கின்றார்களாம் மேற்கொண்டு வியாபார ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைத்தாயிற்று இதற்கும் ஒருபடி மேல் சென்று பாகிஸ்தான் தன் வான் எல்லைகள் மேல் இந்தியா விமானங்கள் பறக்கமுடியாதபடி தடை செய்துவிட்டது இந்தியா மெதுவாக புன்னகைத்து “சரி நமக்குள் என்று உறவு வலுவாக இருந்தது? எந்நாளும் நமக்குள் சண்டைதானே சகோதரா என் தூதர் இங்கு வந்துவிட்டால் உங்கள் தூதர் இங்கு எதற்கு? அவர் […]

அதுதான் மாநில சுயாட்சி

மாநில சுயாட்சி பறிக்கப்படும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது – மு.க.ஸ்டாலின் எப்பொழுது முழு மாநில சுயாட்சி இங்கு இருந்தது? இல்லாத ஒன்றை எப்படி பறிப்பார்கள்? இந்த மாநில சுயாட்சி என்றால் என்ன? காங்கிரஸ் ஆதரவில் தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்தபொழுது அதை அமைச்சரவையில் சேர்க்காமல் அதே நேரம் டெல்லி மத்திய காங்கிரஸ் அரசில் திமுக பசையான பதவிகளை வாங்கிகொண்டு அமர்ந்திருந்தத‌ல்லவா? அதுதான் மாநில சுயாட்சி

பாகிஸ்தான் ஆர்மி ஜெனரல் பேட்டி

காஷ்மீர் மக்களுக்கு உதவ பாகிஸ்தான் ராணுவம் தயார் : பாகிஸ்தான் ஆர்மி ஜெனரல் பேட்டி ஏற்கனவே 3 முறை அவர்கள் உதவ வந்து பட்டது மறந்துவிட்டதென்றால் 4வது முறை நினைவுபடுத்தவேண்டியது நம் கடமை

காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து:தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உறுதி இப்படி எல்லாமா ஒருவர் அதுவும் தலைவர் தன் சொந்த கட்சியினையே கலாய்ப்பார் ஏன்யா அழகிரி, கச்சதீவு எல்லாம் திரும்பமாட்டீரா? நேரே காஷ்மீர்தானா தாமரை மட்டுமல்ல, கையும் இங்கு ….க்குள்தான் உயரும்

அப்பாவி உபிக்கள் சோகம்

கலைஞர் இருந்திருந்தால் காஷ்மீருக்கும் இந்தியாவுக்கும் இந்நிலை வந்திருக்காது: அப்பாவி உபிக்கள் சோகம் மொழிவாரி பிரிவினையில் சென்னையே கைவிட்டு போகும் நிலை இருந்தும் அவர் அவர்போக்கில் இருந்தார் கலைஞர் இருக்கும் பொழுதுதான் கச்சதீவு போனது, ஈழம்நாசமானது மாபெரும் அணுவுலைகள் அவர் இருக்கும்பொழுதுதான் வந்தது அட ராமசந்திரன் கோஷ்டியின் இம்சையில் இருந்துதான் தமிழகத்தை காத்தாரா? எதை உருப்படியாக காத்து மீட்டார் அவர்? காவேரியினை மீட்டாரா? இல்லை சாதியினைத்தான் முழுக்க ஒழித்தாரா ஒன்றையுமே அவர் அவரின் எல்லையினை தாண்டி முடிக்கவில்லை, அவரின் […]

தெருவோர பசுமாடுகளை பராமரிக்க தனி துறை

தெருவோர பசுமாடுகளை பராமரிக்க தனி துறையினை ஏற்படுத்தினார் உபி முதலமைச்சர் : யோகி ஆக நாம் தமிழர் கட்சியினை பாஜகவுடன் இணைக்க போகும் காலம் இதோ நெருங்கிகொண்டிருக்கின்றது இருவரின் கொள்கைகளும் ஒன்றாயிருக்கும் பொழுது எதற்கு தனிதனி கட்சி?

விரதம் இரும் அண்ணாச்சி

நேற்றிரவே மறுநாளுக்காக பிரட் வாங்கிவரசொன்னால் அறை நண்பனை காணவில்லை, உறங்கியாயிற்று அரை தூக்கத்தில் உற்று பார்த்தால் போனில் முக ஸ்டாலினை பேசவைத்து இருட்டில் கைதட்டிகொண்டிருந்தான் அவனை பார்க்க சின்னதம்பி கவுண்டமணி திரையங்கில் “சூப்பரப்பு” என கைதட்டுவது போலவே இருந்தது, எப்பொழுது உறங்கினானோ தெரியாது அதிகாலை எழுந்து ஓ என அழுதான், எதுவும் அசம்பாவிதமோ என எண்ணி அலறி அடித்து கேட்டால் “கலைஞர் போயிட்டாரு” என சொல்லிகொண்டான் பின் கரைஒதுங்கிய திமிங்கலம் போல மல்லாக்க கிடந்தவன் கண்ணை கசக்கிவிட்டு […]

துரையப்பா வம்சம் வாழ்கின்றது

துரையப்பா எனும் தமிழரை கொன்றதிலிருந்து பிரபாகரனின் அட்டகாசம் தொடங்கியது. அவர் பெயர் ஆல்பர்ட் துரையப்பா. தமிழர் யாழ்பாண நகர மேயராக இருந்தவர். அவர் செய்த தவறு யாழ்நகரை முன்னேற்ற முயன்றது அதற்காக சிங்களனுடன் சமரசமாக சென்றது இது துரையப்பாவின் அரசியல் தமிழ் எதிரிகளுக்கு பிடிக்கவில்லை , இளைஞரை தூண்டிவிட்டார்கள், குறிப்பாக உலக தமிழ்மாநாடும் அதில் நடந்த துப்பாக்கி சூடும் விவகாரமானது அங்கு நடந்த விவகாரம் வேறு, இப்பொழுது சைமன் போல அப்பொழுது ஜெகநாதன் என்றொரு சவுடால் பார்ட்டி […]

கன்னட மக்களின் உணர்வினையும் மறுத்தால் எப்படி?

காஷ்மீர் மக்களின் உணர்வுக்குத்தான் அந்த கொடிய மத்திய அரசு அனுமதி மறுத்து ஜனநாயகத்தை கொல்கின்றது என்றால் கன்னட மக்களின் உணர்வினையும் மறுத்தால் எப்படி? கன்னட நலனை காக்காமல் அவர்களுக்கு பெரும் ஜனநாயக கொடுமை செய்யும் மத்திய அரசு ஒழிக‌ ஏ தமிழா இவர்கள் நாளை உன் உணர்வுகளையும் நசுக்கி உனக்கும் ஜனநாயகபடுகொலை செய்யகூடும் என அஞ்சி நடுநடுங்குகின்றது உள்ளம் இதைபற்றி சங்கத்தின் தலமை செயலகமான‌ “அழகாலயம்” விரைவில் அனைத்துகட்சி கூட்டம் கூட்டி விவாதிக்கும்

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications