பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இந்திய அமைதிபடை

இதே அக்டோபர் 10ம் தேதிதான் 29 வருடங்களுக்கு முன்பு இந்திய அமைதிபடை புலிகள் மோதல் தொடங்கியது. ஈழவரலாற்றில் முக்கியமான காலம் அது, புலிகள் ஈழதமிழரின் எதிர்காலத்தை,நிம்மதியினை ஒழிக்க தொடங்கிய நிகழ்வு அது ஏதோ அமைதிபடை என்பது புதிதாக சென்றது அல்ல, முன்பே சென்றது, இது தெரியாமல் பலர் புலம்புவர் அமைதிபடைக்கு முன்பே ஜேவிபி கிளர்ச்சியும் அதனை அடக்க இந்திய ராணுவம் கொழும்பிற்கு சென்றதும் இவர்களுக்கு தெரியுமோ தெரியாதோ? தெரியாவிட்டால் விட்டுவிடலாம். அதாவது அன்றிலிருதே இன்னொரு மூன்றால் நாடு […]

மனோரமா

மனோரமா ஆணாதிக்கம் மிக்க தமிழ் திரையுலகில் ஒரு சில பெண்களே அடையாளமிட்டார்கள், ஆனால் ஒரு கட்டத்தில் விலகிவிட்டார்கள் சுந்தராம்பாள், கணம்பாள், டி.ஆர் ராஜகுமாரி என ஒரு வரிசை உண்டு. சாவித்திரி சரோஜா தேவி, சவுகார் ஜாணகி என அடுத்த வரிசை உண்டு , ஜெயலலிதா அரசியலில் நடிக்க வந்தார் , அப்போல்லோ நடிப்பினை மட்டும் உலகம் பார்க்கவில்லை மற்றபடி எல்லா நடிகைகளும் ஒரு கட்டத்தில் இடைவெளி எடுத்தவர்கள் அல்லது ஓடியவர்கள் ஆனல் தமிழ் சினிமாவில் இறுதிவரை நிலைத்து […]

சிதறல்கள்

பூஜை திருநாட்களையொட்டி எல்லா வீடுகளிலும் கொலு வைக்கின்றார்களாம், அதாவது அழகான பொம்மைகளை சிலைகளை வைத்து அலங்கரிக்கின்றார்களாம் இந்த பொம்மையினை விடவா அழகான கொலு பொம்மை உலகில் உண்டு? ஆனால் ஏனோ இந்த பொம்மையினை யாரும் வைக்கவில்லை என தகவல்கள் சொல்கின்றன, பெரும் விசித்திரம் இது இம்முறை சங்கத்தார் வீடுகளில் கொலுவில் இந்த பொம்மை இருந்தாக வேண்டும் என சங்கம் வலியுறுத்துகின்றது, சங்கத்து செயலாளர் Periya Samy அவர்கள் வீட்டில் இந்த அழகிய பொம்மை முதன் முதலாக‌ கொலு […]

வைத்தியநாத அய்யர்

பிராமணர் எல்லாம் பொல்லாதவர்கள், சாதி பார்ப்பவர்கள் அடுத்த சாதியினை ஆலயத்திற்குள் விடாத கொடுமதியாளர்கள் அவர்களை விரட்டாமல் சமூக நீதி இல்லை என சொல்லிகொள்ளும் கும்பல் இங்கு எக்காலமும் உண்டு அப்படியே இந்த சமயசீர்திருத்தம், சமூக சீர்திருத்தம் எல்லாம் வெள்ளையனும் திராவிட இயக்கமும் கொண்டுவந்தது என சொல்லும் கும்பலும் எக்காலமும் உண்டு உண்மையில் இங்கு இந்துசமயத்தின் பல கொடுமைகளை இந்துக்களே எதிர்த்து சீர்படுத்தினர். இந்த உடன்கட்டை ஏறும் கொடுமையினை தடுத்த மோகன்ராய் ஒரு இந்து, குழந்தை திருமணமத்தை தடுக்கும் […]

வடிவேலு

எங்கு வாழ்ந்தாலும், எப்படி வாழ்ந்தாலும், எல்லா தமிழர்களின் மனதிலும் ஒரு கிராமத்துக்காரன் வாழ்ந்துகொண்டே இருக்கின்றான் கிராமத்து சாயல் உறங்கிகொண்டே இருக்கின்றது அதனை சரியான கலைஞர்கள் திரையில் காட்டும்பொழுது தமிழன் அதனை கொண்டாடுகின்றான், தன்னில் ஒருவன் வந்துவிட்டது போல உணருகின்றான் அந்த கிராமத்து மனம், உணர்விலும் ரத்ததிலும் கலந்துவிட்ட அந்த உணர்வு அப்படி ஒரு மனிதனை கண்டவுடன் தழுவி கொள்கின்றது மக்கள் அபிமானம் பெற்ற பெரும் நகைச்சுவை கலைஞரான வடிவேலு அப்படித்தான் மக்கள் மனதில் இடம்பிடித்தார். அவர் நகைச்சுவைகாட்சிகள் […]

சிதறல்கள்

காலையிலே பிரகாசமாக இருப்பது சூரியனும் தலைவி முகமுமே…. [ October 9, 2018 ] ============================================================================ திரைதுறையில் பாலியல் குற்றசாட்டுக்கள் வருவது புதிதல்ல, வராமல் இருந்தால்தான் ஆச்சரியம். அங்கிருக்கும் பலவாறான சூழல்களும், இன்னும் பல விஷயங்களும் அதற்கு துணைபோகின்றன‌ விஷயம் இதுகாலம் நடிகர்கள்மேல் இன்னபிற கலைஞர்கள் மேல் இருந்தது, இப்பொழுது கவிஞர்கள் மேலும் திரும்பி இருகின்றது பொதுவாக ரசனை மிகுந்தவர்கள் கவிஞர்கள், அழகில் மயங்கும் மனம் அவர்களுடையது சந்தேகமில்லை ஆனால் மேக் அப் இல்லாத நடிகைகளை பார்த்ததால் […]

சே குவேரா

இந்த உலகம் மகா சுயநலமானது, போராட வருபவர்கள் கூட தன் இனம், தன் மதம், தன் மொழி, தன் நாடு என்றுதான் போராட வருவார்கள். அப்படித்தான் பல புகழ்பெற்ற போராளிகளை உலகம் கண்டிருக்கின்றது, அதாவது கலைஞரின் வசனத்தில் சொல்வதென்றால் “அந்த பொதுநலத்திலே சுயநலமும் கலந்திருக்கின்றது” மறுக்க முடியாது. ஆனால் முதலும், கடைசியுமாக மனித அடக்குமுறைகு எதிராக, ஒருவன் நாடு கடந்து, எல்லை கடந்து, போராடும் மக்களுக்காக சென்று போராடி உயிர்விட்டான் என்றால் வரலாற்றில் நிலைத்துவிட்ட ஒரே பெயர் […]

பா ராகவன்

பா ராகவன் இன்றைய தமிழ் எழுத்தாளரில் நம்பர் 1 அவர்தான். கிரீடம் நிரந்தரமாக சூட்டியாயிற்று. கண்ணுக்கு எட்டியவரையில் இன்னொருவன் அவர் இடத்தை நெருங்குவது இப்போதைக்கு சாத்தியமே இல்லை. ஆழ்வாரும் , அடியார்களும் , கண்ணதாசனும், கொஞ்சம் ஸ்டீப் ஜாப்ஸும், அதிகம் நளனும் கலந்த அற்புத எழுத்தாளர் அவர் பா ராகவன் எம்பெருமானுக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெய்வமே, பல்லாண்டு வாழ்க, இன்னும் பலநூல்கள் எழுத. எமக்கெல்லாம் உலகினை திறந்து காட்ட‌ உண்மையில் நல்ல இஸ்லாமிய தலைவனும், நல்ல […]

இந்திய விமான படையின் 86ம் ஆண்டு விழா

இன்று இந்திய விமான படையின் 86ம் ஆண்டு விழா வெள்ளையன் காலத்திலே 85 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கபட்டது நம் விமானபடை. அன்று இரண்டாம் உலகபோருக்காக வெள்ளையன் தொடங்கினான் சுதந்திர இந்தியாவில் அதுவும் சீன போருக்கு பின் நம் விமானபடை வலுபடுத்தபட்டது. இன்று மிக சிறந்த விமானபடை வரிசையில் இந்தியாவிற்கும் இடமுண்டு. கார்கில் போரில் இந்திய விமானபடையின் அபார நடவடிக்கையாலே வெற்றி கிட்டியது. அதற்கு முந்தைய காலகட்டங்களின் பல போர்களில் இந்திய விமானபடையின் பங்களிப்பு பெரிது, பாகிஸ்தானுடனான எத்தனையோ […]

பி.ஆர் பந்துலு

பி.ஆர் பந்துலு அவர் கோலார் பக்கம் கர்நாடகாவில் பிறந்தவர், பேசா படங்கள் வந்தபொழுதே நடிக்க வந்தவர், பலருடன் பணி புணிபுரிந்தார், பின் சொந்தமாக கம்பெனி தொடங்கி தடுமாறி கொண்டிருந்தார் ஓரளவு அவர் வெளிதெரிந்த காலங்களில்தான் சிவாஜி கணேசனின் பிரவேசம் நடந்தது. சிவாஜிக்கும் பந்துலுவிற்கும் அப்படி ஒரு சிநேகம் ஒட்டிகொண்டது கத்துவார்கள், சண்டையிடுவார்கள் இருவரும் பேசாமல் முரண்டு பிடித்த காலங்களும் உண்டு. ஆனால் பிரியவில்லை சிவாஜி மேல் மிக பிரியமும் உரிமையும் கொண்டிருந்தவர் பந்தலு அப்பொழுதுதான் வீரபாண்டிய கட்டபொம்மன், […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications