பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மென்மேலும் ஆசீர்வதிக்கட்டும்

நமக்கு திமுக மேல் எப்பொழுதும் ஒரு அனுதாபம் உண்டு. அதன் சில கருத்துக்களும் சர்ச்சைகளும் சிக்கலே தவிர அவர்களின் பல திட்டங்கள் அருமையானவை அண்ணாவும் கலைஞரும் தமிழ்நாட்டின் பெரும் பிம்பங்கள், எக்காலமும் அவர்களின் கருத்துக்கள் இந்தியா இருக்குமளவும் இங்கு எதிரொலிக்கும், காலத்துக்கும் அந்த குரல் தேவை இதனால் திமுகவினை ஓரக்கண்ணால் அடிக்கடி பார்த்துகொள்வதுண்டு நாம் இணையத்தில் வலம் வருபவர்கள் என்றாலும் , இணையம் மாபெரும் ஊடகம் என்பதாலும் இங்கும் திமுகவின் அடையாளங்கள் எப்படி இருக்கின்றது என நோக்குவதுண்டு […]

தனி மறைமாவட்டம் வேண்டும்

அது உழைப்பவர் இயக்கம்? வேறு எவனுமே உழைக்கவில்லையா? ஆளுக்கொரு சாதியினை பிடித்து தொங்குவது, அதை சொன்னால் கிறிஸ்துவத்தில் சாதி இல்லை என சிரிக்காமல் சொல்வது நாடார் பாதிரிகளுக்கு தனி மறைமாவட்டம் வேண்டும் , அதில் அமோகமாக கொள்ளை அடிக்க வேண்டும் என நேரடியாக கேட்டால்தான் என்ன?

ஐரோப்பாவின் டிரம்ப்

ஐரோப்பாவின் டிரம்ப் என பெயர் பெற்றுவிட்ட போரீஸ் ஜாண்சன் ஈரான் விவகாரத்தில் துள்ளி குதித்து கிரவுண்டுக்கு வந்து வார்ம் அப் செய்துகொண்டிருக்கின்றார் ஆளுக்கொரு கப்பலை பிரிட்டனும் ஈரானும் பிடித்து வைத்திருக்கும் நிலையில், பிரிட்டன் கப்பலை மீட்கபோகின்றேன் அதே நேரம் ஈரான் கப்பலை விடுவிக்க முடியாது என்பது போல குதித்துகொண்டிருகின்றார் ஈரான், பிரிட்டன் செய்தது தவறு என்பதை ஒப்புகொள்ள வேண்டும் என சொல்லியிருந்தது. அது பிரிட்டன் பிரதமரை கொதிக்க வைத்தாயிற்று நாங்கள் தவறு செய்தோமா? என பொங்கிவிட்டார் ஜாண்சன் […]

அக்கட்சியின் எதிர்காலம் என்னாவது?

திமுக சார்பில் பெண் உறுப்பினர்களை விவாதங்களுக்கு அனுப்பும் காட்சி இப்பொழுதெல்லாம் இல்லை மங்குனி மனுஷும் இன்ன பிற இம்சைகளுமே சுற்றி சுற்றி திரிகின்றன‌ திமுக மகளிர் அணியில் கனிமொழி ஒருவரே உள்ளது போலவும் அவர் டெல்லிக்கு சென்றபின் இங்கு யாருமே இல்லை என்பது போலவும் காட்சிகள் இருப்பது சரியல்ல‌ கனிமொழி இனியொரு பெண் குழந்தையினை தத்தெடுத்து அதற்கு பாப்பாநிதி என பெயரிட்டு அதை மகளிர் அணி தலைவி ஆக்குவதெல்லாம் முடியாத கதை திமுகவின் மகளிர் அணியில் சிலரை […]

அதிமுகவின் நடவடிக்கைகள் சுவாரஸ்யமாகிவிட்டன‌

அதிமுகவின் நடவடிக்கைகள் சுவாரஸ்யமாகிவிட்டன‌ முத்தலாக் சட்டத்தை வழக்கம் போல மோடியின் செருப்பை தொட்டு ஏற்றுகொண்டார் பன்னீர் செல்வம் பெற்றெடுத்த சீமந்த புத்திரர் ஆக மக்கள் அவையில் அதிமுக அதற்கு ஆதரவு தெரிவித்துவிட்டது ஆனால் மாநிலங்கள் அவையில் சில திருத்தங்களை கண்டித்து அதிமுக கோஷ்டி வெளிநடப்பு செய்துவிட்டது என்னாயிற்று இவர்களுக்கு கோமா நிலையில் இருந்து விழித்துவிட்டார்களா என யோசித்த பாஜக தரப்பு உண்மையினை கண்டறிந்துவிட்டது அதாவது அதிமுகவில் பன்னீர் கோஷ்டியும் அதற்கு எதிர் கோஷ்டியும் உருவாகியிருப்பது பட்டவர்த்தனமாக தெரிந்தாகிவிட்டது […]

புதிய இந்தியாவில் இதெல்லாம் சகஜமோ என்னமோ?

புதிய இந்தியா என எந்த நேரத்தில் அறிவித்தார்களோ தெரியவில்லை புது புது சிக்கல்களாக வருகின்றன‌ இப்பொழுது புதிய மருத்துவ கொள்கை என ஒன்றை அறிவித்து இப்பொழுது மருத்துவ உலகையும் சீண்டிவிட்டார்கள் நாளை அதை கண்டித்து இந்திய மருத்துவ கழகம் வேலை நிறுத்தம் செய்யும் என தெரிகின்றது இதனால் நாடு முழுக்க சிகிச்சைகளில் சிக்கல் ஏற்படலாம் இன்னும் யாரெல்லாம் போராட போகின்றார்களோ தெரியாது, ஆனால் இனி அடிக்கடி போராடுவார்கள் போல் தெரிகின்றது புதிய இந்தியாவில் இதெல்லாம் சகஜமோ என்னமோ?

திமுகவில் நிறைய சைக்கோ உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்

நெல்லை முன்னாள் மேயர் கொலையாளி தான் ஒரு சைக்கோ என சொல்லிகொண்டே இருகின்றானாம் மனிதன் தெளிவான சைக்கோ போலிருக்கின்றது தன் தாய் சீனியம்மாளுக்கு அரசியல் எதிரி எனும் வகையில் உமா மகேஸ்வரியினை கொன்றதாக தெளிவாக சொல்லிவிட்டு தான் ஒரு சைக்கோ என சொல்லிகொண்டே இருக்கின்றான் இதிலிருந்து என்ன தெரிகின்றது? திமுகவில் நிறைய சைக்கோ உறுப்பினர்கள் இருக்கின்றார்கள், சைக்கோ பிரிவு என்றொரு பிரிவுமட்டும்தான் அதிகார பூர்வமாக தொடங்கபடவில்லை

அவர் அப்படித்தான் அதில் ஒன்றும் ஆச்சரியமில்லை

முக ஸ்டாலின் முதியவர் ஒருவரை மரியாதையின்றி தள்ளிவிடும் காட்சி வைரலாகின்றது. அவர் அப்படித்தான் அதில் ஒன்றும் ஆச்சரியமில்லை, முன்பே மெட்ரோ ரயில் உட்பட பல இடங்களில் அதை பார்த்தாயிற்று நிச்சயம் திமுக என்பது தலைவர்களின் பண்பால் வளர்ந்த கட்சி, அண்ணாவும் கலைஞரும் அதில் கண்ணும் கருத்துமாயிருந்தவர்கள் அண்ணா அதில் தன்னிகரற்றவர் கலைஞர் வாழ்வில் கூட ஏகபட்ட சம்பவம் உண்டு, ஒரு கிராமத்தில் கூட்டம் முடிந்து கிளம்புகின்றார் கலைஞர், பின்னால் ஓடிவருகின்றார்கள் சிறுவர்கள். பதறி காரை நிறுத்திய கலைஞர் […]

மக்களின் மனநிலை ஆன்மீகம் நோக்கி ஓடுகின்றது

கடந்த 40 வருடங்களில் மிக பெரிய புரட்சியாளர் அத்தி வரதர் என்பவரே மிகபெரும் கூட்டத்தை அவரே கூட்டியிருக்கின்றார், இவ்வளவுக்கும் அவர் பேசவுமில்லை எழுதவுமில்லை யாரையும் அழைக்கவுமில்லை தமிழகம் ஆன்மீகம்பால் திரும்பியிருக்கின்றது, அது தியானமடங்களோ கிறிஸ்தவ ஆலயங்களோ இல்லை வேறு தலங்களோ நிரம்பி வழிகின்றது மக்களின் மனநிலை ஆன்மீகம் நோக்கி ஓடுகின்றது, தேடி தேடி ஓடுகின்றார்கள் அத்திவரதருக்கான வரவேற்பு அதனை தெளிவாக காட்டுகின்றது, மிகபெரிய ஆன்மீக எழுச்சி ஏற்பட்டிருப்பதை கண்கூடாக தெரிகின்றது இது அரசும் ஆலய நிர்வாகமும் காவல்துறையும் […]

உண்மையில் காங்கிரசே தேசம் காத்திருக்கின்றது

நல்ல வேளையாக அன்று பாஜக அரசு இல்லாமல் காங்கிரஸ் அரசு இருந்தது இல்லாவிட்டால் ராமதாஸ் துணையோடு வீரப்பன் மனைவி அமித்ஷாவினை சந்தித்து அவனை காத்திருப்பாள் ஆட்டோசங்கர் மனைவிகள் ஆம் மனைவிகள் அவனை காத்திருப்பர் ஏன் பிரபாகரனின் தாயாரும் ஆண்டன் பாலசிங்கமும் இங்கு ஆரஞ்ச் ஜூஸ் குடித்து கொண்டிருப்பர் உண்மையில் காங்கிரசே தேசம் காத்திருக்கின்றது

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications