பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஒரு தும்பியினையும் காணவில்லை

கேரளாவில் தமிழக தம்பதிகள் தாக்கபட்டனர் , பதிலுக்கு என்ன செய்ய போகின்றோம் என தும்பிகள் குதிக்க ஆரம்பித்துவிட்டன‌ ஆமாம் வாருங்கள் அந்த மலையாளி நயன் தாராவினையும் , இன்னொரு மலையாளி விக்னேஷ் சிவன் என்பவனையும் விரட்டி அடிப்போம் என்றால் ஒரு தும்பியினையும் காணவில்லை

தொடர்ந்து பேசத்தான் செய்வேன்

தொடர்ந்து பேசத்தான் செய்வேன் : பா.ரஞ்சித் பேசு, ஆனால் பாண்டிமடம் , ஏர்வாடி இல்லை கீழ்பாக்கம் போன்ற இடங்களில் சேர்ந்துவிட்டு எவ்வளவும் பேசு.. : பா.ரஞ்சித்

பழையன கழிதலும் புதியன புகுதலும்

இன்றிருப்பது மெக்காலே விட்டு சென்ற பள்ளிகல்வியின் தொடர்ச்சி, மனப்பாடம் செய் அப்படி மனதில் பதிந்ததை அப்படியே கொட்டு வேறெதுவும் செய்யாதே என்ற கல்விமுறை சுதந்திர இந்தியாவில் மேற்கல்விக்கு அதாவது கல்லூரி கல்விக்கு ஏகபட்ட மாற்றங்களை செய்தோமே தவிர அடிப்படை கல்வி மெக்காலே சிஸ்டத்தில் இருந்து மாறவே இல்லை இதை வெளிநாட்டு மாணவர்களோடு ஒப்பிட்டு பார்த்தால் எளிதாக காணலாம் வெளிநாட்டு பள்ளிமாணவர்களிடம் திறமை இருக்கின்றதோ இல்லையோ ஒரு தெளிவும் தைரியமும் மின்னும் நமது மாணவர்களிடம் ஒரு தயக்கம் தெரியும், […]

இவர்கள் சொல்வதே நீதி

சிறுபான்மை கிறிஸ்தவ கல்லூரி போன்ற நிறுவணங்கள், இன்னும் சில சாதிகளின் கல்வி நிறுவணங்களுக்கு அரசு சம்பளம் வழங்கும் , அவர்கள் முழு அதிகாரம் செய்வர் அதாவது சிறுபான்மையினர் நிர்வாகம் என்றால் அவர்கள் இனத்தில் மதத்தில் சாதியில் யாரையும் வேலைக்கு சேர்க்கலாம் , அரசு சம்பளம் கொடுத்துவிட்டு அமைதியாகிவிட வேண்டும் ஆனால் அரசாங்க வேலைகளில் இட ஒதுக்கீடு மேல்சாதிக்கு கூடாது, கூடவே கூடாது. இவர்களுக்கு ஒரு நீதி ,அரசுக்கும் இவர்கள் சொல்வதே நீதி அதன் பெயர் சமூக சிறுபான்மை […]

நேர் கொண்ட பார்வை

அந்த படத்தின் பெயர் நேர் கொண்ட பார்வையாக இருக்கலாம், ஆனால் வித்யா பாலனை ஓரக்கண்ணால் பார்க்கின்றது சங்கம்.. பொதுவாக அஜித்குமாரின் படங்கள் நமக்கு பிடித்தமனாவை அல்ல‌ ஆனால் வித்யாபாலனுடன் சேர்ந்து நிற்கும் பொழுது , அந்த ஜோடியில் ஒரு பொருத்தம் தெரிகின்றது, ஒரு அழகு தெரிகின்றது, ஏதோ ஒரு பொருத்தமான இணைப்பு மின்னுகின்றது இவ்வளவு நாளும் இந்த ஜோடியினை பிரித்துவைத்த படுபாவி யாரென தெரியவில்லை

வேறுபாதைக்கு இழுத்து செல்கின்றது

நெல்லை திமுக பிரமுகர் உமா மகேஸ்வரியின் கொலை திடீரென வேறுபாதைக்கு இழுத்து செல்கின்றது நகைக்கான ஆதாய கொலை என்ற நிலை மாறி தேர்தலில் யாருக்கோ சீட் வாங்கி தருவதாக ஏமாற்றினாரா என்ற யூ டர்ன் விசாரணை அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருக்கின்றது எமக்கு தெரிந்து இப்படி Devi Somasundaram என்பவர் திமுகவில் சீட் வாங்கி தருவார் என பலர் கண்டெய்னர் மற்றும் பிளாங் செக் சகிதம் சுற்றினார்களாம் அம்மணி கவனமாக இருத்தல் நலம் Devi Somasundaram என்பவரிடம் சொல்லி திமுகவில் […]

ஒருகாலமும் இந்த ஏமாற்று ஒப்பாரி தீரபோவதில்லை

அந்த பிராமணர்கள் மக்கள் தொகையிலும் அதிகம் அல்ல வெறும் 3 முதல் 5 சதவீதம் நிச்சயம் வாக்கு அரசியலை அவர்கள் நிர்மானிக்க முடியாது, வென்று வருபவர்களில் பிராமணர் என்பது வெகு சொற்பமே மீதி எல்லாம் மற்ற வகையினர். பிராமணர் எண்ணிக்கைக்கு அவர்கள் பெருவாரியாக வெல்வதெல்லாம் சாத்தியமே இல்லை. அவர்களுக்கு அரசியல் பலம் இல்லை அவர்கள் பணக்காரர்களுமல்ல அன்றைய அரசர்களோ பின்னாளைய டாட்டாவோ இந்நாளைய அம்பானியும் அல்ல‌ அவர்களிடம் மக்கள் தொகையுமில்லை, பணமுமில்லை பெரும் பின்னணியுமில்லை உண்மையில் அது […]

புத்திரபாசம் ஒருவகை பலவீனம்

ஒன்றின் தொடக்கமல்ல அதன் முடிவே கவனிக்கதக்கது என்பது யூத பழமொழி தமிழகத்தில் எல்லோரும் வரும்பொழுது நல்ல தலைவர்களாக கொள்கையாளர்களாகத்தான் வருகின்றார்கள் ஆனால் கொள்கைக்காக வாழ்ந்து கொள்கையாளர்களாக சாதித்து நிலைத்து முடிந்தவர்கள் யாருமே இல்லை தமிழக சாபம் அது அந்த சாபத்துக்கு டாக்டர் ராமதாஸும் தப்பவில்லை அவரின் தொடக்கம் அருமையாக இருந்தது, முடிவு மகா குழப்பமும் சர்ச்சையுமானது எனினும் தமிழக அரசியலில் திமுக அதிமுகவுக்கு ஒரு காலத்தில் சவால்விட்ட அரசியல்வாதி அவர், சில ஆச்சரியங்களையும் கொடுத்தவர் அரசியல் எந்த […]

இந்தியர்களுக்கு இலவச விசா

இந்தியர்களுக்கு இலவச விசா, இலங்கை அறிவிப்பு விசா கெடுபிடி நிறைந்த காலத்திலே சிங்களன் கண்ணில் மண்ணை தூவிவிட்டு பிரபாகரனை சந்தித்து ஆமைகறி உண்டு, ஏகே74ல் சுட்டு பழகியவர் அங்கிள் சைமன் இனி இலவச விசாவாம்.. அங்கிளும் தும்பிகளும் இந்த வாய்ப்பினை விடுவார்களா? அய்ய்யயோ இலங்கை இனி என்னபாடுபட போகின்றதோ தெரியவில்லையே…

அப்படி வறுத்தெடுக்க திமுகவில் இப்பொழுது யாராவது உண்டா

கட்சியில் இருந்து கொண்டு யாராவது கட்சி கொள்கைக்கு விரோதமாக கோவில் வழிபாடு இன்னபிற காரியங்களில் இறங்கிவிட்டால் கலைஞர் தனக்கே உரித்தான சில வார்த்தைகளை வைத்து காய்ச்சி எடுப்பார். கோடாரி காம்பு, விபீஷ்ணன் மற்றும் பிரகலாதன் போன்ற தேர்ந்த வார்த்தைகள் அவை அண்ணா காலத்தில் இருந்து இறுதிகாலம் வரை அப்படித்தான் இருந்தார். சுக்ரீவன், விபீஷ்ணன், பிரகலாதன் எல்லாம் அவருக்கு பிடித்தமான வார்த்தைகள். அந்த புராணங்களை நம்பமாட்டாரே தவிர அந்த பாத்திரங்களின் குணாதிசயத்தை மனமார ரசிப்பார், விடவே மாட்டார். ஆனால் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications