பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

திமுகவில் இருந்து தொடங்கட்டும்…

திமுகவில் மற்றவர்கள் காலம் காலமாக உழைத்தாலும் வட்ட செயலாளர் என‌ கூட வரமுடியவில்லை ஆனால் கலைஞர் குடும்பத்தார் சட்டென எம்பியாவார்கள், இளைஞரணி செயலாளர் ஆவார்கள், தலைவராவார்கள் இன்னும் என்னென்னவெல்லாமோ ஆவார்கள் சமூக நீதி என்பது திமுகவில் இருக்கவே கூடாது என்பது யார் எழுதிய எழுத்து? அந்த நீதி என்பது திமுகவில் இருந்து தொடங்கட்டும்…

மாவீரர்களான குட்டிமணி, ஜெகன், தங்கதுரை உட்பட 53 பேருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

வெலிக்கடே சிறையில் 1983 ஜூலை கலவரத்தில் 53 போராளிகள் கொல்லபட்டிருந்தனர், மிக கொடூரமாக கொல்லபட்டனர், இதே ஜூலை 25ல் கொல்லபட்டனர் அதுவும் குட்டிமணியின் கண்களை தோண்டியெடுத்து கொன்றிருந்தனர் ஏன் அவ்வளவு கோபம்? குட்டிமணி குழுதான் முதன் முதலில் ஆயுதம் எடுத்து சிங்களனை மிரட்டியது, திருப்பி அடிக்க அவர்கள்தான் சொல்லிகொடுத்தார்கள் பிரபாகரனை போல பங்கரில் பதுங்கியவனில்லை குட்டிமணி, போலிஸ் நிலையத்தை நொறுக்கிவிட்டு ஊருக்குள் வாலிபால் ஆடிகொண்டிருக்கும் அளவு அவனிடம் தைரியம் இருந்தது அந்த கும்பலில் 11 வயதில் இணைந்தவர்தான் […]

விவகாரம் எல்லை மீறி சென்றுகொண்டிருக்கின்றது

விகடனில் வந்திருக்கும் திமுக தலமையின் விபரீத போக்கு பற்றி ஆளாளுக்கு விவாதிக்கின்றார்கள் அந்த விகடனின் கட்டுரையில் உண்மை தன்மையும் இல்லாமல் இல்லை நாம் ஏன் கலைஞருக்கு பின் திமுகவினை விமர்சித்தோம் என்றால் இதுதான் காரணம் இதையெல்லாம் நாம் என்றோ சொல்லியிருந்தோம், திமுகவின் நெருக்கமானவர்களிடம் கூட சொல்லியிருந்தோம் நாம் என்றோ சொன்னதை விகடன் இன்று எழுதியிருக்கின்றது இதை முதன் முதலில் தமிழகத்திற்கு சொன்னது, திமுகவினரை எச்சரித்தது சங்கம். இதோ பெரும் சலசலப்பு திமுகவில் விகடன் கட்டுரையால் எழுகின்றது இனியாவது […]

பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பது சரி

அந்த ஜெய்ஸ்ரீராம் கோஷம் பற்றி மணிரத்னம் உட்பட பலர் பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பது சரி, மிக சரி ஆலயங்களில் அவர்கள் எவ்வளவும் ஜெய்ஸ்ரீராம் என சத்தம் எழுப்பிகொள்ளட்டும், உருகட்டும் பாடட்டும் அது மதரீதியான விஷயம் யாரும் கண்டிக்க முடியாது இந்து எனும் முறையில் பிரதமரும் இந்துக்களின் ஆலயத்தில் சென்று ஜெய்ஸ்ரீராம் சொல்லி வழிபடட்டும் ஆனால் பொது இடங்கள், அதுவும் பாராளுமன்றத்தில் எல்லாம் அதை சொல்வதை ஏற்க முடியாது அவர்கள் ஜெய்ஸ்ரீராம் என சொல்ல இன்னொரு கோஷ்டி அல்லாஹூ […]

புனித சுவக்கீன் அன்னம்மாளின் திருவிழா

இன்று புனித சுவக்கீன் அன்னம்மாளின் திருவிழாவினை கொண்டாட தயாராகிகொண்டிருக்கின்றது, கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் எல்லோருக்கும் அது பொன்னாள். சுவக்கீன்‍ அன்னம்மாள் தம்பதியர்கள் அவர்கள், சுவக்கீன் என்றால் “இறைவனது தயாரிப்பு” என்றும், அன்னாள் என்றால் “ஆண்டவனின் அருள்” என்றும் பொருள் அவர் பெயர் அன்னா, ஆன் என்றும் ஆனி என்றும் பல பெயர்களில் அழைக்கபடும், ஆங்கிலத்தை விடுங்கள் அது அவ்வளவு மரியாதையான மொழி அல்ல, ஆனால் தமிழ் என்றுமே மரியாதையான மொழி அல்லவா? அன்+அம்மாள் என்பது அன்னம்மாள் ஆயிற்று யார் […]

அமெரிக்காவில் பாவமன்னிப்பு கோரிகொண்டிருக்கின்றார் இம்ரான் கான்

கிறிஸ்துவத்தில் பாவசங்கீர்த்தனம் என்றொரு சடங்கு உண்டு, கிறிஸ்தவன் தான் செய்த பாவங்களை அருட்தந்தையிடம் அறிக்கையிடுவார், அவரும் மகனே இனி பாவம் செய்யாதே, செய்தாலும் ஓடிவந்து சொல்லிவிடு என சொல்லி அனுப்புவார் அவனை அனுப்பிவிட்டு ஏ கிறிஸ்துவே அவன் பாவங்களை மன்னிக்காமல் அங்கு என்ன செய்கின்றீர்? என ஆணையிடுவார், உடனே கிறிஸ்துவும் அவன் பாவங்களை மன்னித்தருள்வார் அப்படி அமெரிக்காவில் பாவமன்னிப்பு கோரிகொண்டிருக்கின்றார் இம்ரான் கான் பின்லேடனை நாமே பிடித்துகொடுத்தோம் என அவர் சொன்னது முதலாவது நேற்று அமெரிக்க காங்கிரஸ் […]

“ரூட்டு தல”

சென்னை பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் இரு குழுவாக மோதி வெட்டி கொண்டதில் 7 பேருக்கு படுகாயம் ஏற்பட்டு நிலமை இன்னும் சுமூகமாகவில்லை சென்னையின் தலைகுனிவாகவே அந்த சம்பவம் பார்க்கபடுகின்றது காவல்துறையின் விசாரணை கடும் இறுக்கமாக நடந்ததில் கோஷ்டி சண்டைக்கு காரணம் “ரூட்டு தல” பதவியும் அது தொடர்பான கோஷ்டி சண்டைகளும் என முதல் கட்ட தகவல் தெரிவிக்கின்றது இந்த “ரூட்டு தல” எனும் விஷயத்தை சொல்லிகொடுத்தது யார் தெரியுமா? ராஜராஜ சோழனிடம் தன் பூலோக இழந்த்தையும், அமெரிக்கா […]

மாநிலத்திற்கொரு சட்டமுள்ள நாடோ

இது ஒரே நாடு, சட்டங்கள் எல்லா இடத்திலும் ஒன்று போலத்தான் இருக்க வேண்டும் ஆனால் கர்நாடக குழப்பத்திற்கு ஒரு மாதிரி தீர்ப்பும், தமிழக குழப்பங்களுக்கு ஒரு மாதிரி தீர்ப்பும் நீதிமன்றங்கள் அளிப்பது மாநிலத்திற்கொரு சட்டமுள்ள நாடோ என அஞ்சதோன்றுகின்றது. கர்நாடகாவினை விட மிக பலவீனமான பெரும்பான்மை இழந்த அரசு தமிழகத்தில் நீடிக்கின்றது நிச்சயம் பாஜக அரசின் தயவு ஒன்றில்தான் அது நீடிக்கின்றது, சட்டபடியும் நியாயபடியும் அது நிலைபெற வேண்டிய ஆட்சி அல்ல‌ ஆனால் அதை செய்ய யார் […]

இம்ரான்கான் புலம்ப ஆரம்பித்திருக்கின்றார்

அமெரிக்கா சென்றிருக்கும் இம்ரான்கான் வெள்ளை மாளிகை முன் நின்று புலம்ப ஆரம்பித்திருக்கின்றார் அவர் புலம்பிய புலம்பலில் அவருக்கும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்புக்கும் உள்ள மோதல் உலகிற்கு தெரியவந்திருக்கின்றது முதன் முதலாக பாகிஸ்தானின் பிரதமர் ஒருவர் பின்லேடனை அமெரிக்காவிடம் காட்டி கொடுத்தது ஐ.எஸ்.ஐ என சொல்லியிருப்பது பலத்த அதிர்வுகளை அமெரிக்காவுக்கு வெளியே ஏற்படுத்தியிருகின்றது அதாவது சி.ஐ.ஏவுக்கு முழு ஜாதகமும் தெரியும் என்பதால் அவர்கள் “ஆஹான்” என்பதோடு நிறுத்தி கொண்டார்கள், மற்ற நாடுகள் வித்தியாசமாக பார்க்கின்றன‌ விஷயம் இத்தோடு முடியாது, […]

அப்படி என்ன விவாதித்தார்?

மோடியுடன் முக்கிய விஷயம் குறித்து விவாதித்தேன் : வைகோ அப்படி என்ன விவாதித்தார்? நமக்கு பாஜக பற்றி நன்கு தெரிந்ததால் சொல்கின்றோம், விரைவில் ராஜபக்சே டெல்லிவந்து மோடியுடன் கைகுலுக்கலாம், அதனை தள்ளி இருந்து வைகோ பார்த்து தூணில் முட்டி கொள்ளலாம்

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications