பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கள்ளமவுனம்

நிச்சயம் அவன் இந்த தேசத்து மாபெரும் சுதந்திர வீரன், அவனைபோல் ஒருவனை இத்தேசம் கண்டதுமில்லை காணபோவதுமில்லை அவனது மைசூர் சமஸ்தானம் இன்றைய ஜெர்மனுக்கு ஈடான பொருளாதாரத்தை கொண்டிருந்தது அதை குறிவைத்தே வெள்ளையன் போர் நடத்தினான் புகழ்பெற்ற தன் முதல் இரு போர்களில் ஆங்கிலபடைகளை கதறவைத்திருந்தான் அவன், பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் வலிய சொன்னான் “என்னை போல் ஒருவனை வரலாற்றில் திப்பு வடிவில் காண்கின்றேன்” , திப்புவுக்கு படை அனுப்ப நெப்போலியன் முடிவும் செய்திருந்தான் அந்த பாழாய்போன நெல்சன் […]

பொருளாதர சரிவு

ஒரு நாட்டின் பொருளாதார வலிமை அதன் கரன்சி மதிப்பிலே தெரியும், பணமதிப்பு ஏற ஏற அந்நாடு பெரும் சரிவினை சந்திக்கின்றது என பொருள் சுருக்கமாக சொன்னால் ஒருநாட்டின் பணம் குப்பையாக சென்றுகொண்டிருக்கின்றது என பொருள்.. இது ஜிம்பாப்வே , இந்தோனேஷியா, ஈரான், வடகொரியா போன்ற நாடுகளில் மில்லியன் கணக்கில் சென்றுவிட்டது, அதாவது அந்நாட்டு பணம் குப்பைக்கு சமானம் இந்தியாவின் மன்மோகன் காலம் வரை சிக்கல் இல்லை, 2008 உலக பொருளாதார பெருமந்தம், கச்சா எண்ணெயின் உச்சபட்ச விலை […]

தேர்தல் துளிகள் 26/03/2019 (1)

ஒரு பைசா லஞ்சம் ஊழல் இருந்தால் விஷ ஊசி போட்டு கொன்றுவிடுவோம் : சீமான் சயனைடை கடி, குண்டுவெடித்து சாவு என போதித்த பிரபாகரனின் தம்பி எப்படி பேசுவார்? இப்படித்தான் பேசுவார்.. எப்பொழுதும் போராட்டம் சிறை என வாழ்ந்த அந்த எளிய தமிழச்சி, அன்றொரு நாள் மாபெரும் மக்கள் நல போராட்டத்திற்கு திமுக மகளிரணி சார்பாகதயாராகி களத்திற்கு சென்ற காட்சி இது நெற்றியில் உதயசூரியன் எல்லாம் வரைந்து வந்தது குறிப்பிடதக்கது கேப்டனுக்கு பேசுவதற்கு பயிற்சி அளிக்கபடுகின்றது, “ஒளிமயமான […]

ஒரு அஞ்சலி செய்திருக்க வேண்டும்

“தோனி இந்திய அணியினை கரை சேர்த்த தோணி” அந்த முரசொலி வரிகளைதான் மறக்க முடியுமா? கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் முதல் டோனிவரை ரசித்தவர் அவர். மிகசிறந்த கிரிக்கெட் ரசிகர் கலைஞர் சட்டமன்றத்தில் ஆளும்கட்சி மட்டையாளர்கள் என்றும் எதிர்கட்சி பந்துவீசும் கட்சி என்றும் அவர் பேசிய பேச்சுக்கள் காலத்தின் சுவாரஸ்ய பக்கங்கள் உறுதியாக சொல்லலாம், அந்த புல்வாமா அஞ்சலி நிகழ்ச்சி அந்த மைதானத்தில் கலைஞரின் நினைவேந்தலை தள்ளி போட்டுவிட்டது இல்லை வேண்டுமென்றே மேலிடம் மறைத்திருக்கலாம் ஆனால் அந்த மாபெரும் கிரிக்கெட் […]

மேலவை உதிக்கட்டும்

தேர்தல் அறிக்கைகள் என ஆயிரம் வந்துகொண்டிருக்கின்றன, இன்னும் வரலாம் தமிழக கட்சிகள் ஒன்றாவது தமிழக மேலவை அமைக்கபாடுபடும் என சொல்லவே இல்லை என்பதுதான் சோகம் இந்தியாவுக்குள் எல்லா சிக்கலும் எங்களால் தீர்க்கபடும் என்கின்றார்கள், ஆனால் மேலவையினை மட்டும் மறக்கின்றார்கள் அதில் பலத்த அரசியல் உண்டு கற்றோராலும் சிந்தனையாளராலும் நிரம்பபட்டிருந்தது அந்த அவை, ராமசந்திரன் வரும்வரை அது நன்றாய் இருந்தது பொதுவாக தன்னைவிட படித்தவர்கள் தனக்கு அடங்கி இருக்க வேண்டும் என்ற எண்ணம் ராமசந்திரனுக்கு இருந்தது கட்சிக்குள் அது […]

மனித தன்மை இல்லாதது

ஒரு கிறிஸ்தவன் இறந்துவிட்டார் , அவர் உடலை இந்துமதபடி அடக்கம் செய்ய இந்துத்வா கும்பல்கள் மல்லுகட்டின என்றொரு வீடியோ காணமுடிந்தது இப்பொழுது வரும் வீடியோக்களில் அங்கிள் சைமனின் வீடியோ தவிர ஏதும் நம்ப கூடியவை அல்ல, அங்கிள் ஒருவரை முழுக்க நம்பலாம் இந்த வீடியோ சம்பவத்தின் மூல சிக்கல் எதுவென தெரியவில்லை, ஒருவேளை அவர் மதமாற்றம் செய்யபட்டிருக்கலாம் சில நாடுகளில் “நீ எந்த மதத்தையும் பின்பற்று ஆனால் உன் அடையாளம் இந்தமதம்தான் , அரசு ஆவணபடி அதுதான். […]

இது கண்டிக்கதக்கது

ஏர் இந்தியா நிறுவனத்தில் விமான டிக்கெட்டுகளில் பிரதமர் மோடியின் படம் இடம் பெற்று இருந்தது, தேர்தல் வீதி மீறல் என்பதால் டிக்கெட்டுகளை உடனடியாக திரும்ப பெறுகிறது இது கண்டிக்கதக்கது, மோடி நாட்டின் பிரதமர் மன்னர் அல்ல‌ ஏதோ இது மன்னராட்சி போலவும் , ஏர் இந்தியா அவரின் குடும்ப சொத்து போலவும் டிக்கெட்டில் எல்லாம் அவர் படம் அச்சிடபட்டிருந்தது சரியல்ல‌ அதை நீக்கிவிட்டார்கள் தேர்தல் ஆணையம் என ஒன்று இல்லாவிட்டால் ராணுவத்தின் ஏகே 47 முதல் சுகோய் […]

எங்கள் பிரியதலைவியே வருக

ஏப்ரல் 1க்கு பின் காங்கிரசுக்காக பிரச்சாரம் செய்வேன் : குஷ்பு ஆக உடனே பாஜக அரசின் சொதப்பல்களை குறிப்பெடுத்து வைத்து குவிக்க வேண்டும், அது ஏகபட்டது இருப்பதால் சிக்கல் இல்லை. அதை எல்லாம் கொடுத்து தலைவி பிரச்சாரத்திற்கு வரும்பொழுது அவருக்கு வலு சேர்க்க வேண்டும், இதை விட என்ன பெரிய வேலை இருக்கின்றது? இதை செய்யாவிட்டால் சங்கம் நடத்துவதன் குறிக்கோளே அடிபட்டு போகும், சாத்தான் கூட அதன்பின் நரகத்தில் சேர்க்கமாட்டான் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு ஏன் […]

ஸ்டாலினை சாட‌ கொஞ்சமும் தகுதி கொண்டவர் அல்ல

என்ன இருந்தாலும் அந்த கட்சியில் தனக்கு நினைவு தெரிந்த காலத்தில் இருந்து இருப்பவர் ஸ்டாலின் ஒரு சலூன் கடையில்தான் திமுக இளைஞரணியினை அவர் தொடங்கினார், வரலாறு அப்படித்தான் சொல்கின்றது, அதுதான் அவரை கட்சிக்குள் பலமாக கொண்டுவந்தது கட்சியினை ஒரு நொடியும் பிரியாமல் அதோடு வளர்ந்தவர் ஸ்டாலின் மிசா காலத்தில் சிறையில் ஸ்டாலின் அடிவாங்கியபொழுது கமலஹாசன் என்பவர் பரதநாட்டியம் ஆடிகொண்டிருந்தார் இந்திராவினையும் ராமசந்திரனையும் திமுக எதிர்த்த காலங்களில் கமலஹாசன் ஏராளமான பெண்களோடு கிசுகிசுக்கபட்டுகொண்டிருந்தார் ஸ்டாலின் அரசியலில் போராடிகொண்டிருந்தபொழுது கமலஹாசனுக்கு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications