பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

27ம் வெள்ளிவிழாவில் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

கையெழுத்து பத்திரிகை நடத்தினார் கலைஞர், அதனை அருகிருந்தே பார்த்து உதவி வளர்ந்தார் முரசொலிமாறன் பின்னாளில் முரசொலி என கலைஞரே எழுதி அதனை தலைச்சுமையாக சுமந்து விற்றகாலங்களிலும் உடனிருந்தார் முரசொலிமாறன் சினிமாவில் கலைஞர் எழுத்துபுரட்சி செய்தகாலங்களில் கலைஞருக்கு அருகிலே இருந்து முரசொலி உட்பட பல விஷயங்களை கவனிக்க ஆரம்பித்தார் மாறன் முரசொலி அரசியல் இதழானது, ஆனால் எல்லா விஷயங்களையும் கொடுக்கும் பத்திரிகை கொடுக்க ஆசைபட்ட மாறன் பத்திரிகை உலகிற்கும் வந்தார், பல பத்திரிகைகளை நடத்தினார் அவர் குறிப்பிட்டு சொல்ல […]

அவரையாவது சிலுவையில் அறையாமல் அந்த இனம் இருக்கட்டும்

ஓய்வுநாளில் மனிதன் ஓய்ந்திருக்க வேண்டும் என்பது கடவுள் கொடுத்த கட்டளை அதன்படி யூதர்கள் இன்றும் சனிகிழமை அதிகம் நடக்க கூட மாட்டார்கள், இன்றும் இஸ்ரேலில் கட்ட லிப்டுகளில் கூட சனிகிழமை தானே நின்று செல்லும் லிப்டுகள் உண்டு ஆம் பட்டனை தொட்டால் வேலையாம் அப்படி ஓய்வுநாளை மிக நுணுக்கமாக அனுசரிக்கின்றார்கள் இந்த கிறிஸ்தவமும் இருக்கின்றதே, இம்சைபிடித்தது. ஓய்வு நாளிலும் காலையில் எழு சர்ச்சுக்கு போ, மதியம் வரை விழுந்து கிட என பெரும் அழிச்சாட்டியம் செய்கின்றது கர்தரின் […]

அம்பேத்கர்

இந்தியாவின் ஜாதிய கொடுமைகள் தெரியவேண்டுமானால் அம்பேத்கரின் வாழ்க்கையினை ஒருமுறை படியுங்கள், காந்திக்கு சற்றும் குறையாத மாமனிதன் அவர் என்றான் ஒரு மேல்நாட்டு அறிஞர், முக்கால உண்மை ஒன்று உண்டென்றால் அந்த மனிதனின் வார்த்தைகள்தான். தலைவலியும்,காய்ச்சலும் மட்டுமல்ல ஜாதி ஒடுக்குமுறையும் அதில் பாதிக்கபட்டவனுக்குத்தான் தெரியும், அவர் அப்படித்தான் பாதிக்கபட்டார், அதனால்தான் அந்த சிக்கல்களை அவரால் பேசமுடிந்தது,போராடமுடிந்தது, முடிவில் சாதி இல்லா புத்தமதத்தில் இணையவும் வைத்தது. அவர் வாழ்ந்த காலம் அப்படி, மகா கொடுமையானது. அந்த கொடுமையான காலத்திலும் அவர் […]

காலண்டர் தோன்றிய விஷயங்கள்

இந்த புத்தாண்டு விஷயமாக பல விஷயங்களை படிக்க முடிந்தது, அதில் காலண்டர் தோன்றிய விஷயங்களும் இருந்தன‌ தொன்மையான நாட்காட்டிகள் கொண்ட நாடுகளில் இந்தியாவும் சீனாவும் ஒன்று, அப்படியே கிரேக்கமும் ஒன்று கிழக்கையும் மேற்கையும் முதலில் இணைத்தவன் அலெக்ஸாண்டர், இந்திய அறிவார்ந்த விஷயங்களை பெற்றும் கொண்டார்கள், இந்திய தொடர்பு ஏற்பட்டபின் கிரேக்கர்களின் கணிதம் உட்பட பல அறிவுகள் மாற்றம் பெற்றன பல இந்திய நடைமுறைகளும், வார்த்தைகளும் ஐரோப்பாவிற்கு சென்றது ரோமர்கள் எழும்பி கிரேக்கர்களை ஒடுக்கி வல்லரசான பின் ரோமர் […]

இதுதான் தேசிய உணர்வு

இந்த ராகுல் காந்தி நிச்சயம் வாழ்த்துக்கு உரியவர் அவரை வாழ்த்தி தீர வேண்டும் ஜாலியன் வாலாபாக் பூங்காவில் அந்த நூறு ஆண்டு முன்பு நாட்டிற்காக செத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த சென்றிருக்கிறார் இதுதான் நாட்டுப்பற்று இதுதான் தேசிய உணர்வு இதுதான் இந்தியன் என்ற நிலைப்பாடு தேசப்பற்று என்பதற்கு இலக்கணம் எழுதும் ஒரு பயலும் அங்கு செல்லவில்லை எல்லாம் வீணான வேடம் போலி விளம்பரம் ஒரு நல்ல இந்திய தலைவன் என்ன செய்ய வேண்டுமோ அதை ராகுல் செய்திருக்கிறார் கொஞ்சமும் […]

ஜாலியன் வாலாபக் படுகொலை

அக்காலகட்டம் வெள்ளை அரசு ஆடிகிடந்தது, காரணம் 1917 அதாவது 1919ன் ஈராண்டுகளுக்கு முன்னர்தான் ஜார் மன்னனை வீழ்த்தி புரட்சியாளன் லெனின் ரஷ்யாவில் ஆட்சி அமைத்திருந்தார், அது உலகெங்கும் உரிமைக்காக போராடும் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டிற்று, ஏகாதிபத்தியம் அச்சமுற்ற நேரம். உலகின் சரிபாதியினை ஆண்டுகொண்டிருந்த ஏகாதிபத்திய ஆங்கிலேயன் அச்சமுற்று, இதனை தடுக்க ரவுலட் என்பவர் தலமையில் குழுபோட்டு ஆலோசித்தான், முடிவில் அது சட்டமாயிற்று. கொடுமையான சட்டம் அது, “ம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம்.” என்ற வசனத்தின் […]

நாளைக்கு சித்திரை 1

நாளைக்கு சித்திரை 1 தமிழ்புத்தாண்டு வாழ்த்து என சொல்லாவிட்டால் தலைகாட்ட முடியாது, சொல்லிவிட்டால் தலைஞர் சமாதிபக்கம் செல்ல முடியாது ஆனால் சொல்லாமல் தேர்தல் நேரம் சமாளிக்கவும் முடியாது பூரா பயலும் ஒரு வெறியோடு சுற்றிகொண்டிருக்கின்றான், தொலைத்துவிடுவான் வெரி டெலிகேட் பொசிஷன்.. சத்திய சோதனை ம்ம்.. இப்படி செய்யலாம் இனி புத்தாண்டு வாழ்த்துக்கு பதிலாக‌ ஒவ்வொரு மாதபிறப்புக்கும் வாழ்த்து சொல்லிவிடலாம் , சிக்கல் இல்லை இனி புத்தாண்டே தமிழனுக்கு கிடையாது மாத பிறப்பு மட்டுமே..

பகுத்தறிவு சிந்திக்கவா போகின்றது?

முத்துவேலருக்கு பல தலைமுறைக்கு முன்பே சமூக நீதி காத்த ஆரிய பார்ப்பானிய அட்டகாசத்தை ஒடுக்கிய திராவிட போராளி சிலை முன் கனிமொழி ஆசி பெற்ற காட்சி (அது மன்னன் சிலை, அவன் காலத்தில் அவன் கடவுள்,அவனே சர்வாதிகாரி, அவனே பாசிஸ்ட் பார்ப்பான் முதல் சூத்திரன் வரை அவனுக்கு கட்டுபட்டே இருந்தனர், திமுக குறீயிட்டில் சொல்ல வேண்டுமென்றால் அவன் ஆதிக்கவாதி, அடக்குமுறையாளன் இதை எல்லாம் சொன்னால் அவர்கள் பகுத்தறிவு சிந்திக்கவா போகின்றது? அதுவும் தேர்தல் நேரத்தில். ஒரு பாசிஸ்ட் […]

உருப்படியாக பேசகூடிய வேட்பாளர்கள்

39 தொகுதிக்கு ஏகபட்ட‌ வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றார்கள் இதில் நாடாளுமன்றத்தில் உருப்படியாக பேசகூடிய வேட்பாளர்கள் யாரென பார்த்தால் வெகு சொற்பம் கனிமொழி, தயாநிதி, தமிழச்சி தங்கபாண்டியன், ஜோதிமணி ஈவிகேஸ் இளங்கோவன், சு.வெங்கடேசன் என சில முகங்கள்தான் இருகின்றன அதுவும் திமுக கூட்டணியில்தான் இருகின்றன‌ அன்புமணி போன்ற சிலமுகங்கள் எதிர்தரப்பில் இருக்கின்றன‌ ஆனால் அதே கூட்டணியில்தான் ஜெகத்ரட்சகன் போன்ற சர்ச்சை நபர்களும் இருக்கின்றார்கள், துரைமுருகன் மகன் மக்களவையில் சம்பள பணம் எண்ணிகொண்டிருந்தால் நன்றாயிராது தரமில்லா திமுக வேட்பாளர், ஏற்கனவே […]

தும்பிகளுடன் பேசுவது எப்பொழுதுமே சுவாரஸ்யமானது

தும்பிகளுடன் பேசுவது எப்பொழுதுமே சுவாரஸ்யமானது “ஏண்டா உங்க இலக்கு இனவிடுதலை ஆமாண்ணே இனம்ணே காப்பாத்தணும்ணே இந்தியா உங்களுக்கு ஏற்புடையது அல்ல, ஈழ அழிவுக்கெல்லாமும் தமிழக சீரழிவுக்கெல்லாம் இந்தியா காரணம் கண்டிப்பாண்ணே இப்படித்தான் உண்மை சொல்லணும் பின்ன ஏன் இந்த எம்பி தேர்தலில் நிற்கின்றீர்கள்? டெல்லிக்கு சென்று என்ன செய்வீர்கள்? அண்ணே இது உரிமை மீட்புண்ணே டெல்லிய ஆட்டிருவோம் சரி அதெல்லாம் அப்புறம்டா அங்க போய் என்ன செய்வீங்க? கச்சதீவு மீட்பு , அணுவுலை முடக்கம் இப்படி எல்லாம் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications