பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நாட்டிய தாரகை பத்மினி

அந்த கேரள‌ சகோதரிகள் மூவருமே பரதநாட்டியத்தை கசடற ஆட கற்றவர்கள், கேரளம் அன்று திருவிதாங்கூர் சமஸ்தானம், அந்த திருவனந்தபுரத்தில் மன்னரின் மாளிகை உட்பட பல முக்கிய இடங்களில் அவர்கள் நடனம் அரங்கேறியது அதில் பத்மினி செல்லமாக பப்பி, அவரின் மாமா ஒருவர் அவரை தத்தெடுத்திருந்தார், அவர் பெரும் பணக்காரர் என்பதால் அன்றே மும்பை சென்னை என அவர்கள் சுற்றி கொண்டிருந்ததால் மும்பையில் 14 வயதில் இந்தி சினிமாவிலும் அந்த பெண் நடித்திருந்தாள் அந்த சகோதரிகளின் நடன நிகழ்ச்சி […]

அவர்கள் தமிழர்கள் என கிளம்புவர்கள் என்ன ரகம்?

இந்தியாவில் பயிற்சி பெற்ற போராளிகுழுக்கள் ஒவ்வொன்றிற்கும் ஒருவித சிறப்பு பயிற்சிக்களை அளித்திருந்தது இந்தியா, அதாவது டாங்கி படை எதிர்ப்பு ஒன்றிற்கு, கப்பல் படை எதிர்ப்பு ஒன்றிற்கு, கண்ணிவெடி நடவடிக்கைகளுக்கு ஒன்று என கொடுத்திருந்தது எல்லா குழுக்களும் களத்தில் இருந்தவரை சிங்கள ராணுவம் வடக்கில் நடமாட கூட முடியவில்லை, காரணம் பல குழுக்கள் பலமுனை தாக்குதல்கள், சிங்களம் சுத்தமாக தளர்ந்திருந்தது. இனி தமிழருக்கு ஏதும் உரிமை கொடுக்காமல் சாத்தியமில்லை என சிங்கள உச்சபீடம் கதறிகொண்டிருந்தது. ஆனால் சக குழுக்களை, […]

முழுக்க முழுக்க அரசியல்

முன்பு கிறிஸ்தவ ஆலயங்களில் லத்தீன் ஆங்கிலம் தமிழ் பிரெஞ்சு டச்சு என பலமொழிகள் இருந்தன, திராவிட சிகாமணிகள் பார்த்து கொண்டே இருந்தன‌ இஸ்லாமிய சமூகத்தில் உருது, அரபி, தமிழ், ஆங்கிலம் என பல மொழிகள் இருந்தது, திராவிட கும்பல் மவுனமாக ரசித்தது ஏன் திமுகவிலே தெலுங்கு, தமிழ், ஆங்கிலம் என மும்மொழி கொள்கை இருந்தது வெளியே தமிழும் வீட்டுக்குள் தெலுங்கும் பத்திரிகைகளுக்கு ஆங்கிலமுமாக அவர்கள் எழுதிகொண்டிருந்தார்கள் சென்னை பகுதி திமுக பிரபலங்களுக்கு தமிழ் தெலுங்கு ஆங்கிலம் என […]

திமுக என்பது நல்ல சிந்தனையாளர்களின் சிறைகூடம்

ஏன் நீ திராவிடவாதி ஆகவில்லை, முன்பு ஏன் எழுதினாய் என்றால் விஷயம் இதுதான் நாம் புலிகளின் அட்டகாசத்தையும் முன்பு திமுக அவர்களுக்கு செய்த உதவியினையுமே சொன்னோம் திராவிட திமுக சித்தாந்தம் மிக குறுகியது, அதில் கலந்துவிட்டால் தமிழ், தமிழகம் தமிழக அரசியல் திராவிடம் இந்த குறுகிய வட்டத்தில் சிக்கி கொள்வீர்கள் அது மலைமேல் ஏறி உலகத்தை பார் என காட்டாது, மாறாக அய்யகோ ஆபத்து வளையில் பதுங்கு என்றுதான் பயமுறுத்தும் யாரையாவது பார்த்து சினேகமாக புன்னகைத்தால் அய்யகோ […]

செய்தி சொல்வதென்ன?

சீனா இலங்கையில் கால்பதிக்கும் நேரம், இது ஒன்றும் புதிதல்ல என வரலாற்று உண்மைகளை அள்ளிவிடுகின்றன பல பத்திரிகைகள் அதன் பின்னணியில் சீனா இருக்கின்றதா இல்லை இலங்கைஇருக்கின்றதா என்றால் நிச்சயம் சீனா இருக்கலாம் செய்தி சொல்வதென்ன? அதற்கு முன் வரலாற்றையும் பார்த்துவிடலாம் , தமிழன் மட்டுமே கப்பல் செய்தான், தமிழன் மட்டுமே கப்பல் படை வைத்திருந்தான் என்பதெல்லாம் வடிகட்டிய பொய், மேடைக்க்கான அரசியல் பொய் உண்மையில் கடல் அருகே இருந்த‌ எல்லா இனமும் கப்பல் வைத்திருந்தன, சோழனுக்கு 1000 […]

எரித்தியா என்றொரு ஆப்ரிக்கா தேசம்

எரித்தியா என்றொரு ஆப்ரிக்கா தேசம் உண்டு அது எத்தியோப்பியா எனும் தரித்திர தேசத்தில் இருந்து பிரிந்தது எரித்தியா என்பது தமிழன் பூமி என்றும், அன்று சிகப்பு நிற கடல்பாசி கொண்ட நாடு என்றும் அதனால் எரி திரை என அழைக்கபட்டு எரித்தியா ஆனாது என்றும் சில ஆய்வுகள் உண்டு இந்த தமிழ் ஆய்வாளர்களுக்கு உலகம் என்ன? அண்ட சராசரம் எல்லாமே தமிழனுக்குத்தான் இவர்கள் இப்படி சொன்னதால் என்னவோ அவர்களுக்கும் ஈழபோராட்டத்துக்குமான தொடர்பு அதிகம் புலிகளை போலவே எரித்திய […]

எஸ்பி பாலசுப்பிரமணியம்

அக்கால கட்டத்தில் அப்படி ஒரு குரலை தேடிகொண்டிருந்தார்கள், சீர்காழி போல வெண்கல குரலும் அல்லாமல், ஸ்ரீனிவாஸ் போல புல்லாங்குழல் குரலும் அல்லாமல் இடைபட்ட குரலை தேடிகொண்டிருந்தார்கள் அக்காலம் ராமசந்திரன், சிவாஜி கணேசன் போன்றோர் உச்சத்தில் இருந்தாலும் சில இளைஞர்கள் வந்துகொண்டிருந்த காலமது, அவர்களுக்காக தேடிகொண்டிருந்தார்கள். அப்பக்கமோ அந்த இளைஞன் பொறியில் படிப்பினை பாதியில் விட்டுவிட்டு பட்டபடிப்பில் ஓப்பேற்றிகொண்டே இசைகுழுக்களில் பாடிகொண்டிருந்தான். மிக திறமையான பாடகன் அன்றே சுசீலாவோடு சில மேடைகளில் பாடும் அளவு திறமை இருந்தது திரையுலகின் […]

சூரியநாராயண சாஸ்திரிகள்

அவர் பெயர் சூரியநாராயண சாஸ்திரிகள் ஆம் அவர் ஒரு பிராமணர், சுத்தமான ஆச்சாரியமான பிராமணர் தனிதமிழ் இயக்கம், தமிழ்மொழி மேலான அபிமானங்கள் பெருகிய 1900களில் அவரின் தமிழ்பற்று சிலாகிக்க கூடியது நிச்சயம் தமிழில் மறுமலர்ச்சி உ.வே சாமிநாதய்யர் காகித ஏட்டுக்கு ஓலைசுவடியினை மாற்றியபொழுது வந்தது. கல்வி முறை கொஞ்சம் வளர ஆரம்பித்த காலத்தில் சற்றும் சளைக்காமல் தமிழகமும் வாசிப்பு வழக்கத்தில் இறங்கியது பெரியார் ஈரோட்டு சந்தையில் மஞ்சள் மண்டி நடத்தும் முன்பே இங்கு தமிழுக்கான எழுச்சி இருந்தது, […]

எல்லாம் பணம் மற்றும் வியாபாரம்

முக ஸ்டாலின் நடத்தும் பள்ளியில் இந்தி இருக்கலாம், துரைமுருகன் பள்ளியில் இந்தி இருக்கலாம் காரணம் அப்பள்ளிக்கான் கல்வி பணக்காரர்கள் படிப்பாம், இந்தி இருக்கலமாம் ஆனால் ஏழை மாணவர்கள் படிக்கு அரசு பள்ளிகளில் இந்தி இருக்கவே கூடாதாம்.. 1967ல் ஆட்சிக்கு வந்த திமுக அனைத்து பள்ளிகள் அதாவது அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10 வகுப்பு வரை தமிழ்மொழி கல்வி கட்டாயம் என சட்டம் இயற்றாதது ஏன்? பெயர் பலகை முதல் வியாபார நிறுவணங்கள் தமிழில் பெயர் வைக்க […]

அந்த அபூர்வ பிறப்பின் பிறந்த நாள் இன்று

வாழ்வில் ஒருவன் தலைவிதிபடியே அவனுக்கான சூழல் அமையும், ஜாதகம் அல்லது விதி என்பது அதுதான் என்பார்கள் ஞானிகள் பந்தயத்தில் வேகமாக ஓடுவபவனே வெற்றிபெறுவான் என்பதும், புத்திசாலியே வெல்வான் என்பதெல்லாம் அல்ல விஷயம் வாய்ப்பும் சூழலும் ஒருவனுக்கு சரியாக அமைய வேண்டும் அது கலைஞர் என்பவருக்கு அட்டகாசமாக அமைந்தது, இயல்பாகவே எதை செய்தாலும் முழு கவனத்துடனும் அழகுடனும் செய்யும் அவருக்கு காலமும் பல வழிகளை அமைத்து கொடுத்தது பெரியார் திராவிட கழகம் நடத்தி பின் மணியம்மையினை மணந்தது முதல்படி, […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications