பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அன்புள்ள‌ மோடிக்கு

அன்புள்ள‌ மோடிக்கு, அய்யன்மீர் உங்களுக்கு இன்று [ September 17, 2018 ] பிறந்தநாளாம், இந்திய குடிமகனாக வாழ்த்துக்கள், நீங்கள் பல்லாண்டு நலமாக வாழ பிரார்த்தனைகள் நீங்கள் குஜராத் முதல்வராக ஜொலித்தீர்கள், சந்தேகமில்லை. அந்த குஜராத் கலவரங்களை மாநில முதல்வராக அடக்கினீர்கள், அதில் ஏராளமான இந்துக்களும் கொல்லபட்டனர் என்பதும் உண்மை. குஜராத்தில் வெற்றிகொடி நாட்டிய நீங்கள் தேசத்தை வளப்படுத்துவீர்கள் என்ற பெரும் நம்பிக்கையில் தேசம் உங்களிடம் ஆட்சியினை கொடுத்தது நீங்களும் பொறுப்பை உணர்ந்துதான் செயல்பட்டீர்கள், உலகெல்லாம் சென்று […]

கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி

கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி படப்பிடிப்பு வேகமாக நடைபெறுகின்றது : செய்தி “ரஜினி சார், நானும் உங்கள வச்சி அரசியல்ல இயக்கத்தான் கால்ஷீட் கேட்டுட்டே இருக்கேன். எல்லோர் இயக்கத்திலும் நடிக்கிறீங்க, என் இயக்கத்தில் மட்டும் நடிக்கவே வரமாட்டேன்றீங்க ரஜினி சார் எவ்வளவு ஸ்கிரிப்டு, சீன் எல்லாம் வச்சிருக்கேன் தெரியுமா? ஒரே ஒரு கால்ஷீட் கொடுங்க சார், தயாரிப்பாளர் அமித்ஷா கூட ரெடியா இருக்கார் சார்.” —————————————————————————————————————————————– எத்தனை படங்கள் வந்தாலும் ரஜினிக்கு பாஷா என்பது நிச்சயம் மாஸ் […]

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வேதனை

நாட்டை நடத்த பணம் இல்லை – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வேதனை அதாவது இவ்வளவு நாளும் அமெரிக்காவும், சீனாவும் கொடுத்த தர்ம பணத்தில் அந்நாடு இயங்கி இருக்கின்றது சீனா வட்டிமேல் வட்டி கேட்டு இம்சிக்க, அமெரிக்கா தன் நிதி உதவியினை நிறுத்த, தவிக்கின்றது பாகிஸ்தான் அரசை நடத்தவே பணம் இல்லா பொழுது உங்களுக்கு எதற்கு அணுகுண்டு, ஏவுகனை எல்லாம்? அதை எல்லாம் கடலில் போடுங்கள் இப்பொழுதும் திவாலானதாக அறிவியுங்கள், பாகிஸ்தான் நிவாரண நிதி என கொட்டி […]

உண்மையில் இது சினிமா மண்

இது பெரியார் மண், அண்ணா மண் என சொல்பவன் சொல்லிகொண்டே இருந்தாலும் உண்மையில் இது சினிமா மண் ராமசந்திரன் என்பவர் 11 ஆண்டு முடிசூடா மன்னனாக ஆண்டிருக்க முடியாது இது பெரியாரின் மண்ணாக இருந்திருந்தால் பிராமண ஜெயலலிதா 17 ஆண்டுகள் முதல்வராக ஆண்டிருக்க முடியாது விஜயகாந்த் எதிர்கட்சி தலைவராக இருந்திருக்க முடியாது இது பெரியாரின் மண்ணாகவே இருந்திருந்தால் பெரியாரின் சீட கோடிகள் இன்று அரசியலுக்கு வருமே தவிர சிஸ்டமும், மையமும் வந்திருக்க முடியாது விஜயினை வைத்து அவரின் […]

எம்.எஸ் சுப்புலட்சுமி பிறந்த நாள்

இன்று [ September 16, 2018 ] எம்.எஸ் சுப்புலட்சுமி பிறந்த நாள். நினைவுகள் அவருக்குள் முழ்கி அப்படியே பிராமணரின் இசை அரசாங்க காலாத்திற்குள்ளும் செல்கின்றது இசை என்பது பிரமண சொத்து , அதை பிராமணர் மற்ற சாதிக்கு தரமாட்டார்கள் என்ற பெரும் கட்டுகதை இங்கு உண்டு இந்த பெரும் அநியாய பொய்க்கு எதிர் சாட்சியாக, மவுன சாட்சியாக நின்றுகொண்டிருக்கின்றார் இளையராஜா மனசாட்சியுள்ள இளையராஜா. ஆம் அவர் தாழ்த்தபட்டவர் ஆனால் சென்னைக்கு வந்து அவர் தன் இசையினை […]

தமிழக நீதிமன்றம்

கும்பகர்ணனை போல் தூங்க கூடாது : தமிழக அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல் அட அவனாவது 6 மாதம் விழித்திருப்பான், இவர்கள் அதுவுமில்லை இந்த விபீஷ்ணன் வேலை செய்யாமல் தமிழக அரசு சுதந்திரமாக செயல்படுவது நல்லது என நீதிமன்றம் சொல்லி இருக்கலாம் எச்.ராசா உச்சநீதிமன்றமாவது மயிராவது என பேசிவிட்டாராம் உடனே கைது செய்ய வேண்டுமாம் அடுத்த சர்ச்சை ஆரம்பித்துவிட்டது எச்.ராசா மேல் சர்ச்சைகளுக்கு குறைவே இல்லை, சில இடங்களில் அவரின் அடாவடி அதிகம். ஆனால் இந்த மயிராவது என […]

சிதறல்கள்

செவ்வாய் கிழமை என்றால் இப்படித்தான் செக்க சிவந்து இருக்க வேண்டும் செவ்வாய் கிழமையில் “செவ்வாய் நல்லாள்” தரும் அபூர்வ தரிசனம்.. —————————————————————————————————————————————– “வெண்தாடி வேந்தர் மோடி” என்றவுடன் பகீரென்றது, ஆனால் உற்று பார்த்தால் “கதைகளின் கதை” என நிகழ்ச்சி பெயரை சொல்கின்றார்கள் கதைதானே, வேறு எப்படி இருக்கும் இப்படித்தான் இருக்கும் காமெடி கதை போல… (ஆனாலும் வைகுண்டராஜன் அண்ணாச்சி தாதுமணல் உரிமத்திற்காக இப்படி மோடியினை வெண்தாடி வேந்தர் என்றெல்லாம் சொல்வது கொஞ்சம் ஓவர்தான் ஒருவேளை லைசென்ஸ் கிடைத்துவிட்டால் […]

விநாயகர் சிலை ஊர்வலம்

வழக்கம்போல் கலவரமாகும் இந்த விநாயகர் சிலை ஊர்வலம் சில இடங்களில் நடக்கின்றது, தென்காசி பக்கம் எல்லாம் தடை உத்தரவு என்கின்றனர் இந்துக்களுக்கு என்றுமே ஒரு சிறப்பு உண்டு, அது எந்த திருவிழா என்றாலும் அமைதியாக கொண்டாடுவார்கள் என்பது, இந்நாட்டில் அதுதான் நடந்தது, நடக்கின்றது பன்னெடுங்காலமாக தொடர்ந்து வரும் நல்லிணக்கம் இது, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எல்லா காலங்களிலும் இந்துக்களின் திருவிழா நல்லிணக்கத்துடனே நடந்தது அது பழனி ஆலயம், மதுரை அழகர், காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி […]

அண்ணா பேரறிஞரானது

அந்த காலத்தில் ராஜாஜி என்றொருவர் இருந்தார், இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ஒரே இந்தியர் மற்றும் தமிழர் மகாத்மா காந்தியின் சம்பந்தி பெரும் வழக்கறிஞரும், பெரும் அறிஞருமான அவர் மூதறிஞர் என போற்றபட்டார். பெரியாரும் அவரும் கருத்து ரீதியாக மோதினாலும் அவரை கலக்காமல் பெரியார் ஏதும் செய்ததில்லை மணியம்மை திருமணம் உட்பட‌ காங்கிரசுக்கும் நாட்டிற்கும் மிகபெரும் அடையாளம் மூதறிஞர் ராஜாஜி அவரை குறிவைத்து அடித்தே திமுக வளர நினைத்தது, திமுகவின் தந்திரம் அது. யார் பெரியவர்களோ அவர்கள் […]

இந்தியாவின் “இன்சினியர் தினம்”

இன்று புகழ்பெற்ற பொறியாளர் சர்.விஸ்வேசரய்யாவின் பிறந்தநாள். இவரின் பிறந்த நாள்தான் இன்றுவரை இந்தியாவின் “இன்சினியர் தினம்”, வருங்காலத்தில் ராமேஸ்வரத்தில் ராமர்பாலம் கட்ட தொடங்கிய நாள் தெரிந்தால் இந்த நாள் மாற்றபடலாம். நல்லவேளையாக வால்மீகி அந்த நாள்,நட்சத்திரத்தினை குறித்துவைக்காமல் விட்டதால், இனி விஸ்வேசரயாவின் பிறந்தநாளுக்கு ஆபத்து இல்லை. ஆனால் இந்தியாவின் புகழ்மிக்க அணைகள்,தொழிற்சாலைகள் என சகலமும் கட்டியவர். காவேரி பிரச்சினைக்கு மிக அபாயகரமான திருப்பம் இவர் கொடுத்தது, அதாவது அது அருமையான திட்டம்தான், ஆனால் தமிழக போலி அரசியல்வாதிகளால் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications