பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

எப்படி அரசியல் செய்வது?

37 எம்பிக்களை வைத்து என்ன வற்புத்தினீர்கள் என ஆளும் கட்சிக்கு ஏக நெருக்கடி கொடுக்கபடுகின்றது பதில் அவர்களிடமே இருக்கின்றது, ஆனால் அமைதி ஏன் காக்கின்றார்கள் என்பதுதான் தெரியவில்லை முதல் விஷயம் ஜல்லிகட்டு, அந்த மாபெரும் எழுச்சி வெற்றியாக இந்த அரசும் அந்த எம்பிக்களும் காரணம் இன்னும் காவேரி நடுவர் ஆணையம், எட்டு வழிசாலை, ஜிஎஸ்டியில் பங்கு, அது போக பல விஷயங்கள் நடந்தன‌ ஜல்லிகட்டை நாங்கள் மீட்டோம் என மார்தட்டினாலே எதிர்கட்சிகளிடம் பதில் இருக்காது நிறைய விஷயங்கள் […]

ஒய் மைடியர் சன்

“மம்மி, அந்த ஸ்டாலின் பிரதமராக போகுதா? ஒய் மைடியர் சன் பின்னே, தேர்தல் அறிக்கைன்னு என்னமோ வாசிக்குது,நம்ம ஆளுங்க சம்பிரதாயத்துக்கு கூட இல்ல. இது பிரதமர் தேர்தலா இல்ல அவங்க சட்டமன்ற தேர்தலா? ரொம்ப ஷேம் மம்மி மை சன், அவங்கள பத்தி உனக்கு தெரியாது, எங்களை கண்டு அமெரிக்காவும் ரஷ்யாவும் அஞ்சுகின்றன என்றெல்லாம் கூட பேசியவர்கள் அவர்கள்? இஸ் இட் மம்மி, இப்போ கூட அகில இந்திய பிரச்சினை எல்லாம் அவங்க சென்னையிலே சால்வ் பண்ற […]

தேர்தல் துளிகள் 19/03/2019 (3)

காமெடி வரல்ல கார்த்திக் பழனிச்சாமியின் அறிக்கை மிக நன்றாக உள்ளது , அதிமுகவிற்காக பிரச்சாரம் செய்வேன் : நடிகர் கார்த்திக் சமீபத்தில் நடந்த இளையராஜா 75ல் இவர் மேடையில் ஏதோ பேச போக இளையராஜா சொன்னார் “உனக்கு காமெடி வரல்ல கார்த்திக் அதை விட்டுடு” மிக கடுமையாக வலியுறுத்திகொண்டே இருப்போம் பல்வேறு பிரச்சினைகளுக்காக அமையபோகும் மத்திய அரசை வலியுறுத்துவோம் : அதிமுக தேர்தல் அறிக்கை 37 எம்பிக்களை வைத்து இவ்வளவு நாளும் என்ன செய்தீர்கள்? கடுமையாக வலியுறுத்தினோம் […]

தஞ்சை பெரிய கோவிலில் என்ன நடக்கின்றது

தஞ்சை பெரிய கோவிலில் என்ன நடக்கின்றது என்பது குழப்பமாகவே இருக்கின்றது அங்கு கடைசியில் நடந்தது மராட்டியர் ஆட்சி அதன் பின் வெள்ளையர் வந்தனர் அத்தோடு நாடு குடியரசானது இப்பொழுது மராத்தியர் கால கல்வெட்டுகள் புதுபிக்கபடுகின்றது என ஒரு சாராரும் இல்லை தமிழ் கல்வெட்டுகள் இந்தியாக்கபடுகின்றன என இன்னொரு சாராரும் வாதிடுகின்றனர் இதுபற்றி உண்மையான தகவல் இல்லை அப்படி ஏதும் இந்திகல்திணிப்பு நடந்தால் தொல்லியல் துறை மேலான பெரும் நம்பிக்கை தகர்ந்துவிடும், அதன் பின் அக்கோவிலை பாதுகாக்கும் தகுதியினை […]

ஆண்களின் தன்மையினை பொறுத்ததே நாடு

“நாடாக ஒன்றோ, காடாக ஒன்றோ,அவலாக ஒன்றோ, மிசையாக ஒன்றோ,எவ்வழி நல்லவர் ஆடவர்,அவ்வழி நல்லை வாழிய நிலனே”. அதாவது ஏ நிலமே! நீ நாடாகவோ, கழனியாகவோ காடாகவோ, பள்ளமாகவோ அல்லது மேடாகவோ, எப்படி இருந்தாலும் இருக்கலாம் ஆனால் அங்கு வாழும் ஆண்கள் நல்லவர்களாக இருந்தால் நீயும் நல்ல நிலமாக இருப்பாய், அங்கு வாழும் ஆண்கள் சரியில்லை என்றால் நீ நல்ல நிலமாக இருக்க முடியாது ஆண்களின் தன்மையினை பொறுத்ததே நாடு (இது அவ்வையார் பாடல், ஆக அவர் காலத்திலே […]

காலங்கள் மாறலாம், காட்சிகள் மாறுவதே இல்லை..

“சிறிய கள் பெறினே எமக்கு ஈயும் மன்னே,பெரிய கள் பெறினேயாம் பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே,சிறு சோற்றானும் நனி பல கலத்தன் மன்னே,பெருஞ் சோற்றானும் நனி பல கலத்தன் மன்னே, என்பொடு தடி படு வழி எல்லாம் எமக்கு ஈயும் மன்னே,அம்பொடு வேல் நுழை வழி எல்லாம் தான் நிற்கும் மன்னே,நரந்தம் நாறும் தன் கையால்புலவு நாறும் என் தலை தைவரும் மன்னே,அருந்தலை இரும் பாணர் அகன் மண்டைத் துளை உரீஇ இரப்போர் கையுளும் போகிபுரப்போர் புன் கண் […]

விடுவதாக இல்லை, திருந்துவதாகவும் தெரியவில்லை

திமுகவினை பலருக்கு எதற்காக பிடிக்காதோ அதே காரணங்களை அவர்களும் விடுவதாக இல்லை, திருந்துவதாகவும் தெரியவில்லை இந்த ஈழ ஆதரவு பிரிவினைவாதம் முதல் பல விஷயங்களில் அவர்கள் மாறவே இல்லை என்பது தெரிகின்றது இது மகா ஆபத்தானது, இந்த புலிவேட போராளி இம்சைகளை விட ஊழல் கட்சியோ அடிமை கட்சியோ அதிமுக எவ்வளவோ பரவாயில்லை என்பதுதான் இங்குள்ள யதார்த்தமாயிருந்தது அவர்களின் போலி பகுத்தறிவு கொடுமை இன்னொருபுறம் இவை எல்லாம் சேர்ந்துதான் மக்களை அதிமுகபால் தள்ளியது மறுபடியும் மக்களை அப்படியே […]

ஒன்றும் ஆகபோவதில்லை

நடக்க போவது பாராளுமன்ற தேர்தல், ஆட்சி அமைக்க போவது பாஜக அல்லது காங்கிரஸ் நிச்சயமாக திமுக தலமையில் அல்லது அதிமுக தலமையில் மத்தியில் ஆட்சி அமையபோவதுமில்லை அதற்கு வாய்ப்புமில்லை பின்னர் ஏன் இவர்களுக்கு பக்கம் பக்கமாக தேர்தல் அறிக்கை? காங்கிரஸ் அல்லது பாஜக அறிவித்தால் ஒரு நியாயம் ஏற்றுகொள்ளலாம் இவர்கள் இருவரும் சீன பெருஞ்சுவர் நீளத்திற்கு அறிக்கை வாசித்து என்னாகபோகின்றது? ஒன்றும் ஆகபோவதில்லை

இளையவன் என்று இகழ்ந்தால்

“போற்றுமின் மறவீர், சாற்றுதும் நும்மை,ஊர்க்குறு மாக்கள் ஆடக் கலங்கும்தாள் படு சின்னீர்க் களிறு அட்டு வீழ்க்கும்ஈர்ப்பு உடைக் கராஅத்து அன்ன என்னைநுண்பல் கருமம் நினையாது இளையன் என்று இகழின், பெறல் அரிது ஆடே.” எதிரிப்டை வீரர்களே கேளுங்கள், சிறுவர்கள் விளையாடக் கலங்கும்படியான கால் அளவுள்ள நீருக்குள் யானையைக் கொன்று வீழ்த்தி இழுத்துச் செல்லும் முதலையைப் போன்ற வர் எம் தலைவன், அவன் செய்யும் பல செயல்களைக் கருத்தில் கொள்ளாமல், அவனை இளையவன் என்று இகழ்ந்தால், நீங்கள் வெற்றி பெறுவது அரிது.

சொல்லட்டும்

அவரை சுடலை என பல சங்கிகள் சொல்லிகொண்டே இருக்கின்றன‌ சொல்லட்டும் சுடலை என்பது தென்னகத்தின் மிகபெரும் காவல் தெய்வம், அவரை மீறி அவரின் ஏரியாவுக்குள் இன்னொரு சக்தி சென்றுவிட முடியாது சிவபெருமானின் சுடுகாட்டு ஆட்டத்தை மையபடுத்தி நிற்கும் சாமி அவர், சிவனின் அவதாரமாகவே அவர் கருதபடுகின்றார் கேரளா முதல் மதுரையின் எல்லை வரை அவர் ராஜ்யம் கோவில்களில் ஆடுமாடு வெட்ட கூடாது என ஜெயா சொன்னபொழுது சிறுமளஞ்சி “சுடலையே தடை அகலும், தடை போட்டவரும் சரிவர்” என […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications