பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பப்ளிக் பப்ளிக்..ஸ்மைல்..ஸ்மைல்.

அந்த சுனந்தா புஷ்கர் எப்படி செத்தாங்க? சாதிக் பாட்சா எப்படி செத்தாரோ அப்படியேதான். உங்க முகத்த பார்த்தா அப்படி தெரியலியே உங்க முகத்தை பார்த்தாலும்தான் தெரியல.. இப்போ அவங்க செத்திருந்தா சங்கிங்க கொலைன்னு கிளம்பலாம், ஆனா அவங்க செத்தது நம்ம ஆட்சியில அதுனால வேற வழியில்லாம‌ சைலன்ட். சரி..சரி… பப்ளிக் பப்ளிக்..ஸ்மைல்..ஸ்மைல்..

வடக்கே எதுவும் நடந்துவிட கூடாது

வடக்கே எதுவும் நடந்துவிட கூடாது உடனே இதோ தமிழ்நாடு அதைவிட முன்னேறிற்று, பீகாரை , உபி, மபியினை விட முன்னேறிற்று, தமிழகம் அற்புதமான முன்னேற்ற மாநிலம் என ஒரு கோஷ்டி கிளம்புகின்றது தமிழகம் அவ்வளவு நல்ல மாநிலமா என்றால், ஆம் அதைவிட சிறந்தமாநிலத்தை காட்டு என சட்டையினை பிடிக்கின்றனர் நாமும் அவர்கள் சட்டையினை பிடித்து திருப்பி கேட்கலாம் “அந்த அற்புதமான மாநிலத்தை ஆளும் பழனிச்சாமி கோஷ்டியினை ஏண்டா கரித்து கொட்டுகின்றீர்கள்? அவர்கள் நிரந்தரமாக ஆள வழிவிட்டால்தான் என்ன? […]

அய்யா முதல் திராவிட முதல்வன் நான், அதை நினைத்தால்

“அய்யா, உங்கள் பெயரை சொன்னார்கள் தமிழை சொன்னார்கள். ஆனால் “அண்ணா வாழ்க..” என் பெயரை ஒருவனும் பார்லிமென்டில் சொல்லகாணோம் கண்டீரா? வேதனை அவமானம் வெட்கம்.. என்ன வெங்காயம் வெட்கம்? நான் கோடிகணக்கில சொத்துவிட்டுட்டு வந்துருக்கேன், நீ என்ன விட்டுட்டு வந்தே? அதான் ஒரு பயலும் உன்ன நினைக்கல வெங்காயம்.. அய்யா நானே கட்சி கண்டேன், நானே ஆட்சி கண்டேன் என்ன கண்டு என்ன கிழிச்சே? உன் பிள்ளைகள வச்சியா? உன் மருமகனை கட்சியில வச்சியா? ஒண்ணுமில்ல. இன்னைக்கும் […]

சந்தடி சாக்கில் நாமும் கொளுத்தி போடுவோம்

அடேய் எதையும் பொறுத்து கொள்ளலாம் அவரை வசனகர்த்தா என சொன்னால் மணிரத்னம் என்பவரே சுனாமி “கடல்” என பொங்கிவிடுவார். சரி சந்தடி சாக்கில் நாமும் கொளுத்தி போடுவோம்.. அந்த “காவிய தலைவன்” படத்திலும், “அங்காடி தெரு” படத்தில் கடை முதலாளி வடிவிலும், அந்த “கடல்” படத்தில் வில்லன் அர்ஜூன் பாத்திரத்திலும் நாடாரை இழிவுபடுத்திய ஜெயமோகனை தமிழக அரசே விடாதே….

மாபெரும் குடிநீர் தட்டுபாடு

மாபெரும் குடிநீர் தட்டுபாட்டை ஏதோ உட்கட்சி விவகாரம் போல கடந்து செல்ல நினைக்கின்றது அதிமுக அரசு அமைச்சர்கள் மற்றும் முதல்வரின் பேச்சுக்கள் அப்படித்தான் தெரிகின்றன‌ இது கடந்து செல்லும் விஷயமென அவர்கள் நினைத்தால் அவர்கள் அறியாமையினை நினைத்து கோபமே மிஞ்சும் பூசனிக்காயினை சோற்றில் மறைக்க முடியுமா? ஊர்வாயினை மூட முடியுமா ? என்பார்கள் அப்படி இதெல்லாம் மறைக்க கூடிய விஷயம் அல்ல, ஊருக்கு உண்மை தெரியாதா என்ன? ஆளும் கட்சி அப்படித்தான் மறைக்கும், ஆனால் எதிர்கட்சிகளின் பணி […]

குடிநீருக்காவது வருங்கால தலைமுறைக்கு ஏதாவது செய்ய முயற்சிப்போம்

சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடாம், வரும் செய்திகளை எல்லாம் அப்படியே நம்பமுடியாது, விசாரித்து பார்ப்போம் என்றால் நிலமை அப்படித்தான் கொடுமையாக இருக்கின்றது மகா ஆச்சரியமான விஷயம் அது ஒரு வருடம் மழை பொய்ததற்கே இவ்வளவு பெரும் நெருக்கடி என்றால் அது பெரும் அபாயத்தினை அறிவிக்கின்றது காரணம் விவசாயம் இல்லை, அது அழிந்துகிடக்கின்றது. இன்றைய தேதியில் மிக விரைவாக இந்த நீர் நெருக்கடி வருகிறதென்றால் சில் விஷயங்கள்தான் முதலில் நீர் நிலை பாதுகாப்பு அறவே இல்லை, எல்லாம் முள் […]

ஹாங்காங் போராட்டம்

ஹாங்காங் போராட்டம் சூடுபிடித்து 20 லட்சம் மக்கள் களத்தில் இருக்கின்றனர், உலகம் உன்னிப்பாக கவனிக்கின்றது இப்போது ஹாங்காங் சீனாவின் பகுதி என்றாலும் அது தன்னாட்சி பகுதி அங்கு அரசு ஒரு சட்டத்திருத்தம் செய்கின்றது அது என்னவென்றால் ஹாங்காங் வாசிகள் வெளிநாடுகளில் குற்றம் செய்தால் அவர்கள் எந்த நாட்டில் குற்றம் புரிந்தார்களோ அந்த நாட்டு சட்டபடி தண்டிக்கபட ஒப்புவிக்கபடுவார்கள். இதுதான் ஹாங்காங் வாசிகளின் கோபத்துக்கு காரணம், இச்சட்டம் தங்களை கைவிடுவதாகவும், இனி வெளிநாடுகளில் வரி விவகாரம் கூட தங்களை […]

அது பாராளுமன்றம்

அது பாராளுமன்றம், அது மதங்களை கொள்கைகளை மக்களின் சில நம்பிக்கைகளை கடந்து நாட்டு நலன் ஒன்றே, மக்களின் முன்னேற்றம் ஒன்றே பற்றி சிந்திக்க கூடியிருக்கும் இடம் இவர்கள் அம்பேத்கர் பெரியார் மார்க்ஸ் என கத்தியதும் பெரும் தவறு அவர்கள் அங்கு ஸ்ரீராம் என கத்தியதும் தவறு, புனிதமான பாராளுமன்றத்தை சில‌அடையாளமாக‌ கூடமாக மாற்ற முயல்வது தவறு,கண்டிக்க வேண்டியது. அது போராட வேண்டிய களம் அல்ல, அது நாட்டுக்கான விவாத கூடம். அவர்கள் “ஜெய் ஸ்ரீராம்” என கத்தினால் […]

பெரும் அழிச்சாட்டியம் செய்கின்றது ஊடகங்கள்

தமிழ்நாட்டிக்கு ஒரு சோகமான நேரமிது. என்கின்றன ஊடகங்கள். தமிழ்நாட்டின் தலைவிதியே 23ம் தேதிதான் தெரியுமாம் தமிழக மாபெரும் கொள்கைவாதிகளும், சிந்தனையாளர்களும் நாட்டையும் மக்களையும் பற்றி மட்டுமே சிந்திக்கும் அந்த கூட்டம் இரு பிரிவாக மோதிகொள்வது உலகையே வருத்ததிற்குள்ளாக்கிவிட்டது ஆம் மகாத்மா காந்தி வழி இந்திய தேசிய தியாகிகளான ராதாரவி,சரத், பாக்யராஜ் போன்றவர்களுக்கும், நேதாஜி வழியில் நாட்டிற்காய் போராடிய இந்த விஷால் என்பவருக்குமான கோஷ்டி சண்டை அது அந்த ஏழை தியாகிகளுக்கு ஒரு சங்கம் உண்டாம், அதில் தேர்தலும் […]

பெற்ற தாயே பிள்ளைகளை கொல்லும் சம்பவம்

பெற்ற தாயே பிள்ளைகளை கொல்லும் சம்பவம் தமிழ்நாட்டில் அதிகரித்துவருவது சோகம் அது நல்லதங்காள் காலத்திலே இருந்தது எனினும் அன்றெல்லாம் அதற்கு கொடும் வறுமை அன்றி வேறுகாரணமில்லை இன்றோ கள்ளக்காதல் விவகாரங்களே பெரும் சிக்கலாகின்றன‌ எதனையோ தேடி யாரிடமோ வகையாக சிக்கிவிடும் பெண்களுக்கு தாய்பாசம் விடைபெற்றுவிடுகின்றது தாங்கள் எதிர்பார்த்தது கிடைத்துவிட்டதாக கருதி முன் பெற்ற பிள்ளை இனி தேவையில்லை என நினைத்து கொன்றுவிடும் கலாச்சாரம் பெருகுகின்றது ஏதோ மயக்கத்திலும், அவன் மீது வந்த நம்பிக்கையிலும், புதுவாழ்வு பூரிப்பிலும் தாய்பாசம் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications