பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

குழந்தைகளுக்கான புத்தக நாளாம்

இன்று குழந்தைகளுக்கான புத்தக நாளாம் இப்போதுள்ள குழந்தைகளுக்கு வீடியோ கேம் , செல்போன் என பல சாபங்கள் கிடைத்துவிட்டன. அதனால் அவை படும் சிரமங்கள் ஏராளம் , அவைகளை தாண்டி அக்குழந்தைகளுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை அந்தோ பரிதாபம் உடல்நல கேடு இன்னொரு புறம். ஆனால் 1980களின் குழந்தைகள் கொடுத்துவைத்தவர்கள், சிறுவர் புத்தகங்களும் வந்தன, கதை சொல்ல தாத்தா பாட்டிகளும் இருந்தனர் அந்த வரம்பெற்ற குழந்தைகளுக்கு அம்புலிமாமா போன்ற புத்தகங்கள் இருந்தன‌ சிறுவர்மலர் போன்ற பத்திரிகைகளும் வந்தன‌ அந்த […]

ரஷ்யாவுக்கு ஏதோ சொல்லவருகின்றது அமெரிக்கா

இந்த துருக்கி என்பது ஐரோப்பாவில் ஒரே இஸ்லாமிய நாடு ஆனாலும் கேந்திர முக்கியத்துவம் மற்றும் ரஷ்ய கருங்கடல் பக்கம் அது வருவதாலும் ஒரு காலத்தில் நேட்டோவில் அது சேர்க்கபட்டது அதிலிருந்து அமெரிக்க விமானங்களும் ஆயுதங்களும் சரளமாக கிடைத்தன, இந்த எப்16 எல்லாம் தயக்கமின்றி கொடுத்தார்கள் அரபு நாடுகளுக்கு நிகராக துருக்கியினை நிறுத்துதல் இன்னும் ஏக கணக்கு உண்டு ஆனால் எர்டோகன் வந்ததில் இருந்து அமெரிக்க துருக்கி உறவு சரியில்லை தன் நாட்டில் நடந்த ராணுவபுரட்சிக்கெல்லாம் அமெரிக்கா காரணம் […]

எல்லா பெண்களும் எங்களுக்கு தாயே

“உங்கள் நாட்டில் பெண்களை அம்மா என அழைத்தேன் என்னை கோபமாக பார்த்தார்கள், எனக்கு வயதாயிற்றா? என சீறினார்கள். அம்மா என அழைத்தால் மூதாட்டி என நினைத்தாயோ என திரும்ப கேட்கின்றார்கள் நான் பொறுமையாக சொன்னேன், உங்கள் நாட்டில் இந்த கிறிஸ்தவ சன்னியாசிகள் உண்டல்லவா? அப்படி இந்து சன்னியாசி நான் எங்கள் நாட்டில் சன்னியாசிகள் எல்லா பெண்களையும் தாயே என்றுதான் அழைப்போம், அது வயதான பெண் என்றாலும் சரி, சின்னஞ்சிறிய மகவு என்றாலும் சரி எல்லா பெண்களும் எங்களுக்கு […]

மிகபெரும் புயல்

இந்த 30 ஆண்டுகளில் மிகபெரும் புயல் இந்த மொசாம்பிக் நாட்டில் அடித்திருக்கின்றது பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் என்பது போல மிக பின் தங்கிய அந்த ஆப்ரிக்க நாடு மீளமுடியாமல்தவிக்கின்றது புயல் வீசி 10 நாள் ஆனாலும் கொஞ்சமும் முன்னேற்றமில்லை மாபெரும் அழிவு அது உலக நாடுகள் எல்லாம் உதவி பொருள் அனுப்புகின்றன, இந்தியாவும் கப்பல் நிறைய பொருட்கள் அனுப்பியிருக்கின்றன‌ அந்த கருப்பு தேசம் விரைவில் மீண்டெழ பிரார்த்திப்போம் ஏக்கத்திலும் சோகத்திலுமிருக்கும் அந்த ஆப்ரிக்க […]

மன்சூர் அலிகான்

வழக்கமாக நாம் தமிழர் சைமன் அங்கிள்தான் காமெடி செய்வார் என்றால் தேர்தல் ஸ்பெஷல் அங்கும் களைகட்டியிருகின்றது மன்சூர் அலிகான் வந்தபின் அங்கிளும் அவர் தும்பிகளும் பெவிலியனுக்கு சென்றுவிட்டன‌ தனி ஆளாய் அந்த கட்சியின் அடாவடி காமெடியினை தோளில் சுமக்கின்றார் மனிதர் சும்மா சொல்ல கூடாது, கட்சி டெப்பாசிட்டே வாங்க கூடாது என்ற வெறியோடு பாய்கின்றார் மனிதர் அவருக்கும் முகம் நிறைய பவுடர் போட்டு மேக் அப் செய்தால் துரைமுருகன் போலத்தான் இருப்பார் போலிருக்கின்றது

ஆறா தழும்பு

அது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம் அன்று ஈழத்தில் எல்லாம் புலிகளுக்கு, எது வேண்டுமானாலும் அவர்களே எடுத்துகொள்வார்கள், கேட்டால் கொல்வார்கள், அதன் பெயர் மக்களுக்கான போராட்டம் இந்த மக்களுக்கான போராட்டத்தில் அடவாடியாக யாழ்பாணத்தில் இருந்த ஒரு செல்வந்தரிடம் இருந்து பறிக்கபட்டது “கந்தன் கருணை” என பெயரிடபட்ட பெரும் வீடு, ஒரு செல்வர்க்கானது, அவரை விரட்டிவிட்டு புலிகள் அபகரித்துகொண்டார்கள், அது புலிகுகை ஆயிற்று […]

தங்க சுரங்கமா?

“அந்த மாபெரும் சேனை திராவிட நாடு வேண்டி போர்தொடுக்க சென்றது திராவிடன் வாழ கடும்போர், திராவிட விடுதலை வேண்டி நீண்டபோர் என கடும்தரிப்பில் அணிவகுத்தது அதன் போர்முழக்கமும், ஆயுத ஒலியும் அந்த இயக்கம் திராவிட நாட்டை அடையும் என சொல்லிகொண்டே இருந்தது ஆனால் வழியில் ஒரு தங்க சுரங்கதை கண்டபின் அவர்கள் முழக்கம் மாறி பாட ஆரம்பித்தார்கள் போர் முழக்கம் என்பது பாடலாயிற்று, ஆயுதம் தாங்கிய கரங்கள் தாளம் வாசித்தன‌ பகைவரை மிதிக்க வந்த கால்களுக்கு சலங்கை […]

இன்று அப்படியா நிலமை?

தம்பி நாமெல்லாம் காங்கிரசை எதிர்த்தோம் என்றால் அன்று நாமெல்லாம் பாட்டாளிகள், ஓட்டாண்டிகள், அன்னகாவடிகள் எறும்பை யானை கொல்ல முடியுமா? வானபாடியினை வல்லூறு விழுங்குமா? அப்படித்தான் நம்மை ஒன்றும் செய்யமுடியாமல் காங்கிரஸ் தத்தளித்தது இன்று அப்படியா நிலமை? குவித்துவிட்ட கோடான கோடி சொத்துக்களை காக்க ஒரு கோஷ்டி, அவர்களை போல சொத்துகுவிக்க வந்திருக்கும் ஒரு கோஷ்டி இதுதான் இன்றைய திமுக தம்பி நான் இயக்கம் வளர்த்தேன், தமிழ் வளர்த்தேன், திராவிட உணர்வு வளர்த்தேன், கோடிகணக்கான தம்பிகளை தவமாய் வளர்த்தெடுத்தேன் […]

காரணம் வரதட்சனை

அது 100 சதவீதம் கல்வி அறிவு பெற்ற மாநிலம் என மார்தட்டுவார்கள், அறிவாளிகள் மிகுந்த மாநிலம் என சொல்லிகொள்வார்கள் அப்படி கடவுளின் சொந்த மாநிலம் என சொல்லிகொள்ளும் கேரளாவில்தான் அந்த சாத்தானின் கொடூரத்தைவிட பெரும் கொடூரம் நடந்திருக்கின்றது காரணம் வரதட்சனை சில நகைகளுக்காக அப்பெண்ணை கொடுமைபடுத்தியிருக்கின்றார்கள், கொடுமைகள் எல்லாம் ஹிட்லர் ரகம் அதைவிட கனத்த கொடுமை பின்னால் நடந்திருக்கின்றது இந்த இதயநோயாளிகள், மனசாட்சி மிக்கவர்கள் தொடர்ந்து வரவேண்டாம் வரதட்சனைக்காக அந்த அப்பாவி பெண்ணை தாக்கியிருக்கின்றார்கள், அதுவும் சத்தம் […]

சொதப்பல்

சிலப்பதிகாரத்தின் வழக்குரை காதையில் அந்த பாடல் வரும் “சான்றோரும் உண்டு கொல்?” என தொடங்கும் அப்பாடல் கண்ணகி நீதிகேட்டு வரும்பொழுது வரும் “சான்றோரும் உண்டுகொல்? சான்றோரும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல்? வை வாளில் தப்பிய மன்னவன் கூடலில் தெய்வமும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல்?’ என்று இவை சொல்லி அழுவாள் கணவன்-தன்” அதாவது இங்கு சான்றோர்கள் உண்டோ? தெய்வமும் உண்டோ என அவள் கேட்கும் கேள்வி அது கொல் என்பது தவறு கொல்? என வினவுவது […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications