பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

திராவிடத்தால் நல்ல படங்களை பெற்றோம் உறவே

தமிழ் சினிமாவில் முதன் முதலில் கிராமத்து காவியம் என சொல்லி சாதிய படங்களை எடுக்க தொடங்கியவர் பாரதிராஜா அல்லி நகரத்து பால்பாண்டி பாரதிராஜா என மாறினாலும் அந்த ஜாதிபெருமை மட்டும் மாறவே இல்லை (பாக்யராஜ் ஒரு சிலர் பாரதிராஜாவின் படங்களை போல கோயம்புத்தூர் கவுண்டர் படங்களை கொடுத்தாலும் அதில் கிராமத்து சாயல் இருந்ததே தவிர சாதி வெறி இல்லை அக்கால கோவை பகுதி சினிமாக்காரர்கள் அப்படித்தான் இருந்திருக்கின்றார்கள் இதில் சின்னப்ப தேவர் போன்றவர்கள் அப்படித்தான் அவர் தேவராக […]

மாபெரும் அச்சுறுத்தல் அவர்கள்தான்

இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்தலாம் என பலத்த எச்சரிக்கை வந்து கொண்டேதான் இருந்தது இந்த அரசு தான் ஒரே எதிரி என கருதும் பாகிஸ்தானையும் அது தயாரிக்கும் தீவிரவாதிகளையும் மட்டுமே கண்காணிக்கின்றது நாட்டின் எதிரிகளும் ஆபத்துக்களும் அவர்கள் மட்டுமல்ல, இத்தேசத்தின் உண்மையான தீவிரவாத இயகம் மாவோயிஸ்டுகள், அவர்கள்தான் தேசத்தின் மிகபெரும் மிரட்டல் சந்தேகமில்லை அவர்கள் பின்னால் சீனா இருக்கின்றது இன்னும் ஏகபட்ட சக்திகள் இருக்கின்றது நேபாளம் அவர்களின் கோட்டையாக இப்பொழுது திகழ்கின்றது, அதன் தொடர்ச்சியாக கிழக்கு மாநிலங்கள் […]

அதென்ன பாகிஸ்தான் அகதிகள்?

இலங்கையில் நடந்தது இஸ்லாமியத்தை காக்க வந்ததாக சிலர் செய்த தாக்குதல்தான் , ஆனால் யரை பாதித்திருகின்றது என்றால் பல பாவபட்ட இஸ்லாமியரையும் பாதித்திருக்கின்றது பாகிஸ்தான் அகதிகளும் பாதிக்கபட்டிருக்கின்றார்கள் அதென்ன பாகிஸ்தான் அகதிகள்? ஆம், இந்த இஸ்லாமில் சன்னி, ஷியா, அகமதியா, அல்லாவி தவிர ஏகபட்ட பிரிவுகள் உண்டு அதில் ஒன்று அகிமியா குழுவோ இல்லை வேறு பெயரிலோ ஒன்று பாகிஸ்தான் இஸ்லாமிய பூமி என சொல்லிகொண்டாலும் பெரும்பாலும் சன்னி பிரிவு, அதை தவிர மற்ற இஸ்லாமியருக்கு நிலை […]

பைபிள் காட்டிய உணவுமுறை

இந்த பைபிளை யாரும் எப்படியும் ஆராய்ச்சி செய்யட்டும், சங்கம் ஆய்வு செய்தது பைபிள் காட்டிய உணவுமுறை ஆம் பைபிளில் ஆச்சரியமான உணவுகள் எல்லாம் வரும், ஏதோ சுவையான மன்னா எல்லாம் வானத்தில் இருந்து விழுந்த காட்சி எல்லாம் அதில் உண்டு அது மானிடருக்கு கிடைக்கா தெய்வீக உணவாம், இருக்கட்டும் நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் இந்த பழைய ஏற்பாட்டில் ஒரு அதிசய உணவுபிரியன் இருந்திருக்கின்றான், அவன் பெயர் மாமன்னன் சாலமோன் அவன் ஞானிகளுக்கெல்லாம் ஞானி என்பதால் தன் […]

கார்ல் மார்க்ஸ்

தொழிலாளரை பற்றி பலர் கவலை கொண்டாலும் முதலில் அதிகம் கவலையுற்றது கார்ல் மார்க்ஸ் அவனோடு பிரான்ஸின் இங்கர்சால் போன்ற சிலர் உண்டு “உலக தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள்” என முதலில் முழங்கியவன் மார்க்ஸ் அந்த அழைப்புத்தான் சோவியத் யூனியனாக பின்னாளில் மலந்தது, உலகில் பாதிக்கு செங்கொடி பறக்க வைத்தது அதில் வந்த சோவியத் யூனியன் தொழிலாளருக்கான சட்டதிட்டங்களை வகுத்து நல்வாழ்வு வாழ வழிசெய்தது அந்த எதிரொலி தன் ஆட்சிநடக்கும் நாட்டிலும் நடக்காமல் இருக்க பிரிட்டனும் அமெரிக்காவும் தொழிலாளர் […]

பிரேமதாச‌

இலங்கை மிகசிறிய தீவு, சிங்கள எண்ணிக்கையும் அதிகம் அல்ல ஆனால் மிக சிறந்த ராஜ தந்திரிகள் எல்லாம் அங்கு உருவானார்கள் தங்கள் நாட்டுக்கு ஆபத்து வந்தபொழுதெல்லாம் அற்புதமாக முறியடித்தார்கள். அவர்கள் வரம் அப்படி. பண்டாராநாயக காலத்திலிருந்து புலிகளை வீழ்த்திய ராஜபக்சே வரை அவர்களின் நாட்டுபற்று துணிவும் அலாதியானது ஜெய்வர்த்தனே என்பவரெல்லாம் யூதர் போன்றே நரிமூளைக்காரர். இலங்கையில் இந்தியாவின் ஆட்டத்தை தன் அபார அணுகுமுறையால் கத்தியின்றி ரத்தமின்று முடித்து வைத்த வித்தகர் அந்த வரிசையில் ஒருவர் பிரேமதாச‌ மிக […]

மே தினம்

உலகம் முழுக்க மே தினம் கொண்டாடபடபடுகின்றது அது எப்படி உலக தொழிலாளர் தினமாக கொண்டாடுகின்றது என்றால், இந்த தொழிலாளி மானிட வர்க்கம் தாண்டி வந்திருக்கும் கொடூர காலம் அப்படியானது. ஆதிகாலத்தில் தொழிலாளியின் பெயர் அடிமை, ஒரு அடிமை என்பவன் வாய்பேசும் மாடு அல்லது ஒட்டகம். மற்றபடி அவனுக்கு எந்த உரிமையோ பாதுகாப்போ இல்லை. இந்த அடிமை முறை பைபிள் எழுதபட்ட காலத்திலே இருந்தது என்றாலும், அது சர்ச்சையாக வெடித்தகாலம் தொழில்புரட்சி காலமும், வெள்ளையன் உலகெல்லாம் சென்று தோடங்கள் […]

அன்று நடந்திருப்பது இப்பொழுது புகைகின்றது

இந்தியாவின் இரு போர்விமானத்தை வீழ்த்தினோம் என அபினந்தன் கைதுசெய்யபட்டபொழுது சொல்லிகொண்டிருந்தது பாகிஸ்தான் சரி ஒன்று மிக் விமானம் அபிநந்தனுடையது, அந்த இன்னொரு விமானம் என்ன வகை? பைலட் யார் என இந்தியா கேட்டதற்கு பாகிஸ்தான் பதில் சொல்லவே இல்லை, “அதை நீங்கள்தான் சொல்லவேண்டும்” என தீபா சொன்னது போல சொல்லிகொண்டிருந்தது இப்பொழுது மாபெரும் பல்டி அடித்திருக்கின்றது, ஒரு வகையில் இது அவர்களுக்கு அவமானம் ஆம் இரண்டு விமானம் அல்ல, ஒரு விமானத்தைத்தான் வீழ்த்தினோம் என பாகிஸ்தான் ராணுக […]

விஷயம் இதுதான்

இந்திய உளவுதுறை எப்படி இலங்கை தாக்குதலை முன்பே அறிந்தது என்பதை நேற்று வெளியான பல தகவல்கள் உங்களுக்கு புரிய வைத்திருக்கலாம் ஆம் ஐ.எஸ் இயக்கத்தவனாக இலங்கையில் தாக்குதல் நடத்திய அக்கும்பலின் தலைவன் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் சிலரை சந்தித்தான் என்ற விசாரணையும் செய்திகளும் நேற்று பரபரப்பினை கிளப்பின‌ விஷயம் இதுதான் ஐ.எஸ் இயக்கத்தில் தமிழ்நாட்டு நபர்கள் உட்பட இந்திய நபர்கள் பலர் இருந்திருக்கின்றனர், சிரிய பக்கம் அவர்கள் பயிற்சி பெறும்பொழுதுதான் இலங்கையரின் தொடர்பும் ஏற்பட்டிருக்கின்றது இலங்கையரை அங்கு […]

எல்லாம் அரசியல்

இந்த திமுகவுக்கும் தும்பிகளுக்குமான புலி சண்டையில் எது சரி என்றால் இதுதான் திமுக என்பது இந்தியாவோடு ஒட்டாமல் இருந்த ஒரு இயக்கம், புலிகள் இந்தியாவினை எதிர்த்த இயக்கம் இருவரும் அந்த புள்ளியில் ஒன்று சேர்ந்தனர், அதுவும் ராமசந்திரன் காலம் வரை இல்லை, அவர் காலத்துக்கு பின்பே புலியும் கலைஞரும் கூட்டாளி ஆயினர் அன்று இருந்த ஜெயா ராஜிவ் கூட்டணியினை எதிர்த்து அரசியல் செய்ய புலிகள் அவருக்கு தேவைபட்டனர் ராமசந்திரன் இல்லா நிலையில் புலிகளுக்கு கலைஞரும் தேவைபட்டார் இந்த […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications