பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மேலும் சொல்கின்றான் சாணக்கியன்

யானையை ஆயிரமுழ தூரத்தில் வைக்க வேண்டும். குதிரைகளை நூறு முழ தூரத்தில் வைக்க வேண்டும். கொம்புள்ள மிருகத்தை பத்து முழ தூரத்தில் வைக்க வேண்டும், அதுவே பாதுகாப்பு : சாணக்கிய நீதி எம்மை பொறுத்தவரை காங்கிரசை 5 அடி தூரத்திலும், திமுகவினை 15 அடி தூரத்திலும், அதிமுகவினை 50 அடி தூரத்திலும் இந்த பாஜக ஆர்.எஸ்.எஸ் கோஷ்டிகளை 100 அடி தூரத்திலும் தள்ளி வைக்கலாம் இந்த பாமக, தினகரன் எல்லாம் 200 அடி தூரம் தள்ளி வைக்கலாம் […]

அறிவின்மை

ஒரு சினிமாவுக்கு ஆயிரகணக்கில் செலவழிக்கும் தமிழன், ஒரு திருவிழா இன்னபிற சமாச்சாரங்களுக்கு பல்லாயிரங்களை செலவழிக்க தயாராகும் தமிழன் வாக்கு செலுத்த மட்டும் சில நூறுக்கும் ஆயிரத்திற்கும் விலை போவது மாபெரும் வினோதம் கிரிக்கெட் வீரர்கள் பணம் வாங்கிகொண்டு ஆடினால் மட்டும் தமிழனுக்கு அவ்வளவு கோபம் வருகின்றது, ஆனால் இவன் மட்டும் வாக்களிக்க வாங்கலாமாம் கண் காணா கடவுளுக்காக பல்லாயிரத்தை காணிக்கையாய் செலுத்த தயாராக இருப்பவன், கண் முன்னால் தன்னை ஆளபோகும் தலைவனை தேர்ந்தெடுக்க காசை வாங்கிகொண்டு வாக்களிப்பது […]

சவுக்கித்தார்

Chow என்றால் என்ன பொருள் என தேடினால் அது ஏற குறைய சீன மொழியிலும் (Chow ) வடமொழியிலும் ஒரே பொருளில் வருகின்றது சவுக்கி என்பது மக்களை கூடும் இடத்தையும், சவுளி என்பது மக்கள் உடுத்தும் ஆடை விற்கபடும் இடம் என்ற பொருளில் வருகின்றது அந்த சவுளி ஜவுளியாகி இன்றும் துணிக்கடை இங்கு ஜவுளி என்றே அழைப்படுகின்றது, மூலம் அந்த பெயர்தான். இன்னும் ஆழமாக நோக்கினால் சவுக்கம் என மக்கள் கூடும் இடமே பின்னாளில் சதுக்கம் ஆயிற்று […]

தேர்தல் துளிகள் 18/03/2019 (1)

கடும் முயற்சி சாதி அடையாள தலைவர் என்ற அபிமானத்தை மாற்ற கடும் முயற்சியில் இறங்கியிருக்கின்றார் தினகரன் இதனால் தினகரனின் கிட்னியின் கிட்னிகள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றன, இது மறவர் கட்சி அல்ல நாடாருக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கின்றோம், இது சாதிமதற்ற கட்சி என கிட்னிகளுக்கு ஏக மகிழ்ச்சி “ஆக பணம் நிறைய வைத்திருந்தால் எந்த சாதியாலும் உங்களுக்கு சீட் கொடுக்க தயக்கமே இல்லை, அப்படித்தானே?” என கேட்டால் அவர்களிடம் பதிலே இல்லை வாழ்வா? சாவா? அமெரிக்க வெளியுறவு துறையோ, […]

ஆழ்ந்த அஞ்சலி பாரிக்கர் அவர்களுக்கு

இந்த தலைமுறையில் ஊழலுக்கு அப்பாற்பட்டு , மிக மிக எளிமையாக‌ வாழ்ந்தவர்கள் மிக மிக சிலர் அவர்களில் ஒருவரான பாரிக்கர் இப்போது இல்லை எந்த முதல்வருக்கும் இல்லா சிறப்பு அவருக்கு உண்டு, ஐஐடியில் படித்து பட்டம்பெற்று முதல்வரான முதல் நபர் அவர்தான் அவரும் இன்போசிஸ் நிலக்கேணியும் வகுப்பு தோழர்கள் பாரிக்கர் மிகபெரும் பட்டம் வைத்திருந்தார், நினைத்திருந்தால் உலகின் எந்த மூலைக்கும் கோடிகளில் கொட்டபடும் சம்பளத்திற்கு சென்றிருக்கலாம் ஆனால் செல்லவில்லை, தேசபற்று அவரை கட்டி போட்டது கோவா முதல்வராக […]

சமூக நீதி?

இந்த தேர்தலில் 7 தனி தொகுதிகள் உண்டாம், அதாவது தலித் வேட்பாளர்கள் மட்டும்தான் அதில் நிற்கலமாம் சரி மீதி உள்ள 32 தொகுதிகளின் நிலை என்ன என்றால் அதிலும் தலித் வேட்பாளர்கள் தடையின்றி நிற்கலமாம் சில விஷயங்களை நோக்கினால் ஸ்மார்ட் போனை கண்ட சிவகுமார் போல் கோபம் வரத்தான் செய்கின்றது ஆனால் இதை எல்லாம் பற்றி பேசினால் சமூக நீதிக்கு எதிரான சதிகாரன் ஆகிவிடுவோம்

என்ன செய்தது?

ஈழதமிழர்கள் கொல்லபடும் பொழுது பாஜக என்ன செய்தது :அங்கிள் சைமன் வாய்யா வாய்யா.. ஒரு கட்சி விடாமல் அடிவாங்க வேண்டும் அப்படித்தானே 1987ல் கலைஞரின் டெசோவில் வாஜ்பாயும் இருந்தார், பிரபாகரன் சகோதர கொலைகளில் , தமிழ் போராளிகுழுக்களை கொல்ல தொடங்கிய பொழுது இனி ஈழமும் உருப்படாது பிரபாகரன் லட்சகணக்கானோரை சாகடிக்காமல் போகமாட்டான் என சொல்லிவிட்டு ஒதுங்கியவர் வாஜ்பாய் ஆம் பாஜகவும் ஒரு காலத்தில் ஈழதமிழருக்கு ஆதரவாக இருந்தது, அதை கெடுத்தவன் உங்கள் அண்ணன் பிரபாகரன்

தென்னக தொகுதிகள் – பா.ஜ.க

கன்னியாகுமரி, சிவகங்கை, துத்துக்குடி ராமநாதபுரம் என தென்னக தொகுதிகளை குறிவைத்து நிற்கின்றது பாஜக‌ கன்னியாகுமரி, சிவகங்கை, தூத்துகுடிக்கு வேட்பாளர்கள் தெரிவாகிவிட்டது, அதில் சிவகங்கையிலும் தூத்துகுடியிலும் அக்கட்சி டெப்பாசிட் இழப்பதும் உறுதியாகிவிட்டது கோவையிலும், குமரியிலும் அவர்கள் வெல்ல வாய்ப்பு உண்டு சரி இந்த ராமநாதபுரத்தில் நிறக போவது யார்? எல்லா தலைவர்களும் வந்தபின் யார் மீதி இருக்கின்றார்கள்? எமது ஊகம் சரியாக இருந்தால் நயினார் நாகேந்திரன் அந்த ராமநாதபுரத்தில் நிற்கலாம் சாதி, பணம் , பக்தி என பல […]

இன வெறி பயங்கரவாதம்

நியூசிலாந்து பயங்கரவாத தாக்குதலில் ஒரே ஒருவனை மட்டும் குற்றவாளி என அறிவிக்கின்றார்கள், மீதி 20 பேரும் விடுதலையாம் என்ன காரணத்திற்காக சண்டாளன் சுட்டிருக்கின்றான் என்றால் இது “இனவெறி பயங்கரவாதம்” ஆம் கருப்பர்கள் கொல்லபட வேண்டியவர்கள், வெள்ளையர்கள் ஆளபிறந்தவர்கள் எனும் அந்த பழைய வெறியில் ஊறியவன் அந்த வெறியிலே சுட்டிருகின்றான் இவ்வளவிற்கும் நியூசிலாந்தும், ஆஸ்திரேலியாவும் குடியேற்ற நாடுகள். வெள்ளையருக்கு என்ன உரிமையோ அது மற்ற இனங்களுக்கும் உண்டு ஆனால் ஆளபிறந்த குணம் கொண்டவர்கள் அல்லவா? சுட்டுவிட்டார்கள் இந்த இஸ்லாமிய […]

எல்லாவற்றிற்கும் எல்லை உண்டு

எல்லாவற்றிற்கும் எல்லை உண்டு, அதை மீறினால் சிக்கல்தான் தன் எல்லையினை மீறிய அலெக்ஸாண்டர் 33 வயதிலே செத்தான், ஜெர்மனிக்கு மன்னனாக வாழ்ந்திருக்க வேண்டிய ஹிட்லர் எல்லை மீறி ரஷ்யாவிடம் அடிவாங்கி செத்தான் ஏன் மெரினா புரட்சியே ஜல்லிகட்டுக்கு அனுமதி வழங்கியபின்னும் இளநீர், மோர் இன்னும் என்னென்னமோ சொல்லி திசைமாறி வன்முறையாய் முடிந்தது இந்த பொள்ளாச்சி விவகாரமும் அப்படித்தான் அறிவுமயங்கி இல்லை அஞ்சி இல்லை ஏதோ ஒரு நெருக்கடியில் அந்த கயவர்களிடம் பெண்கள் சிக்கியிருக்கின்றார்கள் நடக்க கூடா விஷயமெல்லாம் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications