பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

லசித் மலிங்கா நாளையுடன் ஓய்வு பெறுகின்றார்

லசித் மலிங்கா நாளையுடன் ஓய்வு பெறுகின்றார் இலங்கையில் எத்தனை பந்துவீச்சாளர் வந்தாலும் அந்த அற்புதமான பவுலரை மறக்க முடியாது அவர் சமிந்தா வாஸ் மிக துல்லியமான பந்துவீச்சினை அவரிடம்தான் காணமுடியும். ஒரு மில்லிமீட்டர் கூட பிசகாத பந்துவீச்சு அது அவர் கால்ராசிகாரரும் கூட, அவர் களமிறங்கிய பின்பே இலங்கை அணிக்கு யாரெல்லாமோ வந்தார்கள், அந்த அணி உலகின் மிகசிறந்த அணியாக இருந்தது ஆட்டத்தின் தொடக்க ஓவரை வாஸ்தான் வீசுவார், அவர் அதிக உயரமுமல்ல ஆஜானபாகுவான தோற்றமும் அல்ல‌ […]

கலைஞர் செத்தாலும் விடுவதாக இல்லை

அந்த கலைஞர் செத்தாலும் விடுவதாக இல்லை நெல்லையில் அன்று நடந்த போலீஸ் தடியடிக்கும் 17 பேர் சாவுக்கும் கலைஞரே காரணம் என கிளம்பிவிட்டார்கள். அதில் நடந்தது என்ன? 1995களில் கலைஞரை எதிர்த்து ஏகபட்ட சாதி சங்கங்கள் உருவாயின அல்லது உருவாக்கபட்டன‌ அப்படி உருவாக்கபட்டவர்தான் கிருஷ்ணசாமி, ஆரம்பத்தில் சில தேர்தல் முடிவுகளை கூட அவர் நிர்மானிக்கும் சக்தியாய் இருந்தார், மறுக்க முடியாது. அப்படிபட்ட கிருஷ்ணசாமி என்பவர் திடீரென தான் தலித் மக்களை காக்க வந்தவன் என்றார், மாஞ்சோலை மக்களுக்கு […]

அவர் எழுப்பியிருக்கும் குரல் நியாயமானது

பாராளுமன்றத்தில் அர்த்தமுள்ள விவாதங்களை சொன்னவர் அண்ணா, அவரின் கேள்விகள் அன்றெல்லாம் பலத்த அதிர்வுகளை கொடுத்தன‌ அவர் கேட்ட கேள்விகள் இப்படித்தான் இருந்தன‌ மாநிலத்தின் குறைவான வருமானங்களை தரகூடிய மிக சிறிய துறைகள்தான் மாநில நிதிக்கு ஆதாரம். துறைமுகம், சுரங்கம், விமான நிலையம், போக்குவரத்து உட்பட 14 மகா முக்கிய நிர்வாகம் மத்திய அரசிடமே உள்ளது இதில் இருந்து மாநிலங்களுக்குரிய நிதியினை சரியாக தருவதுமில்லை, இது திருத்தபட வேண்டும் அந்நாளில் மாபெரும் அதிர்வுகளை அந்த வாதம் ஏற்படுத்தியது அண்ணா […]

பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்கடா போக்கற்ற பசங்களா

இப்படி இரு கதை சுற்றிகொண்டிருக்கின்றது, ஈழ சிக்கலை அறிந்தவருக்கு தெரியும் இதெல்லாம் மாபெரும் பொய் இலங்கையில் ஆயுதபோராட்டம் 1975க்கு பின்புதான் வந்தது, அதுவும் குட்டிமணி எல்லாம் போராட வந்தது 1977களில் அப்பொழுது அவர்கள் அவ்வளவு பிரபலமில்லை, 1982ல் பிடிபட்ட குட்டிமணி கோஷ்டி வெலிக்கடை சிறையிலே கொல்லபட்டது கலைஞர் அரசு 1975லே டிஸ்மிஸ் செய்யபட்டது, அதன் பின் அவர் முதல்வரானது 1987ல் அப்பொழுது அமைதிபடை காலம் வந்தது, அவர்தான் அதை திரும்பபெற்றார் விபிசிங் மூலமாக‌ ஆக 1975ல் பதவியினை […]

ஜீயர் தன் வார்த்தைகளை திருத்திகொள்ள வேண்டும்

இஸ்லாமியர் ஆட்சியில் அவர்களுக்கு பயந்து அத்திவரதர் சிலை நீருக்குள் மூழ்கவைக்கபட்டது என விவகாரத்தை தொடங்கிவிட்டார் ஜீயர் விஷயம் வில்லங்கமாகின்றது, இஸ்லாமியர் என்ன கொள்ளைக்காரர்களா என ஒரு கூட்டம் பொங்குகின்றது இஸ்லாமியர் என்றாலே கொடூரமானவர்கள் என்றும் கொள்ளை அடிப்பவர்கள் என்றும் ஆலயங்களை நொறுக்கி தீக்கிரையாக்குவார்கள் என்றும் ஏகபட்ட பேர் சொல்லிகொண்டிருக்கின்றார்கள் உண்மை அது அல்ல, அக்காலத்தில் மதகுருக்களின் மறைமுக ஆட்சியில் ஆலயமே செல்வங்களின் பொக்கிஷங்களின் கஜானாவாக இருந்தது ஆலயங்களை உடைத்து புதையலை தேடுவது அக்கால வழக்கம், சாலமோன் அரசனின் […]

கப்பல் படலம் முடிந்து , பணய கைதிகள் படலம் தொடர்கின்றது

இப்போதைக்கு சுவாரஸ்யமான விஷயம் ஆளாளுக்கு கப்பலை பிடித்து வைத்து கொண்டு பிரிட்டனும் ஈரானும் ஆடும் ஆட்டம்தான் ஆட்டம் கிட்டதட்ட முதல் சுற்று முடிந்து இருவரும் களைத்து மல்லாக்க கிடக்கின்றார்கள் என்ன நடந்தது முதல் சுற்றில்? பிரிட்டனுக்கு இது பெரும் அவமானம் சந்தேகமில்லை, ஆனால் அமெரிக்காவும் வரிந்துகட்டி வரவில்லை, அதிரடியாக கப்பலை விடுவிக்க நடந்த லண்டன் கூட்டம் முடிவு அறிவிக்கபடாமல் முடிந்தது, ஈரானும் அசைவதாக தெரியவில்லை ஏன் பிரிட்டன் நடவடிக்கை எடுக்கவில்லை? அங்குதான் இருக்கின்றது பிரிட்டனின் வியாபார கணக்கு, […]

கள்ளகாதலனே எங்காவது ஓடி உயிரை காப்பாற்றிகொள்..

சென்னையில் கள்ளகாதலன் மனைவியுடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண் கைது வழக்கமாக கள்ளகாதலுடன் சேர்ந்துதான் கணவனை கொல்வார்கள், பெரும் புரட்சியின் முதல்படியாக கள்ளகாதலன் மனைவியே கொலைக்கு துணை சென்றிருகின்றாள் அந்த பெண்களுக்குள்எவ்வளவு அழகான புரிந்துணர்வு? இவன் போன பிறவியில் கோவலனாக இருந்திருப்பானோ என்னவோ? இரு பெண்கள் வெற்றிகரமாக ராக்கெட் செலுத்தியிருக்கும் நாட்டில், இரு பெண்கள் சேர்ந்து ஒருவனை கொலைசெய்திருக்கின்றார்கள் ஆண்கள் எல்லாம் இனி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் வழக்கமாக அடுத்த ஆண்களிடம் பேசாதே என மிரட்டுவதை போல […]

அந்த கோஷ்டி சொன்னால் சத்தம் உரக்க கேட்கும்

வைகை ஆற்றில் அந்த கோஷ்டி ஏதோ செய்ய போகின்றதாம், உடனே இந்த கோஷ்டியும் ஏய் வைகையினை காக்க போகின்றோம் என கிளம்பிவிட்டது இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் வைகை நதியினையே காணவில்லை, மணல் கூட இல்லை இது வைகை நதி என அறிவிப்பு பலகை மட்டும் இல்லை என்றால் அப்படி ஒரு நதி இருப்பதே இப்போதைக்கு தெரியாது வறண்ட ஆற்றில் என்ன செய்ய போகின்றார்கள்? கிரிக்கெட்டோ கால்பந்தோ ஆடிவிட்டு வரலாம் அவ்வளவுதான். வைகை ஒன்றும் வடக்கத்தியாருடன் […]

ஹிஹிஹி பழசெல்லாம் எதுக்கு வைகோஜி, சரி கட்சிய மறுபடி எப்போ உடைப்பீங்க?

“வைகோ ஜி, இந்த கவர்மென்ட் எனக்கு மினிஸ்டர் போஸ்ட் தரலை, அதனால இவங்கள எவ்வளவு திட்டமுடியுமோ அவ்வளவு திட்டுங்க‌ அதுக்குத்தான் சாமி என்னை அனுப்பியிருக்காங்க.. வைகோஜி, அந்த ஈழவிவகாரம் இன படுகொலை எல்லாம் தாண்டி என்ன நீங்க சந்திச்சது ரொம்ப சந்தோஷம் அட நாம இரண்டுபேருமே அங்க ரகசியமா ஆடினவங்கதான, எல்லாம் முதலாளி உத்தரவு. ராஜிவ் கொலையில கூட நாம ரெண்டு பேரும்… ஹிஹிஹி பழசெல்லாம் எதுக்கு வைகோஜி, சரி கட்சிய மறுபடி எப்போ உடைப்பீங்க? இப்போதானே […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications