பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

உடன்பிறப்புக்களின் பகுத்தறிவு இம்சை தாளவில்லை

இந்த உபிக்களின் பகுத்தறிவு இம்சை தாளவில்லை என்றால், இப்பொழுது தமிழ் அறிஞர்களாகவும் ஆகிவிட்டார்கள் அதாவது ஆரத்தி என்பது தமிழ் இல்லையாம் சமஸ்கிருதமாம், எந்த புத்தகத்தில் படித்தார்கள் என்றால் தெரியவில்லை காஞ்சியா? ஈரோடா? திருகுவளையா? எந்த புத்தகத்தில் அப்படி இருந்தது? ஆரம் என்பது தமிழ்ச்சொல், அதற்கு வட்டம் என பொருள். அந்த சூடத்து தீயினை வட்ட வடிவமாக சுற்றுவார்கள் சூட்சுமமாக முகத்தை சுற்றி நிற்கும் சக்திகள் அதில் எரியும் என்பது அக்கால நம்பிக்கை, அது இன்றும் தொடர்கின்றது வட்டம் […]

பிரதமர் ஆனாலும் இம்ரானின் கிரிக்கெட் வெறி போகாது

ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்க பதக்கம் இன்னும் வெல்லாத பாகிஸ்தான் அதனை விட முக்கிய பதக்கத்தை பெற்றுவிட்டது ஆம், இந்திய வாலிபால் அணியினை அது வென்றுவிட்டது. இதனால் பாகிஸ்தானியருக்கு ஏக மகிழ்ச்சி. ஆயிரம் தங்க பதக்கம் கூட இந்த மகிழ்ச்சியினை அவர்களுக்கு கொடுக்காது இனி கிரிக்கெட்டிலும் பாகிஸ்தான் எழக்கூடும் அவர்களின் பிரதமர் சும்மா அல்ல, பயிற்சியாளராகவும் ஜொலித்தவர் பாகிஸ்தானின் அன்வார் போன்றவர்களை திணறடித்ததற்காக வாக்கர் யூனுஸை அணிக்கு கொண்டுவந்தார், பின் அந்த வாக்கர் யூனிஸ் பந்தை அட்டகாசமாக […]

இந்த சிந்தனை மிக்க நிகழ்ச்சி வசந்த் டிவியில் வந்ததாம்

காலையிலே கண்ணில் பட்ட அதிர்ச்சி இது, எழுதியது யாரென பார்த்தால் “நாஞ்சில்” முத்துலஷ்மி என்றிருந்தது “நாஞ்சில்” என்ற பெயர் இருந்ததால் அதன் பின் அதிர்ச்சி நீங்கியது, அங்கு இப்படி பலர் இருப்பார்கள் போல.. மரியாதைக்கும், போற்றுதலுக்கும் உரியவராகும் அளவு அந்த கஸ்தூரி அப்படி என்ன சிந்திக்க சொன்னார் என்பதுதான் தெரியவில்லை இந்த சிந்தனை மிக்க நிகழ்ச்சி வசந்த் டிவியில் வந்ததாம் தமிழிசையின் சித்தப்பா டிவி மட்டும் காமெடிக்கு விதிவிலக்கா என்ன? மொத்தத்தில் நாஞ்சில் பகுதி குழுக்கள் எல்லாம் […]

திராவிட சர்ச்சில் , ராஜதந்திரி என கிளம்பி விட்டார்கள்

தலைவர் கருணாநிதியை மிஞ்சும் சாதனை தலைவனாக ஸ்டாலின் திகழ வேண்டும் – கி.வீரமணி அன்னார் பெரியாரை மிஞ்சி பல சாதனைகளை செய்தவர் என்பது குறிப்பிடதக்கது அண்ணாவினை தென்னாட்டு பெர்னாட்ஷா என்றவர்கள், ஒரு காலத்தில் கலைஞரை தமிழ்நாட்டு ஷேக்ஸ்பியர் என்றவர்கள் இப்பொழுது ஸ்டாலினை மட்டும் விடுவார்களா? இதோ திராவிட சர்ச்சில் , ராஜதந்திரி என கிளம்பிவிட்டார்கள். புரட்சி தலைவன் லெனினை பார்த்துவிட்ட பின்பும் ராமசந்திரனை புரட்சி தலைவர் என சிரிக்காமல் சொன்ன தமிழகம் இது, இப்படித்தான் இருக்கும் சர்ச்சில் […]

ஸ்டாலினுக்கு அவர் வீட்டிலே ஆரத்தி எடுக்கும் காட்சி

ஸ்டாலினுக்கு அவர் வீட்டிலே ஆரத்தி எடுக்கும் காட்சி இது இந்த பகுத்தறிவு வீரமணி இப்பொழுதெல்லாம் வாய் திறக்கமாட்டார் ஏம்பா அழகிரி மகன் துரை தயாநிதி என்பவரே, இது பற்றி வீரமணியிடம் கொஞ்சம் கேட்டு சொல்லமுடியுமா? அண்ணாதுரையின் கருத்துகளுக்கு செயல்வடிவம் கொடுத்தவர் வாஜ்பாய்: கனிமொழி உட்பட‌ திமுக அதிமுக பிரமுகர்கள் புகழாரம் எது? பாபர் மசூதியினை இடிக்கும் பொழுது அமைதி காத்து,அதன் பின்னும் கட்சியில் நீடித்ததா? ஆக பாபர் மசூதியினை இடிக்க வேண்டும், நாடெல்லாம் பாஜக வளரவேண்டும் என்பது […]

கில்லாடி கிளைவ் : 07

கில்லாடி கிளைவ் : 07 எதையும் தாங்கும் இதயம் கூட தேக ஆரோக்கியம் கெட்டால் உடைந்துவிடும், கிளைவிற்கும் தேக நிலை கெட்டது இங்கிலாந்தில் இருந்து வந்த அலைச்சல், மன உளைச்சல் , வெப்பமான வாழ்விடம், உணவு , போர் என ஓயாத ஓட்டம் என்றிருந்த வாழ்வு அவனின் உடல்நிலையினை வெகுவாக பாதித்தது அப்பொழுது இந்த ஊட்டி, சிம்லா எல்லாம் இல்லை என்பதால் அவர்கள் குளிரான ஓய்வெடுக்க இங்கிலாந்துக்குத்தான் ஓடிகொண்டிருந்தார்கள், கிளைவும் இங்கிலாந்துக்கு செல்ல தீர்மானித்தார் காரணம் அவரிடம் […]

Dhurai Sathish என்பவர் நல்ல நண்பர்

இந்த Dhurai Sathish என்பவர் நல்ல நண்பர், சொன்னதை செய்பவர், மகா பாரத கர்ணனுக்க்கு பின் கொடுத்த வாக்கினை காப்பற்றுபவர் என அவரே அவரை பற்றி சொல்லி கொள்வார் நம்மை விட மூத்தவர், பண்பானவர் பதிவு திருட்டை தவிர ஒரு குற்றமும் அவரை சொல்ல முடியாது ஏதும் வேண்டுமானால் சொல்லுங்கள் எனக்கு செத்து போன கலைஞரை தவிர சென்னையில் எல்லோரையும் தெரியும் என்பார் இப்பொழுது ஒரு விளக்கம் கேட்டால் ஆளை காணோம்,சென்னையில் இவருக்கு எல்லொரும் தெரிந்திருக்கின்றது, ஆனால் இவரைத்தான் யாருக்கும் […]

பேதை செங்கொடிக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

ஒரு படத்தில் நாகேஷ் குனிந்து நிற்பார், அவர் யார் முன்னால் குனிந்து நிற்பாரோ அந்த பணக்காரர் கேட்பார், என்னப்பா இப்படி குனியிறே நாகேஷ் சொல்வார் “இன்னும் குனிவேன், தரை தடுக்குதே” இந்த அங்கிள் சைமன் கும்பல் எப்படிபட்டது என்றால் சாட்சாத் அந்த நாகேஷ் காட்சியினை விட காமெடியாக தரையில் குழிதோண்டி குனியும் கும்பல் இதோ பாருங்கள், செங்கொடிக்கு அஞ்சலியாம். அவர்கள் கட்சியே யாருக்காவது அஞ்சலி செலுத்துவது அதன் படி செய்கின்றார்கள் ஆனால் செங்கொடி எதற்காக செத்தாள் ராஜிவ் […]

ஸ்டாலின் தன் எதிரியினை கூட அடையாளம் காணவில்லை

இதுதான் சறுக்கல் என்பது திமுக அகில இந்திய கட்சி அல்ல, இந்தியா முழுக்க இருந்து பாஜகவினை விரட்ட அதனால் நிச்சயம் முடியாது, மாநில கட்சியான திமுக அகில இந்திய அளவில் பாஜகவினை விரட்டும் என்பதெல்லாம் பாகிஸ்தான் ஆசிய விளையாட்டு போட்டியில் சீனாவினை வெல்லும் என்பது போன்ற கனவு சரி தமிழக அளவில் பாஜகவினை எதிர்க்க போகிறோம் என்றால் இங்கே பாஜக 2% வாக்கு கூட இல்லாமல் இருக்கின்றது, அது தமிழிசை நாக்கிலும் எச்.ராசா வம்பிலும் வாழ்கின்றது தமிழகத்தில் […]

“அணையினை திறக்காதே மூழ்கி சாவு” என சொன்னால்தான் புத்திவரும்

உலகெல்லாம் கடந்த இரு வாரங்களாக எதிர்பார்த்த செய்தி வந்தே விட்டது, அவர்கள் நிச்சயம் சொல்வார்கள் என்றே உலகம் எதிர்பார்த்தது, இதோ சொல்லிவிட்டார்கள் தமிழகத்திற்கான ஒரு ஆண்டு நீரை 3 மாதத்தில் தந்து விட்டோம் என கன்னடம் சொல்லிவிட்டது எப்படிபட்ட அபாணடம் இது, மழைவெள்ளம் என்பது எப்படி கணக்கில் வரும்? அணையினை திறக்காவிட்டால் கேரள நிலைக்கு கன்னடம் ஆகியிருக்கும் அதை தவிர்க்க திறந்துவிட்டு தமிழக கணக்கில் காட்டுகின்றார்களாம் அவர்களுக்கு இன்னும் தமிழனை பற்றி தெரியவில்லை அடுத்தமுறை காவேரியில் வெள்ளம் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications