பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அச்சமூட்டும் நிகழ்வுகள் நடக்க தொடங்கியிருக்கின்றன

வளைகுடா நிலமைகள் அவ்வளவு நன்றாக இல்லை, லைபீரியா கப்பலை ஈரான் விடுவித்தாலும் பிரிட்டன் கப்பலை விடுவதாக இல்லை பிரிட்டன் தன் 3ம் போர்கப்பலை அனுப்பியிருக்கின்றது, அது பெரும் விமானம்தாங்கி கப்பல் அல்ல, நாசகாரி கப்பல் பெரும் கப்பல்கள் வந்தால் பிரிட்டன் படைகுவிப்பு என்ற பெயர் வந்துவிடு என்பதால் பிரிட்டன் மிக எச்சரிக்கையாக இது ஈரானுக்கு எதிராக அல்ல என திரும்ப திரும்ப சொல்கின்றது பின்பு ஏன் 3ம் கப்பல் வருகின்றது? பேரீட்சம் பழம் சுமக்கவா என கேட்டால் […]

சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்

திராவிடத்தை காக்க வந்தவரும், இந்தியா என ஒன்று இல்லை என ஒருகாலத்தில் சொன்னவரும், இந்து மதம் ஒழிக்கபடவேண்டியது என சொன்னவருமான அண்ணா எழுதிய நாடகம் “சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்” அதனை காண சென்றது இந்தியாவில் திராவிடன் இணையமுடியாது என சொன்ன பெரியார், இந்து மதத்தின் விரோதியான பெரியார் அந்த கணேசனின் நடிப்பில் சிவாஜியினை கண்டதாக அவனுக்கு சிவாஜி என்றே பெயரிட்டாராம் அந்த பெரியார். திராவிட நாடு மதமற்றது, இந்துக்களுக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை என்றவர்களும் அந்த […]

நகத்தை கூட நடிக்க வைத்த உன்னத நடிகன்

முகத்தை காட்டி நடிக்க தெரியாத நடிகர்கள் மத்தியில் தன் நகத்தை கூட நடிக்க வைத்த உன்னத நடிகன் நாடகத்தமிழுக்கு சர்வதேச புகழ்பெற்றுகொடுத்த பெரும் கலைஞன் அவர். நவரசம் மட்டுமல்ல ஆய கலைகள் 64க்கும் உருவம் கொடுத்து கண்ணில் நிறுத்திய நடிகன் அவர். 64 கலைகளையும் முகத்திலே காட்டினார். அவரின் காந்த பார்வையும், புன்னகைத்த வசீகர முகமும் எத்தனை எத்தனை மனிதர்களை உணர்வோடு காட்டிற்று, தெய்வத்தின் கருணையினையும் அம்முகமே அப்பழுக்கற்று காட்டியது. எந்த மன்னனும் கொடுக்காத கம்பீரத்தையும் அவன் […]

அதற்கு அழிவே இல்லை

கடல் கடந்து கிடப்பவர்களுக்கு ஒரிஜினல் சாம்பாரை கொடுத்தவர் அண்ணாச்சி ராஜகோபால். அந்த சரவணபவன் இல்லை என்றால் வெளிநாட்டுவாசிகள் பலருக்கு சாம்பார் என்பதே காணல் நீராக போயிருக்கும் அசைவ உணவினை கொடுக்க ஆயிரம் உணவங்கங்கள் உண்டு , ஆனால் பாரம்பரிய சுவையில் சைவ உணவினை கொடுக்க அவர்களை தவிர யாருமில்லை ராஜகோபால் என்பவரின் அருமை கடல் கடந்து நல்ல உணவுக்கு ஏங்கினால் தவிர புரியாது ருசிமிக்க சைவ உணவு வேண்டுமென்றால் அவர்களை தவிர‌யாருமில்லை. அந்த சாம்பாரும் இதர வகைகளும் […]

மானிட நலனுக்கானது அல்ல

ஒரு விஷயத்தை எம்மால் உணரமுடிகின்றது, அது இந்தியாவின் மொபைல் போன் கோபுரங்களுக்கானது இங்கே 8 மணிநேரம் சார்ஜ் நிற்கும் அதே போன் இந்தியாவில் 3 மணிநேரம் கூட தாக்குபிடிப்பதில்லை. இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் மின் கட்டமைப்பு வசதிகள் ஒன்றே, அமெரிக்கா போன்ற சில நாடுகள் வித்தியாசம் இந்தியாவில் இணைய வசதியினை தடுத்துவிட்டால் சார்ஜ் அதன் போக்கில் நிற்கின்றது, இணையத்தை இழுத்தால் சட்டென குறைகின்றது விஷயம் சொல்வது ஒன்றுதான் சக்திவாய்ந்த அலைகள் இந்தியாவில் பயன்படுத்தபடுகின்றன, அது செல்பேசியின் சக்தியினை சட்டென […]

சமையலும் சுவையாண உணவும் – யூ டியூப் சேனல்

சங்கத்திற்கு முதலில் பிடித்த விஷயம் குஷ்பு படம், அதன் பின்பு வாசிப்பும் உலக விஷயங்களை தேடி பிடித்தலும். வாசிப்பு அவ்வளவு சுகமான விஷயம், எவ்வளவும் வாசிக்கலாம். எழுத்து என்பது அந்த அளவு சுவாரஸ்யம் அல்ல‌ இதற்கு அடுத்து சங்கம் விரும்பும் விஷயம் சமையலும் சுவையாண உணவும் மானிட பிறவியில் அது கூட இல்லை என்றால் எப்படி? மனிதனுக்கும் விலங்குக்கும் என்ன வித்தியாசம், அட தெய்வங்களுக்கும் மனிதனுக்கும்தான் என்ன வித்தியாசம்? நல்ல புத்தகம் போல, சுகமான சிந்தனை போல, […]

அடித்து ஆட ஆர்மபித்துவிட்டது ஈரான்

அடித்து ஆட ஆர்மபித்துவிட்டது ஈரான், உண்மையில் அவர்கள் அதிரடிக்காரர்கள் ஈரானின் கப்பல் ஒன்றை பிரிட்டன் பிடித்துவைத்திருப்பது உலகறிந்தது, பனாமாவில் பதிவு செய்யபட்ட ஈரானிய கப்பல் அது. அதை பிடித்து வைத்து ஈரானை மிரட்டிகொண்டிருந்தது பிரிட்டன் பேசிபார்த்தது ஈரான், சமாதானத்துக்கு முழங்காலிடு என்றது ஈரான் சமாதானமா? உங்களுடனா? என முறைத்துவிட்டு சென்ற ஈரான் மிக துணிச்சலாக பிரிட்டனின் கப்பலை பிடித்து சென்றாயிற்று அமீரகத்திலிருந்து சவுதி கிளம்பிய பிரிட்டன் கப்பலை குறிவைத்து தூக்கிய ஈரான் நேற்று உலகை அதிர வைத்தது […]

பொய் ஒன்றே மூலதனம்

திமுகவினருக்கு அன்றிலிருந்தே பொய் ஒன்றே மூலதனம், ஆனால் அக்கால திமுகவினர் பொய்யினை பொருந்த சொல்வார்கள் அவர்கள் திறமை அப்படி இருந்தது இந்நாளைய திமுகவின் தலமையே உளறுகின்றது என்றால் அடிபொடிகள் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் கொஞ்சமும் வெட்கமின்றி ஒரு தரவும் உருப்படியின்றி அளந்துவிடுகின்றோமே, சிலர் மறித்துசொன்னால் என்னாகும் என்ற மான உணர்வெல்லாம் கொஞ்சமும் இல்லை இனமானம், அறிவு இன்னும் என்னவெல்லாம் சொல்வார்களோ அதை எல்லாம் கழற்றி வைத்துவிட்டுத்தான் பதிவிட வருவார்கள் போல, அல்லது நாம் என்ன சொன்னாலும் […]

நிலாவில் இதே ஜூலை 20ல் கால் வைத்தார்கள்

அதுவரை மானிட குலம் விண்வெளிக்கு பறந்ததில்லை, மனிதன் பறக்க ஆரம்பித்து 60 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் வளிமண்டலத்தை கூட அவனால் எட்டமுடியவில்லை ஹிட்லரின் உத்தரவுபடி ஏவுகனைகளுக்கான‌ இன்சினை வார்ன் பிரவுண் தயாரித்து அதனை சோதித்து கொண்டிருக்குந்த பொழுதே ஹிட்லரின் காலம் முடிந்தது ஹிட்லரின் விஞ்ஞானிகளை பங்குபோட்டு கொண்டனர் அமெரிக்காவும் ரஷ்யாவும், அதாவது பொது எதிரியினை ஒழித்தபின் அமெரிக்காவும் ரஷ்யாவும் எதிரியாயிருந்தன‌ இந்த விஞ்ஞானிகள் எல்லாம் போர்குற்றவாளிகள், சதாமின் கெமிக்கல் அலி தூக்கில் தொங்கியதை போல தொங்கியிருக்கவேண்டியவர்கள், ஆனால் வல்லரசுகள் […]

மாபெரும் கொடைவிழா “உலக மாதா” குஷ்புவிற்கு

இது ஆடி மாதமாம் திரும்பும் இடமெல்லாம் அம்மனுக்கு கொடை விழா, சுடலை மாட சாமிக்கு விழா இன்னும் தென்னக மாதா கோவில்கள் உட்பட ஏகபட்ட தெய்வங்களுக்கு விழா அவைகளுக்கென்ன சாதாரண தெய்வங்கள், எளிதாக விழா நடத்திவிடலாம் ஆனால் எங்கள் “உலக மாதா” குஷ்பு தேவதைக்கு திருவிழா நடத்துவது என்பது சாதாரணமா? நிலாவுக்கே சென்று பொங்கல் வைப்பது வரை ஏராளமான சம்பிரதாயங்கள் உண்டு. அதற்கு பல பில்லியன் டாலர்கள் தேவைபடும் பிரமாண்ட நிதி வேண்டும் இதனால் பில்கேட்ஸ், வாரன் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications