பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நிச்சயம் இந்த உலகம் நமக்கானது மட்டுமல்ல

வறட்சி ஒருபுறமும், அவைகளின் வாழ்விடங்களில் மனிதர்கள் ஊடுருவி ஆக்கிரமித்து அவைகளை விரட்டுவதாலும் இப்பொழுதெல்லாம் யானை உட்பட காட்டுமிருகங்கள் அடிக்கடி வெளிவந்து சாவது அதிகரித்துவிட்டது நிச்சயம் இந்த உலகம் நமக்கானது மட்டுமல்ல, அவைகளுக்கும் இவ்வுலகில் சரிபங்கு உண்டு. நம் எல்லைக்குள் அவை வருவதே இல்லை, நாமே அதன் எல்லைக்குள் சென்று அவைகளின் வாழ்வினை சாகடிக்கின்றோம் நாம் அறிவில் உயர்ந்துவிட்டோம் என்பதை தவிர என்ன இறுமாப்பு இருக்க முடியும்? அவைகளுக்கு நம் அளவு சிந்திக்க தெரியாது ஆனால் அவைகளும் உயிர், அவைகளும் […]

எது நியாயம் என மனதிற்கு படுமோ அதை எழுதுவோம்

நாம் ஒரு இந்தியன், ஒரு இந்தியனாக இந்நாடு நன்றாயிருக்க வேண்டும் என்பதே எம் நிலைப்பாடு மற்றபடி கட்சி அபிமானம் ஏதுமில்லை, இங்கு சுத்தமான அரசியல் கட்சி என ஏதுமில்லை அப்படி இருக்கவும் முடியாது பரந்த இந்திய வானமும் கடலும் இருக்கும்பொழுது குறுகிய கட்சி வட்டத்துக்குள் நிற்பது ஒருவித சிறை, ஒருவித கட்டுப்பாடு அது எமக்கு சரிவராது. இங்குள்ள யதார்த்த நிலைக்கு 100% சுத்தமான ஆட்சியினை யாரும் கொடுக்கவும் முடியாது எல்லா கட்சிக்கும் நல்ல பக்கங்களும் உண்டு, மோசமான […]

காமராஜரை மனதால் சாகடித்தவர்கள்

காமராஜரை கொல்ல முயற்சித்தது பாஜக அதாவது அந்நாளைய ஜனசங்கம் என சொல்லிகொண்டிருகின்றது ஒரு கோஷ்டி, யாரென உற்றுபார்த்தால் பல திமுக முகம் உண்மையில் காமராஜரை மனதால் சாகடித்தவர்கள் அன்றைய திமுகவினர், ஒன்றா இரண்டா? அம்மனிதனை படாதபாடு படுத்தினார்கள் ஆம் அவரை வீழ்த்திவிட்டால் தமிழ்நாடு தங்களது என கணக்கிட்டார்கள், அந்த காவல் தெய்வத்தை விரட்டிவிட்டால் அரசு கஜானா சுரங்கம் தங்களது என களமிறங்கினார்கள் அம்மனிதன் அப்பொழுதெல்லாம் அமைதியாக கடந்து சென்றானே தவிர ஒருவரையும் பழித்ததில்லை இப்பக்கம் நேருவுக்கு பின் […]

நடந்த வரலாறு என்ன?

இந்து என்ற பெயர் எங்கே இருக்கின்றது என பலர் கிளம்பிவிட்டார்கள், அதற்கெல்லாம் ஆதாரம் சங்க இலக்கியத்திலே இல்லையாம் இது யாருக்கு தெரியாது? இவர்களா கண்டுபிடித்தார்கள்? நடந்த வரலாறு என்ன? அன்று கடல்வழி தொடர்பு பெரிதாக இல்லை, அலெக்ஸாண்டர் காலத்தில் கூட கப்பற்படை இல்லை அப்பொழுது நிலவழி தொடர்பில் இந்தியா இமய மலையாலும் , சிந்து நதியாலும் தனிமைபடுத்தபட்டிருந்தது இங்கு இருந்த மக்கள் தங்கள் மதத்தை தர்மம் என்றும், அறவழி என்று பெயரில் சைவம் வைணவம் பின்பற்றிகொண்டிருந்தனர் பிரிவுகள் […]

மிக பெரும் அறிவாளி ஹாக்கின்ஸ்

ஐன்ஸ்டீனுக்கு அடுத்து மாபெரும் விஞ்ஞானி , மிக பெரும் அறிவாளி அவர். விண்வெளி ஆராய்ச்சி அவரின் பிடித்தமான விஷயம். இளம் வயதிலே டாக்டர் பட்டம் வாங்கிய ஹாக்கின்ஸ் 21 வயதில் மிக கடுமையான நரம்பு நோயினால் பாதிக்கபட்டார் அதாவது கைகால் அசையாது, பேசமுடியாது கிட்டதட்ட பக்கவாத நிலை. என்ன செய்துவிட முடியும்? கிட்டதட்ட வசூல்ராஜா ஆனந்த் சார் போல சப்ஜெக்டாக அவர் வாழ்ந்திருக்க வேண்டும் ஆனால் அவரின் அறிவினை பாழாக்க விரும்பா விஞ்ஞான சமூகம் அவருக்கு பிரத்யோக […]

நாம் அழுத்தமாக சொல்கின்றோம்

நாம் அழுத்தமாக சொல்கின்றோம் இது இந்துக்களின் நாடு, காலம் காலமாக அவர்கள் பெரும்பான்மையாக தொன்றுதொட்டு வாழும் ஒரே நாடு, உலகில் இந்து அடையாளங்களும் அதன் அபூர்வமான தத்துவ கோட்பாடுகளும் நிலைத்துவாழும் ஒரே நாடு அந்த ஜெருசலேமினையும் யூத ஆலயத்தையும் எடுத்துவிட்டால் அதில் என்ன இருக்கின்றது? அது வெறும் பூமி என சொல்லும் யூதரை போல, இந்து மதம் என்ற ஒன்றை எடுத்துவிட்டால் இந்தியாவில் என்ன உண்டு? இந்நாட்டின் மாபெரும் அடையாளம் அம்மதமும் அதன் பாரம்பரியமும், அது நிச்சயம் […]

இவனை பெற்ற அன்னை பரிதாபத்திற்குரியர்

மூடர் முனிதக்க சொல்லுங்கால், – கேடருஞ்சீர்ச்சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே, மற்றவரைஈன்றாட்கு இறப்பப் பரிந்து. அதாவது ஒருவன் செய்யகூடாத செயலை செய்யும் பொழுது அவனை காண்போர், “இவனை பெற்ற அன்னை பரிதாபத்திற்குரியர்” என சொல்வர் உலக இயல்பு அதுதான் அந்த அற்புதம்மாள் வரிசையில் பொள்ளாச்சி திருநாவுக்கரசு தாயாரும் சேர்ந்துவிட்டதுதான் சோகம் மிக வலுவான ஆதாரங்களுடன் அவன் சிக்கிவிட்டபின்பும் இன்னும் என்மகன் குற்றமற்றவன் என தாய்பாசத்தில் அந்த அன்னை அழும்பொழுது பரிதாபம் தவிர ஏதும் மிஞ்சவில்லை

பின்னாளில்தான் அறியபடுவார்கள்

“பத்தினி, சேவகன், பாத்து இல் கடுந் தவசி,பொத்து இல் பொருள்-திறத்துச் செவ்வியான், பொத்து இன்றி வைத்தால் வழக்கு உரைக்கும் சான்றான், – இவர் செம்மை செத்தால் அறிக, சிறந்து..” பத்தினியும், சேவகனும், குற்ற மில்லாத கடும் முனிவரும், , நல்ல அரசனும், சான்றோனும் பின்னாளில்தான் அறியபடுவார்கள்

இதை விட மோசமான நோய் உண்டா?

“அரம் போல் கிளை. அடங்காப் பெண், அவியாத் தொண்டு, மரம் போல் மகன், மாறு ஆய் நின்று கரம் போலக் கள்ள நோய் காணும் அயல், ஐந்தும் ஆகுமேல், உள்ளம் நோய் வேண்டா, உயிர்க்கு.” அதாவறு சூழ்ந்திருக்கும் மோசமான சொந்தம், அடங்கா மனைவி, உதவிக்கு யாருமில்லா தனிமை, என்ன சொன்னாலும் திருந்தா மகன் என ஒருவனை பல விஷயங்கள் சூழ்ந்திருக்க, அவனுக்கு வெளியிருந்து வரும் நோய் எதற்கு? இதை விட மோசமான நோய் உண்டா?

நினைவில் வைத்து கொள்வது நல்லது

“பண்டாரம், பல் கணக்கு, கண்காணி, பாத்து, இல்லார், உண்டு ஆர் அடிசிலே, தோழரின் கண்டாரா, யாக்கைக்குத் தக்க அறிவு இல்லார்க் காப்பு அடுப்பின்,-காக்கையைக் காப்பு அடுத்த சோறு..” பண்டாரங்களையும், பூசாரிகளையும், தேவதாசிகளையும் , கணக்கு பிள்ளையினையும் மிகுந்த காவலோடு கண்காணிக்க வேண்டும் இல்லாவிட்டால் சோற்றுக்கு காக்கைகளை காவல் வைத்ததது போல் நிலமை சிக்கலாகிவிடும் இதை அதிமுக கூட்டணி நினைவில் வைத்து கொள்வது நல்லது

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications