பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ரம் ஊற்றிய தோசை ?

தோசைமாவு அரைப்பது எப்படி என பாடம் கேட்டான் ஒருவன், நாமும் அகத்திய முனிவன் தொல்காப்பியனுக்கு போதித்தது போல போதித்தோம் அரியியினை உளுந்தை இவ்வளவு அளவு ஊற வை, கொஞ்சம் வெந்தயம் சேர்த்துகொள் என சொல்லிவிட்டு சென்றால் அரிசி உளுந்து, வெந்தயம் அவன் தேடி கண்டுபிடித்த நுட்பமான ஜவ்வரிசி எல்லாம் கலந்து ஒன்றாக ஊற வைத்திருகின்றான் யார் அய்யா நீ என நோக்கினால், அண்ணாச்சி இனி என்ன செய்ய வேண்டும் என மிக கவனமாக கேட்டான் ஒரு வோட்காவோ,ரம்மோ […]

உன் நிழலில் இருந்து ஆயிரம் கலாம்கள் இங்கு வருவார்கள்

எழுதிகொண்டே சாக வேண்டும் என ஆசைபடுவான் எழுத்தாளன், நடித்துகொண்டே சாக வேண்டும் என்பான் நல்ல நடிகன் உழும்பொழுதே சாக வேண்டும் என்பான் விவசாயி , நான் செத்தாலும் தொழிற்சாலை இயங்க வேண்டும் என்பான் முதலாளி பாடம் நடத்திகொண்டே சாக வேண்டும் என்பான் ஆசிரியன் ஆம், அந்த மனிதன் விஞ்ஞானியாயிருந்தான் கொஞ்சம் கண் அசைத்திருந்தால் அமெரிக்காவின் தனியார் நிறுவணங்களோ நாசாவோ தங்க தொட்டிலில் டாலராய் கொட்டி தாலாட்டியிருக்கும் ஆனால் நாட்டுக்காக வாழ்ந்த், மாணவர்களிடம் பேசி கொண்டே செத்தான் அல்லவா […]

அக்னி அஞ்சலி செலுத்துகின்றோம்

நாம் காந்தியினை கண்டதில்லை, காமராஜரை கண்டதில்லை, சாஸ்திரியினை கண்டதில்லை அப்படி விஞ்ஞானி ஜஹாங்கீர் பாபாவினையும் கண்டதில்லை, ஆனால் கலாமினை கண்டிருக்கின்றோம், அவர் காலத்தில் வாழ்ந்தோம் என்பதற்காக பெருமைபடுகின்றோம் இன்று கலாமிற்கு நினைவு நாள். ஆரியபட்டரின் மறுபிறப்பாக நம்மிடம் அவதரித்த கலாமின் நினைவு நாள். அய்யா கலாம் அவர்களே, அக்னி நாயகனே , பிரித்வி கொடுத்த பிதாமகனே உங்களுக்கு அஞ்சலில் செலுத்துமுன் இங்கு சில சில்வண்டுகள் கலாம் தமிழகத்திற்கு என்ன செய்தார் என புலம்பிகொண்டிருக்கின்றன. உங்கள் சார்பாக சில […]

நமது தலைமுறைகக்கு அப்துல் கலாம்

அந்த தலைமுறைக்கு காந்தி, அடுத்த தலைமுறைக்கு காமராஜர், நமது தலைமுறைகக்கு அப்துல் கலாம். இந்திய வான் வெளி எல்லைக்கு நெருப்பு வேலி இட்ட மாமேதை அவர், ஒரு இந்தியனாக பகை நாடுகளுக்கு சவால் விட்டவர், அக்னி ஏவுகனை மூலம், நெருப்புடா…..நெருங்குடா பாப்போம் என சவாவே விட்டவர். ஒரு பின் தங்கிய தீவுபகுதி,பெரும் ஏழ்மை குடும்பம், அதனிலும் போராடி கொஞ்சம் கொஞ்சமாக தன்னை செதுக்கி, கல்வியும் உழைப்பும் ஒரு மனிதனை கைவிடாது என்பதை நிரூபித்தவர், அவரது போராட்டம் பெரிது, […]

கலிங்கபட்டியின் குறுக்கு சந்து இல்லையா

மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கின்றேன் என தன் வழக்கமான எட்டுகட்டை ராகத்தில் ராஜ்யசபாவில் பொங்கியிருக்கின்றார் வைகோ அய்யா இது டெல்லி , எச்சரிக்கை எல்லாம் விட முடியாது முடிந்தால் கோரிக்கை வையுங்கள் அதுவும் இல்லாவிட்டால் சத்தமில்லாமல் அமருங்கள் என சொல்லிவிட்டார் சபாநாயகர் ஓஓ ….நாம் இருப்பது டெல்லியிலா, இது கலிங்கபட்டியின் குறுக்கு சந்து இல்லையா என திடுக்கிட்டு விழித்த வைகோ அப்படியே அமர்ந்துவிட்டார்

விரைவில் எதிர்பார்க்கலாம்

தர்பார் படத்தின் ரஜினியின் ஸ்டில் வெளியிடபட்டது ஓஓ.. படத்தின் காட்சிகள் வந்துவிட்டதா? இனி தொடர்ந்து ரஜினியின் அரசியல் காமெடி அறிவிப்புகள் வரவேண்டுமே விரைவில் எதிர்பார்க்கலாம்

உலகெல்லாம் இது கப்பல் தகறாறு காலம் போலிருக்கின்றது

உலகெல்லாம் இது கப்பல் தகறாறு காலம் போலிருக்கின்றது, இந்த பிரிட்டன் ஈரானிய கப்பல் சர்ச்சை இன்னும் முழுக்க ஓயவில்லை பிரிட்டனின் கப்பல் ஒன்று நேற்று ஈரான் பக்கமாக கத்தாருக்கு சென்றது,ஈரான் தடுக்கவில்லை ஆக விஷயம் கொஞ்சம் அந்த மோதல் தணிந்திருக்கின்றது. இப்பொழுது ரஷ்ய கப்பலை உக்ரைன் பிடித்து வைத்துள்ளது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கொஞ்சநாளாகாவே மோதல் ஒரு கட்டத்தில் உக்ரைனின் கிரீமியா பகுதியினை ரஷ்யா பிடித்து தன்னோடு இணைத்து கொண்டது கொஞ்ச நாளைக்கு முன் ரஷ்ய கடலில் உக்ரைன் […]

அந்த முகபாவனை, அது மகா சிரமமானது

இலங்கை கிரிக்கெட் ஆட்டக்காரர் , தமிழர் முத்தையா முரளீதரனின் வாழ்வு படமாக்கபடுகின்றதாம் இதில் விஜய் சேதுபதி முரளீதரனாக நடிக்கின்றார் நிச்சயம் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனையினை படைத்தவர் முரளீதரன். அச்சாதனைகளை இன்னொரு பந்துவீச்சாளர் பாதி நெருங்கினாலே பெரும் விஷயம் பல ஆண்டுகளுக்கு அதை நெருங்கபோவது யாருமில்லை தோட்ட தொழிலாளி மகனாக பிறந்து தன் மகா அற்புதமான பந்துவீச்சால் உலக பிரசித்தி பெற்று ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னை எல்லாம் தூக்கி எறிந்து உலக கோப்பையினை பெற்று கொடுத்தது சாதாரணம் அல்ல‌ […]

அறிவாலயம் பக்கம் போயிருடா

அடேய் ஜூனியர் விகடனில் என்ன செய்தி வந்திருக்கின்றது பார்த்தாயா? துர்கா ஸ்டாலின் கட்சியினை கட்டுபடுத்துகின்றாராம் என்றவுடன் கொதித்துவிட்டான் அறை நண்பன் அண்ணாச்சி இதெல்லாம் மற்ற பெண்கள் செய்தால் சேவை, அண்ணியார் செய்தால் அதிகாரமா? வரலாறை படியும் அண்ணாச்சி, என்னதான் படிச்சி கிழிச்சியரோ அட அப்படி என்னடா அண்ணியார் பெருமை, சொல் பார்க்கலாம் அண்ணாச்சி நல்ல மனைவி கணவனின் எல்லா காரியத்திலும் பங்கு பெறுவாள், அவதான் அண்ணாச்சி நல்ல மனைவி அப்படியா? காந்திக்கு கஸ்தூரி பாய், நேருவுக்கு கமலா […]

சாதாரண பாஜக காரியதரிசி

அவர் கார்கில் போர் நடக்கும்பொழுது குஜராத் முதல்வராக கூட இல்லை, சாதாரண பாஜக காரியதரிசி ஆனால் யுத்தம் என்றவுடன் வீரர்களை சந்திக்க ஓடியிருக்கின்றார் அன்று அவரை யாருக்கும் தெரியாது, வெகு சாமான்யர்களில் ஒருவர் இன்றுஅவரின் நாட்டுபற்று அவரை அசைக்கமுடியா பிரதமராக நிறுத்தியிருக்கின்றது இங்கு கார்கில் யுத்தத்தின்பொழுது எத்தனை அரசியல்வாதிகள் இருந்தார்கள்? எவ்வளவு கட்சிகள்? எவ்வளவு தலைவர்கள்? எவ்வளவு முதல்வர்கள்? அவர்களில் யாராவது சென்றார்களா? இல்லை ஆனால் பதவி இல்லாவிட்டாலும் தான் யாரென அறியபடாவிட்டாலும் அம்மனிதன் ஓடியிருக்கின்றான் இதைத்தான் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications