பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இவனுகளும் இவனுக பார்ப்பானிய எதிர்ப்பு புரட்சியும்

ராஜராஜ சோழன் பார்ப்பானுக்கு நிலமாக அளித்தான், அவன் அயோக்கியன் : கூவை கோஷ்டிகள் அவன் அளித்தானா இல்லையா என்பது வேறுவிஷயம் இப்பொழுது தஞ்சை பகுதி விவசாய நிலங்களில் எவ்வளவு பார்ப்பானிடம் உள்ளது? எவ்வளவு பார்ப்பானிய பண்ணைகள் இருக்கின்றன? கீழவெண்மணி கொடுமையினை நிகழ்த்திய நாயுடு ரெட்டி முதல் கபிஸ்தலம் பண்ணையார் மூப்பனார் வரை பார்ப்பானா? இல்லை டெல்டா மாவட்டத்தின் அரசியல், நிலபுல சக்திகள் எல்லாம் பார்ப்பானா? இப்பொழுது எந்த சாதி ஆதிக்கம் செலுத்துமோ அதைபற்றி மூச்சும் விட்டுவிட கூடாது […]

ரஞ்சித் கிடைச்சிட்டான் கச்சாமீ…

அந்த இந்திய பிக்கு பா.ரஞ்சித் என்பவரை எங்ககிட்ட கொடுத்திருங்க மியன்மார் முஸ்லீம் எல்லாம் கொல்ல வேண்டி இருக்கு இல்ல இல்ல அவன் எங்களுக்குத்தான் வேணும், இங்க தமிழரை எல்லாம் கொல்ல வேண்டி இருக்கு, அவன் கட்டாயம் வேணும் அதுவும் அனுராதாபுரத்துல ராஜராஜ சோழன் அடிச்ச அடிக்கு பழிவாங்க, ரஞ்சித பிக்கு எங்களுக்கு கட்டாயம் வேணும் அந்த சோழன் பர்மாவிலயும் கப்பல்ல‌ வந்து அடிச்சிருக்கான் அப்போ நாங்க பழிவாங்க வேண்டாமா? சரி சரி நாங்க 1950களில் தமிழர‌ அடிச்சோம், […]

தமிழினம் செய்த புண்ணியம்

தமிழினம் செய்த புண்ணியம் அக்கால மன்னர்கள் சில ஆலயங்களையும் இன்னும் பல விஷயங்களையும் செய்துவிட்டு சென்றார்கள் அவர்கள் அதை செய்திருக்காவிட்டால் என்னாகும்? நாமெல்லாம் அமேசான் காடுகள் பழங்குடியினர் போலவும், பெரியாரும் அண்ணாவும் அம்பேத்கருமே நம்மை ஆடை உடுத்தி பேசவைத்து முடிவெட்டி சவரம் செய்துவிட்டவர்கள் போலவும் இங்கு காட்சிகளை உருவாக்கியிருப்பார்கள் இதை எல்லாம் உணர்ந்துதான் தெய்வங்கள் ஆலயங்களை உருவாக்கி அமர்ந்திருகின்றன‌ அற்ப பதர் ரஞ்சித் , ஓசி தோசை மதிமாறன் போன்றோரை இன்றும் ஓடவிட்டு அடிக்கின்றார் மாமன்னன் ராஜராஜ […]

ராஜராஜன் என்ன சாதி

ராஜராஜன் கால கல்வெட்டு முழுக்க படித்தால் அவன் என்ன சாதி என்பதும் தெரியவில்லை அவன் காலத்தில் என்னென்ன சாதி இருந்தது என்பது பற்றி ஒரு குறிப்புமே இல்லை சோழன் என்ன? பண்டைய தமிழ் இலக்கியம் எதுவுமே சாதி பெருமை பேசவில்லை எந்த புலவனும் எந்த சாதியும் சேர்த்தவன் என்ற வரலாறு இல்லை அரசர்கள் சாதிக்காக சண்டையிட்டதாகவோ இல்லை நாட்டில் சாதிகலவரம் வந்ததாக தெரியவில்லை தொழில் செய்த அடிப்படையில் தொழில் சார்ந்த அடைமொழி இருந்திருக்கின்றது, மாறாக சாதி என்பது […]

ராஜராஜன் ஆட்சி மாபெரும் பொற்காலமே

ராஜராஜ சோழன் ஆட்சி ஒன்றும் பொற்காலம் அல்ல என்பவர்கள், உலகின் பொற்கால ஆட்சி என ஒன்றை காட்டட்டும். இவன் ஆட்சி பொற்காலம் என எதை 100% சொல்லமுடியும்? பொற்கால ஆட்சி என ஒன்று எங்காவது நடந்திருந்தால் அது ஏன் வீழ்ந்தது என்பதையும் சொல்லட்டும் உண்மையில் உலகில் 100% சரியான ஆட்சி என எதுவுமில்லை, இன்றும் சிக்கல்கள் குறைந்த நாடு உண்டே தவிர சிக்கலே இல்லா நாடு என எதை சொல்லமுடியும்? விட்டுகொடுத்து சென்றால்தான் குடும்பம், நாடும் சமூகமும் […]

அனைவருக்கும் நன்றி

மகனின் பிறந்தநாளுக்கு வாழ்த்தும் ஆசியும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி நமது பட்டியலில் எல்லா வயது அன்பர்களும் உண்டு, அதில் வாழ்த்தியோருக்கு நன்றி, ஆசீர்வாதம் வழங்கிய பெரியவர்களுக்கு சிரம் தாழ்ந்த‌ வணக்கம். உங்கள் வாழ்த்துக்களில் அவன் உயரட்டும், தகப்பன் போல அல்லாமல் அவனாவது உருப்படட்டும் அவனது பெயர் “Miguel Shimon” என்பது, “Alphonse Rajan” என்பது தந்தையின் பெயர். நான் அவனை அந்த பெயரில்தான் அழைத்து கொண்டிருக்கின்றேன் மறுபடியும் அனைவருக்கும் நன்றி… அவனுக்கு விவரம் தெரியவரும்பொழுது உங்கள் எல்லோரையும் […]

“வாக்கிங்”

இப்பொழுதெல்லாம் எது அதிகரிக்கின்றதோ இல்லையோ ஆளாளுக்கு நடப்பது அதிகரித்துவிட்டது, காலையோ மாலையோ யாரை அழைத்தாலும் “வாக்கிங்” என சொல்வது வாடிக்கையாகிவிட்டது சிலநாட்டு அரசாங்கங்கள் அதை வலியுறுத்துகின்றன, மக்கள் மேல் அவ்வளவு அக்கறை பயமுறுத்தும் நோய்கள், உடல்பருமன் சிக்கல்கள் இன்னும் ஏகபட்ட அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி ஒரு கூட்டமும், எல்லோரும் செல்வது போல் நாமும் செல்லவேண்டும் என்றொரு கூட்டமும் செல்கின்றது வீட்டில் கணவனுக்கோ மனைவிக்கோ கொஞ்சநேரமாவது விடுதலை வேண்டாமா? என கருதி செல்வோரும் உண்டு நாய்குட்டி வாக்கிங் எல்லாம் நாய்க்காக […]

ஜூலியன் அசாஞ்சே

ஜூலியன் அசாஞ்சே அமெரிக்காவுக்கு அனுப்பபடுகின்றார், பிரிட்டன் ஒப்புகொண்டாயிற்று அமெரிக்காவின் ரகசியங்களை இணையம் இன்னும் பல வழிகளில் திருடினார் என குற்றம்சாட்டபட்டு அமெரிக்காவால் விரட்டபட்டு எங்கெல்லாமோ இருந்து தில்லாக சவால்விட்டவர் அசாஞ்சே அதுவும் லண்டன் ஈக்வெடார் தூதரகத்திலே இருந்துகொண்டு சவால் விட்டவர் பின்பு அவருக்கும் ஈக்வெடார் அதிபருக்கும் மோதிகொள்ள பிர்ட்டன் அமுக்கிவிட்டது இப்பொழுது அவர் அமெரிக்காவுக்கு தூக்கி செல்லபடுகின்றார் செய்தி சொல்வது என்ன தெரியுமா? “கடைசியா முகம் பார்க்க விரும்புபவர்கள் பார்த்து கொள்ளவும்” ஆம் அமெரிக்காவுக்கு அன்னார் அவ்வளவு […]

எல்லா சாதிக்குமாகவே அவர்கள் ஆலயம் அமைத்தார்கள்

இந்து ஆலயங்களை பற்றி சொன்னால் அதில் தாழ்ந்த சாதி நுழைய அனுமதி இல்லை தெரியுமா? அதெல்லாம் பிராமணாள் வாக்கிங் ஏரியா என பல குரல்கள் முதலில் எல்லா ஆலயங்களும் எல்லா சாதியும் நுழையும் இடமாகத்தான் இருந்தது பின்னாளில் சில ஆலயங்களில் மட்டும் அக்கொடுமை நடந்தது, ஆனால் அதை எதிர்த்து ஆலய நுழைவு செய்ததும் இந்துக்களே மதுரையில் வைத்தியநாத அய்யரும், முத்துராமலிங்க தேவரும் அதை செய்தனர் பெரியார் மதுரை பக்கம் வராமல் ஏற்கனவே போராட்டம் நடந்த வைக்கம் பக்கம் […]

சே குவேரா

இந்த உலகம் மகா சுயநலமானது, போராட வருபவர்கள் கூட தன் இனம், தன் மதம், தன் மொழி, தன் நாடு என்றுதான் போராட வருவார்கள். அப்படித்தான் பல புகழ்பெற்ற போராளிகளை உலகம் கண்டிருக்கின்றது, அதாவது கலைஞரின் வசனத்தில் சொல்வதென்றால் “அந்த பொதுநலத்திலே சுயநலமும் கலந்திருக்கின்றது” மறுக்க முடியாது. எந்த போராளியும் இதற்கு விதிவிலக்கு அல்ல ஒரே ஒருவனை தவிர‌ வரலாற்றில் முதலும், கடைசியுமாக மனித அடக்குமுறைகு எதிராக, ஒருவன் நாடு கடந்து, எல்லை கடந்து, போராடும் மக்களுக்காக […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications