பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

முக்கியமான இடத்தில் விபத்து

பாகிஸ்தானின் அணுஆயுதம் சேமிக்கபட்டிருக்கும் மிக முக்கியமான இடத்தில் விபத்து நடந்திருக்கின்றது பாகிஸ்தான் சொல்லவில்லை ஆனால் கதிரியக்கத்தை கண்காணிக்கும் சில பன்னாட்டு அமைப்புகளும், செயற்கை கோள்களும் விஷயத்தை மோப்பம் பிடித்துவிட்டன‌ பாகிஸ்தான் வழக்கம் போல “அதெல்லாம் ஒன்றுமில்லை ஹிஹிஹிஹி” என மறைத்தாலும் விஷயம் ஏதோ இருக்கின்றது அந்த இடத்தை தீவிரவாதிகள் தாக்கினார்களா? இல்லை வேறு ஏதும் அசம்பாவிதமா என்ற தகவல் இல்லை, அது வரவும் வராது நிச்சயம் இந்திய கரங்கள் இதில் இல்லை இதெல்லாம் இன்னும் சங்கி மற்றும் […]

தேர்தல் துளிகள் 19/03/2019 (2)

மய்யத்து காமெடி தொடர்கின்றது கோவை சரளா என்னை எப்படி நேர்காணல் நடத்துவது என பொங்கிய ஒரு மய்யத்து நபர் ஒருவர் மய்யல் தீர்ந்து ஓடிவிட்டார், ஓடும் பொழுது “கோவை சரளா எல்லாம்..” என சொல்லி விட்டு ஓடிவிட்டார் அவ்வளவுதான் அம்மணிக்கு கோபம் பொத்துகொண்டு வந்தாயிற்று “என்றா இது, எனக்கு அறிவு இல்லியாடா, நெசமா இருக்குடா? நா அரசியல் பண்ணகூடாதுன்னு எவண்டா சொன்னது? என்றா தகுதி இல்ல என்ட்ட‌, போடா கெரகம் புடிச்சபயல‌” என வானுக்கும் பூமிக்கும் குதிக்கின்றது […]

இதுதான் புரட்சி என கிளம்புவது சரியல்ல..

களம்புகும் எழுத்தாளர் இலக்கியவாதிகள் என ஒரே பரபரப்பு என பத்திரிகைகள் அழிச்சாட்டியம் எழுத்தாளரும் இலக்கியவாதிகளும் இதற்கு முன்பு அரசியலில் இருந்ததே இல்லையா? ராஜாஜி, அண்ணா, கலைஞர், வலம்புரி ஜாண் என எவ்வளவு பெரும் பிம்பங்கள் எல்லாம் உண்டு கண்ணதாசனைவிடவா இன்னொரு இலக்கியவாதி உண்டு? திமுக எழும்பியதே அதன் எழுத்துக்களாலும் பல இலக்கியங்களாலும் ஆசைதம்பி முதல் எத்தனை எழுத்தாளர்கள் அதில் இருந்தனர்? அண்ணா அப்படி ஒரு எழுத்தும் இலக்கியமுமிக்க படையினை உருவாக்கி அரசியல் களத்திற்கு கொண்டுவந்தார், அதை மறுக்க […]

அம்மணிக்கு இருக்கும் ஒரே சிக்கல்

அம்மணிக்கு இருக்கும் ஒரே சிக்கல் என்னவென்றால் மேக் அப் இல்லாமல் வாக்கு கேட்க வந்தால் அவரை யாருக்கும் தெரியாது இதனால் இனி பிரச்சார காலமுதல் அவர் மேக் அப்பிலே இருக்க வேண்டிய கடும் கட்டாயம் ஏற்பட்டாயிற்று, இதற்கே ஒரு குழு அமைக்க வேண்டும் அம்மணிக்கு இருக்கும் லாபம் என்ன தெரியுமா? தேர்தல் செலவு கணக்கில் கம்மல் , வளையல் , உதட்டு சாயம், மல்லிகைப்பூ கணக்கினையெல்லாம் எக்கசக்கமாக எழுதி வைக்கலாம், தேர்தல் கமிஷணும் தயக்கமின்றி ஏற்றுகொள்ளும்

அப்படியும் இருக்கலாம்

முதல் தடவையாக தன் மிகபெரும் எதிரி என்றும் சொல்லபோனால் உண்மையான எதிரி என்றும் சொல்லபடும் இந்து மதத்தை மிக தீவிரமாக தமிழக மண்ணில் திமுக எதிர்கொள்கின்றது என்கின்றது ஒரு தரப்பு இருக்கலாம், திமுக பகுத்தறிவு பேசிய காலங்களில் அவர்களுக்கு எதிரி மதரீதியாக இல்லை காங்கிரஸ் என்ற கட்சியினை எதிர்த்தே அவர்கள் அரசியல் இருந்தது, அதில் சினிமாவினை இன்னபிற விஷயங்களை கலந்து அடித்து ஜெயித்தார்கள் தனி திராவிட பகுத்தறிவில் அவர்கள் ஜெயிக்கவில்லை, சினிமாவும் கண்மூடிதனமான இந்தி, காமராஜர் எதிர்ப்பு […]

காரியத்தில் படு சமத்து

தமிழிசை அக்கா காமெடியாக பேசிகொண்டிருந்தாலும் காரியத்தில் படு சமத்தாக இருந்திருகின்றார் சோபியாவிடம் வம்பிழுத்தது, துப்பாக்கி சூட்டு நேரத்தில் தத்துவம் பேசியது என தூத்துகுடி கடலே பொங்கும் அளவுக்கு அந்த பகுதியினை கோபமூட்டி வைத்திருந்தார் அக்கா ஆனால் தேர்தல் நெருங்க நெருங்க மிக அமைதியாக கொடியேற்றம், கட்சி கூட்டம் என சுற்றி வந்திருக்கின்றார், எதிர்ப்பு ஏதுமில்லை என்பதை கண்டுகொண்டே பின்பே களத்திற்கு வந்திருக்கின்றார் தென் பக்கம் இருக்கும் நாடார் வாக்கு மற்றும் அதிதீவிர இந்துக்களின் வாக்கு வங்கி அவருக்கு […]

டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணிக்கு 34 இடங்கள் – டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு ஓரளவு சரியாக இருக்கலாம், 25 முதல் 30 இடங்கள் அக்கூட்டணிக்கு கிடைக்கும் என்றே கருதபடுகின்றது காங்கிரசுடன் திமுக இணைந்து நிற்கும் பொழுதெல்லாம் அக்கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் பெருவெற்றி பெற்றிருகின்றது அதுவும் ராமசந்திரன், ஜெயா போன்ற சக்திகள் இருந்த காலத்திலே பெருவெற்றி பெற்றிருக்கின்றது என்பது வரலாறு அந்த தரவுகளின் படியும், இப்பொழுது இருக்கும் சூழலிலும் அது நிச்சயம் சாத்தியமே.. இதுவரை அப்படித்தான் இருந்திருக்கின்றது..

விதுர நீதி

“எவன் துன்பமும் எதிர்ப்பும் கண்டு வருந்துவதில்லையோ, எவன் தேடிச்சென்று கவனமாகவும், கடுமையாகவும் உழைக்கிறானோ, சூழ்நிலை கருதித் துன்பங்களைப் பொறுத்துக் கொள்கிறானோ, அவனே மனிதர்களில் முதன்மையானவன். அவன் எல்லா எதிரிகளையும் வென்று விடுவான்” : – விதுர நீதி.

தேர்தல் துளிகள் 19/03/2019 (1)

இதற்கே அலறினால் எப்படி? கோவை சரளா நேர்காணல் செய்ததால் கட்சியிலிருந்து விலகினார் மய்யத்து உறுப்பினர் இதற்கே அலறினால் எப்படி? அடுத்து சகீலாவின் நேர்காணல் விரைவில் வரலாம், அதற்கு பயந்துதான் அன்னார் ஓடியிருப்பாரோ? ஆக இன்னொரு வடிவேலாக கமலஹாசன் உருவாகிவிட்டார், அவரின் பரிதாபமான வீழ்ச்சி தொடங்கிற்று அரசியலில் தோற்றபின் சிவாஜி கணேசன் எனும் மாபெரும் நடிகனுக்கே சினிமாவில் இடமில்லை என்றபின் கமலஹாசன் எம்மாத்திரம்? சு.திருநாவுக்கரசர் திருச்சியில் போட்டியிடலாம் : செய்தி இந்த திருநாவுக்கரசுதான் பொள்ளாச்சி கொடூரனான அந்த திருநாவுக்கரசு […]

சொன்னா கேளுயா

“சொன்னா கேளுயா, காங்கிரசும் நாட்டுக்கு நிறைய செஞ்சிருக்குய்யா, அதை கண்ணால கண்டவ நான் அது உனக்கும் தெரியும், பின்ன ஏன்யா அவ்வளவு பொய்யா சொல்ற..? இன்னொரு தடவை பெரிய பொய்ய சொல்லிட்டு இந்த பக்கம் வந்திராத ஆமா, பொய்யா சொல்லிட்டு நான் ஏழைதாயின் மகன்னு அழுதா யாருக்கு அவமானம்?”

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications