பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சற்று அறிவு குறைவு தான்

அவர்களுக்கு சற்று அறிவு குறைவுதான், ஒரு மாதிரி கூட்டம்தான் ஆனால் இவ்வளவு குறைந்திருக்கும் என வட இந்திய மாடு கூட நினைத்திருக்காது அதாவது உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் நகரத்தில் உள்ள பா.ஜனதா கட்சி அலுவலகத்தில் மரத்தலான ஒரு நாற்காலியை ஒரு சிறிய கண்ணாடி அறையில் வைத்து பாதுகாத்து வருகிறார்கள். எதற்காக என்றால் உபி மோடி வந்து அவர் அதில் அமரும் பொழுதெல்லாம் அவரும் அவர் கட்சியும் வெற்றிபெறுமாம் அப்படித்தான் மோடி பிரதமரானாராம், யோகி முதல்வரானாராம் இப்பொழுது உபி […]

எது நாகரீகம்

திமுகவுக்கு நாகரீகம் இல்லை, அமைச்சர் ஜெயகுமார் ஆவேசம் அதானே, ஆளுநர் என் கையினை பிடித்து இழுத்தார் என்றால் அது நாகரீகம்.. ஐ.ஏ.எஸ் அதிகாரி மேல் ஆசிட் ஊற்றினால் அது நாகரீகம் தெருமுனை குழாயில் நீர்வரவில்லை என்றாலும் கருணாநிதி ஆட்சி டிஸ்மிஸ் செய்யபட வேண்டும் என அறிக்கையிட்டால் அது நாகரீகம் 1 ரூபாய் சம்பளம் வாங்கிகொண்டு ஊழல் வழக்கில் சிக்கி சிறைசென்றால் அது நாகரீகம் இன்னும் புதுபுது “கூவ நதிக்கரை” நாகரீகத்தை எல்லாம் உலகிற்கு சொனவர்கள் அதிமுகவினர்

பிரதமர் பொய் சொல்வதை ஏற்க முடியாது

பாகிஸ்தானிலிருந்து பைலட்டை மீட்டோம் இலங்கையிலிருந்து மீணவரை மீட்டோம் : மோடி இப்படி எல்லாம் அரசியல் காரணங்களுக்காக பிரதமர் பொய் சொல்வதை ஏற்கமுடியாது அபினந்தனை மீட்க இந்தியா பெரும் நடவடிக்கை எடுக்கவில்லை, ஏன் எந்த நிபந்தனைக்கும் கட்டுபடமாட்டோம் என்றே சொன்னது உண்மையில் இறங்கி வந்தது பாகிஸ்தான் ராணுவம், அது அனுமதியின்றி அபினந்தன் வந்திருக்க முடியாது கவனியுங்கள், என்னதான் ஐநா சட்டம் இருந்தாலும் சில பேச்சுவார்த்தை சில ஒப்பந்தம் தவிர எந்த நாடும் கைதியினை விடாது, ஆனால் பாகிஸ்தான் ஒன்றுமேயின்றி […]

தேர்தல் துளி 07/03/2019(2)

எப்படி இவரால் சொல்லமுடிகின்றது? நயினார் நாகேந்திரனை இவர் இப்படித்தான் பாஜக பக்கம் அனுப்பியிருப்பாரோ? ******** “பிரபாகரன் மேல் சத்தியமாக இனி இந்திய எதிர்ப்பு பேசமாட்டேன்…….. ஆமைகறி தந்தாலும் இந்திய ராணுவத்தை, இந்திய தேசியத்தை எதிர்க்கவே மாட்டேன்..” ******** இந்த விவாத நிகழ்ச்சி டிவிக்கள் உடனே துரைமுருகனையும் சுதீஷையும் ஒன்றாக அமர்த்தி பேச வைக்க வேண்டும் அதிர வைக்கும் பல விஷயங்கள் வரும்போல் தெரிகின்றது. ******** கன்னியாகுமரியில் 13ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவார் ராகுல்காந்தி : கே.எஸ் […]

கலைஞரின் அணுகுமுறை

அது அண்ணா கட்சி நடத்திய காலம், மிகவும் எதிர்பார்த்த ஒருவருக்கு அன்று சீட் கிடைக்கவில்லை அதைவிட முக்கியமான விஷயம் அவருக்கு பிடிக்காதவருக்கு சீட் கிடைத்தது மனிதர் கொதித்து போய் அண்ணாவிடம் நியாயம் கேட்டார், தன் இயல்பான புன்னகையில் நிதானித்து சொன்னார் அண்ணா “தம்பி ஒரு பெண்ணிடம் இரண்டு பட்டுசேலைகள் ஒரே நேரம் கிடைத்தால் பொங்கலுக்கு ஒன்று, தீபாவளிக்கொன்றாக கட்டுவாளா? இல்லை ஒரே நேரத்தில் கட்டுவாளா? இன்று அவனுக்கொரு வாய்ப்பு கொடுத்தான் அண்ணன் உனக்கொரு வாய்பினை நாளை தரமாட்டேனா? […]

தேர்தல் துளிகள் 07/03/2019 (1)

கலைஞர் இருந்திருந்தா “தம்பி இரு இடம் வேண்டுமா? இதயத்தில் இடம் வேண்டுமா?”னு கேட்டு உருக வச்சிருப்பாரு புள்ள‌ இவனுக இதயத்தில் இடம் வேணுமான்னு கூட கேட்கல புள்ள அதான் வருத்தமா இருக்கு… ஆமாங்க, பால் காலியாயிட்டுன்னு கூட சொல்லியிருக்கலாம் ********* அக்கட்சி ராமசந்திரன் காலத்திற்கே திரும்பிவிட்டது ஆம் யார் வலுவான தலைவரோ அவர்கள் காலில் விழுவதில் என்றுமே அதிமுகவிற்கு வருத்தமே இருந்ததில்லை இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை ******** 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி : சரத்குமார் கட்சியில் […]

அவரவர் எல்லைக்குள் போராடலாமே

GobackModi எனும் கோஷம் பாகிஸ்தானில் இருந்து வரட்டும், பங்களாதேஷில் இருந்தும் வரட்டும், ஏன் அண்ட சராசர விண்வெளிக்கு அப்பால் இருந்தும் வரட்டும் ஆனால் வோட்டு இந்திய மக்கள்தான் செலுத்த வேண்டும், மிக சில காலங்களை தவிர தமிழக பாராளுமன்ற முடிவுகள் மத்திய அரசை பாதிப்பதே இல்லை ராஜிவ் காலத்திற்கு பின் மோடிகாலத்தில் அது திரும்பி விட்டது இடைபட்ட வாஜ்பாய் காலமுதல் மன்மோகன் காலம் வரை அக்குழப்பம் இருந்தது அதில் திமுக பங்குபெற்று பலனும் வளமும் அடைந்தது அந்த […]

பழைய காட்சிகள் திரும்பலாம்

அமெரிக்க வடகொரிய சந்திப்பு தோல்வியில் முடிந்திருக்கின்றது தமிழ்பட வில்லன் பாணியில்” நீ என்னிடம் அடிமையாய் காலுக்குள் இருக்கணும், என்ன எதிர்த்தா என்ன ஆகும்னு உலகத்துக்கு தெரியணும்” என டிரம்ப் பேசிவிட “போடா..டேய்” என்ற ரீதியில் வந்துவிட்டார் வடகொரிய அதிபர் வரட்டும் அவன் பழைய பன்னீர்செல்வமா வரட்டும் என்பது போல் இருக்கின்றது அமெரிக்கா அதற்கேற்றார் போல் மீண்டும் ராக்கெட் வடகொரியா என தன் பழைய ரவுடி இமேஜூக்கு திரும்புகின்றது அந்நாடு விரைவில் பழைய காட்சிகளை மறுபடியும் எதிர்பார்க்கலாம் அட […]

நல்ல தலைவன் தேடல்

உலக மீடியாக்கள் எவ்வளவு கரித்து கொட்டினாலும் வடகொரியாவுக்கும் கிம்முக்கான ஆதரவு சற்றும் குறையவில்லை மக்கள் அதிருப்தி , புரட்சி அது இது என கொஞ்சமும் சத்தமில்லை அம்மக்கள் அந்த தலைவனை கொஞ்சமும் தயக்கமின்றி ஏற்றிருக்கின்றார்கள் , அதில் மிக்க மகிழ்ச்சியும் கொண்டிருக்கின்றார்கள் ஈரானில் அந்த புரட்சிபடை ஆட்சியினை தக்கவைத்திருப்பதும் இப்படியே ஏதும் தடை என்றாலோ பட்டினி போட்டாலோ அம்மக்கள் பொங்கி எழுந்து அந்த அரசை மாற்றுவார்கள் என்பது அமெரிக்க கணக்கு ஆனால் அவர்களோ அத்தலைவர்களை கைவிடுவதாக இல்லை […]

இதென்ன அநியாயம்?

இதென்ன அநியாயம்? இந்திய அரசை பற்றி அதன் வலுவான தலமை பற்றி சொன்னால் அதில் பாஜக மோடி பற்றி சொன்னால் நீ கிறிஸ்தவனா என ஏகபட்ட குரல் புலிகளை பற்றி சொல்லும்பொழுது நீ தமிழனா என கேட்கபட்ட கேள்விக்கான பதில்தான் இப்பொழுதும் ஆம், நான் இந்தியன் ஆனானபட்ட கலாமையே நீ இஸ்லாமியனா என கேட்ட சமூகம் என்னை விடுமா? விடாது நான் ஒரு இந்தியன் அதை உரக்க சொல்லமுடியும். வலுவான தலமையாக வரட்டும், வரவேற்போம் சாஸ்திரி, இந்திரா, […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications