பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இதெல்லாம் ஒரு தொழிலா

முதல்படம் சீனாவின் நான் ஜிங் நகரில் பெரும் சாலையில் வைக்கபட்டிருக்கும் கூடைபந்து விளம்பரம் இரண்டாவது படம் அதை காப்பியடித்து நம்ம ஊர் இயக்குநர்கள் செய்திருக்கும் அப்பட்டமான விளம்பரம் பொதுவாக விஜய் ரசிகர்கள் பள்ளி மாணவர்கள் என்பதும் அவர்கள் பள்ளி புத்தகங்களை கூட சரியாக புரட்டாதவர்கள் என்பதும் இயக்குநர்கள் நம்பிக்கை அவ்வளவு அறிவு இருந்தால் ஏன் விஜய்படம் பார்க்க வருகின்றார்கள் என அவராக நினைத்து கொண்டு காப்பியடிப்பார் விஜயின் ரசிகர்களும் அந்த நம்பிக்கையினை அப்படியே காப்பாற்றுவார்கள் வழக்கமாக மேற்கு […]

அது சர்வ நிச்சய உண்மை

அது சர்வ நிச்சய உண்மை பெரியாரின் திருமணத்துக்கு முன்பே திராவிட கழகத்தில் சலசலப்புகள் இருந்தன, கண்ணதாசனே தன் வனவாசத்தில் பெரியாரின் கொடுமைகள் பற்றி கலைஞர் சொன்னதாக சில வரிகளை எழுதியிருந்தார் சுதந்திரம் நெருங்க நெருங்க அண்ணாவுக்கும் பெரியாருக்கும் கருத்து வேறுபாடுகள் விழுந்தன‌ சுதந்திர நாளை பெரியார் துக்கநாள் என சொல்ல அண்ணா இன்பநாள் என்றார் அந்த முரண்பாட்டு நடுவில் “அய்யா ஆணையிடுகின்றார் அண்ணா ஊளையிடுகின்றார்” என எழுதியவர் கலைஞர் மணியம்மை திருமணத்தை முன்னிட்டு அண்ணா கோஷ்டி கிளம்பியது […]

அதை எம்மிடம் எதிர்பார்க்காதீர்கள்

இப்பக்கம் அரசியல் , விளையாட்டு, சினிமா, இலக்கியம், விஞ்ஞானம், வரலாறு , நடப்பு செய்தி என எல்லாமும் போர்ஸ்ட் மார்டம் செய்யப்படும் ஒரு கட்சி , ஒரு தலைவன் அபிமானம் அப்படியெல்லாம் ஏதுமில்லை தலைவி குஷ்புவினை தவிர‌ பிடித்தவர்கள் வரலாம், இல்லையெனில் நடையினை கட்டலாம் மாறாக சங்கி, பாஜக அடிவருடி இன்னும் நயினாரிடம் பணம் வாங்கியவன் என சொல்பவன் எல்லாம் கிளம்பவும் உங்களுக்காகவும் நயினாருக்காவும் பாஜகவுக்காகவும் ஒரு பயலும் எழுதவில்லை,அது அவசியமுமில்லை நாம் எல்லாவற்றையும் எழுதுகின்றோம், அதை […]

ஒன்றுமே இல்லை என்பதுதான் சோகம்

இஸ்ரேல் அன்றிருந்தே வறண்ட பூமி, ஒரு காலத்தில் அங்கு பஞ்சம் வந்துதான் அவர்கள் எகிப்தெல்லாம் சென்று அடிமையாகியிருந்திருகின்றார்கள் அவர்கள் வரலாற்றில் பஞ்சம் அடிக்கடி எக்காலமும் உண்டு ஜோர்டான் ஆறு என்பதை தவிர வேறு ஆதாரமில்லை, அதுவும் சிரியா ஜோர்டான் என பல நாடுகளுக்கு பாத்தியபட்டது அவர்கள் கடல்நீரை சுத்திகரிப்பதில் அர்த்தமுண்டு ஆறுகளே இல்லா சவுதி அரேபியா செய்வதிலும் அர்த்தம் உண்டு தமிழக நிலை அப்படியா இருந்தது ஏரியும் கால்வாய்களும் குளங்களுமாக செழித்திருந்த பகுதி சென்னை, ஆங்கிலேயன் நீர்வழி […]

இன்றைய துளிகள் 19/06/2019

அவனே பேரரிஞன் கூத்தாடிகளை கலைஞர்கள் என அரவணைத்து அவர்களை வைத்து அரசியல் செய்த அண்ணாவினை விட‌ “டேய் கூத்தாடிக்கு மன்றம் வைக்காதே அது ஆபத்து.. அவனை அரசியலுக்கு இழுக்காதே” என பகிரங்கமாக எச்சரித்தானே,அந்த எம்.ஆர் ராதாவே அறிஞன் அவனே பேரரிஞன் அவனே திராவிட தலைவன் அவரு கடவுளரு..புரியூதா.. பெரியார் மண்ணுடோவ்.. திராவிடம் டோவ்… அடுத்தால் என்ன? ராஜராஜ சோழன் வெறும் மன்னன், ஆனால் தள்பதி பாகிஸ்தான் தீவிரவாதிய சுட்டுருக்கார், பேய் பிசாசு கூட சண்டை போட்டிருக்கார் அவரு […]

மத்திய உளவுத்துறை எச்சரிக்கை

தென் தமிழகத்தில் மிகப்பெரிய தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் – மத்திய உளவுத்துறை எச்சரிக்கை இது சாதாரண எச்சரிக்கை அல்ல, ரெட் அலர்ட் எனப்படும் மிக உச்சகட்ட எச்சரிக்கை அதிபயங்கர தாக்குதலை தமிழகத்தில் குறிப்பாக கொங்கு பகுதியில் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் எச்சரிக்கை சொல்கின்றது எனினும் மொத்த கவனத்தை அங்கே திருப்பிவிட்டு வேறு எங்காவது தாக்குதல் நடத்தும் சாத்தியம் இருப்பதால் அனைவரும் எச்சரிக்கையாக இருத்தல் நலம் இது பயமுறுத்தும் விஷயம் அல்ல என்றாலும் இப்படி ஒரு எச்சரிக்கை […]

அண்ணாச்சி நெசமாவா?

“அண்ணாச்சி தளபதி மட்டும் கோலாலம்பூர்க்கு வந்திருந்தாரு, அப்படி கொண்டாடியிருப்போம் ஆனா அவரு சிங்கப்பூருக்கு வந்துட்டு போயிட்டாரு டேய் அவர் படமெல்லாம் பார்த்தியா? ஆமா அண்ணாச்சி பறவைகள் கூட எல்லாம் படம் எடுத்தாரு, அவர் பாசக்கார மனுஷன் அண்ணாச்சி, இளகின மனசு, ரசனைக்காரரு, அவர் மனசு இருக்கே… டேய் அது எங்க எடுத்த படம்? சிங்கப்பூர்ல‌ உன் வாயில மண் அள்ளி போட‌ அண்ணாச்சி நான் செத்தாலும் திமுக கொடிதான் போடனும் வீட்ல சொல்லியாச்சி எப்போ தாலிகட்டும் போதே […]

தண்ணீர் லாரி வைத்திருப்பவன் மட்டும்தான் ஹீரோ

“யோவ் நல்லா கவனிச்சாச்சி, சென்னையில் இப்பொழுது டாக்டர், ஐடி , பொறியாளன், அரசியல்வாதி மகன் என யாருக்கும் மவுசு இல்லய்யா இன்றைக்கு சென்னையில் சொந்தமாக தண்ணீர் லாரி வைத்திருப்பவன் மட்டும்தான் ஹீரோ, அவனுக்கு செம்ம மாஸ்யா அதுக்குதான்யா இன்னையோட வேலைய விடபோறேன், ஒருதண்ணீர் லாரி வாங்கபோறேன், பூரா பொண்ணுங்களும் வரிசையா வந்து நிற்க போறாளுகய்யா, அடுத்தவாரமே கல்யாணம்” இப்படி சொல்லிவிட்டு தண்ணீர் லாரி வாங்க ஓடிவிட்டான் Senthil Kumar Krishnan, இதனை கேள்விபட்ட Kasi Lingam என்பவன் […]

ச்ச்ச்ச்சீ… த்த்த்தூ……..

தமிழ் தலைமகன் வள்ளுவனை பழிக்க இந்த கிழவன் யார்? நாலடியார் போன்ற தமிழ் நீதிநூல்களை பழிக்கும் அதிகாரத்தை இவனுக்கு யார் கொடுத்தது? பண்டைய தமிழ் செய்யுளின் அழகையும் உன்னத கருத்துக்களை பழித்த இவரா தமிழின வழிகாட்டி? தமிழில் என்ன உண்டு என கேட்டுவிட்ட பின் இந்த மனிதனுக்கு என்ன அறிவு இருக்கமுடியும்? இந்த அறிவுகெட்ட சிந்தனையால் என்ன மாற்றம் வந்துவிட முடியும்? அங்கிள் சைமன் கூட இவரைவிட சிறந்தவர் போல‌ இதுவரை தமிழகம் கண்ட முட்டாள்தனமான பேச்சின் […]

அடுத்து எந்த பழம் எந்த பழியினை சுமக்குமோ தெரியவில்லை

பீகாரில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்ததற்கு மகா நிச்சயமாக அரசுகளும் அவற்றின் மருத்துசிகிச்சை அலட்சியமே காரணம் எனும் நிலையில் லைச்சி பழங்களின் மேல் பழியினை சுமத்துகின்றார்கள் எல்லாம் லைச்சி பழங்கள் திரும்பி கேள்விகேட்காது எனும் தைரியம் உலகில் எல்லாநாடுகளிலும் லைச்சி பழங்கள் உண்டு, எல்லா நாட்டு குழந்தைகளும் அவற்றை உண்கின்றன‌ அந்நாட்டு குழந்தைகளுக்கு வராத சிக்கல் பீகாரிய குழந்தைகளுக்கு வந்துவிட்டதாம் அரசியல் அழிச்சாட்டியத்துக்கு பழி சுமக்கின்றன பழங்கள். அடுத்து எந்த பழம் எந்த பழியினை சுமக்குமோ தெரியவில்லை

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications