பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சகிக்கமுடியாததாக தெரியவில்லை

புரட்சி என்றால் என்னவென்றே தெரியாதவரை புரட்சி தலைவரென்றும், தியாகத்திற்கு அர்த்தமே தெரியாதவரை தியாக தலைவியியென்றும், ஒரு களமும் காணாதவரை தளபதி என்றும் சொல்லிகொண்டிருப்பதை விட சவுக்கிட்டார் ஒன்றும் சகிக்கமுடியாததாக தெரியவில்லை அப்பக்கமும் ஒருவன் கரும்பை கடித்துகொண்டு நானே செந்தமிழன் என்கின்றார், அவரையெல்லாம் விட்டுவிடுவார்கள்

இவர்களுக்கு யார் கொடுத்தார்?

திராவிட பெயர்களான பேரறிஞர் , கலைஞர், புரட்சி தலைவன், தலைவி, தியாக தீபம் போன்ற பெயர்களை பற்றி சொன்னால் அதெல்லாம் அடுத்தவன் கொடுத்ததாம்? மகாத்மா, நேதாஜி, மூதறிஞர், கர்மவீரர் என்ற பட்டங்கள்தான் மக்களால் வழங்கபட்டது இவர்களுக்கு யார் கொடுத்தார்? மூதறிஞர் ராஜாஜி என அவர் அழைக்கபட்டால் இவர்கள் பேரறிஞர் என அண்ணாவினை அழைத்து கொண்டார்கள், இவர்கள் அழைக்காமல் ஐ.நா சபையா அழைத்தது? தளபதி என பாகிஸ்தான் அரசா பட்டம் கொடுத்தது? புரட்சி நடிகன் என அவரை திமுகவினரே […]

தமாகாவில் ஒருவர்தான் உண்டு

“அமர் விலங்கி, ஆற்ற அறியவும்பட்டார்எமர், மேலை இன்னரால்; யார்க்கு உரைத்தும்’ என்று, தமர் மறையால் கூழ் உண்டு சேறல் அதுவே- மகன் மறையாத் தாய் வாழுமாறு.” அதாவது ஒருவன் தான் களத்தில் இறங்கி போரிடாமல் தங்கள் முன்னோரின் பெருமை பேசி திரிவதும், அதை சொல்லி உணவு பெறுவதும் இழிவானதாகும் தன் மகன் இவன் என சொல்ல ஒரு தாய் அஞ்சும் அளவு அது இகழ்ச்சியாகும் இதெல்லாம் வாரிசு அரசியல் என சொல்லி திரிவோருக்கு பொருத்தமாக இருக்கலாம் அவ்வகையில் […]

எல்லாம் சகவாச தோஷம்

பெரியார்,பேரறிஞர், கலைஞர், புரட்சி தலைவன், புரட்சி தலைவி, தளபதி, திராவிட செல்வன், தியாக தலைவி.எழுச்சி தமிழர், கரும்பு மனிதர் வரிசையில் சவுக்கிட்டார் என ஒருவர் வருகின்றார் இதில் ஆச்சரியம் என்ன? எல்லாம் திராவிடம் காட்டிய வழி, வாழ்க திராவிடம் எல்லாம் சகவாச தோஷம், சென்ட்ரல் நிலையத்திற்கு ஞானஸ்நானம் கொடுக்கும் முன்னால் நிறைய ராமசந்திரன் படங்களை மோடி பார்த்திருப்பார் போலிருக்கின்றது

மகா கவனமாக இருக்க வேண்டும்

செருக்குடை மன்னர் இடைப் புக்கு, அவருள்ஒருத்தற்கு உதவாத சொல்லின், தனக்குத்திருத்தலும் ஆகாது, தீதரம்;-அதுவேஎருத்திடை வைக்கோல் தினல். பொல்லாத‌ அரசர்கள் இருவர் இடையே புகுந்து ஏதும் லாபம் பெற நினைப்பவன் மகா கவனமாக இருக்க வேண்டும் இலலையேல் இரு எருதுகளின் காலுக்குள் விழுந்த “வைக்கோ”லாகிவிடும் நிலை

நாம் நினைப்பதெல்லாமா நடந்து விடும்??

“எழுதியவா றேகாண் இரங்கு மடநெஞ்சேகருதியவா றாமோ கருமம் – கருதிப்போய்க்கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல் முற்பவத்தில் செய்த வினை..”. அதாவது பெரும் திட்டத்தோடும் எதிர்பார்ப்போடும் கற்பக மரத்திடம் சென்றாலும், எட்டிக்காயே கிடைத்ததென்றால் அது நம் முன் வினைப் பயனே. விதியில் எழுதியுள்ளபடிதான் நமக்குக் கிடைக்குமே அல்லாது நாம் நினைப்பதெல்லாமா நடந்து விடும்??

அம்மணி நினைகின்றாரோ

என் கட்சி தலைவியே என்னை அடித்தார், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என அழுத இந்த அரசியல்வாதியினை இந்த‌ தேர்தலில் காணவே இல்லை பழனிச்சாமி ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கின்றார் என அமைதியாகிவிட்டாரோ? தூத்துகுடியில் கனிமொழி வென்றுவிட்டால் பெண் பாதுகாப்பு ஏராளம் கிடைக்கும் என அம்மணி நினைகின்றாரோ என்னமோ..

ஹவாலா பணம்?

இந்த தேர்தல் வந்தாலும் வந்தது, ஹவாலா பணம் உட்பட பல தொழில்களில் இருப்பவர்களுக்கு ஏக சிக்கல். தேர்தல் கமிஷன் பிடிப்பதெல்லாம் பெரும்பாலும் அந்த பணமே மற்றபடி நம் அரசியல்வாதிகளாவது சிக்குகின்றதாவது? “உங்கள் வீட்டு முன்னால் இருக்கும் மரத்தடியினை தோண்டுங்கள், மண்பானையில் ஆயிரம் ரூபாய் இருக்கும் எங்களுக்கு வாக்கு செலுத்திவிட்டு வந்தால் அடுத்த புதையல் இருக்குமிடம் சொல்வோம்” என்று இப்பொழுதே புன்னகைகின்றார்களாம் சில கட்சியினர் அதாவது பணம் எல்லாம் ஏற்கனவே சென்றாயிற்று இது போக மளிகை ஜவுளி வியாபாரிகளை […]

கொடூர வீடியோ அனுப்பும் அன்பர்கள் கவனத்திற்கு

இந்த பொள்ளாச்சி வீடியோ, அந்த வீடியோ இந்த வீடியோ என கொடூர வீடியோ அனுப்பும் அன்பர்கள் கவனத்திற்கு அனுப்பினால் “இளமை எனும் பூங்காற்று..பாடியது ஒர் பாட்டு” ஸ்ரீதேவி போன்ற தரமான வீடியோக்களை அனுப்பவும் அந்த மாபெரும் தத்துவபாடல் பிண்ணணியில் ஒலிக்க கடந்துவிடலாம் இந்த பழைய நடிகை மாதுரி நடித்தது போன்ற கொடூர காட்சிகளை அனுப்ப வேண்டாம் ஆனாலும் அன்றே “தேக சுகத்தில் கவனம்.. காட்டு வழியில் பயணம்” என எழுதி வைத்த கண்ணதாசன் மாபெரும் தீர்க்கதரிசி, ஒரு […]

ஒரு நபரைச் சரியாகப் பார்த்தால்

எப்படி ஒரு மலரில் வாசம் இருப்பதையும், எள்ளில் எண்ணை இருப்பதையும், கட்டைக்குள் நெருப்பிருப்பதையும், பாலில் கொழுப்புச்சத்துக்கள் உள்ளதையும், கரும்பினுள் இனிப்பிருப்பதையும் உணர முடிகிறதோ, அது போலவே ஒரு நபரைச் சரியாகப் பார்த்தால் அவனுக்குள் பரமாத்மா இருப்பதையும் உணர முடியும்.

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications