பகவத் கீதை 6ம் அத்தியாயம்
அர்ஜூனனுக்கு மேற்கொண்டு யோக சந்நியாச தன்மையினை போதிக்கும் இந்த ஆறாம் அத்தியாயமே “ஆத்மஸம்யம யோகம்” கண்ணன் சொல்கின்றான், “அர்ஜூனா சந்நியாஸி என்பவன் யார்? எவனொருவன் கர்ம பலனில் பற்றில்லாமல் செய்ய வேண்டிய கர்மங்களைச் செய்கிறானோ அவனே ஸந்நியாசி. அவனே யோகி . யாகத்தில் அக்கினியைப் பற்ற வைக்காததாலோ, கர்மங்களைத் துறந்ததாலும் ஒருவன் சந்நியாசி ஆக மாட்டான். அர்ஜூனா., ஸந்நியாசமென்று எதைச் சொல்லுகிறார்களோ அதையே யோகமென்று அறிவாயாக.கர்ம பலனைப் பற்றிய எண்ணத்தைத் துறக்காதவன் யோகி ஆகமாட்டான். யோகநிலையில் முன்னேற […]