பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அரசியல் அழிச்சாட்டியம்

டிரம்ப் ஒரு பொய்யர் என உலகமே சொல்லிகொண்டிருக்கும் பொழுது ஆம், நான் அப்படித்தான் என்பது போல பேசிவிட்டார் டிரம்ப் அவர் சொல்லியிருப்பது இந்த சங் பரிவார கும்பலுக்கு காதில் தேன் வந்து பாயும் செய்தி. அதாவது இந்திய அரசு அடிமட்ட மக்களை நடுத்தர மக்களாக்கும் மாபெரும் திட்டத்தில் வெற்றிபெற்று கொண்டிருக்கின்றது, இந்தியாவில் ஏழைகள் குறைகின்றார்கள் இது மோடி அரசின் சாதனை என சொல்லிவிட்டார் போதாதா? பாஜக கும்பல்களை இனி கேட்க வேண்டுமா? சும்மாவே ஆடுவார்கள் இனி சலங்கை […]

உலகில் பரிதாபத்திற்குரிய மாணவர்கள்

பெரும்பாலான நாடுகளில் மதியம் வரைதான் பள்ளி, அதன் பின் மாணவர்கள் அவர்கள் போக்கில் விடபடுகின்றார்கள் மதிய உணவும் ஓய்வும் அதன் பின்னான நேரத்தில் வீட்டுபாடமும் முடித்துவிட்டு ஹாயாக மாலையில் விளையாடுகின்றார்கள் கொஞ்சமும் நெருக்குதல் இல்லை, மன உளைச்சல் இல்லை. நெருக்கடி இல்லை, இம்சைகள் இல்லை உலகில் பரிதாபத்திற்குரிய மாணவர்கள் இந்திய குறிப்பாக தமிழக மாணவர்களே காலை முதல் மாலை வரை பள்ளி, அது முடிந்ததும் டியூசன் அதுவும் முடிந்ததும் வீட்டுபாடம் என பிழியபடுகின்றார்கள் இன்னும் தேர்வு நேரம் […]

வெங்கடேச பண்ணையார்

தென் தமிழ்நாடு வெங்கடேச பண்ணையாரின் நினைவுநாள் என பரபரப்பில் இருக்கின்றது. தூத்துகுடி பகுதி 144 உத்தரவில் இருக்கின்றது இன்று ஒரு நிலச்சுவாந்தாராக, தொழிலதிபராக இல்லை கபடி ஆட்டக்காரராக இருந்திருக்க வேண்டிய வெங்கடேசன் இப்பொழுது தீரா உறக்கத்தில் இருக்கின்றார் எப்படி மாறியது அவரின் வாழ்வு? அவர் குடும்பம் மிகபெரும் நிலச்சுவாந்தர் குடும்பம், அவர்களுக்கும் சிலருக்கும் பகை இருந்தது. சாதி வேறாய் இருந்ததுதான் சிக்கல் பொதுவாக தொழில் இருப்பவன் பொறுத்து செல்வான், தொழிலே இல்லாதவனே வம்புக்கு வருவான். வெங்கடேசன் குடும்பத்தை […]

வடமாராட்சி தாக்குதல்

அந்த வடமாராட்சி தாக்குதலில் புலிகள் கொல்லபடும் நிலையில் இருந்தனர், ஏராளாமன மக்கள் சாகும் நிலை இருந்தது, இனி புலிகள் தமிழரை காக்க முடியாது என்ற நிலை அது இந்தியா முற்றுகையினை விலக்க சொன்னது, ஜெயவர்ததனே கேட்கவில்லை, ராஜிவ் கப்பல் நிறைய உதவிபொருளை அனுப்பினார், இலங்கையோ திருப்பி அனுப்பியது ஐ.நா அனுமதி இன்றி விமானம் மூலம் உதவி பொருளையும் பாதுகாப்பிற்காக மிக் விமானத்தையும் அனுப்பி இலங்கையினை மிரட்டியது இந்தியா, அதன் பின்பே இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தம் வந்தது,அமைதியும் […]

சிதறல்கள்

அடுத்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல்_பரிசு பாரத பிரதமர் மோடி க்கு கொடுக்க வேண்டும் : தமிழிசை உலகில் தீவிரவாதத்தால் பாதிக்கபட்ட மூன்றாம் நாடு என உலக ஆய்வு இந்தியாவினை சொல்கின்றது ஈரானும் ,ஆப்கனும் முதல் இரண்டாம் இடமாம் இந்தியா மூன்றாம் இடமாம் அப்படி இந்தியாவில் என்ன தீவிரவாதம் என்றால், ஆளும் கட்சியே மத தீவிரவாத கட்சி, அது மசூதி இடித்து, பலரை கொளுத்தி மாட்டை போற்றி மனிதரை கொன்று என பட்டியல் நீள்கின்றது ஆக இந்தியா காவி […]

தமிழ்காத்த அற்புத வரலாறு

இந்தியினை எதிர்க்க முண்ணணியில் நின்றது திமுக, செத்தது 100 பேர். வாழ்வினை தொலைத்தது ஏராளம் இந்தியினை கறுவருப்போம் என முழங்கியவர் முரசொலிமாறன். அவரின் திராவிட எழுத்தும் அவரின் முழக்கமும் கொஞ்சமல்ல‌ திராவிட தூணாகவும், தமிழ்போராளியாகவும் தமிழர் பிம்பமாகவும் முரசொலிமாறன் நின்றதெல்லாம் ஒரு காலம். அவரின் மகன் கலாநிதி மாறனின் நிறுவணம் சன் புரடக்சன் அது சர்க்கார் எனும் படத்தினை தயாரிக்கின்றதாம், சர்க்கார் என்பது தமிழா என கேட்க கூடாது, சாட்சாத் இந்தி வார்த்தை சன்டிவி தமிழ்பெயரா? என […]

போஸ்டர் அடித்தவனை….

இந்த போஸ்டர் அடித்த அந்த சாதியினர் சொல்வது என்னவென்றால் எங்கள் சாதியினையும் எங்கள் கூட்டமைபினையும் “அறிவுகெட்ட சாதி” என ஒரு பட்டியல் இடுங்கள் என்பதன்றி வேறல்ல‌ இந்த முற்சாதி, பிற்சாதி வரிசையில் அறிவுகெட்ட சாதி என ஒன்றை உருவாக்கி எங்களை சேருங்கள் என கெஞ்சுகின்றார்கள் முன்பு தாழ்த்தபட்ட சாதி, தீண்டதகாத சாதி இருந்தது போல நாங்கள் “மடையர் சாதி”, “அறிவுகெட்ட சாதி ” என சொல்லுங்கள் என உருகிகேட்கின்றார்கள், பரிதாபம் பின் என்ன? இந்திய தேசியத்திற்காக வாழ்வினை […]

கவிராயர் “உடுமலை நாராயண கவி”

ஏகபட்ட சமஸ்கிருத வார்த்தைகள், தெலுங்கு கீர்த்தனைகள் மிகுந்திருந்த தமிழ் திரைபாடல்களின் காலத்தில், எளிய தமிழ் பாடல்களை கொடுத்து பெரும் திருப்பம் கொடுத்தவர் அவர். பாரதியாரின் நண்பர், அதனால் பாரதி போலவே நாட்டுபற்றும், சமூக விழிப்பு பாடல்களும் எழுதினார் கலைவாணருக்கும் அவரே குருநாதர், கலைவாணரின் புகழ்பெற்ற கிந்தனார் நாடகத்தின் பாடல் எல்லாம் இவர் எழுதியது அண்ணாவின் வேலைக்காரி, கலைஞரின் பராசக்தி என உடுமலை நாராயணகவியின் பாடல்கள் பிரசித்திபெற்றது திராவிட இயக்கத்தின் கருத்துக்களை முதன் முதலில் பாடலில் கொண்டுவந்தவர் அவரே, […]

திரைச்செய்திகள்

குஷ்பு குளிர்முகம் காண்டல் இனிதே அவர்புகழ் பாடுதல் அமிழ்தின் இனிதே எஞ்சா விழுச்சீர் இனிய மகளை கண்டெழுதல் காலை இனிதே.. ——————————————————————————————————————————— யார் செய்த புண்ணியமோ, இல்லை முற்பிறவி பலனோ நமது மனத்தையும் நம்மையும் தலைவி குஷ்பு ஆட்கொண்டுவிட்டார் இல்லாவிட்டால் இந்த நித்யாமேனன் நிச்சயம் தலைவி ஆகியிருப்பார் போல, இப்பொழுதும் மனம் சிந்திக்கத்தான் செய்கின்றது ஆனால் குஷ்புவிற்கு கொடுத்த இடம் , இன்னொருவருக்கு சொந்தமில்லை என்பதால் ஆபத்தில்லை. நாமெல்லாம் குஷ்புவிற்கு அடிமையாக எழுதி கொடுத்த கட்டப்பா வம்சம் […]

சிதறல்கள்

சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர் என்பது போல எச்.ராசாவும், எஸ்.வீ சேகரும் கைது , சிறைக்கு எல்லாம் அப்பாற்பட்டவர்கள் இது புரியாமல் ஆளாளுக்கு பேசி ஒன்றும் ஆகபோவதில்லை. இது அதிமுக ஆட்சி என்றல்ல, திமுக என்றாலும் நிலை நிச்சயம் இதுவேதான் ஆம், சோ ராமசாமி கிழியாய் கிழித்தபொழுதும் அவர்மேல் துரும்பினை போட கூட யோசித்த கட்சி திமுக.. இங்குள்ள சிக்கல் அப்படி… —————————————————————————————————————————————- கருணாஸை பிடித்து உள்ளே போட்ட அரசு ஏன் எச்.ராசாவினை பிடிக்கவில்லை என ஆளாளுக்கு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications