பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

முஸ்லீம் லீக் கொடியினை எரித்த சங்கிகள்

பாகிஸ்தான் கொடிக்கு பதிலாக முஸ்லீம் லீக் கொடியினை எரித்த சங்கிகள் புல்வாமா தாக்குதலில் கொல்லபட்ட வீரர்கள் என விடுதலைபுலிகளுக்கு அஞ்சலி செலுத்திய சங்கிகள் இப்பொழுது Surf Excel விளம்பரத்தை கண்டித்து Microsoft Excelலை பயன்படுத்தமாட்டோம் என புறக்கணிக்கின்றார்களாம் சிலரின் பார்வை TVS XL மேலும் திரும்பியிருப்பதாக செய்தி

காங்கிரசின் போராட்டமும் வெல்லட்டும்

மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு சோனியா குடும்பம் சென்றிருக்கின்றது மதவாத சக்திகளுக்கு எதிரான போராட்டத்தினை, அந்த புனிதமான இடத்திற்கு சென்று ஆசிவாங்கி தொடங்குகின்றார் ராகுல் பிரச்சாரத்திற்கு முன்பு ராகுலும் பிரியங்காவும் சோனியாவும் மன்மோகன்சிங்கும் காந்தி ஆன்மா வாழும் ஆசிரமத்திற்கு சென்றிருப்பது பலத்த வரவேற்பினை பெற்றிருக்கின்றது மகாத்மாவின் போராட்டம் வென்றது போல காங்கிரசின் போராட்டமும் வெல்லட்டும்

நக்கீரன் போன்ற பத்திரிகைகளும் நாட்டுக்கு தேவையே

நக்கீரனை பற்றி தெரியாதா என பலர் கிளம்பியிருக்கின்றார்கள் ஆட்டோ சங்கர் கதை முதல் சசிகலாவின் மர்ம சாம்ராஜ்யம் வரை வெளிகொணர்ந்தது அவர்கள்தான் சந்தண வீரப்பனை முதலில் வெளி உலகிற்கு காட்டியதும் அவர்கள்தான் நிர்மலா தேவி மர்மத்தை முதலில் சொன்னவர்களும் அவர்கள்தான் இந்த பொள்ளாச்சி விவகாரத்தில் மூடி மறைக்கபட்ட மாளிகையின் அடிக்கல்லை அசைத்ததும் அவர்கள்தான் ( மற்றபடி இந்த திராவிடம், புலிகள் என கிளம்புவதெல்லாம் அவர்களின் காமெடி ரகம்..) பொள்ளாச்சி சம்பவத்தை அவர்கள் கிளறிய பின்பே இன்று குற்றவாளிகள் […]

இவ்வளவுதானா விஷயம்?

பொள்ளாச்சி கொடூரத்தை எதிர்த்து கனிமொழி ஏற்பாடு செய்த கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு, தேர்தல் நடத்தை விதி என கோட்டாட்சியர் பதில் இவ்வளவுதானா விஷயம்? திமுக பிரச்சார கூட்டம், திமுக கண்ட‌ பெண் விடுதலை பாரீர் என கூட்டத்தை கூட்டினால் இந்த கோட்டாட்சியர் என்ன செய்வார்? அப்படி அனுமதி வாங்கி கலைஞர் செய்த பெண் விடுதலை காரியங்களை விளக்கிவிட்டு சந்தடி சாக்கில் பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்துவிட்டும் வரலாம் கலைஞர் மகளான கனிமொழிக்கு இதை எல்லாம் சொல்லி கொடுக்க வேண்டுமா […]

இதற்கெல்லாம் அஞ்சுபவரா அங்கிள் சைமன்?

தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை – மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை இதற்கெல்லாம் அஞ்சுபவரா அங்கிள் சைமன்? “ஒரு சின்னமும் வேண்டாம், எல்லா கட்சிக்கும் எல்லா சின்னமும் அழியவேண்டும். அந்த கட்சிக்கார பயல் எல்லாம் சின்னம் இல்லாமல் போட்டியிடுவானா? நாம் தமிழர் கட்சி எந்த சின்னத்திலும் போட்டியிடும்” என முன்பே சொன்னவர் செந்தமிழன் ஆக இரட்டை மெழுகுவர்த்தியினை கரைத்துவிட்டார்கள் அன்னார் விடுவாரா? ” இரட்டை துடைப்பம்”, “இரட்டை ஆமை” […]

ஈழத்தில் என்ன பிரச்சினை

அமைதிபடை அட்டகாசம் தெரியாமல் பேசுகிறாய் என்கின்றனர் சிலர். அமைதிபடைக்கு முன்பே 1980 ஜேவிபி கிளர்ச்சியும் அதனை அடக்க இந்திய ராணுவம் கொழும்பிற்கு சென்றதும் இவர்களுக்கு தெரியுமோ தெரியாதோ? தெரியாவிட்டால் விட்டுவிடலாம். அதாவது அன்றிலிருதே இன்னொரு மூன்றால் நாடு இலங்கையில் தலையிடுவதை இந்தியா அனுமதிப்பதில்லை. ஈழ போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே பிரபாகரன் இந்தியாவினை ஒதுக்கிதான் வைத்தார், போராளிகளுக்கு பயிற்சிகள் தொடங்கிய காலத்திலும் வேண்டா வெறுப்பாக இறுதியில் வந்து சம்பிரதாயத்திற்குதான் கலந்து கொண்டனர் புலிகள். அவ்வப்போது இந்தியாவுடன் மோதும் சூழ்நிலை வரலாம் […]

அந்த ஜப்பான் துயரம்

அந்த ஜப்பான் துயரம் நடந்து இன்றோடு 8 வருடம் ஆயிற்று புக்குஷிமா எனும் அணுவுலை சுனாமியால் பாதிக்கபட்டு, அது தொடங்கி ஜப்பான் நடத்தும் பெரும் போராட்டம் இன்றோடு 6 ஆண்டுகளை கடக்கின்றது இதில் எந்த அளவு முன்னேற்றம் ஜப்பானிய அணுகழிவு நடவடிக்கையில் ஏற்பட்டிருக்கின்றது என்றால், ஜப்பானிய அரசும், அணு நிபுணர்களும் தலைகுனிந்து நிற்கின்றார்கள் அதனால் இன்னும் பெரும் ஆபத்து நீடித்துகொண்டே இருக்கின்றது, முழுவது களைய 10 லட்சம் கோடி செலவாகலாம் என கணிக்கபட்டுள்ளது பணம் கூட சிக்கலில்லை, […]

பாலியல் கல்வி வேண்டும் – குஷ்பு

“கற்பு என்பது எல்லோருக்கும் பொதுவானது, இங்கு பாலியல் கல்வி வேண்டும், ஒரு பெண் தனக்கு இழைக்கபடும் அல்லது அணுகபடும் பாலியல் விஷயங்களை வெளிப்படையாக தெரிவிக்க வழி செய்ய வேண்டும் இங்கு பெண்களுக்குள்ள மிக பெரும் மிரட்டல் என்னவென்றால் அவர்கள் மனதால் பயந்தவர்கள், இச்சமூகம் அப்படி அவர்களை அடக்கி பயமுறுத்தி வைத்திருகின்றது அதை மாற்ற வேண்டும் பெண் சுதந்திரம் என்கின்றோம் இன்னும் ஒரு பெண்ணும் தனக்கு உரிமையான, தனக்கு மட்டுமே உரிமையான விஷயங்களை வெளி சொல்லவும் முடியாது பேசவும் […]

தேர்தல் துளிகள் 12/03/2019 (1)

” அங்க உங்கள விட்டா யாரு இருக்கா?” அட போடா கிறுக்கு பயலே.. என்ன கொண்டாடின அளவுக்கா உன்ன தமிழ்நாட்டு பய கொண்டாடிட்டான்? எப்படி எல்லாம் என்ன இந்த தமிழ்நாடு கொண்டாடிச்சின்னு உனக்கு தெரியுமா? எம்ஜிஆரை விட எனக்கு ரசிகன் அதிகம்ப்பூ.. எனக்கு தேர் என்ன? 60 பவுணுல சங்கிலி என்ன? எப்படி எல்லாம் இருந்தேன் தெரியுமா? வீட்டை விட்டு நான் வெளியே வந்தா, கன்னியாகுமரி வரை அதே கூட்டம் இருக்குமே , எனக்காக கலையாம இருக்குமே, […]

டாக்டர் சாந்தா

தமிழகக பெண்களில் மிகபெரும் பிம்பம் அவர், அரசியலுக்கு கலைஞர் என்றால் சந்தேகமின்றி சொல்லலாம் தமிழக‌ புற்று நோய் ஆராய்ச்சிக்கு அவர்தான் மிகபெரும் தொண்டாற்றியிருக்கின்றார் டாக்டர் சாந்தா அவரின் குடும்ப பாரம்பரியமே மிக பெரிது, நோபல் பரிசு பெற்றவர்களான சர் சிவி ராமனும், சந்திரசேகரும் அவரின் முன்னோர்கள் அவர்கள் இயற்பியலில் பிரகாசித்தது போலத்தான் இவரும் பிரகாசிக்க வேண்டும் என வளர்க்கபட்டார். இது குலகல்வி முறை அல்ல, குலபெருமையும் அல்ல மாறாக முன்னோர் சாதித்ததில் சாதிக்க வேண்டும் என்ற ஒரு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications