பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ரபேல் ஊழல் தொடர்பாக மோடி விவாதிக்க தயரா? : ராகுல்

ரபேல் ஊழல் தொடர்பாக மோடி என்னிடம் நேருக்கு நேர் விவாதிக்க தயரா? என சவால் விடுகின்றார் ராகுல் பிரதமர் மோடியோ ராகுல் ஏதோ நீரவ் மோடியினை அழைப்பது போல் கண்டுகொள்ளாமல் இருக்கின்றார் கோலியின் சவாலை ஏற்று எங்கோ கல் மேல் மல்லாக்க கிடந்த மோடிக்கு ராகுல் சவாலை ஏற்க தயக்கம் இருக்கின்றது இதற்கு மேல் ஏதும் கேட்டால் “ஏழைதாயின் மகன் என்பதால்தானே என்னை பாடாய் படுத்துகின்றீர்கள்?” என அழ ஆரம்பித்துவிடுவார்

ஜின்னாவும், ராமசந்திரனும் பெரும் எடுத்துகாட்டுகள்

இந்த உலகத்தில் இரு குல்லா தலையர்கள் மிக மிக அதிர்ஷ்டசாலிகள், யாரவது போராடியிருப்பார்கள் பலன் இவர்களுக்கு சேர்ந்திருக்கும், வாழ்வாங்கு வாழ்ந்திருப்பார்கள் அவர்களில் முதல் அதிர்ஷ்டசாலி ஜின்னா, அவர் இந்திய சுதந்திரத்திற்கு போராடியவரும் அல்ல, பாகிஸ்தான் வேண்டும் என துப்பாக்கி தூக்கியவரும் அல்ல, கட்டபொம்மன் முதல் காந்திவரை போராடிய போராட்டத்தின் முடிவில் தனிநாடு கிடைத்தென்னவோ இவருக்குத்தான்.. வெள்ளையன் தானகவே தூக்கி கொடுத்து சென்றான், அவ்வளவுதான். பாகிஸ்தான் சுதந்திரபோர் என ஏதாவது வரலாற்றில் உண்டா? இல்லை பிரிட்டிஷ் இந்திய தலைவர்களுள் […]

கலைஞர் இந்நாட்டின் தேசியவாதியா?

கலைஞர் நிச்சயம் போராளி, அவரின் உழைப்பும், சாதுரியமும், தமிழும் இன்னபிற சிறப்பு குணங்களும் யாருக்கும் வராது நிச்சயம் தமிழகத்து அரசியல்வாதிகளில் பெரும் இடம் பெற்றவர், அது மாறாது ஆனால் கலைஞர் இந்நாட்டின் தேசியவாதியா? இந்நாட்டை தாங்கி நின்றவரா? இந்நாட்டிற்கு பெரும் சேவை செய்தவரா என்றால் இல்லை என்றே பதில்வரும் இம்மாநிலத்தை தேசியத்துடன் ஒட்டவிடாமல் திராவிடம் தமிழ் தமிழர் என சொல்லிகொண்டே ஒருமாதிரி இழுத்து சென்ற அரசியல் அவருடையது அதன் எதிரொலிதான் நாம் என்ன செய்தாலும் கலைஞர் காப்பார் […]

விஸ்வரூபம் இரண்டு முறை வந்தபின்னும் காமெடி படம் இல்லை

முன்பெல்லாம் சீரியசான படங்களை கொடுத்துவிட்டு கமலஹாசன் உடனே காமெடி படத்திற்கு திரும்புவார் பல ஆண்டுகளாக அதைத்தான் செய்தார், அவரின் சீரியசான படங்கள் தோற்றால் கூட காமெடி படங்கள் அவரின் மார்கெட்டையும் நடிப்பினையும் ஏன் பொருளாதாரத்தை கூட தூக்கி நிறுத்திவிடும் கமலின் அற்புதமான காமெடி படங்கள் எல்லாம் இப்படி இடைவெளிகளில் எடுக்கபட்டவையே இப்பொழுது ஏனோ சீரியஸ் படங்களுக்கு பின் காமெடி படம் எடுப்பதை நிறுத்திவிட்டார் விஸ்வரூபம் இரண்டு முறை வந்தபின்னும் காமெடி படம் இல்லை இதுபற்றி அவரின் ரசிகர்களிடம் […]

வாரிசு சண்டை என்பது தமிழகத்தில் புதிதல்ல

அரச‌ குடும்பத்தில் வாரிசு சண்டை என்பது தமிழகத்தில் புதிதல்ல, அது அக்காலமுதல் இருந்தது சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோ எனும் சேரநாட்டு இளவரசனே சிம்மாசனம் கிடைக்கா சோகத்தில் துறவியானான் என்கின்றது வரலாறு பாண்டியர்களும், சோழர்களும் இதை வேறுமாதிரி கையாண்டிருக்கின்றார்கள் பாண்டியர் வம்சத்தில் மூத்தவன் மதுரையில் இருந்தால் இளைவனை வஞ்சி, கொற்கை என அனுப்பி வைத்து சிக்கலை தீர்த்திருக்கின்றார்கள் சோழ வம்சத்தில் மூத்தவன் தஞ்சையில் இருந்தால் இளையவனை உறையூர் பக்கம் அனுப்பி சிக்கலை தீர்த்திருக்கின்றார்கள் பல்லவர்கள் இதில் விஷேசம், காஞ்சியில் […]

பாகிஸ்தானிய சகோதரர்களுக்கு இன்று சுதந்திர தின‌ நாள்

பாகிஸ்தானிய சகோதரர்களுக்கு இன்று சுதந்திர தின‌ நாள். அந்நண்பர்களை நோக்கி சொல்லலாம், நெஞ்சை தொட்டு சொல்லுங்கள், 200 ஆண்டுகாலம் போராடும்பொழுது லாகூரின் , கராச்சியின் உடன்பிறப்புக்களாக போராடும் பொழுது இந்திய விடுதலைக்கு என்றுதானே போராடினீர்கள்? பாகிஸ்தான் என்ற கனவு விளைந்தது சுதந்திரத்தின் சமீபத்தில்தானே? சொல்லிகொடுத்தவன் வெள்ளையந்தானே? இன்று என்ன கண்டுகொண்டீர்கள்? பொருளாதார ரீதியாக தோற்றுவிட்டீர்கள், ஆப்கானிய தீவிரவாதம் உங்களை அரித்துகொண்டிருக்கின்றது. ஒரு மாயவலையில் சிக்கி இருக்கின்றீர்கள். அந்நிய சக்திகளின் ஆயுதங்களில் நீங்கள் அவற்றை மறைக்க முயல்கின்றீர்கள். உங்கள் […]

கலைஞர் அஞ்சலி என ரஜினி எதற்காக உருகினார்

ரஜினி கலைஞர் பற்றி பேசினார், இன்னும் பேசுவார் அது அவரின் விருப்பம் அல்லது கூட்டத்தில் பேச சொன்னால் பேசி ஆகவேண்டிய கட்டாயம், பேசினார் என்ன பேசினார்? காலையில் ராஜாஜி ஹாலில் கூட்டமில்லை எனக்கு தமிழக மக்கள் மேல் கோபம் வந்தது, ஆனால் நேரம் செல்ல செல்ல கூட்டம் கட்டுகடங்காமல் போனது தமிழரின் நன்றியினை பார்த்து கண்ணீர் வந்தது என பேசினார் இது சில ஈழபதர்களுக்கு பிடிக்கவில்லையாம் நீ எப்படி தமிழர் மேல் கோபடலாம் உடனே வெளியேறி கன்னடம் […]

கலைஞர் மேல் சர்சைகளும் விமர்னங்களும் ஏராளம் உண்டு

கலைஞர் மேல் சர்சைகளும் விமர்னங்களும் ஏராளம் உண்டு, தன் மீதான சில தவிர்க்கமுடியா விமர்சனங்களுக்கு கலைஞரே மவுனமாக கடந்து சென்ற காட்சிகளும் வரலாற்றில் உண்டு ஆனால் இந்த உடன்பிறப்புக்கள் ஏதோ கலைஞரை புனிதராக்கும் வேலையில் கடுமையாக இறங்கி இருக்கின்றன‌ இது பிரபாகரனை பற்றி அங்கிள் சைமன் பேசி வாங்கிகட்டி கொள்ளும் கடும் காமெடி காட்சிகள் போல ஆகிவிடும் தும்பிகளுக்கு போட்டியாக இந்த உபிக்களும் தங்கள் பொய்மூட்டைகளை அவிழ்க்காமல் இருந்தால் கலைஞரின் புகழ் நிற்கும் உபிக்கள் கடும் பொய்மூட்டைகளை […]

ராமசந்திரன் இறக்கும்பொழுது கலைஞர் வந்தாரா?

கலைஞருக்கு அஞ்சலி கூட்டம் திரையுலகினரால் நடத்தபட்டிருகின்றது, நிச்சயம் நடத்தவேண்டிய கூட்டம் அது கூத்தாடி கூட்டம் என்றிருந்த அந்த கூட்டத்தை கலைஞர்கள் என மதிப்புமிக்க பெயர் கொடுக்க காரணமாயிருந்தவரே கலைஞர் திரைதுறை அவரால் நிச்சயம் கவுரவம் பெற்றது, அவரும் அந்த துறைக்கு பல உதவிகளை செய்தார் திரை துறையினருக்கு கொஞ்சமேனும் நன்றி இருப்பது வாழ்த்துகுரியது, அஞ்சலி செய்துவிட்டார்கள் இதில் ரஜினி வழக்கம் போல் உளறி இருக்கின்றார் என்ன இருந்தாலும் கலைஞர் இறுதி நிகழ்வில் முதல்வர் வந்திருக்க வேண்டும் என […]

வள்ளுவன் ஒரு தூய்மையான இந்து

வள்ளுவன் இந்து அல்ல, சமண கவிஞன் என சிலர் கிளம்பி இருக்கின்றார்கள், சிலர் தோமா காலத்து கிறிஸ்தவர் என்று கூட சத்தம் வள்ளுவன் ஒரு தூய்மையான இந்து என்பதற்கு சில எடுத்துகாட்டுகளை காணலாம் முதலாவதாக இறைவன் எனும் சொல் தமிழருடையது, அதுவும் இந்துக்கள் மட்டுமே இறைவன் என்ற வார்த்தையினை பயன்படுத்தினர், மற்ற மதத்தவருக்குகு இல்லாத அந்த அடையாளம் இந்துக்கள் பாடல்களில் மட்டும் வருகின்றது சமணரோ, புத்தரோ, கிறிஸ்தவரோ இறைவன் என்ற வார்த்தையினை பயன்படுத்தவில்லை, அவர்களின் சொல் கடவுள் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications