பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஆகஸ்ட் 3, புலிகளின் இஸ்லாமிய வெறுப்பினை கொடூரமாக உலகிற்கு சொன்ன நாள்

இலங்கை தமிழர்கள் பிரச்சினை என எடுத்துகொண்டால் ஈழதமிழர், மலையக தமிழர், இந்த தமிழ்பேசும் இஸ்லாமியர் என மூவரும் கலந்ததே வருவார்கள், தீர்வு இவர்களை உள்ளடக்கியே கொடுக்கபட வேண்டும் ஆனால் புலிகள் ஈழதமிழருக்கு தனிஈழம் என்ற நிலைபாட்டில் இருந்தனரே தவிர மலையக தமிழர், தமிழ்பேசும் இஸ்லாமியர் எல்லாம் அவர்கள் கணக்கிலே வரவில்லை, ஏன் என்றால் ஈழபோராட்டம் ஈழதமிழனுக்கானது எனும் குறுகிய புத்தி அது இந்தியா இவர்கள் கலந்த ஈழ‌ சிக்கலுக்கு முடிவினை கொடுக்க விரும்பியது, புலிகள் விரும்பவில்லை. முதல் […]

இங்கிலாந்தில் 220 காதல் தோல்விகளால் விரக்தியடைந்த பெண்

இங்கிலாந்தில் 220 காதல் தோல்விகளால் விரக்தியடைந்த பெண் நாயினை திருமணம் செய்து கொண்டார் : செய்தி 220 காதலா?, அம்மணி டபுள் செஞ்சுரி அடித்து ஆடிகொண்டிருந்ததை ஒரு நாய் முடித்து வைத்திருக்கின்றது. எதற்கு நாயினை மணமுடித்தார் அந்த பெண்மணி? கணவன் என்பவன் நாய்போல் நடக்க வேண்டும் என நினைத்து 220 முயற்சிகளை செய்திருக்கலாம், அவைகள் தோற்றபின் ஏன் நாய்போல கணவன், நாயே பரவாயில்லை என முடிவு செய்திருக்கலாம்

பாகிஸ்தானில் மீண்டும் குருத்வாரா திறப்பு

72 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் மீண்டும் குருத்வாரா திறப்பு- சீக்கியர்கள் குவிந்தனர் அவர்களுக்காவது வழிபாட்டு தலங்கள் மீண்டும் திறக்கபடுகின்றன, அதாவது அடைத்து வைத்தாலும் ஆபத்து இல்லை ஆனால் இங்குதான் பாபர்மசூதியினை மொத்தமாக அழித்துவிட்டு அமர்ந்திருக்கின்றார்கள், மறுபடி அது அமைக்கபட்டு திறக்க வாய்ப்பே இல்லை இவ்வளவுக்கும் பாகிஸ்தான் இஸ்லாமிய நாடு, இந்தியா சமயசார்பற்ற நாடு

அன்னை மரியாளின் திருவிழா

அன்னை மரியாளின் திருவிழா ஒன்று கொண்டாடபட்டுகொண்டிருக்கின்றது, பனிமாதா திருவிழா என பெயர், கத்தோலிக்கத்தில் பிரதானம் பிரிவினைகள் இந்த‌ ஆலயங்களை அனுமதிக்குமா? இல்லை இல்லை இது மோசடி என சபைகள் வாதிடும், அது அவர்கள் நம்பிக்கை. கேட்டால் இயேசு ஒருவர்தான் நமக்காக சிலுவையில் தொங்கினார் என்பார்கள், இல்லையே கூட இருவர் தொங்கினார்கள் என்றால் முறைப்பார்கள் இயேசு பாடுபட்டு நம்மை மீட்டார் என்பார்கள், பரபாஸ் எனும் கள்ளனையும் விடுதலை செய்தார் என்றால் “அப்பாலே போ சாத்தனே” என ஒரு மாதிரி […]

அவர் அப்படித்தான்

தமிழ் திரைப்படங்களில் மகா வித்தியாசமான அதேநேரம் கிளாசிக் எனப்படும் ரகத்தின் படம் “அவள் அப்படித்தான்” அதில் ருத்தையாவின் வசனங்களை ரஜினி இப்படி பேசுவார் , ரஜினி அப்பொழுது வில்லன் நடிகர் “டேய் மச்சான், பெண்கள் மேல வெறுப்பு வந்த அன்னைக்கே நான் செத்துருவேன், அதுக்கப்புறம் என்னடா வாழ்க்கை? பெண்ணை அனுபவி ஆராயாதே..பெண்ணை தேடு அவள் இதயத்தை தேடாதே அவா உன்னை தொடரட்டும், நீ அவளை தேடாதே பெண்ணிடம் ஏமாறாதே.. பெண்ணுக்காகவும் ஏமாறாதே, பொண்ணுங்க இல்லாம வாழவே கூடாது, […]

உலகெல்லாம் இஸ்லாமிய பெண்களுக்கு நற்செய்தி

உலகெல்லாம் இஸ்லாமிய பெண்களுக்கு நற்செய்தி கிடைத்து கொண்டிருக்கும் நேரமிது இந்தியா முத்தலாக் விவகாரத்திற்கு கடிவாளம் போட்டது, இதற்கு உலகளாவிய இஸ்லாமிய பெண்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது தமிழக இஸ்லாமிய பெண்கள் தவிர‌ காரணம் நல்ல சட்டம் கொண்டுவந்தாலும் திமுகவும் காங்கிரசும் கொண்டுவர வேண்டும் பாஜக எது கொண்டுவந்தாலும் ஏறேடுத்தும் பாரோம் என்பது அவர்களின் 6ம் கடமைகளில் ஒன்று அது இருக்கட்டும் இப்பொழுது சவுதி அரேபியா இதுகாலம் இருந்த பெண்கள் மேலான கட்டுபாடு ஒன்றை தளத்துகின்றது, இதுவரை சவுதி […]

அக்கா என்னாயிற்று?

போக்சோ சட்டத்தில் மரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: மக்களவையில் கனிமொழி வலியுறுத்தல் அக்கா என்னாயிற்று? திமுகவினர் யாரும் சிக்கிகொள்வார்கள் என பயமா?

திலகர் பிறவி போராளி

அதுவரை காங்கிரஸ் இயக்கம் பிரிட்டிஷாரை விரட்ட முடியாது என்றே நம்பிகொண்டிருந்தது, உலக யதார்த்தபடி அதற்கு வழி இல்லாமலும் இருந்தது பிரிட்டிஷாரை எஜமானர்கள் என நம்பி உரிமை கேட்ட காங்கிரசில் முதன் முதலில் அவர்கள் அந்நியர்கள் என சொல்லி ஒரு குரல் ஒலித்தது அது பெரும் கலகத்தையும் ஏற்படுத்தியது மிக தைரியமாக அக்குரலை எழுப்பி பெரும் எழுச்சிக்கு வித்திட்டவர் பால கங்காதிர திலகர், அவரின் எழுச்சியே தேசத்தில் ஒரு அணலை எழுப்பியது, அது காந்தி காலத்தில் விடுதலையாக விடிந்தது […]

ஹலால் உணவா, சைவ உணவா

ஹலால் உணவா, சைவ உணவா என மறுபடியும் சலங்கை கட்டி ஆட தொடங்கிவிட்டனர் எந்த உணவாய் இருந்தால் என்ன? யாருக்கு எது பிடிக்குமோ அதை மணக்க மணக்க சமைத்து உண்ணுங்கள் இந்த உலகில் எல்லாமே நிலையற்றது, எதுவும் நிரந்தரமில்லை, அர்த்தமுமில்லை உண்பதும், உறங்குவதுமே பரிபூரண சுகம், ஏக சுகம். அதை அணு அணுவாக அனுபவிக்க வேண்டும் கடவுளுக்கு தெரியாதா? ஒட்டகம் போல பல நாட்களுக்கு தாகம் எடுக்காதவாறோ இல்லை மலைபாம்பு போல தின்றால் 3 வாரம் மல்லாக்க […]

கொடூர வில்லன் உபி பாஜகவில் இருந்திருக்கின்றான்

தமிழ்படத்தினை உபி, மபி ஏரியாக்களை பார்த்து எடுப்பார்களா? இல்லை உபி மபி ரவுடிகள் தமிழ் சினிமா பார்த்து ரவுடியிசம் பழகுவார்களா என்பது பட்டிமன்ற ஆய்வுக்கு உட்பட்டது தமிழ் சினிமா அளவு கொடூர வில்லன் உபி பாஜகவில் இருந்திருக்கின்றான் அவன் பெயர் குல்தீப்சிங் சென்கார், இயக்குநர் ஹரி படங்களில் வருவது போலவும் பழைய வில்லன் சத்தியாஜ் போலவும் பெரும் வில்லனாக இருந்திருகின்றார் பெண்ணை கற்பழித்தது அவள் நியாயம் கேட்டதும் கொலை முயற்சி, குடும்பத்த்தை மிரட்டியது என ஏகபட்ட கொடூரங்களை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications