பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இதுதான் அவரின் பன்ஞ்

முன்பொரு கவியரங்கத்தில் அப்துல் ரகுமான் பாடினார், மரம் சொல்லுமாம் “ஏய் மனிதர்களே நாங்கள் ஆயிரம் சிலுவைகள் தருகின்றோம் நீங்கள், ஒரு கிறிஸ்துவினை தர தயாரா?” எவ்வளவு அழகான கேள்வி? எப்படிபட்ட சிந்தனை?, மரங்கள் அப்படி கேட்டால் மானிட இனத்து பதில் என்ன? மொத்த சிந்தனையும் கலங்கிய நேரம் கலைஞர் கவிதையில் பதில்சொன்னார் சட்டென சொன்னார் கொஞ்சமும் சிந்திக்கவில்லை “ஏய் மரங்களே நீங்கள் எத்தனை சிலுவை கொடுத்தாலும் இனி அப்படி இம்சித்து கொல்ல‌ ஒரு மனிதனை தரவே மாட்டோம்” […]

கண்ணகி கோயில்

சித்திரை மாத முழுநிலவன்று தமிழக கேரள எல்லையிலுள்ள தமிழக கண்ணகி கோயிலில் தமிழக பக்தர்கள் கூடுவது வழக்கம். இன்னும் சாலை வசதி தமிழக அரசால் ஏற்படுதபட்டதா என்றால் இல்லை? கேரளா வழியாக தான் வாகனத்தில் வரமுடியும், கோயில் இடம் எங்களுக்கு என்ற கேரள சர்ச்சையும் உண்டு, நிச்சயம் தமிழர் இடம்தான் ஆனால் கேரள ஆதிக்கம். கண்ணகி விண்ணகம் சென்ற இடமான இந்த வரலாற்று சிறப்புமிக்க இடத்திற்கு, தமிழகம் வழியாக செல்ல வேண்டும் என்றால் பக்தர்களுக்கு ஆபத்தான நடைபயணம். […]

இந்திய தேர்தலை மகா உன்னிப்பாக கவனிக்கும் நாடு இஸ்ரேல்

இந்திய தேர்தலை மகா உன்னிப்பாக கவனிக்கும் நாடு இஸ்ரேல் இப்பொழுது இஸ்ரேலிலும் இந்தியாவிலும் தேர்தல் அதில் இஸ்ரேலில் நேதன்யாகு வந்தாயிற்று, இப்பொழுது இஸ்ரேலின் மிக நீண்ட நாள் பிரதமர் அவர்தான் இப்பொழுது அவர்மேல் மக்களுக்கு என்ன சந்தோஷம் என்னவென்றால் இந்தியாவினை இஸ்ரேல் வளைத்து போட்டது பாலஸ்தீன இந்திய உறவுக்கு ஆப்பு வைத்ததாயிற்று, இந்திய சந்தையினை வளைத்தாயிற்று, தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தியாவினை கூட்டணிக்கு சேர்த்தாயிற்று, ரஷ்ய சாதனங்களுக்கு பதில் இஸ்ரேலிய தயாரிப்புகளை பெறுவது என ஏக காரணம் இதனால் […]

ஜெருசலேம் ஆலயம்

உலகின் மகா ஆச்சரியமும் சுவாரஸ்மும் கொண்ட ஆக பழமையான அடையாளமும் மிக நவீன விஞ்ஞானமும் கலந்து கிடக்கும் நகரம் ஜெருசலேம் தாவீது அரசன் அதை கைபற்றியதில் இருந்து அது புது அடையாளம் பெருகின்றது, தாவீதே இன்றைய ஜெருசலேமிற்கு அஸ்திவாரமிட்டான் சாலமோன் காலத்தில் அது உலகின் நம்பர் 1 நகரமாக மின்னியது, சொர்க்கத்துக்கு நிகரான அதை உருவாக்கி ஆண்டான் சாலமோன் உலகம் அவன் காலத்தில் அந்நகருக்கு கப்பம் கட்டியது, காணிக்கை குவிந்தன ஏன் உலக மன்னர்களும் ராணிகளும் ஓடிவந்து […]

ஏன் அவர்கள் பெயர் இல்லை?

படகோட்டி படத்தில் நாகேஷ் மீனவர் சங்க தலைவராக இருப்பார், ஒருநாள் புயலில் சிக்கிய மீனவர் ஒருவர் காணாமல் போவார், உடனே நாகேஷ் அவர் பெயரை சங்கத்தில் இருந்து நீக்கிவிட்டு அஞ்சலி செலுத்துவார் இரு நாட்கள் கழித்து காணாமல் போனவர் வந்து அய்யா நான் வந்துட்டேன் என கதறுவார், நாகேஷ் சீரியசாக சொல்வார் “என்னய்யா நீ, சங்கத்து முடிவு தெரியுமா? ஒரு தடவை பெயரை அடிச்சிட்டா அடிச்சதுதான் இனி ஒண்ணும் பண்ண முடியாது நீ கடலுக்கே போய் சாவு” […]

ரஷ்யா சிரியா உறவில் பெரும் உரசலை செய்திருக்கின்றது மொசாத்

ரஷ்யா சிரியா உறவில் பெரும் உரசலை செய்திருக்கின்றது மொசாத், ஆனானபட்ட புட்டீனுக்கே தண்ணி காட்டியிருக்கின்றது ஆம் மகா சுவாரஸ்யமான சம்பவம் அது அதாவது இந்தியாவின் புகழ்பெற்ற உளவாளி ரவீந்த கவுசிக்கினை போலவே இஸ்ரேலில் ஒருவர் உண்டு அவர் எலி கோகன் மனிதர் 1955களில் சிரியாவில் ஊடுருவி சிரிய அரசில் சேர்ந்து சிரிய பாதுகாப்பு அமைச்சருக்கு ஆலோசனை அதிகாரியுமானார் தகவல் எல்லாம் இஸ்ரேலுக்கு அட்டகாசமாக கடத்தினார். மிக பெரிய விஷயம் இது, ஒரு உளவாளி எதிரி அரசு ராணுவத்தின் […]

நன்றி இருந்தால் விரல் அங்குதான் நீளும்..

இந்த மோனாலிசா ஓவியம் புகழ்பெற்றது, ஒருமுறை அது திருடுபோயிற்று ஆனானும் அந்த ஓவியம் இருந்த இடத்தை பார்க்க கூட்டம் அப்படி அலைமோதிற்று, ஆம் அந்த அற்புத ஓவியம் இருந்த இடத்தை ஓடி ஓடி வந்து பார்த்தார்கள் பெரும் அடையாளம் நின்ற இடத்தை கூட மறக்கா உலகமிது அப்படியாக தலைவி களத்தில் இல்லை என்றாலும் காங்கிரஸ்க்கு வாக்களிக்க வேண்டியது நம் கடமை அது போக இலவச மின்சாரம் பெற்றுகொண்டிருக்கும் விவசாயியாக எந்நாளும் திமுகவுக்கு நன்றிகடன் உண்டு பெண்களுக்கு சொத்துரிமை […]

சம உரிமை இருக்கின்றது

இது இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு சந்தேகமில்லை ஆனால் எல்லா மத மக்களும் வாழவேண்டிய நாடு எல்லா மக்களுக்கும் இந்த நாட்டில் சம உரிமை இருக்கின்றது மதரீதியான பாகுபாடுகள் இங்கு சிக்கலையே உருவாக்கும், சீக்கிய சமூகத்திற்கு அன்றைய காங்கிரஸ் செய்த சில வலியான சம்பவங்கள் தீரா சோகத்தோடு முடிந்தன‌ காஷ்மீரிலும் அதைத்தான் செய்கின்றோம், இஸ்லாமியர் இந்நாட்டில் பாதுகாப்பாக அமைதியாக எல்லோரையும் போல் வாழலாம் எனும் நம்பிக்கையினை உண்டாக்க வேண்டுமே அன்றி ஆயுதபலத்தால் அவர்களை அடக்கிவிட முடியாது அதுவும் […]

ஆனால் நடந்தது என்ன?

பெரிதும் எதிர்பார்க்கபட்டார் மோடி, தேசம் அவரை கொண்டாடி ஆட்சியில் வைத்தது, ஆனால் நடந்தது என்ன? ஆரம்பத்திலே சொதப்பினார்கள், ரம்ஜான் வாழ்த்து சொல்ல கூட பிரதமரால் முடியவில்லை தனியாக மன் கீ பாத் என புலம்பினாரே தவிர பத்திரிகையாளரை சந்தித்து ஒரு செய்தி சொல்ல நிமிடமில்லை உலகெல்லாம் ஓடினார் மோடி நல்லது தேசத்துக்காக செல்லலாம் ஆனால் ஒரு நிபுணர் குழு செல்ல வேண்டிய இடத்திற்கெல்லாம் பாரத பிரதமர் சென்று பல்லிளித்தது ஒருவித நெருடலையே கொடுத்தது கருப்பு பண ஒழிப்பு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications