பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வயது ஏற ஏற

வயது ஏற ஏற பல கவலைகள் அதிகரிக்கின்றன, அதில் உடல்நலம் என்பது ஒருவகை என்றால் சில முதியோர்களை பார்க்கும் பொழுது இன்னும் கவலை அதிகரிக்கின்றது உடல் நோய்களை விடுங்கள், அதைவிட முக்கியம் மனநலம் குறிப்பாக‌ ஞாபக சக்தி மங்குவதால் வரும் பாதிப்பு பல மனிதர்களை பார்க்கின்றேன் இளம் காலத்தில் மிடுக்கான காவல் அதிகாரிகளாகவும், பேராசியர்களாகவும் வலம் வந்தவர்கள் அவர்கள் ஒரு நூலகம் அளவுக்கு நினைவு சக்தி கொண்டிருந்தவர்கள், எங்கிருக்கின்றோம் என தெரியாத அளவு ஒடுங்கி அமரும் காட்சிகள் […]

நாணத்தால் தேசம் தலைகுனிகின்றது

ஆயிரம் அரசியல் இருக்கட்டும் ஆனால் ராஜிவின் மரணத்தை இங்கு கொஞ்சமும் கொச்சைபடுத்த முடியாது நிச்சயம் இலங்கை பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டி இந்நாடு பாதுகாப்பாக இருக்கவே அவர் விழைந்தார், ஒரு படுபயங்கர தீவிரவாத இயக்கம் நிச்சயம் இந்திய இறையாண்மைக்கு சவால்விடும் என மிக அணுக்கமாக கணித்திருந்தார் இந்தியாவுக்கு ராஜிவ் காட்டிய வழிபெரிது இன்றைய கணிணி இந்தியாவினை அன்றே கனவு கண்டவர் அவர், அதுதான் டிஜிட்டல் இந்தியா என இவர்களால் சொல்லபடுகின்றது ஈழவிவகாரத்தில் வாஜ்பாய் என்ன மோடி கூட […]

உலக அளவில் அது அணல் வீசுகின்றது

ஒரு விஷயத்தை நீங்கள் பார்த்துவிட்டு கடந்திருப்பீர்கள், இங்கு பெட்டி செய்தியாக வந்திருக்கும் ஆனால் உலக அளவில் அது அணல் வீசுகின்றது அதாவது அமெரிக்க விமானம் ஆற்றில் விழுந்தது ஆனால் பயணிகள் எல்லோரும் காப்பாற்றபட்டனர் என விஷயம் செய்தியாக முடிந்திருக்கலாம் ஆனால் விவகாரம் சர்ச்சையானது, ஆம் சர்வதேச ஊடகங்கள் விஷயத்தை கிண்டுகின்றது அமெரிக்கா நெளிகின்றது அதாவது கியூபா அருகே குமாண்டனாமோ எனும் தீவு உள்ளது, அதில் அமெரிக்க கியூப ஒப்பந்தபடி அமெரிக்கா பலத்த சிறையினை கட்டி இருக்கின்றது கியூபாவும் […]

வருடா வருடம் சுஜாதா விருது வழங்கும் மனுஷ்

சுஜாதா ஆதிக்கசாதி இந்துத்வ எழுத்தாளர் என திமுகவின் அடிமைகள் பல பொங்குகின்றன‌ ஆனால் அவை திமுகவின் ஆஸ்தான இம்சை கவிஞன் மனுஷ் கொண்டாடும் சுஜாதாவினை, ஆம் வருடா வருடம் சுஜாதா விருது வழங்கும் மனுஷ் என்பவரை பற்றி சத்தமே இல்லை மனுஷ் என்பவர் தன்னை உருவாக்கியது சுஜாதா என பல இடங்களில் சொல்லியிருக்கின்றார், தன்னை பின்னாளில் காத்தது திமுக ஆனால் உருவாக்கியது சுஜாதா என்பதே அவரின் வாக்குமூலம் ஆக திமுக உபிக்கள் என்ன திட்டத்தில் இருக்கின்றார்கள் என்பது […]

யுனெஸ்கோ என்றைக்கு பெரியாரை பார்த்தது?

யுனெஸ்கோ என்றைக்கு பெரியாரை பார்த்தது? இவர்களாக ஏதாவது எழுதிகொள்வது அதில் சம்பாதித்தும் கொள்வது.. இந்த உலகம் மிக உன்னிப்பாக பலரை கவனிக்கும் அதுவும் சோவியத் யூனியன் போன்றவை உலகம் முழுக்க மானிடநேயத்தை தேடியவர்களை உண்மையான ஏழை போராளிகளை தேடி தேடி கவுரவித்தது சோவியத் பார்வையில் காமராஜர் தெரிந்தார், ஜெய்காந்தன் தெரிந்தார் பெரியார் என்பவரை அந்த பாட்டாளிகளின் நாடு கண்டுகொள்ளவே இல்லை ஏன்? சீனா கியூபா வியட்நாம் வடகொரியா இலங்கை என உலகில் எங்கு சமத்துவ போராட்டம் வந்தாலும் […]

பார்க்கலாம்…

இந்திய உளவுதுறை மிக பெரும் முடிவோடு களமிறங்கிவிட்டது காசர்கோடு மற்றும் கோவையில் கைது செய்யபட்ட நபர்களின் வாக்குமூலத்தின்படி சவுதி அரேபியாவில் மிகபெரும் தீவிரவாதி இருவரை கைதுசெய்துவிட்டது அதாவது இந்தியா கொடுத்த அழுத்ததில் அவர்கள் கைது செய்யபட்டிருகின்றார்கள், இதில் என்ன சிக்கல் என்றால் கைது செய்யபட்ட இருவரும் இலங்கையர்கள் அதில் ஒருவன் இலங்கையில் குண்டுவெடிப்பினை நிகழ்த்திய கொலைகார குடும்பத்தின் உறவு, இன்னொருவன் பற்றி தகவல் இல்லை அவர்கள் இலங்கையர் என்பதால் அந்நாட்டிடம்தான் சவுதி ஒப்படைக்க வேண்டும் எனினும் இந்தியாவுக்கு […]

தேசிய கீதம் எப்படி இருக்கின்றது என பார்க்க மாட்டார்கள்

தேசிய கீதம் என்பார்கள், தியேட்டர் முதல் முட்டுசந்து வரை பாடவேண்டும் என ஆணையிடுவார்கள் ஆனால் தேசிய கீதம் எப்படி இருக்கின்றது என பார்க்க மாட்டார்கள் அது பிரிவினைக்கு முந்தைய பாடல், கிட்டதட்ட 30 நிமிடம் வரும் முழுபாடலின் ஒரு பிரிவினை மட்டும் எடுத்து 5 நிமிடமாக சுருக்கினார்கள் அதுவும் உருப்படியாக பொருந்தியதா என்றால் இல்லை பாகிஸ்தானுக்கு சென்றுவிட்ட சிந்துவினையும், ஒரு பகுதி பஞ்சாபையும், பங்களாதேஷ் என மாறிவிட்ட ஒரு நாட்டினையும் சேர்த்து நாமெல்லாம் வாழ்த்திகொண்டிருக்கின்றோம். நல்ல வேளையாக […]

வங்கத்து தாகூர், தமிழகத்து பாரதி

இங்கு பாஞ்சாலங்குறிச்சி கோட்டையும், வேலூர் கோட்டையும் இன்ன பல கோட்டைகள் எல்லாம் அழிந்து கிடக்கும் ஆனால் பத்மநாபபுரம் உள்ளிட்ட பல அரண்மனைகள் அப்படியே இருக்கும் எப்படி என்றால், யாரெல்லாம் வெள்ளையனை ஆதரித்தார்களோ அவர்கள் எல்லாம் வாழ்வை கொண்டாட அனுமதிக்கபட்டார்கள். யாரெல்லாம் வெள்ளையனை எதிர்த்தார்களோ அவர்கள் எல்லாம் சிதறடிக்கபட்டனர், ஓட விரட்டபட்டனர் அதில் கவிஞர்களும் விதிவிலக்கு அல்ல‌ வங்கத்து தாகூர் அப்படித்தான் கொண்டாடபட்டார், தமிழகத்து பாரதி அப்படித்தான் விரட்டபட்டார் தாகூர் பெரும் கவிஞர் சந்தேகமில்லை. வங்கத்து கவி உள்ளம் […]

இதுதான் உலக ராணுவ‌ அரசியல்

இன்றைய தேதியில் பரபரபான விஷயங்கள் இரண்டு முதலாவது பாகிஸ்தானில் கால்வைக்கும் சீனா, இன்னொன்று துருக்கிக்கு அமெரிக்கா கொடுக்க மறுக்கும் எப் 35 விமான சண்டை பாகிஸ்தான் விவகாரத்தில் என்னாயிற்று என்றால் , அந்த வைப்பாட்டி ஜாதக நாட்டை பலர் வைத்திருந்தாலும் அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்குமான நெருக்கம் இப்பொழுது கசந்துவிட்டது இவள் நம்பமுடியாதவள் எவ்வளவு கொட்டி கொடுத்தாலும் அவளால் சில புத்திகளை மாற்றமுடியாது என உணர்ந்த அமெரிக்கா சட்டி சுட்டதடா என ராகத்தை மாற்றிவிட்டது பாகிஸ்தானுக்கோ ஏகபட்ட பொருளாதார நெருக்கடி, […]

அதற்கு பிரார்த்திப்போம்

அந்தபெண் அப்படி ஒரு பெரும் தவறும் செய்யவில்லை, தன் பெயருக்கோ குடும்பத்துக்கோ களங்கம் வரும் எந்த தீச்செயலையும் செய்யவுமில்லை அவளுக்கு அந்த டிக்டாக் பிடித்திருந்தது, அதில் அவள் ஏதோ சிறிய மகிழ்வினை தேடிகொண்டாள், அதில் தவறொன்றும் இருக்க முடியாது டிக்டாக்கில் பெண்கள் வரகூடாது என எந்த மதம் சொன்னது, சுதந்திரமான இஸ்லாமிய நாட்டு பெண்கள் துருக்கி போன்ற மார்டன் இஸ்லாமிய நாட்டுபெண்கள் வரத்தான் செய்கின்றார்கள் இந்த ஒரு சாதாரண விஷயத்துக்காக ஒரு கும்பலே கூடி ஒரு பெண்ணை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications