பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மக்களவையில் அமித்ஷா ஆவேசம்

காஷ்மீரை மீட்க உயிரை கொடுக்கவும் தயார் – மக்களவையில் அமித்ஷா ஆவேசம் கச்சதீவின் உரிமையினை மீட்க உயிர் எல்லாம் கொடுக்க வேண்டாம், வெட்டி போட்ட நகம் போதும் பிளீஸ்…

பா.ரஞ்சித் என்பவரை தேடி கொண்டிருப்பதாக சில தகவல்கள்

காஷ்மீரிய முன்னாள் மன்னரின் வாரிசுகள் பா.ரஞ்சித் என்பவரை தேடி கொண்டிருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன‌ எங்கள் நிலத்தை எல்லாம் இந்தியா பிடுங்கிகொண்டது என கதறி அழ அவர் ஒருவர்தான் தகுதியான நபர் என நேற்றுத்தான் உணர்ந்தார்களாம் அவர்கள் வலி பா.ரஞ்சித் என்பவருக்குத்தான் பெரும் நிலத்தை ராஜராஜ சோழனிடம் இழந்தவர் என்ற முறையில் புரியுமாம்

விழிப்புள்ள குடிமக்களா எங்க சார் இருகாங்க?

ஒரு மாநிலத்தின் சட்டமன்றத்தை முடக்கிட்டு ஒரு மாநிலத்தை பிரிக்கறதா பில் கொண்டு வர்றீங்களே வெட்கமா இல்லையா? இதுபோல கேரளாவிலோ தமிழ்நாட்டிலோ செஞ்சிட முடியாது.. ஏன்னா விழிப்புள்ள குடிமக்கள் இங்க இருக்கறவங்க : டி.ஆர் பாலு என்னது விழிப்புள்ள குடிமக்களா எங்க சார் இருகாங்க? இந்தியாவிலே இரு அணுவுலை இங்கேதான் இருக்கு, ஹட்ரோ கார்பன் உட்பட ஏக சிக்கல் ஈழ பிரச்சினை, காவேரி சிக்கல் உட்பட எவ்வளவோ உள்ள மாநிலத்தில் ஒரு சிக்கல் தீர்ந்திருக்கின்றதா? ஒரு ஆற்றில் நீர் […]

உனக்கு ஏன்யா எரியுது?

யோவ் அவனுக நாடு அவனுக காஷ்மீர், ஏதோ சலுகைய ரத்து பண்ணிட்டானுக, உனக்கு ஏன்யா எரியுது? அவனுக அதோட விடமாட்டான், இனி ஆக்கிரமிப்பு காஷ்மீர்னு இங்க வந்து நோண்டுவான், எங்க பகுதியினை விட்டு வெளியே போன்னு கத்துவான் சண்டைக்கு வருவான். அதுக்குத்தான் முந்திட்டு ஒப்பாரி வைக்கிறேன். பதவிக்கு வந்தோமா ராமர் கோவிலை தோண்டுனோமா இல்லாம ஏன் இப்படி பண்றானுக??

திருச்சி எம்பி பற்றி தகவலே இல்லை

இந்த திருச்சி எம்பி பாராளுமன்றத்துக்குள் சென்றது பற்றியோ, அங்கு அமர்ந்த்திருப்பது பற்றியோ தகவலே இல்லை ஏதும் பேசியதாகவும் தெரியவில்லை, இனி சிபிஐ வைத்துத்தான் மனிதரை தேடவேண்டும் போலிருகின்றது காரணம் டெல்லிபக்கம் அனாதை பிணம் கிடந்தாலே பலருக்கு பலத்த சந்தேகம் வருகின்றது தலைவி குஷ்பு திருச்சியில் இருந்து பாராளுமன்றம் சென்றிருந்தால் நிச்சயம் ஏதாவது உருப்படியாக பேசியிருப்பார் காங்கிரஸ் திருச்சி மக்களுக்கு செய்த பெரும் துரோகம் தலைவி குஷ்புவுக்கு பதிலாக இந்த மொகரகட்டையினை நிறுத்தியது

இனவாதமும் குறுகிய அரசியல் வெறியும் அமெரிக்காவில் பற்றி எரியும் நேரமிது

அமெரிக்காவில் இதுவரை நடந்த துப்பாக்கிசூட்டுக்கும் இப்பொழுது நடந்திருக்கும் துப்பாக்கி சூட்டுக்கும் ஏற்பட்டிருக்கும் வித்தியாசம் பலத்த அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருக்கின்றது இவ்வளவு நாளும் அரை போதை,முழு போதை, காதலியுடன் தகறாது, காதலி இன்னொருவனுடன் ஓடி போன ஏமாற்றம் , அப்பன் ஆத்தா தகறாறு, மன அழுத்தம் என சுட்டுகொண்டிருந்தார்கள் இந்த சூடு அப்படி அல்ல, அடுத்தநாட்டு மக்கள் மேல் குறிவைத்து நடத்தபட்டிருப்பது டிரம்பின் வம்பான வசனங்களான அமெரிக்கா அமெரிக்கருக்கே மெக்ஸிக்கோவினரை விரட்டுவோம், ஆசியரை அடக்குவோம் எனும் ஸ்லோகம்படி நடந்தது ஆம் […]

மிகபெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய சம்பவம் அது

இதே நாளில் 2002ல் ஏர்வாடி மனநல காப்பகத்தில் தீவிபத்து ஏற்பட்டு அங்கு கட்டி வைக்கபட்டிருந்த 22 மனநோயாளிகள் இறந்தனர் மிகபெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய சம்பவம் அது, அதன் பின் மனநோயாளிகளை சங்கிலியால் கட்ட கூடாது உட்பட பல விதிகள் நடைமுறைக்கு வந்தன‌ மனநோயாளிகளையும் ஓரளவு அனுசரிக்கும் பல விஷயங்கள் சட்ட பூர்வமாயின‌ அவர்கள் மேல் ஒரு அனுதாபமே பெரும்பாலோருக்கு வந்து அவர்களை சுற்றி திரிய அனுமதித்தனர் அதன் விளைவுதான் பின்னாளில் “நாம் தமிழர்” என்றொரு கட்சி உருவாக […]

அந்த பெருமகனுக்கு கண்டிப்பாய் ஒரு சிலை நிறுவபட வேண்டும்

அந்த மனிதன் ஆசை ஆசையாக வள்ளுவர் கோட்டத்தை கட்டினான் அதன் திறப்புவிழாவில் கூட அவனை அழைக்காமல் அவமானபடுத்தினார்கள் பூம்புகார் அமைத்துவிட்டு ராஜராஜசோழனுக்கு சிலை வடித்தான், அதையும் கோவிலுக்குள் வைக்கவிடாமல் விரட்டினார்கள் அவன் வாழ்நாளெல்லாம் அவன் கனவுகளையும் அதனால் எழுந்த கட்டங்களையும் பாழ்படுத்தி அவனை மனதார அடிப்பதில் அவர்களுக்கு அவ்வளவு சந்தோஷம் அவனோ அதை கடந்து அடுத்த விஷயத்திற்கு சென்றுவிடுவான், அவர்களும் விடாமல் வந்து வம்பிழுப்பார்கள் அந்த அற்புத மனிதனின் 50 ஆண்டுகால வரலாறு சொல்லும் பாடம் அது […]

பரிதாபம்

வெள்ளையன் வரும்பொழுது தமிழக நாயக்க மன்னர்களும் சிற்றரசர்களும் ஆற்காடு நவாபுக்கு வரிகட்டினர் நவாபு டெல்லியில் இருக்கும் முகலாயருக்கு அதை பொறுப்பாக கட்டிகொண்டிருந்தான் இதை கண்காணித்தவன் ஐதரபாத் நிஜாம் ஆற்காடு நவாபின் வாரிசு சண்டையில் கூலிபடையாக உள்ளே புகுந்த கிளைவ் லாவகமாக தமிழகத்தில் வெள்ளையன் ஆட்சியினை நிறுவினான் காஷ்மீரிக்காவது இந்தியாவோடு சேர்ந்த ஒப்பந்தம் இருக்கின்றது, ஒரு கவுரவ அடையாளம் இருக்கின்றது இந்த தமிழனுக்கு ஒரு மண்ணாங்கட்டி அடையாளமுல்லை கவுரவமுமில்லை கடல்கடந்து பிழைக்கவந்த பிரிட்டானிய‌ கூலிபடையிடம் ஆட்சியினை கொடுத்த முதல் […]

திருக்குவளை திருமகனே

திருக்குவளை திருமகனே தமிழர்குல மருத்துவனே திருக்கையில் எழுதுகோலெடுத்து தீயொன்றை ஏற்றிவைத்தாய் தமிழாள பிறந்தவனே தமிழரின் தலைமகனே தமிழால் நீவாழ்ந்தாய் உன்னால் தமிழகமும் செந்தமிழும் வாழ்ந்தது எண்பத்து வருடம் உனக்கு பொதுவாழ்வு ஏற்றிவைத்தாய் சமூகத்துக்கு பெருவாழ்வு நிச்சயமாய் அது புதுவாழ்வு யாருக்கு உன்னால் தாழ்வு? தலைமகனே தமிழ்மகனே தரணியிலோர் தனிபிறப்பே மறைவாழ் தெய்வமெல்லாம் கூடினாலும் அருமகனே உன்னைபோல் யார் வருவார்? மலைநதி கிளைபிரிந்து செழிக்கசெய்யும் கலைநதியே நீ எத்தனை கிளைபிரிந்தாய் அலைஅலையாய் எத்துனை வடிவம் சிலையானவனே கொஞ்சம் பாராய் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications