பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இன்னொரு வகையில் நோக்குங்கள்

அந்த 370ம் சட்டபிரிவினை இன்னொரு வகையில் நோக்குங்கள் ஆம் காஷ்மீர் பாதுகாக்கபட்ட பிரதேசம், அந்நியர் யாரும் உட்புக முடியாது, தொழில் தொடங்கமுடியாது ஏகபட்ட கட்டுபாடுகள் என அந்த பிரிவு நேற்றுவரை சொல்லிற்று இவை எதில் முடிந்தன? தலைநகரில் இருந்து தொட்டுவிடும் தூரத்திலிருந்தும், பஞ்சாபின் லூதியானா போன்ற தொழில் நகரங்கள் அருகிலிருந்தும் காஷ்மீர் வளரவில்லை வெளிமாநிலத்தவனும் அங்கு செல்லமுடியாது, காஷ்மீரியும் யார் கையினையும் பிடித்துமேல் வரமுடியாது பாகிஸ்தானால் தூண்டபடும் தீவிரவாதமும் அது கொடுத்த வறுமையும் மற்ற மாநில மக்கள் […]

அவர் இருந்தால் முதல் ஆளாக இதை வரவேற்றிருப்பார்

காஷ்மீர் விவகாரத்தில் தமிழக அரசியல்வாதிகள் எல்லாம் அப்செட் ஆப்பசைத்து வாலை மாட்டிகொண்ட குரங்குபோல, இல்லை வேறு எதுவோ மாட்டிகொண்ட ஆண்குரங்கு போல எல்லாம் அமைதி மயம் ஒரு குரலும் அதை எதிர்க்கவுமில்லை ஆதரிக்கவுமில்லை இப்பொழுது அந்த பெண் சிங்கத்தை நினைத்து பார்க்கின்றேன், அவர் இருந்தால் முதல் ஆளாக இதை வரவேற்றிருப்பார் ஆம் ஜெயலலிதா இருந்திருந்தால் இன்று பெரும் வரவேற்பை கொடுத்து தமிழக தேசநலனை காட்டியிருப்பார் ஆயிரம் சர்ச்சைகள் அவர்மேல் இருக்கட்டும், தேசாபிமானமிக்க தமிழக அரசியல்வாதியாக அவர் ஒருவர்தான் […]

என்னதான் சொல்ல வர்றீயள் சைமன்?

“இப்போம் நீங்க என்னதான் சொல்ல வர்றீயள் சைமன்? அண்ணே கவுரவமா 2009ல உங்கட நாட்டுல செத்து கிடந்தியள், இப்போ மட்டும் நீங்க உயிரோடு இருந்தால் இந்தியா உள்ளே புகுந்து தூக்கி கொண்டு டெல்லியில் தொங்கவிட்டுருக்கும் தெரியுமோ? எவ்வளவு அவமானமா போயிருக்கும்? ஓம் அதுக்காக நாம இனி காங்கிரஸ் திமுகவுக்கு நன்றி சொல்லோணும், கலைஞரும் சோனியாவும் உங்கட‌ மானத்தை காத்திருக்கிறவர் ஒம் புரியுது.. அதை தமிழ்நாடு முழுக்க சொல்லுங்கோவன்”

காற்றுள்ளபோதே தூற்றிகொள்..

இந்திராவுக்கு வாய்க்கா சர்வதேச வாய்ப்பு மோடி அரசுக்கு வாய்த்தது ஆம் நேரு சர்வதேச விவகாரங்களால் காஷ்மீரில் அமைதி காத்தார் சாஸ்திரி முழு காஷ்மீரையும் பிடிக்கும் வேகத்தில் இருந்தபொழுது ரஷ்யாவில் மர்மமாக மரணித்தார் பெரும் வெற்றிகளை பெற்ற இந்திராவாலும் காஷ்மீரை முழுக்க மீட்கமுடியவில்லை, சில முக்கிய முடிவுகளை எடுக்கவும் முடியவில்லை உலக நிலவரம் அப்படி இருந்தது , அதே நேரம் பஞ்சாபில் இருந்த அளவு காஷ்மீரில் கலவரமும் இல்லை ஆக மோடி அரசு உலக சூழல் இன்னும் பல […]

காஷ்மீர் பற்றி பெரியார் என்ன சொன்னார் தெரியுமா

காஷ்மீர் பற்றி பெரியார் என்ன சொன்னார் தெரியுமா என்றொரு கோஷ்டி கிளம்பிவிட்டது அவர்களுக்கென்ன ஐன்ஸ்டீன் பற்றி பெரியார், அணுகுண்டு பற்றி பெரியார், கொலம்பஸ் பற்றி பெரியார் என எல்லாவற்றையும் பற்றி பெரியார் சொன்னதாக சொல்லிகொள்வார்கள் பெரியார் காஷ்மீர் பற்றி பேச நீங்கள் யாரென அன்றே இந்தியா பாகிஸ்தானை பார்த்து கேட்டாராம் காஷ்மீரில் சம்பந்தபட்ட நாடுகள்தான் பேசமுடியும்? அயல்கிரக ஆசாமிகளா வந்து பேசுவார்கள்? அதுவும் நாட்டின் தலைநகர் அருகில் இருக்கும் ஒரு நிலத்தை எதிரிப‌டைகளிடம் சிக்க வைக்க எந்த […]

இனி எல்லா தொழிலதிபர்கள் கவனமும் காஷ்மீரில் குவியும்

இனி எல்லா தொழிலதிபர்கள் கவனமும் காஷ்மீரில் குவியும், பெருந்தலைகள் கால் வைத்த இடத்தில் சில்லுண்டி தீவிரவாதம் அணையும் எங்கே அடித்தால் அடங்கும் என்பது தொழிலதிபர்களுக்கு அத்துபடி இன்னும் 10 ஆண்டுகளில் பெரும் முதலீடும் மாற்றமும் அங்கு வரலாம், இனி காஷ்மீர் ஆசியாவின் சுவிட்சர்லாந்து எனும் அளவு பெரும் மாற்றங்கள் வரலாம், காஷ்மீரம் தன் பொற்காலங்களை மீட்டெடுக்கலாம்

என்னய்யா அடுத்தகுறி நாமதானோ?

என்னய்யா அடுத்தகுறி நாமதானோ? அட போய்யா , காஷ்மீர் ரத்தபூமி. நம்ம ஏரியாவே வேற நாமெல்லாம் சும்மா களை கூத்தாடி மாதிரின்னு அவங்களுக்கே தெரியும் அதனால நம்மள எல்லாம் பிடிக்க மாட்டாங்க‌ இதுக்குத்தானே நளினி பரொல்ல வரும்பொழுது நீர் பார்க்கவே போகல உண்மைய சொல்லும்? நீர் மட்டும் போனியராக்கும், எங்கே 7 தமிழர் விடுதலை ஈழம்னு இப்போ பேசுங்க பார்க்கலாம் விடுய்யா விடு, அமித்து அடுத்தால என்ன செய்றார்னு அங்க பாருய்யா…”

மிக அழகான திட்டமிடல் இது

நிச்சயம் மிக அழகான திட்டமிடல் இது, முதலில் மாநில அரசை முடக்கினார்கள் , ஜனாதிபதி ஆட்சி வந்தது இதற்கான முயற்சி அந்த புல்வாமா தாக்குதலிலே தொடங்கிற்று என்றாலும் நிதானமாக தேர்தல் வரை காத்திருந்தார்கள் பின் அதிரடியான சட்டதிருத்தங்களை செய்தார்கள், சில தொழில்நுட்ப விஷயங்களும் ரகசியமாக நிறுவபட்டன‌ NIA போன்ற சட்டங்கள் இறுக்கபட்டன, காஷ்மீரில் படைகள் குவிக்கபட்டன‌ முத்தாய்ப்பாக தாங்கள் நினைத்ததை அவர்கள் சொல்லமல் ஊடகங்களை நோக்கி கண்ணை காட்டினார்கள், அவை அரசு மனதில் இருந்ததை அப்படியே எழுதின‌ […]

பிரிட்டன் தூதர் டோமினிக் முக ஸ்டாலினை சந்தித்தார்

இந்தியாவுக்கான பிரிட்டன் தூதர் டோமினிக் முக ஸ்டாலினை சந்தித்தார் : செய்தி ஒரு அரசு பதவியிலும் இல்லா முக ஸ்டாலினை பிரிட்டன் தூதர் பரபரப்பான நேரத்தில் சந்திக்கும் மர்ம்மம் என்ன? தூதர் என்றால் ஒழுங்காக விசா கொடுப்பது போன்ற பணிகளை அவர்களின் தூதரகத்துக்குள் செய்யட்டும் அதை தாண்டி அரசியல்வாதிகளை சந்திக்க என்ன உண்டு? இந்த தூதரை உடனே கண்டித்து விளக்கம் கேட்க வேண்டியது மத்திய அரசின் கடமை

அமித்ஷாவின் துணிச்சலான அறிவிப்பினை வரவேற்கின்றோம்

ஒரு இந்தியனாக அமித்ஷாவின் துணிச்சலான அறிவிப்பினை வரவேற்கின்றோம் ஆயினும் புலியின் வாலை பிடித்து இழுத்தாகிவிட்டது, புலியினை முழுக்க கட்டுபடுத்தும் கடப்பாடு அவர்களுக்கு உண்டு பாம்பு கொத்திவிட்டபின் அதை மயக்கும் வித்தை தெரிந்திருந்தாலும் பலன் இல்லை என்பார்கள் மிகபெரும் சவால் இனிதான் மத்திய அரசுக்கு காத்திருக்கின்றது, அந்த நெருப்பாற்றை அவர்கள் கடக்கவும் காஷ்மீரிய சகோதரர்களுக்கு இனியாவது நல்ல அமைதியான வாழ்க்கை கிடைக்கவும் வாழ்த்துக்கள்

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications